Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaivu Saaviyaal Manathai Thirakkirean
Ninaivu Saaviyaal Manathai Thirakkirean
Ninaivu Saaviyaal Manathai Thirakkirean
Ebook292 pages1 hour

Ninaivu Saaviyaal Manathai Thirakkirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம். “நினைவுச் சாவியால் மனதைத் திறக்கிறேன்” என்ற இந்த நூலானது செங்கற்பட்டு நகர மக்களின் வாழ்க்கை 1970 முதல் 1978 வரை எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் ஒரு அனுபவப் பதிவாகும். ஒவ்வொருவருக்கும் தன் இளவயதில் நடைபெற்ற சம்பவங்கள் மனதில் ஆழப்பதிந்து போயிருக்கும். என் இளம் வயதில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பே இந்தநூலாகும். இதிலுள்ள பல சம்பவங்கள் உங்களில் பலருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு ஒத்துப்போகலாம். இதை நான் எழுதிய இந்த நினைவலைகளை வாட்ஸ்அப் மூலம் படித்து அவ்வப்போது தங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொண்ட பலரின் வார்த்தைகளிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 22 மார்ச் 2020 அன்று காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை இந்தியாவில் பதினான்கு மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 25 மார்ச் 2020 முதல் 31 மே 2020 வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தொடர்ந்தது. இத்தகைய காலகட்டத்தில் அரசின் உத்தரவை மதித்து வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலை அனைவருக்கும் ஏற்பட்டது.

வீட்டில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது பழைய நினைவுகள் என் மனதில் திரைப்படம் போல ஓடத்தொடங்கின. எனக்கு மட்டும் அல்ல. என்னைப் போன்ற பலருக்கும் இது நிகழ்ந்தது. அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. என் சிறுவயதில் நான் செங்கற்பட்டில் வாழ்ந்த போது அந்த ஊரில் மக்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள், வாழ்ந்த வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான பழக்க வழக்கங்கள், பள்ளிக்கூட வாழ்க்கை இவற்றை தினமும் ஒரு தலைப்பில் எழுதினால் என்ன என்ற எனது எண்ணம் எழுத்தாக மாற்றம் பெறத் தொடங்கியது.

தினமும் ஒரு தலைப்பில் எனது இளம்வயது வாழ்க்கையினை எழுதி அதை பி.டி.எஃப் கோப்பாக மாற்றி என் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிக் கொண்டிருந்தேன். நாளடைவில் பல நண்பர்கள் எனது கட்டுரையினை ரசித்துப் படிக்க ஆரம்பித்தார்கள். உடனுக்குடன் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். சில நாட்கள் கட்டுரை அனுப்பாமல் போனால் உடனே வாட்ஸ்அப்பில் இன்றைய நினைவலைகள் ஏன் அனுப்பவில்லை என்று கேட்கத் தொடங்கினார்கள். இதில் உள்ள நிகழ்ச்சிகள் அவர்களுடைய வாழ்க்கையோடு ஒத்துப் போனதன் விளைவே இந்த கேள்வி என்பதை நான் புரிந்து கொண்டேன்.

குமுதம் பக்தி ஸ்பெஷல் துணை ஆசிரியர் திரு.மு.வெங்கடேசன் அடிக்கடி என்னை தொலைபேசியில் அழைத்து நினைவலைகளை சிலாகித்துப் பேசுவார். எனது இனிய நண்பர் புதுவை எழுத்தாளர் திரு.குமாரகிருஷ்ணன் அவர்கள் இவற்றை உடனுக்குடன் படித்து பாராட்டி மகிழ்வார். இவர் இவற்றைத் தொகுத்து நூலாகக் கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தார். எழுத்தாளர் திருமதி.வெ.இன்சுவை அவர்கள் வாட்ஸ்அப்பில் அவ்வப்போது பாராட்டுச் செய்திகளை அனுப்பி என்னை உற்சாகப்படுத்தினார். கிரேட்லேக்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் திரு.பச்சையப்பன், பாவினியில் பணிபுரியும் பொறியாளர் திரு.நரசிம்மன், எனது கல்லூரித் தோழன் மதுராந்தகம் திரு.ஜவஹர்மணி முதலான நண்பர்கள் எனது நினைவலைகளை மிகவும் ரசித்துப் படித்துப் பாராட்டியவர்களில் முக்கியமானவர்கள்.

இந்த நூலினை 06 ஏப்ரல் 2020 அன்று எழுதத்தொடங்கி 20 மே 2020 அன்று ஐம்பது அத்தியாயங்களில் முடித்தேன். ஒருசில நாட்களில் இரண்டு நினைவலைகளைக் கூட எழுதினேன்.

நாங்கள் 1978 முதல் 1981 வரை காஞ்சிபுரத்தில் வசிக்க நேர்ந்தது. அவ்வப்போது எங்கள் உறவினர்களைச் சந்திக்க செங்கற்பட்டிற்கும் வந்து சென்றோம். எனவே இந்த நூலில் ஆங்காங்கே காஞ்சிபுர வாழ்க்கையையும் சிறிது பதிவு செய்துள்ளேன்.

இப்படி விளையாட்டாக எழுதத் தொடங்கிய என் சிறுவயது நிகழ்ச்சிகளே இப்போது உங்கள் கைகளில் “நினைவுச் சாவியால் மனதைத் திறக்கிறேன்” என்ற தலைப்பில் மின்னூலாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதைச் சிறந்த முறையில் மின் நூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்தின் உரிமையாளர் திரு.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் இனிய நன்றி.

