Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Nalliravin Marupakkam
Oru Nalliravin Marupakkam
Oru Nalliravin Marupakkam
Ebook256 pages1 hour

Oru Nalliravin Marupakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோபி தனது தாய் தந்தையை இழந்து அத்தையின் வளர்ப்பில் வாழ்ந்து வருகிறான். எதிர்பாராதவிதமாக அகிலா மற்றும் பைரவி அவர்களின் தந்தை இறப்புக்கு கோபி காரணமாகிறான். கோபி - சுந்தரம் இவர்களில், பைரவி யாரைத் திருமணம் செய்து கொள்வாள்? கோபி மற்றும் சைலஜா இவர்களின் வாழ்வில் ஏற்பட்ட பிணக்கு தீர்ந்து இருவரின் வாழ்விலும் விடிவு பிறக்கிறதா? நள்ளிரவின் மறுபக்கம் அதற்கான விடையைத் தரும்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580152608038
Oru Nalliravin Marupakkam

Read more from Rajendrakumar

Related to Oru Nalliravin Marupakkam

Related ebooks

Reviews for Oru Nalliravin Marupakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Nalliravin Marupakkam - Rajendrakumar

    http://www.pustaka.co.in

    ஒரு நள்ளிரவின் மறுபக்கம்

    Oru Nalliravin Marupakkam

    Author :

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    பெரிய தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த அந்த பங்களா இருட்டிலே மூழ்கி இருந்தது. காவல் கூண்டுக்குள் அமர்ந்து பீடியை கொளுத்திக் கொண்டிருந்த அந்த கூர்க்காவின் மேல் வெளிச்சம் சட்டென்று படா கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்தான்.

    பனி படர்ந்தாற் போன்ற அந்த ஜன்னல் கதவின் மேல் தலைவிரி கோலமாக ஒரு பெண்ணின் நிழல் படர்ந்திருந்தது. அடி வயிற்றிலிருந்து கிளம்பியது அவள் போட்ட அலறல்.

    கையை நெருப்புக் குச்சி சுடவே உதறி எறிந்தான் கூர்க்கா.

    அகிலாவுக்கு விழிப்பு வந்தபோது பாசஞ்சர் நின்றிருந்தது. ஜன்னல் கண்ணாடிக்கு அப்பால் மண்டிய இருளுக்கு பிறகு மெல்ல ஒளி, படரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது.

    கண்ணாடிக் கதவை தூக்கி விட்டுப் பார்த்தாள். ஸ்டேஷனல்லாத இடத்தில் வண்டி நிற்கிறது. இருட்டை ஆராய்ந்தவள் திடுக்கிட்டாள். பெட்டி பெட்டிகளாக ஏறிக்கொண்டிருந்த காக்கி உடைகளை அடையாளம் தெரிந்தது.

    சர்ப்ரைஸிங் செக்கிங்! - திடீரென்று வரும் சோதனை வருகிறது - வாழ்க்கையில் மட்டுமல்ல ரயிலிலும் தான்.

    திரும்பிப் பார்த்தாள். கூட்டமில்லாத பெட்டியில் தன் மடியில் தலைவைத்து கவலையற்ற தூக்கம் தூங்கும் தங்கை பைரவியைப் பார்த்தாள். எதிர் பெஞ்சில் இரவு நெடுநேரம் வரை மூச்சு இரைப்பினால் அவதிப்பட்டு இப்போதுதான் கண்ணயர்ந்த அப்பா...

    டிக்கெட் இல்லாத பயணத்துக்கு முடிவு வந்துவிட்டது. நிச்சயம் இறக்கி விடுவார்கள். தங்கையை உசுப்பி எழுப்பினாள். அப்பாவை அழைத்தாள். ‘எழுந்திருங்கப்பா...’

    அப்பாவுக்கும் முன்னால் அவர் இருமல் எழுந்தது. செருமலுடன் ‘என்னம்மா?’ என்றார்.

    இறங்க வேண்டிய நேரம் வந்தாச்சுப்பா

    என்னம்மா சொல்றே?

    எங்கே போறதுன்னு தெரியாமலே வண்டி ஏறிட்டோம். இப்ப இதையே இறங்க வேண்டிய இடமா நினைச்சுக்கலாம்.

    அரியாமல் பார்த்தார்.

    திடீர் சோதனை வரதுப்பா

    ஹூம், சோதனை... விரக்தியுடன் சிரித்தார். ஒரு சோதனை ஊரைவிட்டு வெளியே அனுப்பிட்டது. இன்னொரு ‘சோதனை ரயிலை விட்டு அனுப்பப் போகுதா?’

