Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nalliravu Suriyargal
Nalliravu Suriyargal
Nalliravu Suriyargal
Ebook184 pages1 hour

Nalliravu Suriyargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாஸந்தி சரித்திரத்தில் மாறுதல் ஏற்பட்டிருந்தாலும் சரித்திரம் சொல்லும் உண்மைகள் நிரந்தரமானவை. அதனால்தான் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து புத்தக ரூபத்தில் வெளிவரும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு காலம் கடந்ததல்ல என்று தோன்றுகிறது.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580125407770
Nalliravu Suriyargal

Read more from Vaasanthi

Related to Nalliravu Suriyargal

Related ebooks

Reviews for Nalliravu Suriyargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nalliravu Suriyargal - Vaasanthi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நள்ளிரவுச் சூரியர்கள்

    Nalliravu Suriyargal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    ஐரோப்பாவின் வடமேற்கில் இருக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகளுள் ஒன்றான நார்வே தேசத்தின் பெயரைச் சொன்னவுடன் இலக்கியவாதிகளுக்கு ஞாபகம் வருவது ஹென்ரிக் இப்சன் என்ற நாடகாசிரியரின் பெயர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய சமூகத்தில் ஏற்படத் துவங்கியிருந்த ஆண்பெண் பால் இயல் சம்பந்தமான மாற்றங்களை மிகத் துல்லியமாக சித்தரித்தவர் அவர். நார்வே நாட்டுக்குச் செல்லும்வரை எனக்கு இப்சனின் நாடகங்கள் மட்டும்தான் பரிச்சயம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட சமூக, பொருளாதாரக் கொந்தளிப்புகளையெல்லாம் ஜீரணித்துக் கொண்டு இன்று மிக சுபிட்சமான, ஆரோக்கியமான, மனிதநேய அடிப்படையில் இயங்கும் நாடு அது என்பது தெரியாது.

    நோபெல் பரிசு இல்லமும், சமாதான ஆய்வுக் கூடமும் நார்வேயின் தலைநகரான ஆஸ்லோவில் இருப்பது தெரியும். ஆனால் உலகத்தின் எந்த மூலையில் அத்துமீறல் நடந்தாலும் மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பண்பு அங்கு சாதாரண பிரஜையின் தத்துவமாக இருப்பது தெரியாது. நாற்பது ஆண்டுகளாகத்தான், அங்கு இருக்கும் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் நார்வே தேசம் மிக சுபிட்சமான நாடாக ஆனது என்று தெரியும். ஆனால் இந்த சுபிட்சத்தை சுயநல தேவைகளுக்கு மட்டும் உபயோகிக்காமல் உலகத்தில் தேவை இருக்கும் இன மக்களுக்கெல்லாம் கொடுத்து பகிர்ந்து கொள்ளும் பக்குவம் அங்கு ஒரு அரசியல் கொள்கையாகவே இருப்பது தெரியாது.

