Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Attaikathi Rajakkal
Attaikathi Rajakkal
Attaikathi Rajakkal
Ebook141 pages54 minutes

Attaikathi Rajakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“அட்டைக்கத்தி ராஜாக்கள்” என்னும் இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 20 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். சில சமூகக் கண்ணோட்டத்துடன் படைக்கப்பட்டவை. சில குடும்பக் கதைகள். சில காதல் கதைகள். ஒரு தொகுப்பில் இதுபோல் பல்வேறு வகையான கதைகளைத் தொகுத்துக் கொடுப்பதில் உள்ள நன்மை என்னவென்றால்…, ஒரே மாதிரியான கதைகளை வாசிப்பதால் ஏற்படும் சலிப்பிலிருந்து வாசகர்களை மீட்கலாம். ந்தே போல் அந்த வாசகரை முழுத் தொகுப்பையும் ஒரே மூச்சில் வாசிக்க வைக்கலாம்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள “அட்டைக்கத்தி ராஜாக்கள்” “மேடையில் வேறு முகம்…வேறு பேச்சு, நிஜத்தில் வேறு முகம்…வேறு பேச்சு” என்று வாழும் கபடதாரிகளுக்கான சாட்டையடி. “அவர் பொருட்டு எல்லோருக்கும்” என்னும் சிறுகதை சென்னைப் பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடு.

மனதைக் கனக்க வைக்கும் கதையான “சுழல்” சிறுகதையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள விஷயம் உண்மை நிகழ்வே. பல மரணங்கள் பணத்துக்காக நிகழ்த்தப்படுகின்றன, என்கிற உண்மையை அறிந்தும் உரக்க குரல் கொடுப்பார் யாருமின்றிப் போனதால் தொடர்கின்றன அந்த துயரச் சம்பவங்கள் தொடர்கதையாய்.

எதையும் மாத்தி யோசித்தால் உயர்வு உண்டாகும் என்பதை “மாத்தி யோசி” சிறுகதையும், மூட நம்பிக்கைகளின் முகமூடியை அடையாளம் காட்ட “சாமி ஆடு” சிறுகதையும், கணவன் மனைவிக்குள்ளான சந்தேகப் பிணியைச் சாட “வந்தது யாரு?” சிறுகதையும், விலங்குகளையும் நேசிப்போம் என்றுரைக்கும் “வித்யாவும் நாய்க்குட்டியும்” சிறுகதையும் இத்தொகுப்பில் உள்ளன.

சிறுகதைகள் சுருங்கக் கூறப்படும் பெருங்காப்பியங்கள். அவற்றினுள் எழுத்தாளர் பொதிக்கும் நன்னெறிகள் சமூகத்தை வளர்க்கும் நல்லுரங்கள்.

நன்றி,

முகில் தினகரன்,
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580130005600
Attaikathi Rajakkal

Read more from Mukil Dinakaran

Related to Attaikathi Rajakkal

Related ebooks

Reviews for Attaikathi Rajakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Attaikathi Rajakkal - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    அட்டைக்கத்தி ராஜாக்கள்

    Attaikathi Rajakkal

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அட்டைக்கத்தி ராஜாக்கள்

    2. அவர் பொருட்டு எல்லோர்க்கும்...

    3. முடிவாய் ஒரு முடிவு

    4. சரிங்க... நீங்க சொல்றபடியே!

    5. தெய்வத்துள் வைக்கப்படும்

    6. அவசரப் புத்தி

    7. ஒரு புறம் வேடன்... மறு புறம் நாகம்!

    8. சுழல்

    9. சாமி ஆடு

    10. வந்தது யாரு?

    11. வசூல் ராஜா

    12. அப்பாவிடம் ஒரு மர்மம்

    13. லட்சியம் நிறைவேறியது!

    14. மாத்தி யோசி!

    15. அதுதானுங்க பொம்பளை

    16. சைவ மனசு

    17. வித்யாவும், நாய்க்குட்டியும்

    18. ஜோதி ஏற்றிய ஜோதி

    19. கொஞ்சம் மைனஸ், நிறைய ப்ளஸ்

    20. காசு, பணம், துட்டு, மணி...!

    1. அட்டைக்கத்தி ராஜாக்கள்

    பொதுவாகவே இலக்கியக் கூட்டங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. எப்போதோ ஒரு முறை தெரியாத்தனமா நண்பர் ஒருவரின் வற்பறுத்தலுக்காகச் சென்று கவிதை என்ற பெயரில் சில கன்னாபின்னாக்களையும்... தத்துவம் என்ற பெயரில் சில தத்துப்பித்துக்களையும் கேட்டு... மனம் நொந்து... நெடுநாள் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து... ஏதோ இப்போதுதான் கொஞ்சமாய்த் தேறி... பழைய நிலைமைக்கு வந்திருக்கேன்.

    இந்த நேரத்தில் எனக்கு மாபெரும் சோதனை என் மகள் அஞ்சலி மூலமாக வந்தது.

