Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannukku Theriyatha Ulagangal
Kannukku Theriyatha Ulagangal
Kannukku Theriyatha Ulagangal
Ebook248 pages1 hour

Kannukku Theriyatha Ulagangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி வாஸந்தியின் எழுத்தில் உண்மை இருக்கும். பெண்ணினத்தின் மீது குவியும் துயரங்களையும், பிரச்சனைகளையும் அழுத்தமான மௌனத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் போராடும் குணமிருக்கும். இன்றைய சமூகத்தில் உள்ள முரண்பாடுகள், மதிப்பீடுகளின் சரிவுகள், அடிமனத்தில் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகள் இவருடைய கைவண்ணத்தில் உணர்ச்சிச் சித்திரங்களாகின்றன.

இதில் உள்ள ஒவ்வொரு கதையும் உருவமும், உள்ளடக்கமும் தேர்ந்த எழுத்தின் இலக்கிய முத்திரை பெற்றவை. -மாசிலாமணி

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580125405851
Kannukku Theriyatha Ulagangal

Read more from Vaasanthi

Related to Kannukku Theriyatha Ulagangal

Related ebooks

Reviews for Kannukku Theriyatha Ulagangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannukku Theriyatha Ulagangal - Vaasanthi

    http://www.pustaka.co.in

    கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்

    Kannukku Theriyatha Ulagangal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்

    2. பிராயச்சித்தம்

    3. பசி வந்திட...

    4. ஓர் இளம் பயிர் கருகுகிறது!

    5. ஆண்டவன் பார்வைக்கு

    6. வேண்டாத வரம்

    7. அப்பா 'வர்ஸஸ்' அம்மா

    8. கரையில் காத்திருக்கும் பிணங்கள்

    9. கரு

    10. ஜூடாஸ்கள்

    11. நரபலி

    12. யாருக்கு உபதேசம்?

    13. சுவர்

    14. சிறை

    15. சாம்பல்

    16. நிழல் தராத தருக்கள்

    17. வீடு

    முன்னுரை

    திருமதி வாஸந்தியின் எழுத்தில் உண்மை இருக்கும். பெண்ணினத்தின் மீது குவியும் துயரங்களையும், பிரச்சனைகளையும் அழுத்தமான மௌனத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் போராடும் குணமிருக்கும். இன்றைய சமூகத்தில் உள்ள முரண்பாடுகள், மதிப்பீடுகளின் சரிவுகள், அடிமனத்தில் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகள் இவருடைய கைவண்ணத்தில் உணர்ச்சிச் சித்திரங்களாகின்றன.

    இதில் உள்ள ஒவ்வொரு கதையும் உருவமும், உள்ளடக்கமும் தேர்ந்த எழுத்தின் இலக்கிய முத்திரை பெற்றவை.

    -மாசிலாமணி

    *****

    1. கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்

    கிருஷ்ணமூர்த்தி அன்றைக்கு வீட்டுக்குத் திரும்புகையில் எல்லார் வீட்டிலேயும் டி.வி போட்டுவிட்டிருந்தார்கள். வீட்டுக்குப் போய்ச் சேருவதற்குள் மாலுவும் சந்துருவும் சினிமாப் பார்க்கப் பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டிருப்பார்கள் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் கூடக் கம்பெனிக்குக் கூப்பிடும் இந்த ஸேட்ஜியை என்ன செய்தால் என்ன என்று ஓர் ஊமை ஆத்திரம் அவனுள் எழுந்தது. ஸேட்ஜிக்கு வயசு எழுபது. எந்த விதமான கவலையோ பொறுப்போ கிடையாது- கம்பெனி யோசனையை தவிர. அவனுடைய ஆசைகள் அவசரங்கள் குடும்ப நிர்ப்பந்தங்கள் எதையுமே புரிந்து கொள்ளாமல் வாரத்தில் கிடைக்கும் ஒரே ஒரு நாளையும் தனக்காகச் செலவழிக்க வேண்டும் என்கிற அவருடைய பேராசையை எதிர்த்து ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் அவருடன் பேச நினைத்து, முடியாமல் நாக்கு மடிந்து கொண்டு விடும் அந்த அவலத்தை நினைத்து ஞாயிறன்று மாலை இந்த வேளையில் வீடு திரும்பும்போது மறுபடி ஆத்திரம் ஏற்படுவது வழக்கமாகப் போயிற்று.

