Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjam Sirikkalame...
Konjam Sirikkalame...
Konjam Sirikkalame...
Ebook255 pages1 hour

Konjam Sirikkalame...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125803907
Konjam Sirikkalame...

Read more from Lakshmi Ramanan

Related to Konjam Sirikkalame...

Related ebooks

Related categories

Reviews for Konjam Sirikkalame...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjam Sirikkalame... - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    கொஞ்சம் சிரிக்கலாமே...

    Konjam Sirikkalame...

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. உலகம் பெரிது!

    2 காசி அத்தையும் இது சந்தனக்கட்டையும்

    3 சுந்தரவரதன் ஹிப்பியாகிறான்!

    4 சாவிக் கொத்து

    5. சுருதிப் பெட்டி

    6 வெங்கட் செய்த ஆம்லெட்

    7 மானேஜர் வந்தார்!

    8 குண்டு ஜாக்கிரதை

    9 புளிமூட்டை ஜாக்கிரதை

    10 கறை

    11 ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை!

    12 ஐயோ விடுமுறை!

    13 ஒரு நாள் போதுமே!

    14 (வி)ஷீலாயணம்

    15 அட்மிஷன் டெஸ்ட்!

    16 லயிப்பு

    17 மரியாதைக்குரியவர்

    18 எனக்கென்று இருபது நிமிஷம்!

    19 சீனிவாசனை காணோம்!

    20 அளவோடு...

    21 ஜெய்ப்பூருக்கு வாருங்கள்

    22 வாயிற்படி ஜாக்கிரதை!

    23 என்ன அம்மா அது?

    24 தோசைக் கொலை!

    25 குண்டப்பா எங்கே?

    26 பெண் என்பவள்...

    27 ஸ்ரீநகர் திக்திக்!

    28 சினிமா அகராதி

    29 தீபாவளி ஒரு ஆராய்ச்சி

    30 அது மட்டும்...!

    31 ஸீத்ரு புடவை

    32 ஹஹ்ஹா.... டிராஸோஃபீலா

    33 மாட்டேன் என்ற மாடு...

    34 ப.ப. சாவிக் கொத்து

    35 எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!

    36 தேவை... ஃபிளாட்டுள்ள ஒரு மணமகன்

    37 தைரியத்தோடு...

    38 டின்னருக்கு அழைப்பு

    39 பாக்ஸ் ஆபீஸ்

    40 விடுமுறைக்கு எங்கே போகலாம்?

    முன்னுரை

    வாழ்க்கையில் பல அனுபவங்களின் நினைவுகள் நீங்காத தடங்களாய் மனதில் நிலைத்துவிடுகின்றன. அவற்றில் பசுமையான நினைவுகளும் உண்டு. அப்போது என் கணவர் திரு. ரமணன் ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையிலுள்ள பார்மீரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தார். - தார் பாலைவனத்தின் ஒரு பகுதி அது. முழுவதும் மணல் பிரதேசம். தகிக்கும் வெயில். தாங்க முடியாத குளிர். தண்ணீர்க் கஷ்டம். எங்கோ தொலைதூரத்திலிருந்த கேணியிலிருந்து ஒட்டகத்தின்மீது தோல் பைகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொண்டுவந்து கொட்டுவார்கள். ஒட்டகம் உடம்புக்கு வந்து படுத்துக் கொண்டால் திண்டாட்டம்தான். காவல் துறையினருக்கான குடியிருப்பிலிருந்த கிணற்றிலிருந்து ஒரு மண்பானையில் குடிநீரைத் தினமும் வேலையாள் கொண்டு வருவான். சமையல், சாப்பாடு, விருந்தோம்பல் எல்லாமே அதற்குள் அடங்க வேண்டும். பாம்பும், தேள்களும், எலிகளும் சகவாசிகளாய் எங்களைச் சுற்றிவரும்.

    மேற்சொன்ன விஷயங்களை நகைச்சுவை கலந்து வாயிற்படி ஜாக்கிரதை என்கிற தலைப்பில் கட்டுரையாக எழுதி ஆனந்தவிகடனுக்கு அனுப்பினேன். உடனே பிரசுரமானதுடன் அப்போதைய உதவியாசிரியரான சாவி அவர்கள் கட்டுரையைப் பாராட்டி இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நகைச்சுவையை என்னால் நன்கு கையாள முடியும் என்றும் நான் தொடர்ந்து நிறைய நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுத வேண்டும் என்றும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி எழுதியிருந்தார். நானும் துணிவுடன் பரிசோதனையில் இறங்கினேன்.

