Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rishiyum Manushiyum
Rishiyum Manushiyum
Rishiyum Manushiyum
Ebook163 pages1 hour

Rishiyum Manushiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முகம் மாறிவரும் சமூகக் கோட்பாடுகள். பொருளாதார பலத்தால் மட்டுமே எடைபோடப்படுகின்ற வாழ்வியல் வெற்றிகள். வெற்றியால் மட்டுமே எடைபோடப்படுகின்ற மனிதம். திரைப்பட அரூப நாயகர்களுக்குத் தங்களை அடிமை செய்யும் இளைஞர்கள். முந்தைய தலைமுறையின் முறைமைகளைக் கிழித்துப் போடும் இளைய சமுதாயம். இல்லறத்தின் அர்த்தமென்ன? தம்பதிகளின் பிணைப்பு எதுவரை? பெண்ணுக்குத் துணை கணவனா? கல்வியா?- இப்படிப் பலவிதக் கேள்விகளைப் படம் போடுகிறது 'ரிஷியும் மனுஷியும்'.

-ஆண்டாள் பிரியதர்ஷினி

" />

வாழ்க்கை சுவாரஸ்யமானது. சவாலானது. வாழ்க்கையைப் பதிவு பண்ணும் இலக்கியமும் அப்படித்தான். நழுவுகின்ற உணர்வுகளை வார்த்தைகள் மீதேற்றி, படைப்புச் சிற்பமாகச் செதுக்குவது படைப்பாளிக்குக் கிடைக்கும் சவால். அந்த அனுபவத்தைத் தராசின் நேர்கோட்டுச் சிந்தனையோடு நியாயமாய்ச் செயல்படுத்துகின்ற படைப்பாளியே காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறான்.

"மரபு சார்ந்த நம்பிக்கைகளோடு வளரும் நவீனகாலப் பெண்ணுக்கு ஏற்படும் உரசல்களைப் படம்போட்டுக் காட்டுவதாகவே இவரது கதைகள் பெரும்பாலும் இருந்திருக்கின்றன..." என்று எழுத்தாளர் மாலன் அவர்கள் 'குங்குமம்' பத்திரிக்கையில் எழுதியதை "ரிஷியும் மனுஷியும்" தொகுப்பு நியாயப்படுத்தினால் சந்தோஷம்.

முகம் மாறிவரும் சமூகக் கோட்பாடுகள். பொருளாதார பலத்தால் மட்டுமே எடைபோடப்படுகின்ற வாழ்வியல் வெற்றிகள். வெற்றியால் மட்டுமே எடைபோடப்படுகின்ற மனிதம். திரைப்பட அரூப நாயகர்களுக்குத் தங்களை அடிமை செய்யும் இளைஞர்கள். முந்தைய தலைமுறையின் முறைமைகளைக் கிழித்துப் போடும் இளைய சமுதாயம். இல்லறத்தின் அர்த்தமென்ன? தம்பதிகளின் பிணைப்பு எதுவரை? பெண்ணுக்குத் துணை கணவனா? கல்வியா?- இப்படிப் பலவிதக் கேள்விகளைப் படம் போடுகிறது 'ரிஷியும் மனுஷியும்'.

-ஆண்டாள் பிரியதர்ஷினி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352852482
Rishiyum Manushiyum

Read more from Andal Priyadarshini

Related to Rishiyum Manushiyum

Related ebooks

Reviews for Rishiyum Manushiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rishiyum Manushiyum - Andal Priyadarshini

    http://www.pustaka.co.in

    ரிஷியும் மனுஷியும்

    Rishiyum Manushiyum

    Author:

    ஆண்டாள் பிரியதர்ஷினி

    Andal Priyadarshini

    For other books

    http://www.pustaka.co.in/home/author/andal-priyadarshini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ரிஷியும் மனுஷியும்

    2. வாய்மை இடத்த…

    3. பிச்சைக்காரிகள் உலகம்

    4. துரோணர்கள் துரோகிகள் இல்லை…

    5. தாய்ப்பால் கூலி…

    6. ஆங்கோர் ஏழைக்கு…

    7. ஊசி மரங்களும் கிழியும் !

    8. (அ)சோகவனம்

    9. விதை நெல்

    10. தொட்டாற்சிணுங்கி...

    ரிஷியும் மனுஷியும்

    அன்றைய காலை மழை, இடி, மின்னலோடு விடிந்தது. தலைக்கு மேல் வேலை கொட்டிக் கிடப்பது மாதிரி எழுந்து விட்டாள் அவள். ஜன்னலின் தளத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து மழையைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.

