Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Europe - Suvaiyana Payana Anubavangal
Europe - Suvaiyana Payana Anubavangal
Europe - Suvaiyana Payana Anubavangal
Ebook86 pages21 minutes

Europe - Suvaiyana Payana Anubavangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன்.

வாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே.

உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

என் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இருமுறை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள்.

என் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்.

Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580115601925
Europe - Suvaiyana Payana Anubavangal

Read more from G. Kalayarassy

Related to Europe - Suvaiyana Payana Anubavangal

Related ebooks

Related categories

Reviews for Europe - Suvaiyana Payana Anubavangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Europe - Suvaiyana Payana Anubavangal - G. Kalayarassy

    http://www.pustaka.co.in

    ஐரோப்பா - சுவையான பயண அனுபவங்கள்

    Europe - Suvaiyana Payana Anubavangal

    Author:

    ஞா. கலையரசி

    G.Kalayarassy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/g-kalayarassy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    ஐரோப்பா - சுவையான பயண அனுபவங்கள்

    1

    (15/01/2010 தமிழ் மன்றத்தில் எழுதியது)

    ஒரு காலத்தில் வெளிநாட்டுக்குப் போய் வந்தவர்களைக் கண்களை மலர்த்தி, நான் பார்ப்பதுண்டு. வெளிநாடு சென்று வருவது என்பது ஏதோ முற்பிறவியில் செய்த அதிர்ஷடம் என நான் நினைப்பேன். சாவதற்குள் ஒரு முறையேனும் கடல் கடந்து சென்று, வெளிநாடுகளைக் காணவேண்டும் என்ற தணியாத ஆவல் எனக்கிருந்தது.

    ஆனால் இக்காலத்தில், வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அயல்நாடுகளுக்குப் பயணம் என்பது, நம் கிராமங்களிலுள்ள படிப்பறிவில்லாக் குப்பனுக்கும், சுப்பனுக்கும் கூட தற்போது சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது.

    என் மகன் பிரான்சில் அப்போது, மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்ததால், அவன் அழைப்பை ஏற்று, 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்று வாரங்கள், என் கணவருடன் ஐரோப்பா சென்று வந்தேன். 1950 களில் பாரீஸில் வேலையிலிருந்த என் தந்தை, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாரீஸைத் திரும்பவும் பார்க்க விருப்பப்பட்டு, எங்களுடன்

    பயணத்தில் கலந்து கொண்டார். பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு நாங்கள் சென்று வந்தோம்.

    ஐரோப்பா யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குச் செல்ல ஷென்கன் விசா (schengen visa) வாங்கவேண்டும். ஆனால் அதே யூனியனின் அங்கத்தினர்களான இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளுக்குச் செல்லத் தனி விசா வாங்க வேண்டுமாம்.

    பிரான்சின் தூதரகம் புதுச்சேரியிலேயே இருப்பதால், பிரான்ஸ் விசா வாங்குவதில் எங்களுக்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை. விசாவிற்கான விண்ணப்பப் படிவமும் எளிமையாகத் தான் இருந்தது. விண்ணப்பம் கொடுத்த ஐந்து நாட்களுக்குள், எங்களுக்கு ஷென்கன் விசா கிடைத்து விட்டது.

    அதற்குப் பிறகு தான் இங்கிலாந்து விசாவிற்கு, விண்ணப்பித்தோம். அடேயப்பா! படிவத்தின் பத்துப் பனிரெண்டு பக்கங்களைப் பூர்த்தி செய்வதற்குள் போதும், போதுமென்றாகி விட்டது. நான்கு நாட்கள் லண்டன் போய்ச் சுற்றிப் பார்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தோம்.

    'எங்கெங்கு பயணம் செய்யப்போகிறீர்கள்? எங்குத் தங்கப்போகிறீர்கள்? அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் முகவரி?

    உறவினர் வீடு என்றால் அவர் பெயர் மற்றும் முகவரி?' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்துவிட்டார்கள் கேள்வியின் நாயகர்கள்!

    அதில் வரும் இன்னும் சில கேள்விகளைப் பாருங்கள்:-

    'எப்போதாவது போர்க்குற்றம், மனித குலத்துக்கெதிரானப் போராட்டம், இனப்படுகொலை (war crimes, war against humanity, genocide) போன்ற நடவடிக்கைகளில் பங்கு கொண்டவராயிருந்தால், அது பற்றிய

    Enjoying the preview?
    Page 1 of 1