    திரு.லட்சுமி சுப்ரமண்யம் தனது தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் எஸ்.வி.வி. முதல் சோ வரை என்கிற புத்தகத்தில் எனக்காகச் சில பக்கங்களை ஒதுக்கிக் கெளரவித்ததை இங்கு குறிப்பிடவேண்டும்.

    அன்றாட வாழ்க்கையில் எழும் கனமான பிரச்சினைகளை நகைச்சுவை உணர்வோடு அணுகிப் பார்ப்போமானால் அவற்றின் பரிமாணம் குறைந்து, லேசாகி, சமாளிப்பது எளிதாகிவிடும் என்பது அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

    -லஷ்மி ரமணன்

    *****

    1. உலகம் பெரிது!

    இரவு மணி எட்டு முப்பத்தைந்து. ஈரோடு சந்திப்பு பிளாட்பாரத்திலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. தன் வலது கையால் முகவாயைத் தாங்கிக் கொண்டு முகத்தை ஒயிலாகச் சாய்த்த வண்ணம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஜன்னலுக்கருகில் அமர்ந்திருந்த தாரா.

    ஸ்டேஷனின் மங்கிய விளக்கொளியில் தெரிந்த சுவரொட்டி விளம்பரங்கள் அவள் கண்களில் படவே தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

    படக்!

    யாரோ அவசர அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு ஏறும் சப்தம். உள்ளே நுழைந்தவன் கதவைத் தாளிட்டுவிட்டு, அதனருகில் நின்றவாறு வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தை அவளால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அவன் அணிந்திருந்த உடுப்புகள் லேசாகக் கசங்கி இருந்தன. கலைந்திருந்த கிராப் காற்றில் பறந்து கொண்டிருந்தது.

    ஒருவேளை... டிக்கெட் இல்லாமல்... உடனே இது முதல் வகுப்புப் பெட்டி... என்றாள் அவள் அழுத்தந்திருத்தமாக.

    தெரியும்... தெளிவான பதில் அவனிடமிருந்து வந்தது.

    சற்றுநேரம் அங்கு அமைதி நிலவியது.

    தாரா, வந்தவனையும் எதிர் ஸீட்டிலிருந்த தன் தாத்தாவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். தன் கையிலிருந்து பையை மேல் தளத்தில் வைத்துவிட்டு உடைகளை ஒருமுறை தட்டிவிட்டுக் கொண்ட அவ்வாலிபன் கிழவரின் அருகில் சென்றமர்ந்தான். கிழவர் பாதி விழித்துக் கொண்டும் பாதி தூங்கிக் கொண்டும் இருந்தார்.

    எதுவரை போகிறீர்கள்? சற்று முன் சண்டையில் துவக்கவிருந்த பேச்சை சமரசத்தில் தொடர முயன்றான் அவன்.

    பதில் வந்தது கிழவரிடமிருந்து.

    வருவது கோவையிலிருந்து.. போவது சென்னைக்கு.. நீங்கள்? கடைசிப் பெட்டியாகச் சேர்த்து விடப்படும் கூட்ஸ் வாகனைப் போல் வேண்டியோ வேண்டாமலோ அவர் ஒரு கேள்வியையும் சேர்த்து விட்டார் தம் பதிலில்.

    நான் போவது சென்னைக்கு... வருவது... ஈரோட்டிலிருந்து என்று கூறி நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்த அவன் தாராவின் பக்கம் திரும்பி நீங்கள்? என்றான்.

    நானும் அவரும் ஒரே இடத்திற்குத்தான் போகிறோம். அவர் என் தாத்தா என்று பதிலளித்தாள் தாரா.

    சந்தோஷம் என்றவனைக் கிழவர் ஆச்சரியத்துடன் நோக்கினார். தான் தாராவுக்குத் தாத்தாவாக இருப்பதில் அவனுக்கென்ன சந்தோஷம் என்று நினைத்தார் போலும்!

    நீங்கள் தமிழரா?

    ஏன், பேசுவது தமிழைப் போலில்லையா?

    அதற்கில்லை... எதையோ கூற வந்தவள் நிறுத்திக் கொண்டாள். தமிழனாக இருந்துமா அவள் யார் என்பதை அறியவில்லை?

