Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thee Kozhunthil Pani Thuliyai..!!!
Thee Kozhunthil Pani Thuliyai..!!!
Thee Kozhunthil Pani Thuliyai..!!!
Ebook137 pages49 minutes

Thee Kozhunthil Pani Thuliyai..!!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தறித் தொழிலாளியான சுந்தர் சமீப காலமாய் நசிந்து போன நெசவுத் தொழில் காரணமாய் வறுமையில் வாடினான். அந்தக் கால கட்டத்தில் அவன் தங்கை தேவிக்கு ஒரு நல்ல வரன் அதுவாய் வர, அதை விட்டு விட மனமில்லாமல் தனக்கு உணவளித்துக் கொண்டிருந்த அந்த தறிகளை விற்கிறான். ஆனால், அதன் மூலம் கிடைத்த பணமும் போதாததால் அம்மாவுக்கும் தங்கைக்கும் தெரியாமல் பெங்களூர் சென்று தன் கிட்னியை விற்று தங்கையின் கல்யாணத்தை முடிக்கிறான்.

அவன் கிட்னி விற்ற விஷயத்தைத் தெரிந்த கொண்ட அவன் அத்தைப்பெண் மைதிலி அவனை கை கழுவுகிறாள்.

ஒரு கட்டத்தில் தேவியின் கணவருக்கு சிறு நீரகம் செயலிழந்து விட, தன் கணவருக்கு ஒரு சிறுநீரகத்தை தானம் செய்! என்று அண்ணன் சுந்தரிடம் கேட்கிறாள் தேவி. ஏற்கனவே ஒரு கிட்னியை விற்று விட்ட சுந்தர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணற, அவன் மேல் கோபம் கொண்டு போய் விடுகிறாள் தேவி.

ஒரு கிட்னியைக் கொடுத்து தங்கை கழுத்துக்கு தாலி ஏற்றிய சுந்தர், இன்னொரு கிட்னியைக் கொடுத்து அந்த தாலியையும் காப்பாற்றுகிறான்...

மனதை உருக்கும் சோக வரிகளை வாசித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580130007093
Thee Kozhunthil Pani Thuliyai..!!!

Read more from Mukil Dinakaran

Related to Thee Kozhunthil Pani Thuliyai..!!!

Related ebooks

Reviews for Thee Kozhunthil Pani Thuliyai..!!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thee Kozhunthil Pani Thuliyai..!!! - Mukil Dinakaran

    https://www.pustaka.co.in

    தீக்கொழுந்தில் பனித்துளியாய்..!!!

    Thee Kozhunthil Pani Thuliyai..!!!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 1

    நாமக்கல் மாவட்டம்.

    நெசவுத் தொழிலை நிமிர வைத்துத் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்ட தேவனாங்குறிச்சி.

    ஒரு காலத்தில் விசைத் தறிகளுக்கு விதானமாகவும், கைத் தறிகளுக்கு களஞ்சியமாகவும் இருந்து விட்டு, இன்று வறுமைக்கு வாழ்க்கைப்பட்டு வதைபட்டுக் கொண்டிருக்கும் சிற்றூர்;.

    மூன்றாம் தெருவிலிருந்த அந்த ஓட்டு வீடு மதியத்திலிருந்தே படு சுறுசுறுப்பாய் இருந்தது. சமையலறையிலிருந்து வந்த வாசம் உள்ளே ஏதோ பலகாரம் தயாராகிக் கொண்டிருப்பதாய் தகவல் அறிவித்துக் கொண்டிருந்தது.

    வாசலில் புதிதாய் மெழுகப்பட்டிருந்த சாணி வெயிலுக்கு பளீரென்று மின்னியது. கை தேர்ந்த பெண்ணொருத்திதான் வாசலில் அந்தக் கோலத்தைப் போட்டிருக்க வேண்டும், ஏனெனில் கடந்து போகும் அனைவரையும் அந்தக் கோலம் ஒரு நிமிடம் நின்று பார்க்க வைக்கின்றதே?

