Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

India Enum Aithegam
India Enum Aithegam
India Enum Aithegam
Ebook236 pages3 hours

India Enum Aithegam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“இந்தியா ஒரு புதிர். இந்தியா ஒரு தத்துவம். இந்தியா ஒரு முரண்பாடு”

காலங்காலமாக- கிரேக்க, பாரசீக, சீன யாத்ரிகர்களிலிருந்து இன்றைய மேற்கத்திய எழுத்தாளன் வரை தெரிவித்து வந்திருக்கும் கருத்து அது. சமகால இந்திய அறிவுஜீவிகளை அதன் பல எல்லைகளைத் தொடத் தூண்டும் கருத்து. அது அசாத்தியமான ஆசை, இந்தியாவின் பன்முகத்தன்மைக்குக் கரையோ எல்லையோ இல்லை. பல்லாயிரம் மொழிகள். பல்வேறு மரபுகள், பழக்க வழக்கங்கள், பல கோடி முரண்பட்ட கருத்துகள், பல கோடி வாதங்கள். விடாமல் கேள்விகள் எழுப்பும் நாடு. சந்தேகங்களை எழுப்பும் பாரம்பர்யம், ரிக்வேத காலத்திலிருந்து கடவுள் இருப்பைக் கேள்விக்குரிய வினாவாக்கியது அங்கேயே ஆரம்பித்துவிட்டது. கடவுள் என்று ஒருவர் உண்டா? யார் கண்டது? யாருக்கு உண்மையில் தெரியும்? உலகை உருவாக்கியது எது? யாருக்குத் தெரியும்? அது தானாகவே உருவாகியிருக்கலாம். உருவாகாமலும் இருக்கலாம். சொர்க்கத்திலிருந்து கீழே பார்ப்பவனுக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். இப்படிப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் வாதங்களும் கி. மு. இரண்டாயிரம் ஆண்டுகளிலிருந்து இந்த மண்ணில் தொடர்ந்து தர்க்கரீதியாகவும் எதிர்மறை வாதமாகவும் கேட்கப்பட்டு வருகின்றன. அதன் கூடவே மிக ஆச்சாரமான மதச் சடங்குகளும் மத நம்பிக்கைகளும் தெய்வ வழிபாடும் பக்தியும் நடைபோடுகின்றன.

கலாச்சார ரீதியாக இங்கு எல்லா கருத்துக்களுக்கும் இடம் இருந்திருக்கிறது. இந்து மதம் என்று கட்டம் போட்ட ஸ்தாபனமே இருக்க வில்லை. புத்த மதமும் சமணமும் எதையும் ஏற்காதவர்களும் நாத்திகர்களும் ஆத்திகர்களும் விகல்பமில்லாமல் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு புத்தமதம் முக்கிய அங்கம் வகித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்போது வந்த சீன யாத்ரிகர்கள் தாங்கள் கண்டதை புத்த ராஜ்ஜியம் என்று வர்ணிக்கிறார்கள். இந்து மதம், இந்து கலாச்சாரம் என்று ஒரே கருத்துரு கொண்டு இந்தியா பண்டைக் காலத்தில் இருக்கவில்லை. அதனாலேயே இந்தியா என்பது ஒரு ஐதீகம். இன்றும் ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் வீற்றிருக்கும். நாத்திகம் பேசும் திராவிட முன்னேற்றக் கழக விழா மேடையில் குன்றக்குடி அடிகளார் அமர்வார். யாரும் அதை முரணாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் ஒரு தூணான பத்திரிகைத் துறையின் தொழில் மட்டுமல்ல, கடமை, தர்மம். நமது ஐதீகங்களைக் குடைவது, பொய்பிம்பங்களை உடைத்தெறிவது. சிறுமை கண்டு பொங்குவது ஆகியவை நசிகேதனும் பாஞ்சாலியும் நமக்குத் தெரிவிக்கும் கலாச்சார அடையாளங்கள், அந்த அடையாளங்களை நான் தொடர்கிறேன். தினம் தினம் என்னனப் பிரமிக்கவைப்பது இது.