    ஓடும் ரயிலில் ஏறுகிறீர்களே, கால் தவறி இருந்தால்... சுயமாக நான்கு வார்த்தை அவனுடன் பேசியது இன்பமாக இருந்தது அவளுக்கு.

    நான் நாளைக் காலை பத்து மணிக்குள் சென்னையில் இருக்க வேண்டும் மேலும் நான் வழக்கமாக இப்படித்தான் ஏறுவேன்.

    கீழே விழுந்திருந்தால்... சென்னைக்கா போயிருப்பீர்கள்? என்று அவள் கேட்க நினைத்தாள், ஆனால் கேட்கவில்லை.

    ரயில் ஒரு சிறிய பாலத்தைக் கடந்து கொண்டிருந்தது. மனிதன் இயற்கையை என்றோ கட்டுப்படுத்தி விட்டான் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

    இது என்ன நதி?

    தெரியாது!

    சென்னை உங்கள் சொந்த ஊரா?

    இல்லை, ஈரோடுதான் சொந்த ஊர். அங்குதான் என் பெற்றோர் இருக்கிறார்கள்.

    தாரா கடிகாரத்தை ஒரு முறை பார்த்தாள். இன்னும் அவள் யாரென்பதைத் தெரிந்து கொள்ளவில்லையே அவன்!

    அடுத்தது என்ன ஸ்டேஷன்?

    தெரியாது, கால அட்டவணைப் புத்தகத்திலிருக்குமே!

    அது எனக்குத் தெரியும் என்றாள் அவள் காரமாக. தான் யாரென்பதை அவனிடம் கூறி விட அவள் உதடுகள் துடித்தன. கொஞ்சம் பொறுத்துத்தான் பார்ப்போம் என்று அடக்கிக் கொண்டாள்.

    மீண்டும் அமைதி.

    இன்னுமா உங்களுக்கு என்னைத் தெரியவில்லை? பொறுமை தன் வரம்பை மீறித் தாண்டிக் குதித்தது.

    ஊஹும். தெரியவில்லை.

    உமக்கு என்னதான் தெரியும்? என்பதைப் போல் அவனை ஒரு பார்வை பார்த்தாள் அவள்.

    என்னைப் பார்த்தாகக் கூட நினைவில்லையா?

    இல்லையே!

    நன்றாக யோசித்துப் பாருங்கள்.... ஹேர் ஆயில், புகையிலை... பாக்கு... ஸ்நோ விளம்பரங்களில்...

    மன்னிக்க வேண்டும். இவற்றில் ஒன்றையுமே உபயோகிக்கும் பழக்கம் எனக்கில்லை.

    போகட்டும். தினசரி சோப்பாவது தேய்த்துக் குளிக்கிறீர்களா? என்றாள் ஆத்திரத்துடன்.

    அவன் அமைதியாக நிமிர்ந்து பார்த்தான்.

    விளம்பரங்களில் நான் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை.

    அவளை வேண்டுமென்றே அலட்சியம் செய்கிறானோ?

    அவளால் பொறுக்க முடியவில்லை.

    நான் ஒரு நடிகை!

    "ஓகோ! நான் அடிக்கடி படம் பார்ப்பதில்லை.

    கோவையில் படப்பிடிப்புக்காகச் சென்று வருகிறேன்.

    அப்படியா!

    பாடிக்கொண்டே இருக்கையில் இடையே மின்சாரம் போய் விட்டால் நின்றுவிடும் வானொலிப் பெட்டியைப் போல் பேச்சு நின்றது.

    ஏன் பேசுவதை நிறுத்தி விட்டீர்கள்? என்றான் அவன் சகஜமாக.

    என்னை இன்னும் அவமானப்படச் சொல்கிறீர்களா? தாராவின் முகம் கோபத்தினால் சிவந்திருந்தது. உண்மையிலேயே அவளால் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அவள் நடித்த படம் எதுவாயினும் பார்த்து விடத் தயாராக இருந்த மக்கள் கூட்டம்தான் எவ்வளவு! அவளுடைய கையெழுத்துக்காகவே காத்து நிற்பவர்கள் எவ்வளவு! அவளுடைய பேட்டி கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள்தான் எத்தனை பேர்! ஒரு முறை நாடகமொன்றிற்குச் சென்று விட்டு ரசிகப் பெருமக்களிடையே அகப்பட்டுக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தது அவள் நினைவுக்கு வந்தது. அப்படிப்பட்ட நடிகரத்தினத்திடமா அவன் அலட்சியமாக நடந்து கொள்கிறான்? கோவை ரயில்வே நிலையத்தில் அவளை வழியனுப்பக் கூடிவிட்ட ரசிகர்களை அவன் கண்டிருந்தால் மூர்ச்சை போட்டு விழுந்திருப்பானே!