    ஆஸ்லோ - பல்கலைக்கழகம் துவங்கி 185 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றாலும் சமீபகாலமாகப் பிரபலமானதற்குக் காரணம் அங்கு வருஷா வருஷம் நடக்கும் சர்வதேச கோடைகாலப்பள்ளி, கல்வியில் மிக உயர்ந்த தரத்தைக் கடைபிடிக்கும் அந்தப் பள்ளியில் எட்டு வாரங்கள் தங்கிப் படிக்கும் வாய்ப்பு (1988 ஜூன்) எனக்குக் கிட்டியது என்னுடைய அதிர்ஷ்டம். ‘சர்வதேச அபிவிருத்தி’ என்கிற வகுப்புகளின் முடிவில் எழுதிய ஆய்வறிக்கையில், நான் ஏ+ க்ரேட் வாங்கியது எனக்குப் பெருமையாக இருந்தாலும் என்றென்றும் நான் மனத்துள் போற்றி சந்தோசப்படக்கூடிய அனுபவங்கள் வேறு. அந்த அனுபவங்கள் ஏற்படுத்திய மன விசாலமே இப்போது முக்கியமாகத் தோன்றுகிறது. பெண்ணியம், மார்க்சியம், முதலாளித்துவம், மனிதநேயம் என்பதையெல்லாம் நான் அறிவார்த்தமாகப் புரிந்து கொண்டிருந்ததையெல்லாம், நான் நார்வேயிலும் பின்னர் ஸ்வீடனிலும், ஜெர்மனியிலும் செக்கோஸ்லோவாக்கியாவிலும் சந்தித்த சாதாரண எளிய மக்கள் உணர்வுபூர்வமாகப் புரிய வைத்தார்கள். எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணுவதற்கான அடிப்படைத் தளம் மனிதநேயம் என்பதைத் தவிர வேறு இல்லை என்ற என்னுடைய கருத்தை உறுதிபடுத்தினார்கள். இந்த அடிப்படையை அரசாளுவோர் கடைப்பிடிக்காவிட்டால் சமூகமும் கடைப்பிடிக்காது என்று புரிய வைத்தார்கள். அவரவர் கலாசாரப்படி பிரச்னைகளின் முகங்கள் வேறுபடும், அணுகுமுறைகள் வித்தியாசப்படும் என்றாலும் அடிப்படையில் மனிதனின் கதை ஒன்றுதான் என்று புரிய வைத்தார்கள்.

    இரண்டரை மாத வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பிறகு நாடு திரும்பியதும் நான் எழுதிய கட்டுரைகளை ‘சுமங்கலி’ பத்திரிகை அன்புடன் வெளியிட்டது. இப்பொழுதுதான் அது புத்தக ரூபத்தில் வருகிறது. மீண்டும் கட்டுரைகளைப் படிக்கும்போது புதிய தரிசனங்கள் எனக்கு ஏற்படுவதை நான் உணர்கிறேன். நான் நார்வேக்குச் சென்றபோது, இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் இருந்தது. அப்போது நார்வேயில் நான் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் வெளிப்படுத்திய கோபத்தை இன்று என்னால் ஆழமாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. நான் செக்கோஸ்லொவேக்கியாவுக்குச் சென்றபோது கம்யூனிஸ ஆட்சி இருந்தது. மக்களிடையே அதற்கு எதிர்ப்பு இருந்ததை நான் உணர்ந்தாலும் அடுத்த ஐந்து ஆறு மாதங்களில் ஒரு சூறாவளிப் புரட்சி நடக்கும் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை. புரட்சிக்குப்பிறகு இன்று நாங்கள் புதிதாய் பிறந்தோம் என்று நண்பர் வாச்செக் எனக்குக் கடிதம் எழுதினார். சமூகவியல் சூறாவளி அங்கு இன்னமும் வீசிக் கொண்டிருக்கிறது. ஃப்ராங்ஃபர்டில் நான் சந்தித்த மாரின் - ஹிட்லர் செய்த அக்கிரமங்களுக்கு பிராயசித்தமாக மனித உரிமைக்காகப் போராடும் ஒரு தெற்கு ஆசியனை (இவங்கைத் தமிழர்) திருமணம் செய்து கொண்டதாகச் சொன்ன மாரின் - இப்போது சண்முக நாதனை விவாகரத்து செய்து விட்டதாக அறிகிறேன். வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவருக்கு இருந்திருக்கக் கூடிய மன அழுத்தங்கள் எனக்குப் புரிகிறது.

    ‘இது ஒரு இடைக்கால ஏற்பாடு’ என்றுதான் நார்வேக்கு வந்ததன் காரணத்தைச் சொன்ன இலங்கைத் தமிழ் மாணவி இன்னமும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்ப முடியாமல் நார்வேயில் தங்கிவிட்டது அதிக துக்கத்தைத் தருகிறது.

    சரித்திரத்தில் மாறுதல் ஏற்பட்டிருந்தாலும் சரித்திரம் சொல்லும் உண்மைகள் நிரந்தரமானவை. அதனால்தான் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து புத்தக ரூபத்தில் வெளிவரும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு காலம் கடந்ததல்ல என்று தோன்றுகிறது.