பன்முகம் கொண்ட நாம் ஒன்றாக இருப்பதே ஒரு ஐதீகம்.

- வாஸந்தி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403528
India Enum Aithegam

Read more from Vaasanthi

Related to India Enum Aithegam

Related ebooks

Reviews for India Enum Aithegam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    India Enum Aithegam - Vaasanthi

    http://www.pustaka.co.in

    இந்தியா எனும் ஐதீகம்

    India Enum Aithegam

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. இந்தியா எனும் ஐதீகம்

    2. குஷ்பு என்று ஒரு பெண்

    3. கனல்-Embers- ஸாண்டார் மராயின் அற்புதப் படைப்பு

    4. அச்சத்தை அளிக்கும் சொற்சிலம்பாட்டம்

    5. கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்

    6. திபெத்தின் முகங்கள்

    7. தந்தை மகற்கு ஆற்றும் நன்றி

    8. இதிகாசங்களும் தொன்மங்களும்

    9. சொல் புதிது, பொருள் புதிது – தமிழ் பெண் எழுத்தின் முகங்கள்

    10. மானுட வெற்றிக்கான போராட்டம்

    11. பஞ்சுப் பொதிகளாய் பிஞ்சுகளின் உலகம்

    12. ஜெயகாந்தன் என்ற ஆதர்ஷம்

    13. வாக்குக் கிடைத்தது நம்பிக்கை வீழ்ந்தது

    14. போற்றுவோம் இதை - நமக்கில்லை ஈடே!

    15. ஏன் இந்தப் போர் முழக்கம்?

    16. கூத்து நடக்குது பாரீர்

    17. பண்பாட்டுக்கு யார் காவலாளிகள்?

    18. தெருக்கூத்து

    19. தமிழ் உரைநடையின் நவீனத் திருப்புமுனை ஒரு அஞ்சலி

    20. சொல்லும் மனமும்

    21. குழந்தை யாருக்குச் சொந்தம்?

    22. இந்திய வாக்காளன் என்ற கட்டியங்காரன்

    முன்னுரை

    இந்தியா ஒரு புதிர். இந்தியா ஒரு தத்துவம். இந்தியா ஒரு முரண்பாடு

    காலங்காலமாக- கிரேக்க, பாரசீக, சீன யாத்ரிகர்களிலிருந்து இன்றைய மேற்கத்திய எழுத்தாளன் வரை தெரிவித்து வந்திருக்கும் கருத்து அது. சமகால இந்திய அறிவுஜீவிகளை அதன் பல எல்லைகளைத் தொடத் தூண்டும் கருத்து. அது அசாத்தியமான ஆசை, இந்தியாவின் பன்முகத்தன்மைக்குக் கரையோ எல்லையோ இல்லை. பல்லாயிரம் மொழிகள். பல்வேறு மரபுகள், பழக்க வழக்கங்கள், பல கோடி முரண்பட்ட கருத்துகள், பல கோடி வாதங்கள், இந்தியாவைப் புரிந்துகொள்வது ஷினார் நாட்டின் பேபல் நகரத்தில் சொர்க்கத்தை எட்டும் கோபுரத்தைக் கட்ட முனைந்து, பல மொழிகள் எழுப்பிய கூச்சல் குழப்பத்தில் மாட்டிக்கொள்ளும் புராண கதையைப்போல். விடாமல் கேள்விகள் எழுப்பும் நாடு. சந்தேகங்களை எழுப்பும் பாரம் பர்யம், ரிக்வேத காலத்திலிருந்து கடவுள் இருப்பைக் கேள்விக்குரிய வினாவாக்கியது அங்கேயே ஆரம்பித்துவிட்டது. கடவுள் என்று ஒருவர் உண்டா? யார் கண்டது? யாருக்கு உண்மையில் தெரியும்? உலகை உருவாக்கியது எது? யாருக்குத் தெரியும்? அது தானாகவே உருவாகியிருக்கலாம். உருவாகாமலும் இருக்கலாம். சொர்க்கத்திலிருந்து கீழே பார்ப்பவனுக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். இப்படிப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் வாதங்களும் கி. மு. இரண்டாயிரம் ஆண்டுகளிலிருந்து இந்த மண்ணில் தொடர்ந்து தர்க்கரீதியாகவும் எதிர்மறை வாதமாகவும் கேட்கப்பட்டு வருகின்றன. அதன் சுடவே மிக ஆச்சாரமான மதச் சடங்குகளும் மத நம்பிக்கைகளும் தெய்வ வழிபாடும் பக்தியும் நடைபோடுகின்றன.