    பின்னந் தலையை சொறிந்து கொண்டாள் பைரவி. ‘நல்லத் தூக்கத்திலே ஏனக்கா எழுப்பினே?’

    நான் எழுப்பல்லேன்னாலும் கொஞ்சம் போனா உன்னை எழுப்ப ஒரு மாமனார் வந்து இருப்பார். அடி எழுந்திருடி. அந்த சின்னப் பெட்டியை எடுத்துக்க...

    டி.ஸி. வந்து நின்று சந்தேகமாகப் பார்த்தார். ஆராய்ந்தார்.

    விடியப் போகிறது. அத்தை பரபரப்புடன் இயங்கினாள். ஈரத் தலையை முடிந்து வைத்த துவாலையை அவிழ்த்துப் போடவும் நேரமின்றி இயங்கினாள்.

    முறத்தில் ஈரத் துணியில் பரத்தி ஆற வைத்த சாதத்தை திரட்டி புளிக்காய்ச்சலில் போட்டு கரண்டியால் கிளறினாள். (கையால் கிளறக் கூடாது. எப்ப சாப்பிடுவானோ என்னமோ புளிச்சு போயிடும். உரப்பும் புளிப்புமா புளியஞ்சாதம்னா கோபிக்கு உசிரு).

    கடாயில் காய்ந்துக் கொண்டிருந்த கடலை எண்ணை சுறுசுறுவென்று அழைத்தது. ஆவி பரப்பி ‘தயார்’ என்றது. மணம் பரப்பியது.

    பிசைந்து வைத்த பக்கோடா மாவை பிடித்துப் பிடித்து உதிர்த்தாள். பொன் வறுவலாக பொரியும் வரை காத்திருந்து கரண்டியால் அள்ளி எண்ணை வடிய ஜல்லித் தட்டில் போட்டாள்.

    பக்கோடா நல்லா மொறு மொறுன்னு இருந்தால் தான் கோபி ரசிப்பான்

    ஹால் கடிகாரம் ஒலிப்பதை எண்ணினாள்.

    நாலு... அஞ்சு... ஆறு...

    ஆச்சு நேரமாச்சு. அவன் பிரண்ட்ஸ் இப்ப வந்திடுவாங்க. கோபியை எழுப்ப வேண்டியதுதான்.

    காபியைக் கலந்து தம்ளரில் ஊற்றித் தயாராக வைத்து, ஹாலில் நடந்தாள். முன் அறைக் கதவைத் திறந்து இருட்டை ஆராய்ந்தாள். கோபி... கோபி கண்ணா. எழுந்திருடா ராசா. பிக்னிக் போக நேரமாகல்லே?

    பதிலில்லாமல் போகவே மீண்டும் ஆராய்ந்தாள்.

    டே... கோபி.

    சலிப்புடன் அறையில் நுழைந்து விளக்கைப் போட்டு எந்திரிடா கழுதை என்று திரும்பிக் கட்டிலைப் பார்த்தவள் வியந்தாள். படுக்கை, கட்டிலில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

    புள்ளே எங்கே போச்சு?

    பின்னாலிருந்து சிரிப்புச் சத்தம் கேட்கவே திரும்பினாள். மார்பில் ஈரத் துவாலையும், நெற்றியில் விபூதிக் கீற்றுமாக கோபி சிரித்துக் கொண்டிருந்தான்.

    சின்ன உருவம் செதுக்கினாற் போன்ற உறுப்புகள்... அவன் மீசை கவனமாக வெட்டப்பட்டிருந்தது. நிக்கோடின் கரை இல்லாத சிவப்பு உதட்டுக்குள்ளே பற்கள் பளிச் சென்றன.

    என்ன அத்தே, என்னை தேடறியா?

    அட வாலு.

    நீ எப்படா எழுந்தே?

    நீ சாதம் வடிக்கிறப்பவே எழுந்திட்டேன். உன்னை தாண்டித்தான் குளிக்க போனேன். உனக்குத்தான் சமையல்லே இறங்கிட்டாலும், சமூக சேவைக்குப் போயிட்டாலும் அக்கம் பக்கம் நினைப்பே போயிருமே"

    ‘சரி, சரி வா. காபி கலந்து வச்சிருக்கேன். குடிக்கலாம்.’

    ‘குடிச்சாச்சு!’

    ‘எப்படா? இப்பத்தானே கலக்கி வைச்சிட்டு வரேன்.’

    ‘நீ இப்படி வந்ததும் நான் அப்படிப் போய் குடிச்சிட்டேன்.’

