Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Mattum Pothum
Nee Mattum Pothum
Nee Mattum Pothum
Ebook126 pages41 minutes

Nee Mattum Pothum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாய் தந்தையின் பாசத்தை இழந்து தவிக்கும் யாழினி. தாயின் பாசம் கிடைக்காதா? என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறான். தன் தம்பிக்கும் அவள் படிப்பு செலவிற்கும் மகேந்திரன் உதவி வருகிறான். மகேந்திரனின் உறவுக்காரப் பையன் கார்த்திக் யாழினியைக் காதலிக்கிறான்.

இதற்கிடையில், வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சிக்கலினால், வேலையை விட்டு எப்போழுது போவோம் என்று எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைகிறாள்.

ஏன் அந்த ஏமாற்றம்? இவள் ஏன் தாயின் பாசத்திற்கு ஏங்கினாள்? அவள் தாய்க்கு என்ன நேர்ந்தது? வாசிக்கலாம்... நீ மட்டும் போதும்....

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140606466
Nee Mattum Pothum

Read more from R. Manimala

Related to Nee Mattum Pothum

Related ebooks

Reviews for Nee Mattum Pothum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Mattum Pothum - R. Manimala

    https://www.pustaka.co.in

    நீ மட்டும் போதும்!

    Nee Mattum Pothum!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    தை பிறந்தும் காற்றில் பனியின் சில்மிஷம் ஊடுருவி இருந்தது. சூரியன் நடு உச்சிக்கு வந்தும்... வீரியமின்றி சோம்பலாய் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தான்.

    தீபன் அசுவராஸ்யமாய் காலால் மண்ணை அலைக்கலைத்துக் கொண்டும், மரத்தின் இலைகளை எட்டிப் பறித்து எறிந்துக் கொண்டும் இருந்தான். அவன் செயல்பாடுகளில் ஒரு பிடிப்பின்மை தெரிந்தது.

    யாழினி அவனையும் கவனித்துக் கொண்டுதானிருந்தாள்.

    ஏன் இப்படி இருக்கிறான்?

    'சொல்லப்போனால்... அம்மா முகமே நினைவில்லாத சூழ்நிலையில் அவளைப் பார்க்க அவனல்லவா தவிக்க வேண்டும்? அவளைப் பிரியும்போது முழுதாய் ஒரு வயதுக்கூட ஆகவில்லையே! சிறு கவலை உள்ளத்தை வாட்டியது.

    விஸ்தாரமான அந்த இடத்தில் தான் நடுநடுவே பச்சை மரங்கள் வாட்ச்மேனைப் போல் அங்கங்கே நிழற்பரப்பி நிற்க... இடையிடையே கட்டிடங்கள் கட்டப்பட்டு... அந்த 'மனநல காப்பகம்' செயல்பட்டு வந்தது. பச்சை நிற உடையணிந்த நோயாளிகள் விதவிதமான சேஷ்டையோடு நடமாடிக் கொண்டும், பணியாளர்களால் விரட்டப்பட்டும், அடிக்கப்பட்டும் கடந்தவர்களைப் பார்க்கையில் இதயத்தை யாரோ இறுக்கிப் பிடித்ததுப் போலிருந்தது.

    'அம்மாவும்' இப்படித்தான் இருப்பாளோ?' எழுந்தக் கேள்வியே மூச்சற்றுப்போக வைத்தது.

    பத்தொன்பது வருடத்திற்கு முந்தைய... அவளுடைய ஐந்தாவது வயதில் பார்த்த உருவத்தை கண் முன் கொண்டு வரமுடியவில்லை.

    பத்தொன்பது வருடமாய் பார்க்கவில்லை என்றாலும் அவள் நினைவிலேயே விழித்து... அவள் யோசனையிலேயே படுப்பவள். பக்கத்தில் இல்லையென்றாலும் எல்லாமே அவள்தான் யாழினிக்கு!

    'என்னை அடையாளம் தெரிந்துக் கொள்வாளா? அந்தளவுக்குத் தெளிவாய் இருப்பாளா? அவளுக்குத் தெரிந்து அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவள் அல்ல. பிறகெப்படி? எப்போது?'

    யாரும்மா நீங்க? யாரைப் பார்க்கணும்? துப்புரவுப் பணியாளர் பெருக்குவதை நிறுத்தி இவளிடம் கேட்டான்.

    டீன் தாமரைச்செல்வியைப் பார்க்கணும்

    அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டீங்களா?

    இருக்குங்க... தகவல் சொல்லியாச்சு

    ஆபீஸ் அதோ... அங்கே இருக்கு. அங்கேப் போய் உக்காருங்க. தம்பி, நீங்க என்ன இலையைப் பறிச்சு குப்பையாக்கிட்டு இருக்கீங்க? சின்னப்புள்ளத்தனமா?

    பதிலேதும் கூறாமல் அக்காவின் பின்னே நடந்தான்.

    உள்ளிருந்து வரும் அழைப்புக்காக தடதடக்கும் உள்ளத்தோடு... நீண்டிருந்த வராந்தாவில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தாள்.

