Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Brahmopadesham
Brahmopadesham
Brahmopadesham
Ebook214 pages1 hour

Brahmopadesham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580125805102
Brahmopadesham

Read more from Lakshmi Ramanan

Related authors

Related to Brahmopadesham

Related ebooks

Related categories

Reviews for Brahmopadesham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Brahmopadesham - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    பிரும்மோபதேசம்

    Brahmopadesham

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பிரும்மோபதேசம்

    பார்ட்டி

    உலகம் பெரிது!

    மரம்

    பிறந்த மண்

    முதல் தோட்டா!

    ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை!

    சுந்தரவரதன் 'ஹிப்பி'யாகிறான்!

    தாய்

    ராஜேஷ் பெண் பார்க்கிறான்!

    நிம்மி சொன்னது நிஜந்தானா?

    கறை

    சுதந்திரப் பறவை

    புதிய அலைகள்

    கறுப்பு ராணி

    யாரோ...!

    அத்தை

    அந்த ஒரு வார்த்தை...!

    பிரும்மோபதேசம்

    டில்லியிலிருந்து ஜானா கடிதம் எழுதி இருந்தாள்.

    "அப்பா,

    வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ரகுவுக்குப் பத்து வயது முடிந்து விடப்போகிறது. இப்பொழுதே அவன் அப்பாவுக்குத் தோள் உயரம் வந்து விட்டான். இந்த வருஷமே அவனுக்குப் பூணல் போட்டு விடலாம் என்று பார்க்கிறேன்.

    அவனுக்கு இதிலெல்லாம் நிரம்ப ஈடுபாடும் நம்பிக்கையும் இருக்கிறது. நடுக்குகிற தில்லிக் குளிரிலும் எழுந்து குளித்துவிட்டு சுப்ரபாதம் சொல்லுகிறான். சுப்ரமண்ய புஜங்கமும் விஷ்ணு சஹஸ்ரநாமமும் அவனுக்குத் தலை கீழ்ப்பாடம். வகுப்பில் சம்ஸ்க்ருதத்தில் அவனுக்கு முதல் மார்க். வடமொழியில் தேர்ந்தவரான உங்களுக்கு ஏற்ற பேரன் தான். பூணல் போட்டுக்கொண்டு சந்தி பண்ணி காயத்திரி ஜெபிக்க அவனுக்கு ஆசையாக இருக்கிறதாம். சீக்கிரமாக அந்த உபதேசத்தை அவனுக்கு சாஸ்திர பூர்வமாக நடத்திவிடலாம். உங்கள் அபிப்ராயம் எழுதவும்.

    ஜானா"

    கடிதத்தைப் பலமுறை படித்த நீலகண்டன் தன் பேரனைப் பற்றி மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார். நல்ல வேளையாக அவன் மாப்பிள்ளை விசுவைக் கொள்ளவில்லை. ரகுவுக்கு அவன் தாய்வழிப் பரம்பரைக் குணங்கள் வந்திருக்க வேண்டும்.

    அவரது அபிப்ராயத்தைக் கேட்டு மகள் எழுதி இருந்தது அவரைச் சிந்திக்க வைத்தது. ஜானாவின் வீட்டில் அவளுடைய அபிப்ராயங்களுக்கே இடம் இருந்ததில்லை. அப்படி இருக்கையில் அவர் என்ன அபிப்ராயப்பட்டுதான் என்ன பயன்?

    அப்படி இருந்தாலும் அவர் அதைத் தயங்காமல் நேரடியாக எழுதிவிட முடியாது. அதையே சாக்காக வைத்துக் கொண்டு விசு கோபப்படுவான். நெருப்பாக வார்த்தைகளைக் கொட்டுவான்.

    அவளுக்கு என்று தேர்ந்தெடுத்து விதி அவனைப் பதியாக்கி விட்டிருந்தது.

