Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Endru Thaniyum Intha Suthanthira Thaagam?
Endru Thaniyum Intha Suthanthira Thaagam?
Endru Thaniyum Intha Suthanthira Thaagam?
Ebook83 pages31 minutes

Endru Thaniyum Intha Suthanthira Thaagam?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலத்துக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப அவை மாறும் என்பதைத்தவிர. இன்னும் செல்ல வேண்டிய தூரம் நீண்டது சமூகத்தில் பல நிலைகளில் தளங்களில் இருக்கும் பேதங்களால். பல நூறு ஆண்டுகளுக்கு முன் சில ஆற்றல் மிகுந்த பெண்கள் தங்களுக்கு இசைவான பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள் சமூகச் சிந்தனையே மாறும் வகையில் - தனது இருப்பைக்கண்யத்துடன் காக்கும் வேட்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு எந்த தளத்திலும். அது ஒரு தாகம். சுதந்திர தாகம். அது தணியாது உயிர் நிலைக்கும் வரை. எல்லாவற்றையும் மீறியதற்குப்பின்னால் ஒரு தாகம் இருந்தது. சுதந்திரத்தாகம்.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580125410812
Endru Thaniyum Intha Suthanthira Thaagam?

Read more from Vaasanthi

Related to Endru Thaniyum Intha Suthanthira Thaagam?

Related ebooks

Reviews for Endru Thaniyum Intha Suthanthira Thaagam?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Endru Thaniyum Intha Suthanthira Thaagam? - Vaasanthi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்?

    Endru Thaniyum Intha Suthanthira Thaagam?

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    எழுத்தும் பயணமும்

    1

    ஐரோப்பாவின் வடமேற்கில் இருக்கும் ஸ்காண்டினேவிய நாடுகளில் [நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாண்ட், ஐஸ்லாண்ட்] ஒன்றான நார்வே நாட்டுக்குச் செல்ல எனக்கு ஒரு அரிய வாய்ப்பு 1988ல் கிடைத்தது. சுற்றுலா செல்ல அல்ல.மாணவியாக. நார்வே நாட்டுத் தலைநகரமான ஆஸ்லோவின் புகழ்பெற்ற 200 ஆண்டு கால பழமை வாய்ந்த ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் அங்கு ஆண்டு தோறும் நடத்தப்படும் கோடை பள்ளியில் இரண்டு மாதங்கள் தங்கிய அற்புத அனுபவத்தை இன்று நினைக்கும் போது மீண்டும் மாணவ உலகத்துள் நுழைவது போல இருக்கிறது. இத்தனைக்கும் நான் அங்கு செல்லும்போது அங்கு பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் மாணவிகள் ஆகியர்களுடன் ஒப்பிடும்போது நான் அந்தச் சூழலுக்குப்பொருத்தமில்லாத ‘பெரிசு’ என்று நம்மவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் அங்கு விண்ணப்பிப்பதற்கு வயது ஏதும் தடை இல்லாததால், நான் மிக்க ஆர்வத்துடன் விண்ணப்பித்தேன். கல்வியில் மிக உயர்ந்த தரத்தைக்கடைபிடிக்கும் அந்தப்பள்ளியில் தங்கிப்படிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். நான் தேர்ந்தெடுத்த Developmental studies என்ற- சமூகங்களின் வளர்ச்சிபற்றின- எட்டு வார வகுப்புகளின் முடிவில் நான் சமர்ப்பித்த பேப்பருக்கு ஏ+ கிரேட் கிடைத்தது பெருமையாக இருந்தாலும் இன்றளவும் நான் மனத்துள் போற்றி வைத்திருக்கும் அன்றைய நினைவுகள் அதிக முக்கியமானவை, குறிப்பாக அங்கு நான் கண்ட பெண்களிடையே இருந்த பொதுவான பால் இன பேத கருத்துகள், தாம்பத்தியம் பற்றின மதிப்பீடுகளின் அறிவார்த்த, உணர்வுரீதியான புரிதல்கள் எனக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்தன. அவை ஏற்படுத்திய மன விசாலமே முக்கியமானதாக உணர்கிறேன்.