    அப்பா... இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நீங்க ப்ரீதானே?

    ஏம்மா எதுக்குக் கேட்கறே?

    அன்னிக்கு ஆர்.எஸ்.புரம் நகரத்தார் சங்க கட்டிடத்துல ஒரு இலக்கியக் கூட்டம் நடக்குதுப்பா... அதுக்கு நான் கண்டிப்பா போயாகணும்... நீங்களும் கூட வர்றீங்க

    எனக்கு பகீரென்றது. என்னது... இலக்கியக் கூட்டமா?... நானா?... அம்மா தாயே... என்னை ஆளை விடு... நம்மால் ஆகாது

    அப்பா... நான் எப்படிப்பா தனியாப் போறது?

    உங்கம்மாவைக் கூட்டிட்டுப் போ...

    அது சரி... எனக்காவது ஓரளவுக்கு டவுன் பஸ் பழக்கமிருக்கு... அம்மாவுக்கு எந்த நெம்பர்... எங்க போகும்னே தெரியாது... அதைக் கூட்டிட்டுப் போகச் சொல்றீங்களே... சிணுங்கிளாள் அஞ்சலி.

    அம்மா... வேண்டாம்மா... வேற என்ன வேணாலும் செய்யச் சொல்லு... செய்யறேன்... இலக்கியக் கூட்டம் மட்டும் வேண்டாம்மா... கெஞ்சினேன் நான்.

    அவள் பிடிவாதமும் என் மறுப்பும் கடுமையாக மோதியதில் அவள் பிடிவாதமே வெல்ல நான் பலியாடானேன்.

    ஞாயிற்றுக் கிழமை.

    ஓன்பது மணி நிகழ்ச்சிக்கு காலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி டவுன் பஸ்ஸைப் பிடித்து ஒன்பதே காலுக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது அரங்கினுள் எண்ணி நாலே பேர்தான் இருந்தனர்;

    சார்... நிகழ்ச்சி... இருக்கல்ல? சந்தேகப்பட்டு ஒருவரிடம் கேட்டேன்.

    இருக்கு... இருக்கு... எப்படியும்... பத்து... பத்தரைக்கு ஆரம்பிச்சிடுவாங்க

    இரண்டாம் வரிசையில் இருக்கை பிடித்து அமர்ந்தோம்.

    கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் சேரத் துவங்கி பத்தரை மணி வாக்கில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் தறுவாயில் அரங்கின் முக்கால்வாசி நாற்காலிகள் நிரம்பியிருந்தன.

    யார் யாரோ வந்து எதையெதையோ பேசிவிட்டுச் சென்றபின் சிறப்புப் பேச்சாளர் தன் உரையைத் துவக்கினார்.

    யாரும்மா இவரு? கிசுகிசுப்பான குரலில் அஞ்சலியிடம் கேட்டேன்.

    என்னப்பா இப்படிக் கேட்டுட்டீங்க?... இவருதாம்பா ஆம்பூர் அனலேந்தி... நல்ல இலக்கியவாதி... சாட்டையடிப் பேச்சாளர்... பத்திரிக்கைகளிலெல்லாம் கூட இவரு பேரு அடிக்கடி வருமே...

    எனக்கென்னவோ அப்படியொரு பெயரை இதுவரை கேட்டதாகவோ... படித்ததாகவோ சுத்தமாகவே ஞாபகத்திலில்லை. என்னத்தைப் பேசிக் கிழிச்சுடப் போறான் இவன்? என்கிற அலட்சிய மனப்பான்மையோடிருந்த என்னை சற்று கவனிக்க வைத்தது அவரின் பேச்சு.

    ஈவ் டீஸிங் என்கிற பெண்களுக்கெதிரான சமூகக் கொடுமை பற்றியும்... அது சம்மந்தப்பட்ட பெண்களையும்... அவளது குடும்பத்தாரையும் உளரீதியாக எந்த அளவிற்குப் பாதிக்கின்றது என்பது பற்றியும்... அக்கொடுமையினால் உயிரிழந்த மாந்தர்களைப்பற்றியும்... அது போன்ற கொடுமைகளை இழைக்கும் இளைஞர்களை... ஆண் வர்க்கத்தினரை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பது பற்றியும் அந்த ஆம்பூர் அனலேந்தி பேச்சில் தெறித்த அனல் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. நான் மட்டுமல்ல... மொத்தக் கூட்டமும் அனலேந்தி என்ற பெயருக்குப் பொருத்தமானவர்தான் இவர் என்கிற கருத்தை தம் அதிர வைக்கும் கரவொலியால் தெரிவித்தது.

    நடப்புச் சமூகத்தில நம் கண்ணெதிரே நிகழும் இது போன்ற கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் மனதைரியம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்... அப்படி ஏற்படாத பட்சத்தில் நான் கோழை என்பதை பகிரங்கமாக அறிவித்து விட்டு முச்சந்தியில் விஷமருந்திச் சாக வேண்டும்... அல்லது தூக்கில் தொங்க வேண்டும்... என்று அவர் பேசிய போது எழுந்த கைதட்டல் அரங்கின் மேற்கூரையில் மோதி எதிரொலித்தது.