    நிகழவிருக்கும் பெண் பார்க்கும் படலத்திற்காக சுந்தர்; படாத பாடுபட்டு முன் அறையை ஓரளவிற்கு ஒழுங்கு படுத்தி வைத்திருந்தான். சில இடங்களில் வீடு சரியில்லை! என்கிற காரணத்திற்காய் சில பெண்கள் தள்ளுபடி ஆகிப் போன விஷயம் அவனை லேசாய் பயமுறுத்தியிருந்தது. எங்கே அந்தத் தள்ளுபடிப் பெண்கள் பட்டியலில் தன் தங்கையின் பெயரும் இடம் பெற்று விடுமோ? என்கிற பதைபதைப்பு அவனுக்குள் இருந்து கொண்டேயிருந்தது.

    எதிர் வீட்டிலிருந்து இரவல் வாங்கி வந்திருந்த பிளாஸ்டிக் சேர்களை வரிசைப் படுத்தி வைத்து, பக்கத்துத் தெரு கம்பவுண்டர் வீட்டிலிருந்து ஓசி வாங்கி வந்திருந்த டீப்பாயை மத்தியில் வைத்தான். வீட்டிலிருந்த ஒரு கண்ணாடிக் குடுவையைக் கழுவி, அதில் நான்கைந்து பூக்களைச் செருகி, அந்த டீப்பாயின் மீது வைத்து அழகுபடுத்தியிருந்தான்.

    சற்றுத் தள்ளி நின்று அந்த அமைப்பை நோட்டம் விட்டவன், 'ம்ம்ம்... ஏதோ ஒரு குறை தெரியுதே?... என்ன அது?! என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன், அட... ஊதுபத்தி வைக்கலை" என்று சொல்லியபடியே ஓடிச் சென்று சாமி படத்திற்கருகில் இருந்த ஊதுபத்தி ஸ்டாண்டில் மூன்று ஊதுபத்திகளைச் செருகி பற்ற வைத்தான்.

    அடுத்து சமையலறை நிலவரத்தைக் கவனிக்க ஓடினான்.

    அங்கு வேலை நடந்து கொண்டேயிருக்க, 'என்னம்மா…மணி நாலே கால் ஆச்சு…அஞ்சரைக்கெல்லாம் அவங்க வந்துடுவாங்க!... நீ இன்னும் சமையல் வேலையை முடிக்காம இழுத்துக்கிட்டே இருக்கியே?... அவங்க வர்றதுக்கு அரை மணி நேரம் முன்னதாகவே சமையல் வேலைகளை முடிச்சால்தான்... சமையல் வாசனை கூடம் வரை வந்து மூக்கை நெருடாது" தாயைப் பார்த்துச் சொன்னான் சுந்தர்.

    'அது செரி…நாங்க என்ன இங்க கோலாட்டம் ஆடிட்டிருக்கோமா?... இல்ல... குச்சுப்புடி ஆடிட்டிருக்கோமா? சமையல்தானே பண்ணிட்டிருக்கோம்!... நம்ம அவசரத்துக்கு எல்லாம் ஆகுமா?... .வேகும் போதுதானே வேகும்?... நேரமாச்சு சீக்கிரம் வேகுன்னு சொன்னா எந்தப் பதார்த்தம் அதைப் புரிஞ்சுக்கிட்டு உடனே வேகும்?" அவன் அம்மாவிற்கு உதவுவதற்காக வந்திருந்த மைதிலி சுந்தரை வம்புக்கு இழுத்தாள்.

    ஒரு வகையில் அவள் அவனுக்கு முறைப்பெண்தான். அவர்களுக்குள் இருக்கும் சத்தமில்லாத காதல் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும்தான். ஆனால் யாருமே தெரிந்ததாய்க் காட்டிக் கொள்வதேயில்லை. எப்படியும் அதுக ரெண்டும்தான் ஜோடி சேரப் போகுதுக... அப்புறமென்ன?