    ராமாயணம் என்ற காவியம் எழுதப்பட்டபோது அதை எழுதிய வால்மீகி ராமனைத் தெய்வம் என்று சொல்லவில்லை. சில பலவீனங்கள் கொண்ட உயர்ந்த மனிதனாகச் சித்தரிக்கிறார். அதிலேயே ஜாபாலி என்ற பண்டித கதாபாத்திரம் ராமனை கடவுள் என்று சொல்லவில்லை. புத்திமானான ராமனின் செயல்கள் முட்டாள் தனமானவை என்று அவன் சொன்னபோது சிலர் எதிர்க்கிறார்கள். தான் அப்படிச் சொல்வதற்குக் காரணங்களை விளக்குகிறான் ஜாபாலி. மக்களின் மேல் அதிகாரம் செலுத்துவதற்காக சாத்திரங்களும் சடங்குகளும் கெட்டிக்காரர்களால் எழுதப்பட்டவை என்று வேறு சொல்கிறான்.

    இத்தகைய முரண்பட்ட கருத்துக்கள் கொண்டிருந்தும். ராமன் ஒரு மனிதனாகவே சித்தரிக்கப்பட்டும் அவன் அமானுஷ்யா சாதனைகள் புரிவதான காவியம் என்பதால் அதன் இலக்கிய நயத்தை ஓரம்கட்டும் விதமாக மெல்ல மெல்ல ராமன் தெய்வமானான். இன்று ஒரு சாராருக்கு அரசியல் அஸ்திரமானான். இது எந்த நாட்டில் நடக்கும்?

    கலாச்சார ரீதியாக இங்கு எல்லா கருத்துக்களுக்கும் இடம் இருந்திருக்கிறது. இந்து மதம் என்று கட்டம் போட்ட ஸ்தாபனமே இருக்க வில்லை. புத்த மதமும் சமணமும் எதையும் ஏற்காதவர்களும் நாத்திகர்களும் ஆத்திகர்களும் விகல்பமில்லாமல் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு புத்தமதம் முக்கிய அங்கம் வகித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்போது வந்த சீன யாத்ரிகர்கள் தாங்கள் கண்டதை புத்த ராஜ்ஜியம் என்று வர்ணிக்கிறார்கள். இந்து மதம், இந்து கலாச்சாரம் என்று ஒரே கருத்துரு கொண்டு இந்தியா பண்டைக் காலத்தில் இருக்கவில்லை. அதனாலேயே இந்தியா என்பது ஒரு ஐதீகம். இன்றும் ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் வீற்றிருக்கும். நாத்திகம் பேசும் திராவிட முன்னேற்றக் கழக விழா மேடையில் குன்றக்குடி அடிகளார் அமர்வார். யாரும் அதை முரணாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு கருத்துக்கும் ஆதிக்கம் செலுத்த இந்த மரபில் இடமில்லை. அதற்கு எதிர்வினை உடனே கிளம்பும். ராமாயணம் பலவித ரூபங்கள் எடுக்கும், கடவுள்கள் கிண்டல் செய்யப் படலாம். எம். எஃப். சேனைக் கண்டிப்பவர்கள் இந்தியப் பாரம் பர்யத்தை உணராதவர்கள். புராணங்கள் மறு வாசிப்பு செய்யப்படலாம். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நாம் பரிச்சயமானவர்கள். அதனாலேயே நமக்கு பன்முகத்தன்மையைக் கண்டு பயமில்லை. வாதம் செய்வதும் கேள்வி எழுப்புவதும் நமது மரபணுவில் நசிகேதன் காலத்திலிருந்து கலந்திருப்பது,

    கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் ஒரு தூணான பத்திரிகைத் துறையின் தொழில் மட்டுமல்ல, கடமை, தர்மம். நமது ஐதீகங்களைக் குடைவது, பொய்பிம்பங்களை உடைத்தெறிவது. சிறுமை கண்டு பொங்குவது ஆகியவை நசிகேதனும் பாஞ்சாலியும் நமக்குத் தெரிவிக்கும் கலாச்சார அடையாளங்கள், அந்த அடையாளங்களை நான் தொடர்கிறேன்.

    தினம் தினம் என்னனப் பிரமிக்கவைப்பது இது.

    பன்முகம் கொண்ட நாம் ஒன்றாக இருப்பதே ஒரு ஐதீகம்.

    வாஸந்தி

    1. இந்தியா எனும் ஐதீகம்

    "ஆங்கிலேய அரசின் இடத்தில் இந்தியர்கள் ஆளும் அரசு அமர்வது கற்பனைக்கு அப்பாற்பட்ட கனவு. பம்பாயசிலிருந்தேச கராச்சியலிருந்தோ பரிட்டிஷ் சிப்பாய் இங்கிலாந்துக்குக் கிளம்பிய உடனேயே இனக்கலவரத்திலும் மதக்கலவரத்திலும் இந்தியா ரணகளமாகிவிடும்.

    பிரிட்டன் அரும்பாடுபட்டு இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய அமைதியும் முன்னேற்ற நாகரிகமும் ஒரே இரவுப் போதில் சுருண்டு விதி."

    ஜே. இ. வெல்டன்

    இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதைப்பற்றின பேச்சு எழும்போதெல்லாம் அநேகமாக எல்லா ஆங்கிலேயர்களின் அபிப்பிராயமும் இப்படியாகத்தான் இருந்தது. இந்தியர்களில் பலரின் கருத்து இதை ஒத்திருந்தது. அரசாளும் திறமையும் ஒத்துப்போகும் சுபாவமும் இந்தியர்களுக்குக் கிடையாது என்ற எண்ணமும் கவலையும் ஆங்கிலேய அரசின் விசுவாசிகளுக்கு இருந்தது. சுதந்திரம் வந்தால் வெள்ளைக் காரனுக்கு பதில் வடஇந்திய ஆரியனுக்கு திராவிடன் அடிமைப் பட்டுப்போவான் என்று திராவிடத் தலைவர் பெரியார் கலகக் குரல் எழுப்பினார். அதைவிட வெள்ளைக்காரன் ஆள்வதே மேல் என்றும் சுதந்திரம் வந்தால் தமிழ் நாடு இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிரிவதுதான் வழி என்றும் கோஷம் எழுப்பினார். இந்தியா கொதிகலனாய் இருந்த காலகட்டம் அது.

