Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbenum Ragasiyam
Anbenum Ragasiyam
Anbenum Ragasiyam
Ebook119 pages45 minutes

Anbenum Ragasiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாயில்லா சிறுவன் சரவணன். அவன் தந்தை குமரேசன் இரண்டாம் தரமாக சுமதியை மணந்து கொள்கிறார். தாயின் மறைவிற்குப் பின் ஒவ்வொரு இரவும் அவள் சேலையை கட்டிப்பிடித்துக் கொண்டு தாயின் வாசனையை நுகர்ந்தவாறே தூங்குவது சரவணன் வழக்கம். சுமதி வேண்டுமென்று மூத்த தாரத்தின் சேலைகள் மொத்தத்தையும் ஒரு குடுகுடுப்பைக்காரனுக்கு கொடுத்து விடுகிறாள். சாதாரண மனிதர்களை விட அதிக நுகரும் சக்தியும், ஒருவிதமான மோப்ப திறனும் கொண்ட சரவணன் தன் தாயின் சேலை வாசனையைப் பின்பற்றி சுடுகாட்டிற்கு, அந்தக் குடுகுடுப்பைக்காரனைத் தேடிச் செல்கிறான்.

அங்கே தன் தாயைப் புதைத்த இடத்தில் இருந்த மேட்டின் மீது தாயின் வாசனை வர அதன் மீது படுத்து உறங்கியும் விடுகிறான். படுத்திருக்கும் சிறுவனை எழுப்பி விசாரித்த குடுகுடுப்பைக்காரன் சரவணனின் கதையைக் கேட்டு அவன் மீது இரக்கப்பட்டு அவனைத் தன் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே சரவணன் தன் அதீத சக்தியால் பல அற்புதங்களை நிகழ்த்துகிறான். இதனிடையில் அந்தக் குடுகுடுப்பைக்காரனிடம் இருக்கும் நல்ல குட்டிச்சாத்தானை அபகரிக்க ஒரு மந்திரவாதி குடுகுடுப்பைக்காரனின் ஊருக்கு வருகிறான். அவனை சரவணன் தன் அதீத சக்தியால் நுகர்ந்து குடுப்பைக்காரனுக்கு அடையாளம் காட்டுகிறான். மீதி கதையை நாவலை வாசித்து அறிவோமே?

Languageதமிழ்
Release dateOct 28, 2023
ISBN6580130010255
Anbenum Ragasiyam

Read more from Mukil Dinakaran

Related to Anbenum Ragasiyam

Related ebooks

Reviews for Anbenum Ragasiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbenum Ragasiyam - Mukil Dinakaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அன்பெனும் ரகசியம்

    Anbenum Ragasiyam

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 1

    திருமணமான இரண்டாம் நாளே சுமதியின் முகத்தில் சோக ரேகை படரத் துவங்கியதைக் கண்ட அவள் தாய் ரங்கம்மா, ரகசியமாக மகளிடம் விசாரித்தாள். ஏண்டி மூஞ்சி இப்படி இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்கு... என்னாச்சு?

    தாயை ஏறிட்டுப் பார்த்து விரக்தியாய்ச் சிரித்த சுமதி, குரங்காட்டம் ஒரு மாப்பிள்ளையைக் கட்டி வெச்சிருக்கீங்கல்ல... அதான் நானும் குரங்காட்டம் மாறணும்னு இஞ்சியைத் தின்னிருக்கேன்... போதுமா? இயல்பிலேயே வாய்த்துடுக்கானவள் சுமதி, இப்போது கேட்கவா வேணும்...? பொரிந்து தள்ளினாள்.

    ச்சூ... கொஞ்சம் மெதுவாப் பேசுடி... யார் காதிலாவது விழுந்து வைக்கப் போகுது மகளை அடக்க முயன்றாள் ரங்கம்மா. படாதபாடுபட்டு லட்சக் கணக்கில் செலவு செய்து மகளுக்கு ஒரு திருமணத்தைச் செய்து வைத்துள்ளனர். அந்த இல்லறத்தின் ஆரம்பத்திலேயே ஏதாவது வில்லங்கம் வந்து விடுமோ என்று அவள் அஞ்சுவதும் நியாயம்தானே?