    அவள் அழகு, பொறுமை, கலையார்வம், புத்திசாலித் தனம் இவற்றுக்கு அவன் சரியான ஜோடிதானா?

    அந்தஸ்தைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

    அவருடைய மாப்பிள்ளையானதுமே அது தானே உயர்ந்து விட்டிருந்தது.

    தாழ்ந்த அந்தஸ்திலிருந்து பையன் எடுத்தால் அவன் தன் மகளிடம் பிரியமாக நடந்து கொள்ளுவான் என்று அவர் நினைத்தது தவறாகிவிட்டது.

    நடக்கப் போவதை அறியாமல் அவர், பெற்றோரும் கூடப் பிறந்தவர்களும் இல்லாத விசுவைத் தன் மருமகனாக்கிக் கொள்வதில் காட்டிய அவசரம்...

    திருமணத்துக்குப் பின் அவனை வெளிநாட்டுக்குத் தன் செலவில் மேலே படிக்க வைக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள்

    விசு படிப்பு முடிந்து திரும்பு முன்னே தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மானேஜராகப் பொறுப்பேற்க அவர் செய்திருந்த ஏற்பாடு... இவ்வளவும் ஜானாவின் நல்வாழ்வை உத்தேசித்து தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    ஆயினும் தாயற்ற பெண்ணாயிற்றே என்று பாசத்தை கொட்டி வளர்த்த ஜானாவின் வாழ்க்கை வேறு திருப்பத்தை எடுத்துக் கொண்டது. எதிர்பாராத விதத்தில் படிப்பை முடித்துக் கொண்ட விசுவுக்குத் தாய்நாடு திரும்பும் எண்ணமே இருக்கவில்லை. அமெரிக்காவிலேயே அவனுக்குக் கிடைக்கவிருந்த நல்ல வேலை, அவ்விடத்திய நாகரீக வாழ்க்கை, பெண்களின் கவர்ச்சி. அவர்கள் கலாச்சாரம் எல்லாவற்றிலுமே அவனுக்கு மோகம் பிறந்தது. ஜானகியை அவசரப்பட்டு மணந்து கொண்டு விட்டதன் மூலம், தான் அடைந்திருக்க வேண்டிய எதையோ இழந்து விட்டதாக ஆத்திரம் அடைந்தான். தான் இத்தனை தூரம் வந்து கல்விப் பயனைப் பெற முடிந்ததே அவளால் தான் என்கிற எண்ணம் அவனுக்கு ஏற்படவில்லை. அந்த நிலையில் வேலைக்கு ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டு நீலகண்டன் கடிதம் எழுதியபோது, அவர்மீது அவனுக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. 'எல்லாரும் அவனை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அதுவும் அவன் மாமனார் அவன் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதிக் கேட்கவில்லையே? வெளிநாடு செல்ல பண உதவி செய்தார் என்பதற்காக விசு முழுக்க முழுக்க அவருக்கு அடிமையாகிவிட முடியுமா? அவனுக்கு என்று லட்சியங்கள், ஆசைகள், அபிலாஷைகள் இருக்க முடியாதா? இல்லை, இருக்கக் கூடாதா?'

    ஊருக்குத் திரும்பிப் பணம் சம்பாதித்து அவர் அவனுக்கு உதவிய தொகையை அப்படியே அவர் முகத்தில் விட்டெறிய வேண்டும். பின் விவாகரத்துக் கோரி விட்டு அவன் சுயேச்சையாக வாழ்க்கையை வகுத்துக் கொள்ளுவான். விசு தீர்மானத்துடன் கிளம்பினான், ஆனால் நினைத்ததை செயல்படுத்துவது அத்தனை சுலபமாக இல்லை. அவன் வளர்த்துக் கொண்ட பழக்கங்களுக்கே அவன் வருவாய் போதவில்லை. தாயகம் திரும்பிய விசு தன்னைப் பெரிய கொம்பனாக நினைத்துக் கொண்டு மாமனாரையும் மற்றவர்களையும் துச்சமாக நடத்தியதையோ, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு... சங்கிலித்தொடராய் புகைத்துக் கொண்டு... தண்ணீருக்குப் பதில் விஸ்கி குடித்துக் கொண்டு... வந்தவர்களிடம் எல்லாம் 'அமெரிக்காவில்...' என்று தன் பெருமைகளைப் பறையடித்துக் கொண்டிருந்தான்.