    வீட்டு வாசற்படியில் ருக்மிணி நின்றிருந்தாள். சிற்பம் மாதிரி. 'ஓ' இவள் என் மனைவி! என்கிற ஒரு பெருமை அவனைப் பரவசப்படுத்தியது. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் இவள் எப்படி இப்படி ஒட்டிய வயிறும் நிமிர்ந்த மார்புமாக இருக்கிறாள்! அக்கம் பக்கத்தில் இருக்கும் கல்யாணமான பெண்கள் எல்லாம் வெறும் சதைப் பிண்டங்களாக இருப்பதை அவன் பார்க்கையில் நல்லவேளை ருக்கு அப்படி இல்லை என்று சந்தோஷப்பட்டிருக்கிறான். இப்படிப்பட்ட ஒரு மனைவியைச் சந்தோஷப்படுத்தக் கூட முடியாமல் விடுமுறை நாளை இந்த ஸேட்ஜிக்கு...

    அவன் படியேறுகையில் ருக்கு விசுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போனாள்.

    கோபம்.

    அவன் ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு உள்ளே போனான்.

    அவள் காப்பியை 'டக்'கென்று மேஜை மேல் வைத்தாள்.

    உங்களுக்கு என் ஞாபகம் என்னிக்கு வந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்கேள்?

    ஞாபகம் இல்லாமெ என்ன? சதா உன் ஞாபகம் தான். இன்னிக்குக் கூட்டல்லே கூட தப்பு வந்துடுத்து... நான் வேலையாத்தான் போறேன், என்கிறதிலே உனக்கு நம்பிக்கையில்லையா?

    அவன் அவள் மேவாயைத் தொட்டு, இடையைத் தொட்டு, தோளைத் தொட்டு சமாதானமாகப் பேசிய பிறகு தான் ருக்குவின் முகத்தில் சிரிப்பு வந்தது.

    குழந்தைகள் எங்கே?

    பக்கத்தாத்துக்குப் போயிருக்கா டி.வி பார்க்க.

    நல்ல வேளை.

    எதுக்கு?

    இங்கே வாயேன்.

    நன்னா இருக்கு.வேளையில்லே, பொழுதில்லையா?

    அந்த ஸேட்ஜிகிட்ட வேலைக்குப் போனப்புறம் வேலைக்கும் பொழுதுக்கும் அர்த்தமேயில்லாமப் போயிடுத்து.

    ருக்குவின் கோபம் அடியோடு தணிந்து விட்டது என்று அவள் அருகில் வந்ததும் புரிந்தது.

    வாசற் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

    இது யார்ரா இது வேளை கெட்ட வேளையிலே

    அவள் சிரித்தாள்.

    டி.வி முடிஞ்சிருக்குமா என்ன?

    ஊஹூம்.

    அவன் முணு முணுத்துக் கொண்டே கதவைத் திறந்தான்.

    அவனுடைய சிநேகிதன் ராமு.

    அவர்களுடைய நிலை புரியாமல் ராமு சாவகாசமாய் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்ந்தான்.

    ஒரு சின்னச் சிரிப்புடன்,

    எனக்கு மாத்தலாயிடுத்து கிருஷ்ணமூர்த்தி என்றான்.

    ஓ! எந்த ஊருக்கு?

    மங்களூருக்கு. என்னுடைய டி.வியை விக்கப் போறேன். வாங்கிக்கிறியா?

    கிருஷ்ணமூர்த்தி சிரித்தான்.

    என்ன விளையாடறியாடா எங்கிட்டே அதுக்கெல்லாம் பணமில்லே.

    மார்க்கெட்டை விட 500 ரூபாய் குறைச்சுத் தரேன். இப்ப ஆயிரம் கொடு. போறும். அப்புறம் பாக்கியைத் தந்துடலாம். முதல் ஆயிரம் மட்டும் செவ்வாய்க்கிழமை வேணும்.

    கிருஷ்ணமூர்த்தி உதட்டைப் பிதுக்கினான்.

    நூறு ரூபாய் கூட இல்லே.