    வாஸந்தி

    1

    என் எதிரில் உட்கார்ந்திருந்த அந்த நார்வீஜியப் பெண்ணின் வயது இருபதுக்குள்தான் இருக்கும். ஆனால் அந்த வயதுக்கும், அவளது பேச்சுக்கும், பார்வைக்கும் சம்பந்தமே இல்லை. பார்வையிலும் பேச்சிலும் என் வயதுக்காரிகளுக்கு (அதாவது நம் ஊரில்) இல்லாத ஒரு தீட்சண்யமும் தீர்மானமும் தெரிந்தன. தனது கொள்கைகளில் உறுதியான நம்பிக்கையும் அதைக் கடைபிடிக்க எந்த இடையூறையும் சமாளிக்கத் துணியும் அலட்சியமுமாய், அவள் தனது பொன்னிறச் சிகையைப் பின்னால் ஒதுக்கியபடி எனக்கு ஒரு சிகரெட்டை நீட்டி, நான் மறுத்ததும், புகை பிடிக்காத ஜர்னலிஸ்டை நான் இப்போதுதான் முதன் முறையாகச் சந்திக்கிறேன் என்று புன்னகைத்துப் புகை வளையங்களை ஆகாசத்தை நோக்கி ஊதுகையில், ‘ஓ, இவளை எனக்கு எவ்வளவோ காலமாகத் தெரியுமே’ என்று நான் திடீரென்று நினைத்துக் கொள்கிறேன்.

    மாணவப் பருவத்தில் நார்வே தேசத்துப் பிரபல நாடகாசிரியர் ஹென்ரிக் இப்ஸனின் நாடகங்கள் அவ்வளவையும் ரசித்துப் பாடம் பண்ணியிருக்கிறேன் அவரது பத்தொன்பதாம் நூற்றாண்டு கதாநாயகியின் சுதந்திரப் போக்கைக் கண்டு சிலிர்த்துப் போயிருக்கிறேன்.

    என் எதிரில் இப்போது இருபதாம் நூற்றாண்டு கதாநாயகப் பிரதிநிதியாக அமர்ந்திருக்கும் பெண் தன் பெயர் ஹெல்கே என்கிறாள். நாங்கள் நார்வே தேசத்தின் தலைநகரான ஆஸ்லோவின் பல்கலைக் கழகத்தின் புல்வெளியில் அமர்ந்திருக்கிறோம். எங்களைச் சுற்றி அங்கங்கே திட்டுதிட்டாகச் சர்வதேச மாணவ சமூகத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகள்.

    நான் புன்னகையுடன் ஹெல்கேயைப் பார்க்கிறேன், இவள் தன் பெயர் ‘நோரா’ என்றோ, ஹெட்டா காப்ளர் என்றோ சொல்லியிருந்தாலும் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். இப்ஸன் எனக்கு இன்றைய நார்வீஜியப் பெண்ணைப் பற்றி எப்போதோ கோடி காட்டியிருக்கிறார். நான் நார்வே நாட்டுக்குப் போகத் தீர்மானித்ததே உலகத்திலேயே மிக சுதந்திரப் பெண்கள் என்று கருதப்படும் இவர்களைச் சந்திப்பதற்காக. அதுவும் எப்படி? எழுத்தாளர் என்கிற ஹோதாவில் இல்லை சர்வதேச அபிவிருத்தி பாடங்களைப் படிக்கும் மாணவியாக!

    சர்வதேசக் கோடைப் பள்ளிக்கு விண்ணப்பிக்கும் போது ஏற்படாத தயக்கம் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் ஏற்பட்டது. கல்லூரி வாசலை மிதித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. சர்வதேச மாணவர்கள் அதுவும் பொறுக்கியெடுக்கப்பட்ட மாணவ ரத்தினங்கள் பங்கு பெறும் சர்வதேசக் கல்லூரியில் அவர்களுக்கு இணையாக என்னால் ‘அடியைப் பிடிடா பாரதபட்டா’ என்று என்றோ விட்டுப் போன இழைகளை இழுத்துக் கோக்க முடியுமா?