    அது- மழை, தண்ணிரை வர்ஷிக்கும் ஜீவ ஊற்று என்ற புரிதல் ஏதுமில்லாத வெற்றுப்பார்வை. ராத்திரி அவள் சுருண்டிருந்த சுவரோரமாய்ச் சிறுநீர்க் குளம் நாறியது. அவளின் புடவையும் கூடச் சொட்டச் சொட்ட நனைந்து வடிந்தது. சுற்றிலும் பல ஈக்கள்.

    தலையெழுத்து. எந்த ஜென்மத்துல பாவம் பண்ணேனோ? இவளோட அசிங்கத்தையெல்லாம் நா கழுவ வேண்டியிருக்கு.

    -பக்கெட் தண்ணீரை ஊற்றித் துடப்பத்தை வறட் வறட்டென்று தேய்த்தாள் காமாட்சி.

    மூதேவி, செத்துத் தொலைச்சாலாவது நிம்மதி. நூறு வருஷத்துக்கு வரம் வாங்கிட்டு வந்துருக்கு. இவளுக்குச் சிசுருஷை பண்ணியே நான் போய்ச் சேர்ந்துடுவேன்.

    -பினாயில் போட்டு மெழுகினாள்.

    ஏன்டாப்பா முரளி, இங்க வந்து பாரு, கக்கூஸாட்டம் நாறடிச்சுட்டா. ஏதாச்சும் பண்ணுடாப்பா. எந்த வேலைக்காரியும் ஒரு நாளுக்கு மேல தங்க மாட்டேங்கறா. சனியன், பீடை செத்தொழிய மாட்டேங்குதே…

    -ஜன்னலிலிருந்த அவளின் தலையில் 'நக்'கென்று ரெண்டு குட்டு வைத்தாள். குட்டின் வலியைக் கூட உணராமல் மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

    பாட்டீ. சும்மாயிரு. எங்கம்மா பாவம், குட்டாதே. நா வேணா கழுவறேன்.

    -எட்டு வயசு சாரு- ஓடி வந்தாள்.

    க்கும். வந்துட்டா வக்காலத்து வாங்கிட்டு. பொத்துக் கிட்டு வருதாக்கும் பாசம்? பாட்டி- கஷ்டப்படறது தெரியலியா? அறுவது வயசுல அசிங்கத்தை வாரிப்போடறேன். எந்த மாமியார்க்காரி பண்ணுவா..?

    -எரிச்சலைக் காற்றில் கரைத்து விட்டாள்.

    அஞ்சு வருஷம் முன்னால் குளிக்கையில் வழுக்கி விழுந்த காமாட்சிக்கு, இத்தனையும் பண்ணிய மருமகள் தான் இவள். முகம் சுளித்ததில்லை. எரிச்சல் பட்டதில்லை. அதுயைப் பட்டதில்லை. அலுத்துக் கொண்டதில்லை.

    அந்த மனுஷனோடவே நானும் போய்ச் சேர்ந்திருக்கணும். உசிரைப் புடிச்சுக்கிட்டு, தோட்டி வேலை பண்ண னும்னு வரம் வாங்கிட்டில்ல வந்திருக்கேன்.

    உஷ். கத்தாதேம்மா. பக்கத்து வீட்டுக்கெல்லாம் கேக்கும்.

    கேக்கட்டுமேடா… பைத்தியத்தை ஏமாத்தி நம்ம தலையிலே கட்டினது தெரியட்டுமேடா...

    ரெண்டு வருஷமாத்தானேம்மா இப்படி? அதுக்கு முன்னாடி உன்னை உள்ளங்கையிலே வச்சுத் தாங்கினவ தானே?

    அடேங்கப்பா. இப்படி இருக்கறவளுக்கே வரிஞ்சு கட்டிப் பரிஞ்சு பேசறியே. அப்ப பாத்துக்கோ… நீயே பாத்துக்கோ… நா அக்கடான்னு காசிக்குப் போறேன். விட்டுரு என்னை…

    கொஞ்சம் பொறும்மா. ஊரோட கொண்டு போய் விட்டுறலாம். அவ அப்பாவையே வரச் சொல்லி எழுதி யிருக்கேன். பார்க்கலாம்.

    என்னத்தடா பாக்க? சோறு தண்ணி குடுத்து, கட்டிலில் போட்டு வந்து புடவை மாத்தறதுக்குள்ளயே நா செத்துப் பொழைக்கறேன். மாசாமாசம் அவ உக்கார்றச்சே, நரகம்டா எனக்கு. தீட்டுப்படறது கூடத் தெரியாத பரப்பிரும்மமா இருக்கா… நீ பாட்டுக்கு ஆபீஸு, டுருன்னு ஒடிடறே, நாந்தான் மாரடிக்க வேண்டியிருக்கு. என்னால் இதுக்கும் மேல தாங்க முடியாதுடா… காப்பாத்து…

    காமாட்சியின் குரலில் இயலாமை, ஆங்காரம், ஆத்திரம், வெறுப்பு, எரிச்சல், வேதனை எல்லாம் தலை காட்டின.