    ருக்கு ஜாடை காட்டற மாதிரி தோன்றிற்று. அவன் உள்ளே போனான்.

    என்ன ருக்கு...?

    ருக்கு ஒரு கெஞ்சுகிற பார்வை பார்த்தாள்.

    எப்படியோ பணத்தை புரட்டி வாங்கினாப் போறது!

    அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

    எப்படி?

    யாரையாவது கேக்கிறது!

    யாரை?

    உங்கப்பாவைக் கேட்டா சமயத்துக்குக் கொடுக்க மாட்டாரா?

    அவனுக்குச் சுரீரென்று கோபம் வந்தது.

    டோண்ட் பீ ஸில்லி!

    அவள் கண்களில் நீர் தளும்பிற்று. அவனுள் ஒரு லேசான சங்கடம் ஏற்பட்டது.

    என்ன இப்படி யோசனை இல்லாமப் பேசறே ருக்கு?

    அவள் மெல்லிய குரலில் தயங்கிக் கொண்டு சொன்னாள்.

    ரொம்ப நாளா யோசனை பண்ணிண்டு தான் இருக்கேன். உங்ககிட்டச் சொல்லத் தயக்கமா இருந்தது. டி.வி வாங்கணும்னு, எவ்வளவோ நாளா ஆசை. இன்னிக்கு இவர் மலிவாத் தரேன்னு வரச்சே அப்பாவைக் கேட்டா என்னன்னு சட்டுன்னு தோணித்து.

    விவரம் புரியாம பேசாதே ருக்கு.

    ருக்கு அவன் அருகில் நெருங்கி வந்து நின்றாள். தோளைத் தொட்டாள். மெத்தென்ற அவளது அருகாமை அவனைப் பலவீனப்படுத்திற்று.

    புரிஞ்சுதான் பேசறேன். உங்கப்பாகிட்டேந்து உங்களுக்குன்னு ஒரு பங்கு கிடைக்கணுமோல்லியோ?

    அதுக்காக இப்போ திடீர்னு போய்க் கேக்கறதா? ராமு செவ்வாய்க் கிழமையே பணம் வேணுங்கறான்.

    இன்னிக்கே கிளம்புங்கோ.

    அவன் திடுக்கிட்டாற்போல் அவளைப் பார்த்தான்.

    என்னது நீ! திடீர்னு பணத்துக்காகவா?

    எப்பவோ கேக்கணுமோல்லியோ?

    அவன் தயங்கினான்.

    ஸேட்ஸிக்கு என்ன சொல்றது?

    உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னு நீங்க திடீர்னு கிளம்பிப் போக வேண்டி வந்ததுன்னு சொல்றது.

    இந்த டி.வி ஆசை இவள் புத்தியை என்னமாய் ஆட்டி வைத்திருக்கிறது என்று நினைக்கையில் ஒரு விநாடி அவனுக்குப் பரிதாபமேற்பட்டது. இவளுடைய எந்த ஆசையை இது வரையில் நிறைவேற்ற முடிந்தது?

    ஆகட்டும் ராமு என்றான். செவ்வாய்க்குள்ளே பணம் கிடைச்சுதானா நான் வாங்கிக்கறேன், என்றான்.

    ராமு சென்ற பிறகு மறுபடி இந்த யோசனையெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று தோன்றிற்று. ருக்குவுடன் வெகு நேர தர்க்கத்துக்குப் பிறகு ஒரு வழியாய்ச் சமாதானமாகி ஒரு சின்னப் பையில் தன் உடுப்புக்களைத் திணித்துக் கொண்டு செலவுக்குப் பணத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

    அவன் கிளம்பும்போது அவள் மெல்லச் சொன்னாள்.

    அப்பா கிட்டக் கொஞ்சம் சாமர்த்தியமாப் பேசி முடிச்சுட்டு வாங்கோ. இத்தனை வருஷமாய் எல்லாத்தையும் அவளே அனுபவிச்சுண்டிருக்கா.

    அவனுக்குச் சுரீரென்று கோபம் வந்தது. இதெல்லாம் நீ எனக்குச் சொல்ல வேண்டியதில்லை, என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் கிளம்பினான்.