    அவன் இன்னும் என்னவெல்லாம் செய்யத் திட்டமிட்டிருந்தான் என்பதைப் பற்றி நீலகண்டன் கவலைப்படவில்லை. ஜானாவிடம் மட்டும் அவன் கனிவையும், அன்பையும் காட்டினால் போதுமானது என்று நினைத்தார்.

    விசுவைப் பொறுத்தவரையில் அவன் முதல் எதிரியே ஜானாதானே? எனவே அவளுக்கு ஒவ்வொரு நாள் பொழுதும் நரகமாக இருந்தது.

    அவன் காரணமில்லாமல் அவள் மேல் கோபப்பட்டான். அவள் என்ன செய்தாலும் குற்றம் சொன்னான். அவளைச் சீண்டுவதற்காகவே பார்ட்டிகளில் அவளும் தனக்குச் சரியாக மது அருந்த வேண்டும் என்று வற்புறுத்தினான். அவளுக்குப் பழக்கமே இல்லாத அசைவ உணவைச் சாப்பிட வேண்டும் என்று பலவந்தப்படுத்தினான்.

    ஜானா பார்த்த பரம்பரை வேறு.

    அவள் வீட்டவர்கள் பூசை, புனஸ்காரம் என்று பழக்கங்களை வளர்த்துக் கொண்டவர்கள். அவள் தந்தை நீலகண்டன் காலையில் குளித்து சந்தி பண்ணாமல் காப்பி கூட அருந்த மாட்டார். உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தபோதும் ஓய்வு பெற்ற பின்னரும் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. நவராத்திரியில் ஒன்பது நாளும் ருத்ரமும் அபிஷேகமும் சஹஸ்ர நாமமுமாக வீடு அமர்க்களப்படும்.

    விசு வேண்டுமென்றே காலணிகளுடன் பூஜை அறையில் வந்து நிற்பான். சொன்னால் 'ஆண்டவன் இங்கு மட்டும் தான் இருக்கிறானா?' என்று எதிர்வாதம் செய்வான் நீலகண்டனின் மீது எப்படியெல்லாம் வெறுப்பைச் கொட்ட முடியுமோ அப்படி எல்லாம் வெளிப்படுத்தி அவர் மனம் புண்படும்படி செய்தான். அவருடன் பேசமாட்டான். அவர் எதிரிலேயே ஜானாவை வாயில் வந்தபடித் திட்டுவான்.

    அவனுக்குள் அவனையும் அறியாமல் உருவாகி விட்ட தாழ்வு மனப்பான்மைதான் இத்தனைக்கும் காரணமோ?

    அவனைப் புரிந்து கொண்ட கணத்திலேயே நீலகண்டன் விலகி ஒதுங்கிக் கொண்டார். ஜானா படித்த பெண் ஆனால் பொறுமைசாலி. தான் கல்லூரியில் கரைத்துக் குடித்த பைரனும், ஷெல்லியும், ஷேக்ஸ்பியரும் உப்புமாச் கிண்டவும் சூப் வைக்கவும் தான் உதவுகிறது என்பதைப் பற்றிக் கவலைப் படவில்லை.

    விசு போட்ட ஆட்டத்திற்கெல்லாம் மௌனமாக வளைந்து கொடுத்தாள். அதே சமயத்தில் தன் பழக்கங்களை முழுவதுமே அவனுக்காக மாற்றிக்கொள்ள முடியாது என்பதை நயமாக அவனுக்குப் புரிய வைத்தாள். விசு தொடுத்த போர் அவள் பொறுமைக்கு முன்னால் பயனற்றுப் போயிற்று.