    ‘அடேங்கப்பா புயல். இருவத்திரண்டு வயசுப் புயல்!’ சிரித்தவாறு கிளம்பினாள் அத்தை. ‘டிரஸ் பண்ணிக்கிட்டு ரெடியாயிரு. பசங்க வருகிறதுக்குள்ளே ரெண்டு ஸ்லைசை வெண்ணையிலே வதக்கி ஒரு ஆம்லேட்டும் போட்டுத் தரேன் சாப்பிட்டுட்டுப் போவியாம்.’

    தலையாட்டினான் சிரிப்புடன். அவன் சிரிப்பு உதட்டிலேயே உறைந்தது.

    அப்பாவும் அம்மாவும் ஒரே நாளில் விபத்தில் போனதிலிருந்து அவர்கள் இரண்டுபேர் அன்பும் அவனுக்கு ஒரே இடத்திலிருந்து கிடைக்கிறது அத்தை!

    இடுப்புத் துண்டை நழுவ விட்டு விட்டுப் பாண்ட்டை மாட்டிக் கொண்டான். ஸ்லாக் ஷர்ட்டை போட்டுக் கொண்டு தலைவாரிக் கொள்ளும்போதே...

    தெரு முனையில் கல கலப்பு கேட்டது! காரின் குழலொலியுடன்.

    சினேகிதக் கும்பல் வந்து விட்டது!

    அத்தே, உன் டிபனுக்கு நேரமில்லே... பிரண்ட்ஸ் வந்தாச்சு...

    வாசலில் வந்து நின்ற காரிலிருந்து குரல்கள் கூப்பிட்டன. ‘ஏய்-கோபி. இன்னும் தூங்கறே? எழுந்து வாடா தூங்கு மூஞ்சி.’

    இவன் கதவைத் திறந்து நின்றவுடன் ஒரே கைத்தட்ட ஆரவாரம்.

    இரண்டு கைகளாலும் அமர்த்தி அடக்கினான். ஏதுடா கார்?...

    சுந்தரம் சொன்னான். எங்கப்பா புதுசா வாங்கி இருக்கார்டா. பர்மிஷன் கேட்டுத் தள்ளிக்கிட்டு வந்துட்டேன்.

    நீ தள்ளிக்கிட்டு வந்தது பரவாயில்லே. எங்களை தள்ளச் சொல்லாமயிருந்தா சரி என்ற கோபியைத் தொடர்ந்து கேலிச் சிரிப்பு...

    நிறுத்துங்கடா... சுந்தரம் அதட்டினான். முழுசா முப்பத்தைஞ்சாயிரம் ரூபாயைக் கொட்டி வாங்கின வண்டி. உங்களுக்குக் கிண்டலாப் போச்சு?

    ‘சுந்தரம்’ இடுப்பில் கை வைத்துக் கொண்டான் கோபி. பிக்னிக் பார்ட்டின்னா அப்படித்தான் கேலியும் கிண்டலுமிருக்கும். அதுக்கேன் இப்படிக் கோவிச்சுக்கறே! டேக் இட் ஈஸி...

    காரியரைத் தூக்கி வந்த அத்தைக்குப் பலமான வரவேற்பு இருந்தது.

    அத்தே அத்தே சுந்தரம் கேட்டான். என்ன இருக்கு காரியர்லே? அத்தை மார்க் ஸ்பெஷல் என்ன?

    உரப்பும் புளிப்புமாப் புளியோதரை.

    வாவ்.

    மொறு மொறுன்னு பகோடா...

    எனக்கு இப்பவே பசிக்குதே.

    வடாம் கொஞ்சம், வத்தல் கொஞ்சம் பொறிச்சு வக்கிருக்கேன்.

    ஃபன்டாஸ்டிக்! அமர்க்களம் அத்தை. சுந்தரம் சொன்னான். டேய் அத்தையைப் பாராட்டுங்க.

    அத்தையம்மா ஒருவன் சொல்ல...

    வாழ்க வாழ்க... என்றார்கள் எல்லோரும்.

    எல்லோருக்கும் அவர் அத்தைதான்.

    உஸ்ஸு. ஏண்டா பசங்களா! விடியறதுக்கு முந்திக் கூச்சல் போட்டு ஊரை எழுப்பறீங்க? ஒரு கண்ணு மாதிரி ஒரு கண்ணு இருக்காது. நொள்ளைக் கண்ணுப் பட்டுட்டா உள்ளதும் போயிடும்னு சொல்லுவாங்க. புறப்படுங்க; சீக்கிரம்.