    மேலும் கால்மணி நேரம் கடந்த பின் அழைக்கப்பட்டாள்.

    அவர்களை ஏறிட்ட டீன் ஐம்பத்தைந்து வயதுகளில், கண்டிப்பும், கனிவும் ஒன்று சேர்ந்தவராய் சைகையால் அவர்களை அமரச் செய்தாள்.

    மாவட்ட டி.எஸ்.பி. யிடம் வாங்கி வந்திருந்த கடிதத்தை அவளிடம் நீட்டினாள்.

    படித்து விட்டு இன்டர்காமில் யாரையோ அழைத்தாள்.

    நாற்பது வயதொத்த மனிதர் வந்தார்.

    இவங்களை டிசோஸாரெஜினாக்கிட்ட அழைச்சிட்டுப் போங்க. என்னை காண்டாக்ட் பண்ணச் சொல்லுங்க

    ஓ.கே. மேடம்

    டீனுக்கு நன்றி சொல்லிவிட்டு அந்த நபருடன் நடந்தனர்.

    நான்கைந்து கட்டிடங்கள் தாண்டி ஒரு புது பில்டிங்கினுள் நுழைந்தார்.

    பேரென்ன?

    என் பேரா?

    பேஷன்ட் பேர்

    தமயந்தி...

    ஓ...!

    அவங்களைத் தெரியுமா?

    குணமானவங்களை இந்த பில்டிங்ல தான் வச்சிருப்பாங்க. தமயந்தின்னு ஒரு அம்மாவை இங்கேப் பார்த்திருக்கேன். அவங்கதானான்னு நீங்க தான் சொல்லணும் மேற்கொண்டு அவர் பேசியது எதுவும் காதில் விழவில்லை. 'அம்மா குணமாகிட்டாங்களா?' என்ற தகவலே தித்திப்பாய் அவளை ஆக்ரமித்திருந்தது.

    டிசோஸாவும் சாந்தமாய் பேசினாள்.

    தமயந்தியை வரச்சொன்னாள்.

    பரபரவென மனசு பூனைக்குட்டியாய் வாசல் தேடி ஓடியது.

    அம்மா... என் அம்மா... வரப்போகிறாள். அம்மா சீக்கிரம் வா...

    நிமிடங்கள் கரைய அந்த நபருடன் ஒரு பெண்மணி... வயதுக்கு மீறிய முதுமையுடன் கண்களில் பயமோ, எதிர்பார்ப்போ, வலியோ... எதையோ புதைத்து உள்ளே வந்தவள் தீபனையே ஆர்வமாய் பார்த்தபடி இருந்தாள்.

    அந்த நபர் பிள்ளைகள் வந்திருப்பதாக சொல்லி அழைத்து வந்திருக்க வேண்டும்.

    உங்க பேரு என்னம்மா?

    த... தம... யந்தி

    இவங்க யாருன்னுத் தெரியுதா?

    தீ...தீ...ப...ன்...

    தீபனோ அவளை ஆர்வமின்றி நோக்கினான்.

    இந்தப் பொண்ணு...

    ம்... என்று ஆமோதிப்பது போல் தலையாட்டினாள்.

    'என் பொண்ணு யாழினி'ன்னு அவள் வாயிலிருந்து வார்த்தை வந்து விழுமென்று வாயையேப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏக்கம் தான் விஞ்சியது.

    இந்தம்மா பத்து வருஷமா தெளிவா தான் இருக்காங்க. யாரும் இவங்களை கேட்டு வராததால... இங்கேயே சின்னச் சின்ன வேலையை செஞ்சிட்டு தங்கிட்டாங்க. டாக்டர் ஒப்பீனியன் கேட்டுக்குங்க. மென்டல் டிஸ்டர்ப் ஆகாம பார்த்துக்கணும்

    ஷ்யூர் மேடம்! என் அம்மாவை நான் கண்ணுக்குள்ளே வச்சுப் பார்த்துப்பேன்

    உங்க ஹிஸ்டரியும் படிச்சேன். டி.எஸ்.பி. ரெகமன்டேஷன்ல வந்ததால பெருசா உங்கக்கிட்டே ஆதாரம் கேக்கலை

    தாங்க்யூ மேம்

    எல்லா ஃபார்மாலிட்டீசும் முடிந்து திருச்சியிலிருந்து சென்னைக்கு காரிலேயே சென்றனர்.

    தமயந்தி தீபனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ, யாரோ ஒரு பயணியுடன் பயணிப்பதைப் போல் எந்த உணர்வுமின்றி...

    அவனையும் சொல்லிக் குற்றமில்லை. பால்குடி மறக்காத குழந்தைப் பருவத்தில் தாயை விட்டுப் பிரிந்தவன். எந்த நினைவும் பதியாத பருவம்.

    ஆனால், யாழினியோ... அம்மாவின் பார்வை தன் மேல் படியாதா என்று நொடிக்கு நொடி கண்ணகலாமல் பார்த்தபடி...

    தமயந்தியின் கண்கள் அவள் பக்கம் திரும்பவே இல்லை.

    ***

    சின்னதாய் அடக்கமான வீடு! இரண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1