    ஆத்திரக்காரனுக்கும் பலவீனமான குணங்கள் உண்டு என்பதைப் புரிய வைத்தது ரகுவின் பிறப்பு. அது ஜானாவுக்கு மகிழ்ச்சியைத் தந்த ஒரு நிகழ்ச்சியே தவிர அதனால் விசுவின் போக்கில் எந்தவித மாற்றமும் இல்லை.

    ஆரம்பத்தில் அவளை நினைத்துக் கலங்கி மனத்தைச் குழப்பிக் கொண்டிருந்த தந்தை 'அது அவள் முன்வினை’ என்று வேதாந்தமாக விட்டுவிடத் துவங்கினார். ரகுவைப் பற்றி அவள் எழுதும் பொழுது மட்டும் அவருக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.

    ரகுவுக்கு உபநயனம் செய்து வைப்பது பற்றி பல முறை எழுதியும் அவர் தயங்கிக் கொண்டு பதில் போடாமல் இருக்கவே, ஜானா புரோகிதரிடம் கேட்டு ஒரு முகூர்த்தத்தைக் குறித்து விட்டு உடனே வரும்படி தந்தைக்கு எழுதினாள். ரகுவும் குண்டு குண்டான எழுத்தில் தாத்தாவுக்கு அன்பான அழைப்பு விடுத்திருந்தான். நீலகண்டன் விசுவுக்காக இல்லாவிட்டாலும், பேரனைப் பார்க்கவாவது போவது என்று தீர்மானம் செய்தார். பட்டுப்புடவை, வேஷ்டி, குழந்தைக்கு ரிஸ்ட்வாட்ச் என்று சீர்வகைகளை ஜோடித்துக் கொண்டு புறப்பட்டார். முகூர்த்தத்துக்கு முந்தின நாள் தான் வரப்போவதைத் தந்திமூலம் தெரியப் படுத்தியும் விசு ஸ்டேஷனுக்கு வரவில்லை. வீட்டிலிருந்த மற்றவர்கள் வருவதையும் அவன் தடுத்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. எதிர்பார்த்தது தான்.

    டில்லி அவருக்குப் புதிதில்லை. அதனால் டாக்ஸியைப் பிடித்துக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தார். விசு ஆபீசுக்குப் போகாமல் குடித்து விட்டு அமர்க்களப் படுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது.

    நாளைக்குப் பூணலா? யாரைக் கேட்டுண்டு இந்த ஏற்பாடெல்லாம் நடக்கிறது? என்று இரைந்து கொண்டிருந்தான்.

    உங்கள் எதிரில் தானே வாத்தியாரைக் கூப்பிட்டு முகூர்த்தத்தை நிச்சயம் பண்ணித்து... மெல்லிய குரலில் ஜானா அவனுக்குப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தாள்.

    பொய்... அப்பட்டமான பொய். எனக்குத் தெரியாமலேயே தீர்மானம் பண்ணி உங்கப்பனை வரச்சொல்லிட்டே. ஒனக்கு அவன் தான் ஒசத்தி!

    அத்தனை பெரியவரை மரியாதை இல்லாமல் பேசாதீர்கள்

    இந்த உலகத்தில் என்னை விட எவன்டீ பெரியவன்?

    சாமான்களை இறக்கி வெளியில் வைத்துக் கொண்டு நீலகண்டன் உள்ளே நுழையலாமா வேண்டாமா என்று தயங்கினார்.