    என்ன அத்தை? விரட்டறீங்க?

    அதுக்கில்லேடா பசங்களா. ஆமா யாரு - காரை ஓட்டப் போறது?

    வேறே யாரு? உங்க கோபிதான். கார் மெக்கானிஸம் பத்தித் தலைகீழா தெரிஞ்சு வச்சிருக்கானில்லே. அட்ஜஸ்ட் பண்ணி அவனாலேதான் ஓட்ட முடியும்.

    பார்த்துப் பத்திரமா ஓட்டுடா கோபி. ராத்திரி எந்நேரமானாலும் திரும்பிடுங்க... பார் பார். மாடும் கண்ணும் வருது. நல்ல சகுனம் புறப்படுங்க.

    டாடா அத்தே...

    வரோம் அத்தே...

    தாங்க் ஃபார் யுவர் புளியஞ்சாதம் அண்ட் பகோடா

    கார் ஓசையுடன் அவர்கள் கூச்சலும் தேய்ந்து மறையுமட்டும் வாசலில் நின்ற அத்தை உள்ளே போகத் திரும்ப விலுக்கென்று மீண்டும் திரும்பி எதிர் வீட்டைப் பார்த்தாள்.

    ‘ஙே’ என்று விழித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள் கோமதி. அவள் கண்ணைப் பற்றி அத்தைக்கு அவ்வளவாக நல்ல அபிப்பிராயமில்லை.

    சரியாகச் சொன்னால் இவள் எழுந்து வந்து விடுவாளோ என்கிற பயத்தினாலேதான் அவர்களை அவசர அவசரமாகத் துரத்தி விட்டிருந்தாள்.

    ஏண்டி பாகீரதி, காரை ஓட்டிண்டுப் போறது உன் கோபியாடி?

    பல்லைக் கடித்தாள் அத்தை. ‘பார்த்துட்டியாடி உன் நொள்ளைக் கண்ணாலே’ என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

    என்னடி முண முணங்கறே? கோமதி கேட்டாள் சந்தேகமாக. என்ன என்னைத் திட்டறியா?

    ஆமா கோபிதான்னு சொன்னேன்.

    என்னமா வளர்ந்துட்டான் குழந்தே. கண்ணுக்கு லட்சணமா ராஜா மாதிரி...

    அத்தை நெளிந்தாள்.

    என் கண்ணே பட்டுடும் போலிருக்கே.

    அத்தை அதிர்ந்தாள்.

    அடியே பாகீரதி... சீக்கிரமா ஒரு நல்லப் பொண்ணாப் பார்த்துக் கட்டி வச்சிடுடி. காலம் கெட்டுக்கிடக்கு. அப்புறம் எவளையாவது இழுத்துக்கிட்டு வந்து நிப்பான்.

    நான் அவனை ஒண்ணும் ஓடுகாலிப்பயலா வளர்க்கல்லே, அததுகள் மாதிரி கண்டவளை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து அடாவடித்தனம் பண்ண மாட்டான் என் புள்ளே.

    என்னடி சொன்னே? என்னடி சொன்னே? கோபமாக அவளை நெருங்கினாள் கோமதி. இன்னொரு தடவை சொல்லு. என் புள்ளையைப் பத்தி பேசினா கிழிச்சுப் போட்டுருவேன்

    அந்த அம்மாளின் பிள்ளை ஒருத்தன் வேறு ஜாதிப் பெண்ணைக் காதலி என்கிற பெயரில் கல்யாணம் பண்ணாமலே வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தான்.

    நான் வளர்த்த புள்ளை நல்லதுன்னு சொன்னா நீ பெத்தது காலிப்பயன்னு வேறே அர்த்தம் வருமா என்ன? போடி வேலையைப் பார்த்துக்கிட்டு.

    கொஞ்சநேரம் முறைத்தவாறு நின்றவள் திரும்பி நடந்தாள்.

    அத்தை குனிந்து அவள் காலடி மண்ணைப் பறித்து எடுத்து, கோபி சென்ற திசையில் சுற்றிப் போட ஆரம்பிப்பதைத் திரும்பிப் பார்த்துத் திடுக்கிட்டுக் கத்தினாள்.

    அடியே, அடியே. என் காலடி மண்ணையா பறிக்கறே? என்னையா அவமானப்படுத்தறே. என் சாபம் பலிக்கும்டி. பாரு. என் புள்ளே ஒரே ஒரு பொண்ணைத்தானே கொண்டுவந்து வச்சிருக்கான். நீ வளர்த்த பய ரெண்டுப் பொண்ணுங்களைக் கொண்டு வந்து நிக்கப் போறான் பாரு.