    அஞ்சலி பெருமிதமாய்த் திரும்பி என்னைப் பார்க்க நான் புருவத்தை உயர்த்தி ஆமோதித்தேன்

    கூட்டம் முடிந்து கிளம்பி, பேருந்து நிலையத்தை வந்தடையும் போது மாலை மூன்று மணி ஆகிவிட்டது.

    எங்களுக்கான பஸ் புறப்படத் தயாராக நின்று கொண்டிருக்க ஓடிப்போய் ஏறிக் கொண்டோம்.

    பஸ்ஸில் கூட்டம் சற்றுக் குறைவாகவே இருக்க இருவருக்கும் இடம் கிடைத்து அமர்ந்தோம். குனிந்து பாக்கெட்டில் கை விட்டு சில்லரை எடுக்கும் போது சிவானந்தா காலனி ஒண்ணு குடுங்க...

    எங்கோ கேட்ட குரலாய்த் தெரிய நிமிர்ந்து பார்த்தேன். எனக்கு முன் இருக்கையில் ஆம்பூர் அனலேந்தி.

    ஓ... இவரும் இந்த பஸ்ஸில்தான் வருகிறாரா?

    பஸ் வடகோவை மேம்பாலம் நிறுத்தத்தில் நின்ற போது நான்கு ஜீன்ஸ் இளைஞர்கள் சத்தமாய்ப் பேசிச் சிரித்தபடியே பஸ்ஸில் ஏறினர்.

    பஸ்ஸிற்குள் இப்போது சிகரெட் வாடை.

    எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து சாய்ந்தபடி நின்று கொண்டு அவ்வப்போது அஞ்சலியை அவர்கள் பார்வையால் தீண்ட நான் முறைக்க ஆரம்பித்தேன்.

    மச்சி... இப்பெல்லாம்... மயிலுக... செக்யூரிட்டியோடவே வருதுகப்பா... காதில் கடுக்கன் அணிந்தவன் சொல்ல,

    நீ ஏனப்பா அதக் கண்டுக்கறே?... நமக்கு மயிலுகதான் முக்கியம்... அத்த மட்டும் பாப்பியா... அத்த விட்டுட்டு...

    மச்சி... இங்கொரு செவப்பு மயிலு... எப்படி செழிப்பாயிருக்கு கண்டுக்கினியா?

    அஞ்சலி சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.

    செழிப்பிற்குக் காரணமான விவசாயி கூடவே வரானே

    நான் பற்களை நற... நற வென்று கடித்தேன.;

    மச்சி... உனுக்கு செம்மயிலு பிடிக்குமா?... செம்மீனு பிடிக்குமா?

    என் நரம்புகள் முறுக்கேற ராஸ்கல்... ஓங்கி அறைஞ்சேன்னா... உம்மூஞ்சி... செம்மூஞ்சி ஆய்டும் ஆவேசமாய்க் கத்தினேன்.

    பஸ்ஸிலிருந்த அனைவரும் என்னைத் திரும்பிப் பார்த்தனர;. ஆம்பூர் அனலேந்தி உட்பட.

    ஆனால் யாரிடமும் எவ்வித ரீயாக்ஷனும் இல்லை. நமக்கென்ன? என்கிற பாணியில் அவர்களனைவரும் மீண்டும் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கையில் மூழ்கியது என்னை வியப்பிலாழ்த்தியது.

    மச்சி... விவசாயி கூவுறானே?

    என்ன பண்ணச் சொல்றான்?... ஏர் உழுகச் சொல்லுறானா... இல்ல தண்ணி காட்டச் சொல்றானா? தொங்கு மீசை இளைஞன் சொல்ல, மற்றவர்கள் ஹோவென்று கோரஸாய்ச் சிரித்தனர்.

    எனக்கு அவமானமாகவும்... ஆத்திரமாகவும் இருந்தது.

    ஈவ் டீஸிங் கைப் பற்றிப் பொறி பறக்கப் பேசிய ஆம்பூர் அனலேந்திக்கு பின்னால் நடக்கும் கூத்து நன்றாகவே தெரியும்... தெரிந்தும் அமைதியாய்... காது கேளாதவராய் அமர்ந்திருந்தார்.

    அடப்பாவி... மேடைல அந்த முழங்கு முழங்கினானே... இங்க கண் எதிரே நடக்குது... தெரிஞ்சும் தெரியாத மாதிரி வர்றானே... அப்ப மேடைல பேசினதெல்லாம் வெறும் கைதட்டலுக்காகத்தானா?... பேச்சு வேறு... செயல் வேறு... என்பதுதான் சிறந்த இலக்கியவாதிக்கான தன்மையா?

    இப்போது என் கோபம் அந்த இளைஞர்கள் மீதிருந்து அந்த போலி இலக்கியவாதியின் மேல்

    Enjoying the preview?
    Page 1 of 1