    தாத்தா...! ரகு ஓடிவந்து அவரை நமஸ்கரித்தான். அந்த நிமிஷத்தில் விசுவின் நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டு குழந்தை காலில் விழுகிறானோ என்று தோன்றியது அவருக்கு. காந்தத்தில் இழுபட்ட இரும்பாக அவர் அவனைத் தொடர்ந்தார். அவரை வரவேற்காதது இருக்கட்டும், விசு எடுத்த எடுப்பிலேயே எதுக்கு வந்தீர்கள்? என் பிள்ளைக்கு நாளைக்கு உபநயனம பண்ணி வைக்கிற ஐடியா எனக்கில்லை என்றான். அந்த நேரத்திலே தான் அந்தக் குடும்பத்துக்கு சம்பந்தமில்லாதவனாக ஆகி, மனதில் நினைப்பதைப் பேசவேண்டும் என்று அவருக்கு ஆசையாக இருந்தது.

    ரகுவுக்கு உபநயனம் செய்துவைக்க உனக்கு எந்த விதமான தகுதியும் இல்லை! என்று உரத்த குரலில் கத்த வேண்டும் போல் இருந்தது அவருக்கு.

    ஒரு பெண்ணின் தகப்பனாக இருக்க நேர்ந்து விட்ட காரணத்துக்காக, தலை குனிந்து வாய் பேசாமல் நின்றார். யூ நோ... எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. எனக்கே பூணல் கிடையாது தெரியுமா? கழற்றி எறிந்து விட்டேன் அவன் அலட்சியமாகச் சொன்னான்.

    நம்பிக்கை இருக்கிறவர்களைத் தடுக்காமல் இருக்கலாம். குழந்தை ஆசைப்படுகிறான்! என்றார் அவர் மெதுவாக.

    அவனுக்கென்ன தெரியும். அவன் வயசில் ரொம்பச் சின்னவன்

    விசு! துருவன் தவம் செய்யப் போனது ஐந்து வயசில் சாதனைகளுக்கு வயசு கூட ஒரு எல்லைக் கோடாக இருக்க முடியாது. நம்முடைய மதம் தர்மம், கலாச்சாரம், அனுஷ்டான்னங்கள் இவற்றை எந்த வயசிலும் கற்றுப் புரிந்து கொண்டு நடைமுறையிலும் அனுசரிக்கத் தடை ஏதும் இல்லை கூறிவிட்டு அவர் தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் தஞ்சம் புகுந்தார்.

    காப்பி கலந்து கொண்டு வந்த ஜானாவின் முகத்தில் கலவரம் தெரிந்தது.

    அப்பா! அவள் குரலைத் துயரம் கவ்விக் கொண்டு நின்றது. எனக்காக அவரை நீங்க மன்னிச்சிடுங்க. நாளைக்கு எல்லாம் நல்லபடியா நடக்கணுமேன்னு கவலையா இருக்கு. ஏற்பாட்டை வேணும்னா நான் பண்ணலாம். உபதேசம் அவர்தானே செய்யணும்? அப்படி ஏதாவது அவர் மறுப்பு சொன்னார்னா நீங்கதான் என் மானத்தைக் காப்பாத்தணும்!

    ஜானா என்ன வேளையில் அப்படிச் சொன்னாளோ... மறுநாள் நீலகண்டன் தான் மணையில் அமர்ந்து ரகுவுக்கு பிரும்மோபதேசம் செய்து வைக்க வேண்டி வந்தது. முதல் நாள் அளவுக்கு மீறிக் குடித்து விட்டதாலோ என்னவோ விசு சுயப்ரக்ஞையே இல்லாமல் படுத்து விட்டான். டாக்டரின் மருந்துகளாலும் அவன் போதை மயக்கத்தைத் தெளிவிக்க முடியவில்லை. உபநயனத்துக்கு வந்த நெருங்கிய உறவினர்களுக்கெல்லாம் விசுவுக்கு உடம்பு முடியவில்லை என்று ஜானா விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று.

    ரகு மிகுந்த கவனத்துடனும் ஈடுபாடுடனும் எல்லாவற்றையும்

    Enjoying the preview?
    Page 1 of 1