    ஒரு மகத்தான மாற்றம் நாட்டின் வரலாற்றில் ஏற்படும் தருணத்தில் நடந்த மாபெரும் கடைசலில் தோன்றிய ஐயங்கள் கவலைகள், பயங்கள் எல்லாவற்றையும் கடந்த அறுபது ஆண்டுக்கால் நாட்டின் சுதந்திர வரலாறே விழுங்கி ஜீரணித்து ஏதோ ஒரு அமானுஷ்யமான அமுதை உண்டதன் விளைவாக இன்று உயிர்த்திருப்பதுபோல் தோற்றமளிக்கிறது. அண்டை நாடுகளில் சர்வாதிகாரமும் ராணுவ ஆட்சியும், உள்நாட்டுப் போர்களும் நடக்கையில், இந்தியா இடையில் இரண்டு ஆண்டுகளைத் தவிர தொடர்ச்சியாக ஜனநாயக ஆட்சியைப் பின்பற்றி வருகிறது. பிரிவினைவாதக் கொள்கையைக் கைவிடுவதுதான் புத்தி சாலித்தனம் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு திராவிடக் கழகப் பாசறையில் பயிற்சி பெற்று தன் பெயர்கள் செயல்பட்டதன் விளைவாக இன்று மற்ற மாநிலங்களைவிட அதிக அளவுக்கு தேசிய மைய நீரோட்டத்துடன் தமிழ்நாடு ஐக்கியமாகி இருப்பது ஆச்சரியமானது. காஷ்மீரி ஈலும் வடகிழக்கிலும் பிரச்சினைகள் இருந்தாலும் பொதுவாக ஜன நாயகம் நாட்டில் வேறான்றிவிட்டது.

    பின்னோக்கிப் பார்க்கும்போது நமது ஜனநாயக வளர்ச்சியும் அதில் முழுமூச்சுடன் ஈடுபட்டு அதை சாத்தியமாக்கிய இந்தியவாக காளரின் நம்பிக்கையும் நம்பமுடியாத அரசியல் சாகசமாகப்படுகிறது. தேசியம் என்ற ஐதீகத்துக்குத் தேவைப்படுவதாக மேற்கத்திய அரசியல் விஞ்ஞானிகள் சொல்லும் அடிப்படைகள் நம்மிடம் இல்லை. இந்திய தேசியம் ஒரு மொழி ஒரு மதம் ஒரு இன அடையாளம் என்ற ஆதார வேர்களைக் கொண்டதல்ல. ஒரு போரில்லாமல் ஒரு தேசம் உருவாகாது என்பார்கள்.

    நாமோ கத்தியின்றி ரத்தமின்றிப் போராடி சுதந்திரம் பெற்றோம். வெள்ளையனை வெளியேற்றத் துடித்தாலும் அவன் நிறுவிய ஸ்தாபனங்களை. அரசு நிர்வாக இயந்திரம் உள்பட, ஏற்றோம். பிரிட்டிஷ் அரசியல் சாசன மரபைப் பின்பற்றி நமது பன்முக கலாச்சார ஆமருவாய்க்குப் பொருந்தும்படியாக மதச்சார்பற்ற சாசனத்தை வடிவமைத்தோம். இந்து - முஸ்லிம் ஒற்றுமையே மகாத்மா காந்தியின் அரசியல் திட்டத்தின் ஆதாரமாக இருந்தும் அவர் ஆனசப்பட்டபடி. பிரிவினையைத் தடுக்க முடியாப் போயிற்று. பிறகு நிகழ்ந்த பயங்கர இனக்கலவரத்தை துவேஷ உணர்வைத் தடுக்கமுடியாமற் போயிற்று. அவரே அந்தக் கனவில் பலியானதும் தேசம் விழித்துக்கொண்டது. மதச்சார்பற்ற சாசனமும் அதைப் பின்பற்றலும் வெறும் சித்தாந்தமில்லை, முன்னேற் ரத்தின் அவசிய அடித்தளங்கள் என்று சிலிர்த்து எழுந்தது. மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தது, மொழி உரிமைகளுக்கு மதிப்ப வளித்து ஹிந்தியைத் திணிக்காதது, ஆங்கிலத்தைத் தொடரும் வாய்ப்பளித் தது எல்லாம் விட வேகமான முடிவுகள், பிராந்திய கலைகளும் இயக்கிய மும் வனரவும் தனித்துவத்தைப் பேணவும் வழி வகுத்தன.