    கூட்டம் நிரம்பி வழிந்த ரயிலில் தூக்கம் வராமல் உட்கார்ந்திருக்கையில் எந்த பைத்தியக்காரத்தனத்தில் கிளம்புகிறோம் என்று தோன்றினாலும் ருக்கு சொன்னதில் தப்பு ஏதுமில்லை என்று பட்டது.

    காலேஜில் அவன் படித்துக் கொண்டிருந்தபோது அம்மா செத்துப்போனாள். அவன் படிப்பு முடிந்து வேலையில் உட்கார்ந்து கல்யாணம் ஆகிறவரை பேசாமலிருந்த அப்பா திடீரென்று ஒரு சின்னப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார். வெகு காலத்துக்கு அவனால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    நினைக்க நினைக்க அப்பாவின் மேல் ஒரு கோபமும், ஆத்திரமும், அதிகம் பழகாத சித்தியின் மேல் வெறுப்பும் மனத்தை ஆக்ரமித்து அவனைத் தூரத் தூர விலக்கின. அப்பா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

    ஓ! எல்லாம் அந்தச் சித்தியின் வரவினால் என்று அவனுள் ஓர் ஊமை ஆத்திரம் வரும். அப்பாவுக்கு இந்த வயசில் ஏற்பட்டிருக்கும் சபலம் அவனுக்கு மன்னிக்க முடியாததாக இருந்தது. அப்பாவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச நிலபுலன்களும் சித்திக்கும் அவளுடைய சந்ததிகளுக்கும் போகப் போகிறது என்கிற நினைப்பை ஜீரணிப்பது சிரமமாக இருந்தது. சித்திக்குக் குழந்தைகளே பிறக்கவில்லை. அந்த மட்டுக்கும் லாபம் என்று அவன் நினைத்துக் கொள்வான். அப்பா கல்யாணம் செய்து கொண்ட பிறகு அவன் ஊருக்குப் போவதை நிறுத்திக் கொண்டான். இந்தப் பத்து வருஷ காலத்தில் அப்பாவுக்கு தான் ஒருத்தன் இருப்பதே மறந்து போயிருக்கும் என்று அவன் நினைத்துக் கொள்வான்.

    அப்பாவின் சொத்தில் கணிசமாக எவ்வளவு தேறும் என்று அவனுக்குத் தெரியாது ஏதோ கொஞ்சமாவது கிடைத்தால் பாங்கில் சமயத்துக்கென்று போட்டு வைக்கலாம். ஸேட்ஜியிடம் இத்தனை வருடங்களாக வேலை பார்த்து முதுகில் கூனல் விழுந்ததைத் தவிர வேறு எந்தப் பிரயோசனமும் இல்லை. ருக்கு ஆசைப்பட்டுக் கேட்கும் ஒரு டி.வியைக் கூட வாங்க முடியாமல் என்ன வாழ்க்கை இது?

    அவன் ஊர் போய்ச் சேர்ந்தபோது மண்டையில் சுரீர் என்று வெய்யில் உறைத்தது. அப்பாவிடம் எந்த வகையில் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்தபடி நடந்தான்.

    யாராது? கிட்டுவா?

    அவன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

    அப்பாவின் பக்கத்து வீட்டுக்காரர், ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவனைக் கண்டதும் எழுந்தார்.

    எத்தனை வருஷமாச்சு பார்த்து, சௌக்கியமா?

    சௌக்கியம்.

    என்ன சமாசராம், திடீர்னு வந்திருக்கே?

    சும்மாதான்.

    என்னமோ கோபத்தை மறந்து இப்பவாவது வந்தியே. உங்கப்பா திண்டாடறதைப் பார்த்துப் போ.

    அவன் வியப்புடன் அவரைப் பார்த்தான்.

    உங்க சித்திக்குத்தான் உடம்பே சரியாயில்லையே?

    என்ன உடம்பு?

    அவர் நெற்றியில் கைவைத்துக் காண்பித்தார்.

    அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

    என்னது?

    ஆமாம்.

    எத்தனை நாளாய்?

    கொஞ்ச வருஷமாகவே ஹிஸ்டீரியா. உனக்குத் தெரியாதா?

    ஊஹூம்.