    ஏம்மா... போயும் போயும் ஒரு நாற்பத்தியஞ்சு வயசுக்காரனுக்கு... ரெண்டாந்தாரமா என்னைக் கட்டி வெச்சதுமில்லாம... ஏண்டி மூஞ்சி இப்படி இருக்கு?ன்னு குசலம் வேற விசாரிக்க வந்திட்டியா...? போம்மா... போய் வேற வேலை எதுனா இருந்தா பாரும்மா... என் கிட்டப் பேசி என்னோட எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தாதே! ‘கடு... கடு’ முகத்துடன் தாயைத் துரத்தினாள்.

    ஆனால், ரங்கம்மா அவள் பேச்சை சற்றும் பொருட்படுத்தாமல், அடியேய்... உனக்கும் வயசு முப்பத்தி மூணு முடியுது... இதுக்கு மேலேயும் உன்னை வீட்டோட வெச்சிருந்தா... கல்யாணம்ங்கற ஒண்ணே உன் வாழ்க்கைல நடக்காமலே போயிருக்கும்... அதான் யார் தலையிலாவது கட்டிட்டா போதும்ன்னு இந்த மாப்பிள்ளைக்குக் கட்டி வெச்சோம் தங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னாள்.

    தாய் சொல்வதிலிருந்த யதார்த்த உண்மையை புரிந்து கொண்ட சுமதி சற்றே இறங்கி வந்து, உங்களோட நிலைமை எனக்கும் புரிஞ்சதினாலதான்... நானும் ரெண்டாம்தாரமாப் போக ஒத்துக்கிட்டேன்... ஆனா இங்க வந்ததுக்குப் பின்னாடிதான் தெரிஞ்சுது... இங்க ஒரு சுண்டெலி இருக்குன்னு என்றாள்.

    சுண்டெலியா...? என்னடி சொல்றே? நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள் ரங்கம்மா.

    உன்னோட மாப்பிள்ளைக்கு... அதான் என் புருஷனுக்கு ஏழு வயசுல ஒரு மகன் இருக்கான்னு உனக்குத் தெரியுமா? சொல்லும் போது முகத்தை அஷ்ட கோணலாக்கிச் சொன்னாள் சுமதி.

    ம்... தெரியும் தெரியும்...!

    அப்படியா...? அப்ப அந்த விஷயத்தை என் கிட்டே ஏன் மறைச்சீங்க...? பையன் இருப்பதை என் கிட்டச் சொல்லவேயில்லையே? தலையைச் சாய்த்துக் கொண்டு, விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்டாள் சுமதி.

    அது... வந்து... என்று இழுத்த ரங்கம்மா, ஏய்... உண்மையிலேயே அந்த மகனுக்கு ஒரு தாய் வேணும்... அவன் தாய்ப்பாசத்துக்காக ஏங்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மனுஷன் இந்தக் கல்யாணத்தையே பண்ணிக்கிட்டார்... அது தெரியுமா உனக்கு? என்றாள் சமாளிப்பாய்.

    அம்மா... இப்பச் சொல்றேன் கேளு... ஒண்ணு... அந்த சுண்டெலி அந்த வீட்ல இருக்கணும்... இல்லை நான் இருக்கணும்... ஆணித்தரமாய்ச் சொன்னாள் சுமதி.

    ச்சூ... மெதுவாப் பேசுடி... ஹால்ல உட்கார்ந்திட்டிருக்கற உன் புருஷனுக்குக் கேட்டுடப் போகுது பயந்தாள் ரங்கம்மா.

    கேட்டா கேட்டுட்டுப் போகுது... அதைப் பத்தி எனக்கொண்ணும் பயமில்லை அலட்சியமாய்ச் சொன்ன சுமதியின் அருகில் வந்து,

    த பாருடி... நீ என்ன காரணத்துக்காக அந்தப் பயலைத் தொந்தரவா நெனைக்கறே!ன்னு எனக்குப் புரியாமலில்லை... கொஞ்ச நாள் பொறு... போன உடனேயே அந்தப் பயலைத் துரத்த நினைச்சேன்னா... அக்கம்பக்கத்துல இருக்கறவங்க சித்திக் கொடுமை... அதுஇதுன்னு பேசி... உன் பேரைக் கெடுத்துடுவாங்க... நிதானமா... நாசூக்காத் திட்டம் போட்டுத்தான் துரத்தணும்... என்ன?