    ஜனநாயகம் என்கிற சித்தாந்தம் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தேர்தல்களினால் ஒரு இயக்கமாயிற்று. மிக எளிய இந்தியக் குடிமக னுக்கும் அவனது வாக்கு அவனது ஆயுதம் என்று புரிந்தது. கேள்வி எழுப்பும் கலாச்சார மரபு நமது என்பதால் சர்வாதிகார ஆட்சி என்ற எண்ணம் வரும்போதெல்லாம் தனது ஆயுதத்தை உபயோகிக்க அவன் தவறுவதில். ஜனநாயகத்தின் அடிநாதமான கருத்துச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் இங்கு இருப்பது அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எத்தனை பலம்!

    ஜனநாயகப் பரிசோதனையில் நாம் பூரண வெற்றி பெற்றோம் என்று சொல்லமுடியாதுதான். அநேக அரசியல் கட்சிகள் குடும்ப நிறுவனங்களாகிவிட்டன. அநேக அரசியல்வாதிகள் தழல் மன்னர்கள் பலர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள், அரசு ஊழியர்கள் அரசுக்கு ஜால்ரா அடிப்பவர்களாகி விட்டார்கள். நீதித்துறையிடமும் நம்பிக்கை குறைந்து போனது. நமது தேர்தல் இயந்திரத்தின் வெற்றிதான் நமக்குத் தெம்பை அளிப்பது.

    நமது மதச்சார்பற்ற கொள்கையும் வெற்றி தோல்வி கொண்ட கதைதான். சிறுபான்மை இனத்தவர் பொருளாதார, சமூக முன்னேற்றம் அடைவதில் எந்தத் தடையும் இல்லை. இருந்தும் மிக மோசமான இனக்கலவரங்கள் தில்லியிலும் மும்பையிலும் குஜராத்திலும் நிகழ்ந் திருக்கின்றன. ஆனால் ஜனநாயகத்தினால் மட்டுமல்ல, கலாச்சார வேர்களின் பலத்தினால் நாடு எல்லாவற்றையும் மீறி முன்னேறி வருகிறது.

    இந்தியா ஒரு புதிர். இந்தியா ஒரு தத்துவம். இந்தியா ஒரு முரண்பாடு. "

    இந்த அளவுக்கு ஒரு பிரமிப்புடன் அல்லது அலுப்புடன் வேறு எந்த நாடும் வர்ணிக்கப்பட்டதில்லை. காலங்காலமாக - கிரேக்க, பாரசீக சீன யாத்திரிகர்களிலிருந்து இன்றைய மேற்கத்திய எழுத்தாளன் வரை தெரிவிக்கும் கருத்து அது. நாம் ஒன்று - நம்மில் பலர் இருப்பதால்; நாம் தொடர்கிறோம் நாம் மாறிவருவதால், நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் நாம் பன்முகத்தன்மை கொண்டவர்கள் என்பதால் என்கிறார் ஹிந்தி எழுத்தாளர் அசோக் வோஸ்பை, கலாச்சார ரீதியாக இங்கு எல்லா கருத்துக்களுக்கும் இடம் இருந்திருக்கிறது. ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் வீற்றிருக்கும். எந்த ஒரு கருத்துக்கும் ஆதிக்கம் செலுத்த இந்த மரபில் இடமில்லை. அதற்கு எதிர்வினை உடன் கிளம்பும். ராமாயணம் பலவித ரூபங்கள் எடுக்கும். கடவுள்கள் சிண்டல் செய்யப்படலாம். புராணங்கள் மறு வாசிப்பு செய்யப்படலாம். முப்பது முக்கோடி தேவர்களுக்கு நாம் பரிச்சயமானவர்கள், அதனாலேயே நமக்கு பன்முகத்தன்மையைக் கண்டு பயமில்லை, வாதம் செய்வதும் கேள்வி எழுப்புவதும் நமது மரபணுவில் நசிகேதன் காலத்திலிருந்து கலந்திருப்பது. நமக்கு ஏற்பதைக் கொள்வோம். தேவைப்பட்ட விதத்தில் காலத்திற்கேற்ப அர்த்தம் கொள்வோம். அதனாலேயே கலைகளும் இலக்கியமும் தன்னிச்சையாக வளர்கின்றன. ஜனரஞ்சக சினிமாவும் பாரம்பரிய இசையும் பாலம் அமைக்கின்றன. பேதங்கள்?' யாருக்கும் நினைவில்லை.