    ஆமாம். நீ எங்கே வந்தே இங்கே இடையிலே?

    அவர் அதைப் பற்றி அதிகம் பேசாமல் இருந்தால் நல்லது என்றிருந்தது அவனுக்கு.

    உங்கப்பா திண்டாடிண்டிருக்கார். உங்க சித்தி பாதி நாள் சமைக்கவே மாட்டாள். அவரே சமைத்துப்பார். பாவம் முடியல்லேன்னா ஹோட்டல்.

    அவன் ஓர் அதிர்ச்சியுடன் நின்றான்.

    எனக்கு இதைப் பற்றியெல்லாம் ஒண்ணும் தெரியாது.

    எப்படித் தெரியும்? அதுதான் போக்குவரத்தே வேண்டாம்னு இருந்துட்டியே!

    அவனுள் ஒரு லேசான அவமான உணர்வு ஏற்பட்டது.

    நா வரேன் மாமா.

    அவன் ஒரு திகைப்புடன், சங்கடத்துடன் வீட்டை நோக்கி நடந்தான். சற்றும் எதிர்பாராமல் தெரிந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

    அவன் பலவிதமான யோசனைகளுடன் வீட்டை அடைந்த போது வாயிற் கதவு லேசாகத் திறந்திருந்தது. அவன் உள்ளே போனான். அப்பாவைக் காணவில்லை. அவன் ஓர் அந்நியனைப் போல் நடுக் கூடத்திலேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.

    சட்டென்று அவனுடைய கவனம் கலைந்தது.

    நிலைப்படியில் சித்தி நின்றிருந்தாள். ஒரு லேசான புன்னகையுடன். 'நீ வந்திருப்பது எனக்குத் தெரியுமே' என்கிற மாதிரி. அவன் தாக்குண்டவன் மாதிரி எழுந்து நின்றான். இவளுக்கா புத்தி சரியில்லை? அவள் நின்ற நிலையும், அவள் உடல் அமைப்பும், முகத்தின் வசீகரமும் ருக்குவை விட அழகாய், ருக்குவை விட சின்னவளாய்....

    அவள் பார்வையும் சிரிப்பும் அவன் வயிற்றை என்னவோ செய்தது. பார்த்துக் கொள், நீயே பார்த்துக் கொள் என்கிற மாதிரி-

    காப்பி சாப்பிடறேளா? என்றாள். அவள் திடீரென்று ஏதோ ஓர் அந்நியனை உபசரிக்கிறவள் போல். என்ன சொல்வது என்று புரியாமல் அவன் சரி என்றான்.

    பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதெல்லாம் வெறும் கட்டுக் கதையாக இருக்க வேண்டும் என்று அவன் கோபத்தோடு நினைத்துக் கொண்டான்.

    வெகு நேரமாகியும் காப்பி வராததால் அவன் எழுந்து சமையலறைப் பக்கம் போனான். அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. அவள் தரையில் அமர்ந்து முழங்கால்களைக் கட்டியபடி விசித்து விசித்து அழுது கொண்டிருந்தாள்.

    என்ன சித்தி?

    அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

    எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு.

    என்னது?

    அவருக்கு வயசு எழுபது. எனக்கு இருபது. நான் கல்யாணமே பண்ணிக்காமெ இருந்துட்டுப் போறேன். ஏதாவது வேலை செஞ்சு பிழைக்கிறேன். எனக்கு எதுக்குக் கல்யாணம்?

    அவன் அதிர்ந்து போய் சிறிது நேரம் அவளைப் பார்த்தபடி நின்றான். பத்து வருஷங்களாக அவள் இப்படி அழுது கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.

    அவன் மறுபடி கூடத்தில் போய் யோசனையுடன் உட்கார்ந்து கொண்டான். அப்பா ஒரு டிபன் காரியருடன் உள்ளே நுழைந்தார். அவன் சட்டென்று எழுந்தான். அவர் காரியரைக் கீழே வைத்துவிட்டு ஒரு கையாலாகாத புன்னகையுடன் அவனைப் பார்த்தார்.

    "வா. நீ வந்திருக்கிறதா சீனு சொன்னான். ஆத்திலே எல்லோரும்

    Enjoying the preview?
    Page 1 of 1