    ஆஸ்பத்திரில சேத்துக் குணமாக்கினப்புறம் கூட நூத்துல ஒருத்தருக்கு மறுபடியும் இப்படி ஆகறதுண்டுன்னு டாக்டர் சொன்னாங்கதானே? அது இவளாயிட்டா என்ன பண்ண?

    என்ன பண்ணவா? ஆஸ்பத்திரிலேயே கொண்டு விட்டுரு. அனாதைன்னு சொல்லு.

    நிர்த்தாட்சண்யம். நியாயமான அநியாயம்.

    பத்திரிகை அடித்து, நூற்றுக்கணக்கில் நட்பும் சுற்றமும் சாட்சியாகத் தாலிகட்டி வந்தவளை அனாதை எனவா?

    அதான் கேட்டாச்சேம்மா. சேத்துக்க மாட்டாங்களாம். உறவுக்காரங்க கொஞ்சம் அன்பா, அனுசரணையா இருக்கணுமாம், சரியாயிடுமாம்.

    ம்ஹூம். இதுக்கு மேல அரவணைக்க முடியாதுப்பா விட்டுரு. அனாதைப் பொறப்பாட்டம் நா கிளம்ப றேன்.

    வீட்டுக்குள் இடித்த இடி, மின்னல், கண்ணீர் மழை எதுவுமே காதில் பதிவாகாமல் வெளியே மழையை வெறித்தாள் அவள்.

    ம்மா… 'ஆ' காட்டும்மா. சாப்பிடு.

    -சாருதான் ஒரு பிரெட் துண்டை ஊட்டிவிடப் பார்த்தாள்.

    வீட்டுக்குப் போகணும். எம் பொண்ணுக்குச் சோறு குடுக்கணும்.

    வெறித்த பார்வையோடு அவளிடமிருந்து தெறித்தன ஆழ்மன வார்த்தைகள். ரெண்டு வருஷமாய்ச் சொல்லும் கிளிப்பிள்ளை வார்த்தைகள்.

    மாப்பிள்ளை... உங்க காலிலே வேணுமானாலும் விழறேன். இங்க கொண்டு வந்து விட்டுறாதீங்க. அவமானத்துல தூக்கு மாட்டிக்க வேண்டியதுதான். உலக்கை உலக்கையா மூணு நிக்குது கல்யாணத்துக்கு. அவளும் இங்க வந்துட்டா- அப்புறம் கல்யாணம் பேசவும், ஜாதகத்தைக் குடுக்கவும், வாங்கவும்னு ஒருத்தனும் வீட்டு வாசப்படி ஏறமாட்டான். தயவு செய்து காப்பாத்துங்க. எம் பொண்ணுங்க வாழ்க்கை, உங்க நல்ல மனசாலதான் இருக்கு. வேனுமானா, அந்த அதிர்ஷ்டக்கட்டையோட பராமரிப்புச் செலவுக்குன்னு உருண்டு பொரண்டு ஏதாச்சும் அனுப்பிடறேன். சொல்லக் கூடாது. இருந்தாலும் கேக்கறேன். கடைசிப் பொண்ணு- கொஞ்சம் இளமையா, பளிச்சுன்னு இருப்பா. வெறுமனே- குத்துவிளக்கு முன்னாடி தாலிகட்டி அழைச்சுட்டுப் போனாலும் சந்தோஷம்தான். குணமாக்க முடியாததை ஒதுக்க வேண்டியது தானே..?

    மாமனார் - கார்டில் நுணுக்கி நுணுக்கி எழுதியிருந்தார். ஒருத்தர் தும்மினாலும் கூட அத்தனை பேர் உடம்பும் குலுங்கும் சின்னக் கிராமத்தில் இவளை வைத்துக் கொள்வதும் கஷ்டம்தானே?

    அவரு எழுதியிருக்கறதும் சரிதானேம்மா...? இவளோட மட்டும் மாரடிக்க முடியுமா? மத்ததுங்களைக் கரையேத்தணுமே.

    கார்டைக் கிழித்தெறிந்து- சூட்கேஸில் துணி அடுக்கினான்.

    கஷ்டம் அவங்களுக்கு மட்டுமாடா? இங்கயும்தான் சாரு இருக்கா. அம்மாக்காரி இப்படின்னு விஷயம் தெரிஞ்சா, இவளைப் பொண்ணு கேக்கவும் ஒரு நாதி வராது. பொண்ணும் அப்படித்தான்னு பயப்படுவாங்களே...