    அது செரி... அது எப்ப நடக்கறது...? நான் எப்ப சுதந்திரமா... என் புருஷன் கூட சந்தோஷமா இருக்கறது?

    அதுக்காகத்தான் சொல்றேன்... ஒரு ஆறு மாசம் எப்படியோ பொறுத்துக்கோ... அப்புறம் அந்தப் பயலை... எங்காவது வெளியூர் ஸ்கூல்ல சேர்த்தி... ஹாஸ்டல்ல வெச்சிடுவோம் ரங்கம்மா தன் திட்டத்தைச் சொன்னதும், அதை ஏற்றுக் கொள்வது போல் தலையை மேலும், கீழுமாய் ஆட்டிய சுமதி,

    நீ சொல்றதும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு... சரி... நடக்கட்டும்... நடக்கட்டும்...! எவ்வளவு சீக்கிரத்துல நடத்தணுமோ... அவ்வளவு சீக்கிரத்திலே நாமதான் நடத்தி முடிக்கணும்.

    சரி... சரி... பேசிட்டே நிற்காதே... ஹால்ல உட்கார்ந்திருக்கற மாப்பிள்ளைக்கு குடிக்க எதுனாச்சும் கொண்டு போய்க் குடு பரபரத்தாள் தாய்.

    என்ன இருக்கு... அதுக்குக் குடுக்கறதுக்கு? திருப்பிக் கேட்டாள் சுமதி.

    ச்சூ... அதுஇதுன்னெல்லாம் பேசாதடி... உன் புருஷண்டி அவரு...! என்று மகளை அடக்கிய ரங்கம்மா, காஃபி... டீ... எல்லாம் இருக்கு என்றாள்.

    அதெல்லாம் வேண்டாம்... லெமன் இருக்கா?

    ஏய்... நீ எதுக்கு எலுமிச்சம்பழம் இருக்கா?ன்னு கேட்கறேன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு... அவரு தலைல வெச்சுத் தேய்ன்னு சொல்லத்தானே...? கோபமாய்க் கேட்டாள் ரங்கம்மா.

    அதில்லைம்மா... ஜூஸ் பிழிஞ்சு எடுத்திட்டு வா... ன்னு சொல்லத்தான் கேட்டேன்...! இருக்கல்ல?

    ம்ம்... இருக்கு.

    நான் போய் ஹால்ல அவர் கூட இருக்கேன்... நீ ஜூஸ் போட்டு அங்க கொண்டு வா! சொல்லி விட்டு ஹாலுக்கு ஓடினாள் சுமதி.

    கடவுளே... இந்தப் பொண்ணு பேசறதைப் பார்த்தா பெரிய பிரச்சினையைக் கொண்டு வந்திடுவா போலல்ல இருக்கு மனசுக்குள் புலம்பிக் கொண்டே எலுமிச்சம்பழத்தை நறுக்கினாள் ரங்கம்மா.

    கண்ணாடி டம்ளர்களில் ஜூஸை நிரப்பி, ஒரு டிரேயில் வைத்து எடுத்துக் கொண்டு வரும் போது ஹாலில், மாப்பிள்ளை குமரேசனின் மகன் சரவணன் தன் தந்தையின் மடியில் அமர்ந்திருந்தான். எதிர் சோபாவில் அதை முறைத்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் சுமதி. அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன.

    ஜூஸை ரங்கம்மா நீட்ட, தான் எடுத்துக் கொள்ளாமல் மகனைப் பார்த்து, சரவணா... எடுத்துக்கப்பா என்றார் குமரேசன்.

    முகம் மாறினாள் சுமதி. இந்தாளுக்கு கொண்டு வந்தா... இது அவனை எடுத்துக்கச் சொல்லுது... கர்மம்... கர்மம் மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.

    பையன் தயங்க, முதல்ல நீங்க எடுத்துக்கங்க மாப்ள என்றாள் ரங்கம்மா.

    ஆனால், குமரேசனோ ஒரு ஜூஸ் டம்ளரை எடுத்து மகன் கையில் கொடுத்து விட்டு, "டீப்பாய் மேலே

    Enjoying the preview?
    Page 1 of 1