    சரிதான் போடி என்று அலட்சியமாகத் திரும்பிய அத்தை நின்றாள்.

    இரண்டு பெண்கள் என்று நகர்ந்து விட்டாள்.

    2

    அந்தப் பங்களாவின் ஹாலிலே... கிரீச்சொலியுடன் உருண்டு வந்து நின்றது அந்த சக்கர வண்டி. அதிலிருந்த நடுத்தர வயது அம்மாள் வெற்று நெற்றியுடன் நிமிர்ந்து பார்த்தார்-பீதியுடன்-வேதனையுடன்.

    அறைக் கதவைத் திறந்து வெளிப்பட்ட உருவத்தைப் பார்த்து கண்ணீர் வடித்தார். கிருஷ்ணா! என் கண்ணே. என்று முணுமுணுத்தார்.

    மாடிப்படியிறங்கி வந்து நின்ற வாலிபனின் பனியன் கிழிந்திருந்தது. முகத்திலும், முழங்கையிலும் வெளிப்பட்டு நின்ற சிகப்பு ரத்தம்... புதிய காயங்களுக்கு சாட்சியம் கூறின.

    அவன் தள்ளாடித் தள்ளாடி அறைக்குள்ளே போனதும் ஒரு நர்ஸ் மருந்துத் தட்டுடன் அவனைப் பின்தொடர்ந்து போனாள். தினமும் நடக்கும் நிகழ்ச்சிதானே! என்ற அலட்சியம் அவள் முகத்திலிருந்தது.

    இப்ப நாம எங்கே போய்க்கிட்டிருக்கோம்ப்பா?

    பைரவியின் கேள்வி ராமலிங்கத்தின் மனதை அழ வைத்தது. அவருக்கே பதில் தெரியாத கேள்வி... தொழிலில் ஏற்பட்ட சரிவு... கடன்காரர்களினால் ஏற்பட்டத் தலைக்குனிவு... ஏலத்துக்கு போய்விட்ட வீடு... நிற்க நிழலில்லாமல் போன நிலை... இருந்தபோது வந்து ஒட்டிய உறவு... இல்லாத நேரத்தில் செய்த அலட்சியம்... புறப்பட்டு விட்டாரே தவிர... எங்கே? புரியவில்லை.

    ‘ஐய, மறுபடியும் கேட்டாள் பைரவி. சொல்லுங்கப்பா எங்கே போயிட்டிருக்கோம்?’

    ‘பைரவி!’ புட்டியில் தண்ணீர் பிடித்து வந்த அகிலா அதட்டினாள். நேரம் காலம் தெரியாம நீ வேறே அவரை நோக வைக்காதே!

    என்ன அப்படி தப்பா கேட்டுட்டேனாம்? போறோமே எங்கே போறோம்னு கேட்டேன். அது ஒரு தப்பா?

    தப்புதாண்டி. சில சமயங்களிலே சிலகேள்விகளைக் கேட்கக்கூடாது. வயசுதான் ஏறுதே தவிர, கொஞ்சம் கூட புத்தியே வளரல்லியே...

    என்ன அக்கா நீ... என்று அழவே துவங்கிவிட்டவளை அதட்டினாள் அகிலா...

    ஷட் அப். பேசாதே... மூச்... மூச் காட்டக்கூடாது

    பைரவி அடங்கினாள்.

    அவளை அதட்டி மிரட்டி அடக்கிடலாம் அகிலா. ஆனா எங்கே போறோம்னு அவ கேட்ட அதே கேள்வியை உன் மனசும், என் மனசும் கேட்குதே அதை யாராலேம்மா அடக்க முடியும்.

    அகிலா கலங்கினாள்.

    கவலைப்படாதீங்கப்பா. இறக்கி விட்டாலும் சரியான இடத்திலேதான் இறக்கி விட்டிருக்கார் டி.ஸி. இங்கிருந்து சரியா அஞ்சாவது மைலிலே செல்லாங்காடு கிராமம் வரும். அந்த ஊரிலே என் கிளாஸ்மேட் ஒருத்தி வாழ்க்கைப்பட்டிருக்கா. கொஞ்ச நாள் அவ வீட்டிலே தங்கி இருந்து எனக்கொரு வேலையைத் தேடிக்கிறேன்.

    அதெப்படிம்மா. அவ பிறந்த வீடானாலும் பரவாயில்லே. புகுந்த வீடாச்சே, அனுமதிப்பாங்களா?

    "எனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1