    இளம் மாணவர்களுக்கு நடுவில் (சராசரி வயது 25 - 30 என்று சொன்னார்கள்) தான் ஒரு ‘சங்கட’மாக இருக்கமாட்டேனா? ஆனாலும் சந்தர்ப்பத்தை இழக்க மனசு வரவில்லை. எப்பேர்பட்ட சந்தர்ப்பம்! சர்வதேசக் கலாசாரச் சங்கமத்தைப் பார்க்கும் வாய்ப்பல்லவா அது! உலகத்தில் பல்வேறு மூலைகளின் பிரச்னைகளை, அவற்றின் பிரதிநிதிகளின் மூலம் நேரடியாகக் கேட்டறியும் வாய்ப்பல்லவா அது! உலக நடப்புகளிலும் மனித இயல்புகளிலும் சுவபாவீகமான ஆர்வம் கொண்டிருந்த எனக்கு இந்தப் பள்ளிக்குச் சென்றால் நான் இதுவரை கற்காத எத்தனையோ விஷயங்களைக் கற்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று உறுதி ஏற்பட ஆரம்பித்து விட்டது.

    அதைத் தவிர, நார்வே நாட்டு அழகைப் பற்றி, அங்கு நள்ளிரவில் தகிக்கும் சூரியனைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தது, ஆசைக்குத் தூபம் வளர்த்தது. எல்லாவற்றிற்கும் மேலாக என்னைக் கவர்ந்திருந்த விஷயம் மேலை நாடுகளிலேயே அதிசுதந்திரமானவர்கள் என்று சொல்லப்படும் அந்நாட்டுப் பெண்கள் என்பது. அத்தனை சுதந்திரமுள்ள பெண்கள் திருப்தியாக இருக்கிறார்களா! சுதந்திரம் என்றால் எப்படிப்பட்ட சுதந்திரம்? யாரிடமிருந்து சுதந்திரம்?

    அங்கிருந்த எட்டு வாரங்களில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து வரை, எங்களுக்குச் சாப்பாட்டுக்கான மதிய ஒரு மணி நேர இடைவேளையைத் தவிர்த்து, வகுப்புகள் நெக்கு வாங்கின. பல தேசத்துப் பல்கலைக்கழகங்களிலிருந்து புரொபஸர்கள் வந்து பாடம் போதித்தார்கள். சர்வதேச நிலையில் மாணவர்களாகிய எங்களை விவாதத்திற்கு அழைத்தார்கள். அவரவர் தேசத்து அனுபவங்களைச் சொல்லச் சொன்னார்கள். வெறும் ஏட்டறிவாக மட்டுமில்லாத வகையில் மாணவர் சமூகம் நடந்து கொண்டதுதான் இந்தப் பள்ளியின் சிறப்பு. ஜாதி, இன, நிற வேறுபாடில்லாமல் மற்றவர் நாட்டுத் துக்கம் தம் நாட்டு துக்கம் போல் உணரும்படியாக வேறு எந்தப் பல்கலைக் கழக போதனையும் செய்திருக்க முடியாது.

    எந்த நாட்டிலிருந்தாலும் பெண் என்பவளின் துக்கம் ஒன்றுதான் என்பதை நான் அங்கோலா தேசத்துக் கறுப்பழகி பியாட்ரிஸிடமிருந்தும் அமெரிக்க இளம் பெண் பியான்க்காவிடமிருந்தும் தெரிந்து கொண்டேன். பதினெட்டு வயதுப் பெண்களிடமிருந்தும் இருபத்தைந்து வயதுப் பையன்களிடமிருந்தும் நான் கற்ற பாடங்கள் அநேகம், சடாரென்று கொட்டி விடக்கூடிய அனுபவங்கள் இல்லை அவை. மெல்ல மெல்ல அசைபோட்டு அதன் சாராம்சத்தையெல்லாம் மெதுவாக விரிக்க வேண்டிய விஷயங்கள் அவை.

    நான் ஆஸ்லோவுக்குப் போய் இறங்கிய தினம் ஒரு ஞாயிற்றுக் கிழமை. அன்று மாலைதான் கோடைப் பள்ளியின் துவக்க விழா பல்கலைக்

    Enjoying the preview?
    Page 1 of 1