    நமது ஜன நாயகம் தழைப்பது இந்த ஆதார வேர்களின் பலத்தால், இதில் எந்தப் புதிரும் இல்லை.

    2. குஷ்பு என்று ஒரு பெண்

    மனிதன் பிறக்கும்போது சுதந்திர மனிதன். ஆனால் விலங்கிடப் பட்டிருக்கிறான் என்று அரசியல் தத்துவ ஞானி ரூஸோ உதிர்த்த எளிய சொற்களினால் ஃப்ரெஞ்சுப் புரட்சி வெடித்தது என்பார்கள். குஷ்பு என்று ஒரு பெண் தன்னிச்சையாகச் சொன்ன சில கருத்துக்கள் கிட்டத் தட்ட ஒரு புரட்சியை தமிழகத்தில் வெடிக்கச் செய்தது. அதன் விளைவாக அதுவரை பேசத்தயங்கிய விஷயங்கள் வீதிக்கு வந்தன. பத்திரிகைகளும் தொலைத் தொடர்பு ஊடகங்களும் அறிவார்த்தமாகவும், பாமரத்தனமாவும் விவாதித்தன. தமிழினக் கலாச்சாரம், பண்பாடு, அதன் தார்மீக எல்லைகள், வரம்புகள், மனித உரிமை மீறல்கள் பற்றின கேள்விகள் எழுப்பப்பட்டன. தமிழரின் மானம் கப்பலேறிப்போனதாக உணர்ச்சிகள் உகப்பப்பட்டன. செருப்புகள், துடைப்பக்கட்டைகள் சகிதம் கோசமிடும் சகிப்புத்தன்மையற்ற கோபாவேசங்களைத் தமிழினத்தின் அடையாளமாகத் தொலைக்காட்சி காமிராக்கள் படமெடுத்து வெளி உலகத்துக்குக் காண்பித்தன. அரசியல் வாதிகளின் இரட்டை வேடங்களும், பண்பாட்டுக் காவலர்களின் பாசாங்குத்தனமும் பளிச்சிட்ட நேரத்தில், எது சரி? எது தவறு என்ற குழப்பம் பாமரனை வாட்டியது. 2004இன் முடிவில் வந்த சுனாமிப் பேரழிவு ஏற்படுத்தாத ஒரு கடைசல் 2005 ஆம் ஆண்டின் முடிவை நெறுங்கும் மாதங்களில் தமிழ் சமூகத்தில் ஏற்பட அந்தப் பெண் காரணமானார். சின்னப் பொறி தீப்பிழம்பாய் கிளறி விடப்பட்டதில் நாடு தழுவிய கவனம் பெற்றார்.

    குஷ்பு என்றால் நறுமணம் - புயல் அல்ல, வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்து எல்லாரிடமும் நட்பு காண்பிக்கும் ஒரு நபருக்குப் பொருத்துமான பெயர். அந்தப் பெயர் கொண்ட ஒரு பெண் தான் பிறந்த மும்பையில் தனது நடிப்பாற்றலுக்கு வரவேற்பு கிடைக்காமல் தமிழகத்தைத்

    Enjoying the preview?
    Page 1 of 1