    -இருபது வருஷத்துக்கு அப்புறமுள்ள கவலையை இப்போதே பட்டாள் காமாட்சி.

    இந்தக் கவலையே இல்லாமல்- ஜன்னல் மாடத்துக்குப் பதிலாக இப்போது வராந்தா என்று இடம் மாறி உட்கார்ந்திருந்தாள் அவள். வெறித்த உணர்வில்லாத பார்வை- மழைக்குள் என்னவோ தேடித் துழாவியது, நிச்சலனமான மனோநிலை.

    சின்னவளைத் தர்றதா எழுதிருக்காரே... வேணாம்னுடு. அக்கா, தங்கச்சிங்க எல்லாரும் ஒரே மாதிரிதான் இருப்பாளுங்க. நம்ம பட்டாபிகிட்ட சொல்லி வச்சிருக்கேன். உனக்கும் முப்பத்தாறுதானே ஆறது. அதுக்குள்ளாற ரிஷியாயிட்டியா என்ன?

    -சூடாய்க் காபியை நீட்டினாள் காமாட்சி.

    கொஞ்ச நாள்தான். என் காலமும் முடிஞ்சிடும் முரளி, சாரு பெரியவளானாக் கூடச் சகலமும் நீ சொல்லித் தர முடியுமா? சாப்பாடு, வீடு சகலமும் செய்ய ஒருத்தி வேணும்டா… இனிமே இவ எங்க தேறப் போறா?

    -வேப்பிலை அடித்தாள் காமாட்சி.

    ஏதாச்சும் அனாதை ஆசிரமத்துக்கு அனுப்பிடலாமே.

    -கையெடுத்துக் கும்பிட்டாள் காமாட்சி.

    இவளை அனாதைன்னு ஒத்துக்கணும்னா- நா மண்டையப் போடணும். நீயும் செத்தொழியணும்…

    - சூட்கேஸைப் பளாரென்று அறைந்து மூடினாள். எந்த சப்தமும், மழை பார்த்தவளை- அசைக்கவே இல்லை.

    சரி, அவளை எழுப்பு. ஆட்டோல உக்காத்தி வைம்மா. சாரு எங்க?

    சூட்கேஸைத் துாக்கினான்.

    டியூஷன்…

    நல்லவேளை. இல்லேன்னா அம்மாவை எங்கே கூட்டிட்டுப் போறேன்னு துளைச்செடுத்துடுவா.

    முழுசும் நனையாமலிருக்க முக்காடு மாதிரி ரெயின் கோட் போட்டான்.

    டூர் முடிஞ்சு வரப் பதினைஞ்சு நாளாகும்மா...

    ம்… சில பிரச்னைகளுக்கு நிரந்தர இழப்புதாண்டா தீர்வாகும். மனசுல வச்சுக்கோ…

    -வானம் வெடித்தது மாதிரி இடி பிளந்தது.

    அடை மழை.

    ஆட்டோவில் பயணிப்பதும் தெரியாத மாதிரி பிடித்து வைத்த சிலையாய் உட்கார்ந்திருந்தாள் அவள். பயணத்தில் அவ்வப்போது உடம்பு உரசியது. அப்போதெல்லாம் பூமணமும், மஞ்சள் வாசனை யும் சுகந்தமுமாய் ஜொலித்த உடம்பு- இப்போது அருவருப்பாய், தொடவும் கூசுவதாய், சிறுநீர் வீச்சத்தோடு குமட்டியது.

    சிந்தனை கழித்த வெற்று உடம்பு ஜடம்தானோ? மரக்கட்டைதானோ? பிரயோஜனமில்லாத பெண்மை குப்பைப் பொருள்தானோ? பெண்ணின் இயலாமைக்குச் சமூகம் வழங்கும் நீதி பாரபட்சமாய்த்தான் இருக்குமோ?

    அவளின் கையைப் பிடித்து இறக்கினான்.

    சப்தபதியில் பிடித்தபோது- மெத்மெத்தென்று, திரட்சியாய்க் கிளர்ச்சியூட்டின விரல்கள். இப்போது குச்சியாய், வறட் வறட்டென்று சுருங்கிய தோலோடு…

    பத்து வருஷத் தாம்பத்யத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊர்ந்த கணவனின் ஸ்பரிசம்கூட அவளிடம் எந்தச் சிலிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. உயிரற்ற உணர்வற்ற வெற்று உடம்பு.

    மும்பை ரெயிலின் அன்ரிசர்வ்ட் பெட்டியில் அவளை ஏற்றிவிட்டான். டாய்லட் வாசலில் உட்கார்த்தி

    Enjoying the preview?
    Page 1 of 1