    தாரா தன் தாத்தாவை ஜாடையாகத் திரும்பிப் பார்த்தாள். அவர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அவன்... அவருடைய தலைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து.. அவளையே உற்று நோக்கிக் கொண்டிருப்பதாகப் பட்டது அவளுக்கு.

    அவள்....

    பிலிம் சுருளைப் போன்று புரண்டு கொண்டிருந்த கூந்தல். காமிராவைப் போல் பிறர் உள்ளத்தைப் படமெடுக்க முயலும் கண்கள். களையான முகவெட்டுக்கு அவசியமான எடுப்பான நாசி. சிரித்தால் ப்ளாஷ் விளக்குகளைப் போல் ஒளியிடும் பற்கள். இரவல் குரலில்லாமலேயே கணீரென்று ஒலித்த குரல்! ஒளிப்பதிவில்லாமலேயே மின்னும் உடற்கட்டு. சுவரொட்டி விளம்பரங்களில் காணும் விதவிதமான வர்ணங்கள் கொண்ட ஸில்க் புடவையும் அதற்கேற்ற ஜாக்கெட்டும் அவள் உடலை அலங்கரித்தன. இன்றைக்கெல்லாம் இருந்தால் அவளுக்கு இருப்பத்தைந்து வயது மதிக்கலாம். (மேக்கப் இல்லாமல்!)

    அவள் உடல் ஒருமுறை சிலிர்த்தது. அவன் பார்வை எதிலுமே லயிக்கவில்லை.

    அவன் சிந்தனை எந்தச் சூனியவெளியை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறதோ! இப்படியும் ஒரு மனிதப் பிறவியா? அவள் சிந்தனை. படர்ந்தது.

    அந்தப் புத்தகத்தை இப்படிக் கொடுக்கிறீர்களா? அவள் சிந்தனையைக் கத்தரிப்பவன்போல் பேசினான் அவன்.

    உங்களுக்குப் படிக்க வேறு தெரியுமா, என்ன? என்பதைப் போல் புத்தகத்தை அலட்சியமாக எடுத்து நீட்டினாள்.

    நன்றி

    பரவாயில்லை.

    ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்திய அவள் மீண்டும் திரும்பிப் பார்த்தபொழுது அவன் மேல் தளத்தில் ஏறிப்படுத்து நித்திரையில் ஆழ்ந்து விட்டிருந்தான்!

    பொழுது புலர்ந்ததற்கு அறிகுறியாக வெளியே வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது. -

    தாத்தா! எழுந்திருங்கள், சென்ட்ரல் வரப்போகிறது!

    அவரை எழுப்பிவிட்டு, ரகசியமாகத் திரும்பிப் பார்த்தாள் அவள். அவன் அவளுக்கு முன்பே எழுந்து உட்கார்ந்திருந்தான்.

    உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்?

    நீங்கள் என் பெயரைக் கேட்கவேயில்லையே? என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

    சரி, இப்பொழுது கேட்கிறேன் சொல்லுங்கள்.

    ரங்கா.

    அப்படியா!

    சென்னை வந்துவிட்டது என்று பொதுவாகக் கூறிவிட்டு ஆவலுடன் தலையை நீட்டி வெளியே நோக்கினாள் அவள்.

    ஸ்டேஷன் வந்துவிட்டது!

    தூரத்தில் ஒரு பெரிய கூட்டம்! அவள் வருவது அவர்களுக்கு எப்படியோ தெரிந்து விட்டிருக்கிறதே! அவனுக்கு வேண்டும் நன்றாக.

    அவளுக்கு எப்படிப்பட்ட வரவேற்பை அளிக்கிறார்கள் என்பதைப் பார்த்தாவது அவன் தெரிந்து கொள்ளட்டும், அவளுடைய புகழை!

    வண்டி நின்றது.