    நார்வேயுக்குச் செல்வதற்கு முன்பே எனக்கு அந்த நாட்டுடன் பரிச்சயம் இருந்தது- இலக்கியத்தின் மூலமாக. மிகப்பிரபல நார்வீஜிய நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் [1828-1906] ‘ஹெட்டா காப்ளர்’. Hedda Gabler’ என்ற நாடகம் கல்லூரியில் எனக்குப்பாடமாக இருந்தது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய சமூகத்தில் முக்கியமாக ஸ்காண்டினேவிய பெண்களிடையே ஏற்படத்துவங்கியிருந்த, பாலியல், தாம்பத்தியம் சம்பந்தமான மாற்றங்களை மிகத் துல்லியமாகத் தனது பெண் கதாபாத்திரங்கள் மூலம் சித்தரித்தவர் இப்சன். ஒரு ஜெனரலின் மகளான ஹெட்டா காப்ளர் வசதியாக வளர்ந்தவள். விருப்பப்பட்டு டெஸ்மன் என்ற வாலிபனை திருமணம் செய்துகொண்டபின் வெகு விரைவில் அவளுக்கு வாழ்க்கை அலுத்துப்போகிறது. திருமண பந்தம் தன்னை சிறைபடுத்துவது போல எரிச்சல் ஏற்படுகிறது. டெஸ்மன் சராசரி ஆசைகள் கொண்டவன். அன்பான வீட்டைப்பேணும் மனைவி, ஆசைக்கு இரண்டு குழந்தைகள் என்ற எதிர்பார்ப்பு கொண்டவன். கல்வியில் முன்னேற நாட்டம் கொண்ட அவனுக்கு நிம்மதியான தாம்பத்தியம் தேவைப்பட்டது. ஹெட்டா காப்ளருக்கு இத்தகைய வாழ்வு அலுக்கிறது..சுதந்திரப்பறவையாக இருக்க விரும்புகிறாள். ஆனால் அவள் செய்யும் பல விஷயங்கள் அவளை ஒரு சுயநலவாதியாக, விரும்பத்தகாதவளாகத்தான் வெளிப்படுத்துகின்றன. அவளது செயல்களினாலேயே அவள் மிகப்பெரிய ஒரு பழியில் அகப்பட்டுக்கொள்ளும் நிலை ஏற்படும்போது நிலை தடுமாறி தற்கொலை செய்துகொள்கிறாள். அது ஒரு துன்பியல் நாடகம். சராசரி திருமண பந்தத்தில் பெண்கள் இனி சமாதான மடையமாட்டார்கள், அதைபுனிதம் என்று கருதமாட்டார்கள் என்ற செய்தியை இப்சன் மிகத் துல்லியமான சிக்கல் மிகுந்த பாத்திரப்படைப்புகள் மூலம் காண்பித்தார். 1891 ஆரம்பத்தில் இது மேடையேறிற்று. அந்த நாடகம் வெளிவந்த போது அத்தகைய சித்தரிப்புகளை ‘பர்வெர்டெட் ஃபெமினிசம்’ வக்கிரமான பெண்ணியம் என்றார்கள் விமர்சகர்கள். அவரது அநேகமான நாடகங்களைப்படித்திருக்கிறேன். அவரது கதாநாயகிகளின் சுதந்திரப்போக்கும் நிராசைகளும் எடுத்த முடிவுகளும் அந்த கால கட்டத்தில் [19ம் நூற்றாண்டு] நாம் நினைத்துப்பார்த்திராத ஒன்றாக நான் நினைப்பேன்.

    ஆஸ்லோவிற்ற்குச் சென்று அங்கு நான் நார்வீஜிய பெண்களுடன் நெருக்கமாகப் பழக நேர்ந்தபோது எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள் போல் இருந்தது. நான் பார்த்த இருபதாம் நூற்றாண்டுப்பெண்ணைப்பற்றி இப்ஸன் என்றோ கோடிக்காட்டியிருந்தார். அவர் சித்தரித்த பெண்ணின் அடுத்த நூற்றாண்டின் பரிணாம வளர்ச்சியாகத் தோற்றமளித்தார்கள். அது மிக இயல்பாக ஆனதுபோலப் பட்டது. எனக்கு இப்சனின் கதாநாயகிகளான நோரா, ஹெட்டாகாப்ளர் நினவுக்கு வந்தார்கள். ஆனால் அவர்களுடைய குழப்பமும் தடுமாற்றமும் இவர்ளுக்கு இருக்காது. இப்சன் இருபதாம் நூற்றாண்டு நார்வீஜிய பெண்னை அன்றே இனம் கண்டு கொண்டாரா, பெண் இனத்தில் பெரிய சமூகப்புரட்சி வரும் என்று உணர்ந்திருப்பாரா என்று தெரியாது.

    அங்கே சந்தித்த எல்லா நார்வீஜியப் பெண்களும் ஒரு இயல்பான சுதந்திரத்தன்மையுடன் இருப்பதாகப் பட்டது. அந்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1