    'எப்படியாவது இந்த தேவிக்கு சீக்கிரமே ஒரு கல்யாணமாகிப் போயிட்டான்னா…அடுத்த முகூர்த்தத்திலேயே சுந்தர் கையால ஒரு தாலி வாங்கிட்டு வந்து இந்த வீட்டுல ‘அக்கடா‘ன்னு உட்கார்ந்துக்கலாம்ன்னு பார்த்தா அதென்னமோ தெரியலை... இவளுக்கு வர்ற வரனெல்லாம் ஏதோவொரு காரணத்துல கை நழுவிப் போய்க்கிட்டேயிருக்கு!... .ஆண்டவா…இந்த எடமாவது அமையற மாதிரி அருள் செய்யுப்பா!" கைகள் சில்வர் ப்ளேட்டுக்களை துடைத்து அடுக்கிக் கொண்டிருக்க, மைதிலியின் மனசு தேவிக்காக வேண்டிக் கொள்வது போல், தனக்காக வேண்டிக் கொண்டது. பொது நலத்தில் சுயநலம்.

    'அம்மா…உனக்கு உதவி செய்யறதுக்கு வேற ஆளே கெடைக்கலியா?... இந்த வாயாடிதான் கெடைச்சாளா?... .இவளைக் கூட வெச்சுக்கிட்டேன்னா…நடக்கற வேலை கூட நடக்காது!... வாய் மட்டும்தான் காது வரைக்கும் நீளும்!... கொஞ்சம் ஏமாந்தேன்னா... மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு செஞ்சு வெச்சிருக்கற பலகாரத்துல பாதியைக் காலி பண்ணிடுவா... காயசண்டிகை!' பதிலுக்கு சுந்தரும் அவளை வாரினான்.

    'ஆஹா… அறிவுரை சொல்ல வந்துட்டாரய்யா எட்டுப்பட்டி நாட்டாமை!... இவரு பலகாரத்தைப் பார்த்தா தொட மாட்டார்... எடுக்க மாட்டார்... திங்க மாட்டார்... நாங்கதான் தின்னு தீர்ப்போம்... சின்ன வயசுல மைசூர்பாகை டவுசர் பாக்கெட்டுல ஒளிச்சு வெச்சுத் தின்னது யாரு?... அதே டவுசரைப் போட்டுக்கிட்டு ராத்திரி தூங்கும் போது... எறும்புக வந்து... எங்கியோ கடிச்சது யாரை?" மைதிலி அபிநயத்தோடு சொல்ல,

    ஏய்... ச்சூ... வாயை மூடப் போறியா இல்லையா?... . அங்கிருந்தே அதட்டினான் சுந்தர்.

    ரெண்டு கையும் வேலையாயிருக்கு... நீ வேணா வந்து உன் கையால வாயை மூடிடேன் மாமா என்றாள் மைதிலி.

    உன்னோட நாக்குல கோந்து தடவி, உன்னைப் பேச முடியாதபடி பண்ணினால்தான் இங்க மத்தவங்க நிம்மதியா இருக்க முடியும் என்று சுந்தர் சொல்ல,

    டேய்... டேய்... ஏண்டா அவளை வம்பிழுக்கறே?... சுந்தரின் தாய் லட்சுமி சிரித்தபடி கேட்டாள்.

    'அப்படிக் கேளுங்க அத்தை!"

    'யாரு…யாரு?…நானா வம்பிழுக்கறேன்?... என்னம்மா நீயும் இந்த வாயாடிக்கு வக்காலத்து வாங்கறே?... அது செரி ரெண்டு பேரும் பொம்பளைங்க ஆச்சே…விட்டுக் குடுப்பீங்களா?"

    'என்னண்ணே…இங்க சத்தம்?" கேட்டவாறே சமையலறைப் பக்கம் வந்த தங்கை தேவியைப் பார்த்து அசந்து போனான் சுந்தர்.

    தேவியை ஒரு பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், அழகி என்று சொல்லலாம். சாதாரண நாட்களிலேயே களையாக இருக்கும் அவள் முகம் அலங்காரம் பண்ணியதில் பௌர்ணமி நிலவாய்ப் பிரகாசித்தது. 'ஹூம்…இந்த கிராம தேவதையைக் கட்டிக் கொள்ள எந்த ராஜகுமாரனுக்கு கொடுப்பினையோ?' என்று நினைத்துக் கொண்ட சுந்தர்.

    Enjoying the preview?
    Page 1 of 1