    அவன் அவசர அவசரமாக இறங்க முற்பட்டான்.

    இதோ இந்தப் பெட்டிதான்... ஜன்னல் வழியாக, உள்ளேயிருந்த அவளை எட்டிப் பார்த்துவிட்டு யாரோ ஒருவர் குரல் கொடுத்தார்.

    தொடர்ந்து ஐம்பது பேர் அவள் இருக்கும் பெட்டியே நோக்கித் தப் தப் வென்று ஓடி வந்தார்கள். சிலர் பூமாலைகளைக் கையில் பிடித்திருந்தனர்.

    தாத்தா பாருங்கள்! என்ற அவள் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

    அவளுக்கு இவ்வளவு புகழா?

    கூட்டத்தில் ஆறு வயதுக் குழந்தையிலிருந்து அறுபது வயதுக் கிழவர் வரை, ஈ மொய்ப்பது போல் பெட்டியை சூழ்ந்து கொண்டு விட்டார்கள்.

    ஆனால்...?

    அடுத்த கணம்.... ஆ! என்ன ஆச்சரியம்! அவசரமாக இறங்கித் தப்பித்துக் கொள்ள நினைத்த அவ்வாலிபனை எல்லோரும் வளைத்துக் கொண்டு விட்டார்களே!

    அவன் கழுத்தில் பூமாலைகள் வந்து விழுந்த வண்ணமிருந்தன.

    அவர்களுக்கென்ன சித்தம் கலங்கிவிட்டதா? டேய் அதோ பார் ஈ.பி.ரங்காடா! பேப்பரில் போட்டிருந்தபடியே வந்து விட்டார்! என்று குதித்தான் ஒருவன்.

    யாரு, இந்தியாவிலேயே பேமஸ் ஆல்ரவுண்டர். நாக்பூர் டெஸ்டில் ஸெஞ்சுரி அடித்ததுடன், எட்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினாரே, அவரா? பேஷ் மெட்ராஸ் டெஸ்ட்டில் நமக்குத்தான் வெற்றி.

    ஆமாம்! பேசிக் கொண்டிருந்த இருவரும் கூட்டத்தை நோக்கி ஓடி வந்தனர்.

    கிரிக்கெட்... வாழ்க! கிரிக்கெட் மன்னர் ஈ.பி.ஆர்... வாழ்க! என்று கோஷம் காதைத் துளைத்தது. தொடர்ந்து படபடவென்று கை தட்டல்.

    தாரா பிரமித்து நின்றாள். பிரபல ஆட்டக்காரர் ஒருவர் தன்னுடன் பிரயாணம் செய்ததை அவள் ஏன் உணரவில்லை? தன் போன்ற புகழ் யாருக்குமே இருக்காது என்ற அகம்பாவம். தன்னைப் பற்றி அவள் அறிமுகம் செய்து கொண்ட பின்னும் கூட அவன் அமைதியாக, பெருந்தன்மையுடன் இருந்து விட்டானே! தன்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவன் கூறவில்லை. மனிதன் ஒரு கலையில் பூரணத்துவம் அடைவதற்கு மற்றவைகளில் கவனம் செலுத்தக்கூடாது. அப்பொழுதுதான் அவன் கலை முழுமை பெறுகிறது. தான் யாரென்பதை அவன் அறிந்து லட்சியம் செய்யவில்லை என்று ஆத்திரப்பட்டாளே, அவள் மட்டும் அவனைப் புரிந்து கொண்டாளா?

    உலகம் பெரிது! அதில் எத்தனையோ துறைகள் மனிதன் வாழ்வதற்கு. அவன் போற்றும் கலைகள் எத்தனையோ! அதில் போட்டி எத்தனையோ! நான் என்று நிமிர்ந்து நிற்பதற்கு எவருக்குமே அருகதை இல்லை. அவன் நிறை குடம். கலை ஒன்றிற்கு மட்டுமே அவன் அடிமை. ஆனால் அவள்..? தனக்குள் கலையை வளர்த்தாலும் உள்ளத்தில் முளைவிட்டிருக்கும் உணர்ச்சியை நல்ல முறையில் வளர்க்கவில்லை. தான் என்னும் உணர்வே அவளிடம் மேலோங்கி இருக்கிறது. அதன் விளைவு கலை நிறைவுபெறாமலேயே, பூரணத்துவம்

    Enjoying the preview?
    Page 1 of 1