உங்கள் இனிய

ஆர்.வி.பதி

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138806370
Ninaivu Saaviyaal Manathai Thirakkirean

Read more from R.V.Pathy

Related to Ninaivu Saaviyaal Manathai Thirakkirean

Related ebooks

Reviews for Ninaivu Saaviyaal Manathai Thirakkirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaivu Saaviyaal Manathai Thirakkirean - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    நினைவுச் சாவியால் மனதைத் திறக்கிறேன்

    Ninaivu Saaviyaal Manathai Thirakkirean

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இராமலிங்க ஐயர் ஹோட்டல்

    2. ஜவ்வுமிட்டாய்

    3. குச்சி ஐஸ்

    4. ஒண்ணாங்கிளாஸ்

    5. அதோ அந்த பறவை போல

    6. சினிமா டாக்கீஸ்

    7. குதிரை வண்டி

    8. ஹைலைட்

    9. சிலேட்டு பலப்பம்

    10. டிக் டிக் டிக்

    11. பாடவா உன் பாடலை

    12. ஏ-மாற்றம்

    13. பெல்பாட்டம் - ஸ்டெப் கட்டிங்

    14. தடங்கலுக்கு வருந்துகிறோம்

    15. பெட்டிக்கடை

    16. ஜருகண்டி ஜருகண்டி

    17. குரங்கு பெடல்

    18. பயாஸ்கோப்

    19. சா பூ த்ரி

    20. காற்றாடிக் காலம்

    21. மக்கள் மருத்துவர்கள்

    22. சுருக்குப் பை

    23. கடப்பாறை நீச்சல்

    24. டிரிங் டிரிங்

    25. டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்

    26. என் இனிய ஹீரோ

    27. தசரா வேஷம்

    28. குண்டூர் ஏரி

    29. நாங்க பாஸாயிட்டோம்

    30. அம்மாவின் அடுப்பங்கரை

    31. பூம் பூம் மாடு

    32. கிருஷ்ணாயில்

    33. பொங்கல் வாழ்த்து

    34. சார் போஸ்ட்

    35. ரயில் பயணங்களில்

    36. சாணி உருண்டை

    37. திண்ணை வீடு

    38. தங்கப்பல்

    39. பிரியாவிடை

    40. கல்லூரிக்காலம்

    41. சஞ்சயிகா

    42. ரேடியோமலை

    43. புலி மார்க் சீயக்காய்த் தூள்

    44. பம்பரம்

    45. ஈஸி சேர்

    46. பதி புக் ஷாப்

    47. காஞ்சிபுரம் பன்னீர் சோடா

    48. விளையாட்டு வாழ்க்கை

    49. நாமக்கட்டி வைத்தியம்

    50. வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்

    முன்னுரை

    வணக்கம்.

    நினைவுச் சாவியால் மனதைத் திறக்கிறேன் என்ற இந்த நூலானது செங்கற்பட்டு நகர மக்களின் வாழ்க்கை 1970 முதல் 1978 வரை எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் ஒரு அனுபவப் பதிவாகும். ஒவ்வொருவருக்கும் தன் இளவயதில் நடைபெற்ற சம்பவங்கள் மனதில் ஆழப்பதிந்து போயிருக்கும். என் இளம் வயதில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பே இந்தநூலாகும். இதிலுள்ள பல சம்பவங்கள் உங்களில் பலருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு ஒத்துப்போகலாம். இதை நான் எழுதிய இந்த நினைவலைகளை வாட்ஸ்அப் மூலம் படித்து அவ்வப்போது தங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொண்ட பலரின் வார்த்தைகளிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன்.

    கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 22 மார்ச் 2020 அன்று காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை இந்தியாவில் பதினான்கு மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 25 மார்ச் 2020 முதல் 31 மே 2020 வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தொடர்ந்தது. இத்தகைய காலகட்டத்தில் அரசின் உத்தரவை மதித்து வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலை அனைவருக்கும் ஏற்பட்டது.

    வீட்டில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது பழைய நினைவுகள் என் மனதில் திரைப்படம் போல ஓடத்தொடங்கின. எனக்கு மட்டும் அல்ல. என்னைப் போன்ற பலருக்கும் இது நிகழ்ந்தது. அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. என் சிறுவயதில் நான் செங்கற்பட்டில் வாழ்ந்த போது அந்த ஊரில் மக்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள், வாழ்ந்த வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான பழக்க வழக்கங்கள், பள்ளிக்கூட வாழ்க்கை இவற்றை தினமும் ஒரு தலைப்பில் எழுதினால் என்ன என்ற எனது எண்ணம் எழுத்தாக மாற்றம் பெறத் தொடங்கியது.

    தினமும் ஒரு தலைப்பில் எனது இளம்வயது வாழ்க்கையினை எழுதி அதை பி.டி.எஃப் கோப்பாக மாற்றி என் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிக் கொண்டிருந்தேன். நாளடைவில் பல நண்பர்கள் எனது கட்டுரையினை ரசித்துப் படிக்க ஆரம்பித்தார்கள். உடனுக்குடன் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். சில நாட்கள் கட்டுரை அனுப்பாமல் போனால் உடனே வாட்ஸ்அப்பில் இன்றைய நினைவலைகள் ஏன் அனுப்பவில்லை என்று கேட்கத் தொடங்கினார்கள். இதில் உள்ள நிகழ்ச்சிகள் அவர்களுடைய வாழ்க்கையோடு ஒத்துப் போனதன் விளைவே இந்த கேள்வி என்பதை நான் புரிந்து கொண்டேன்.

    குமுதம் பக்தி ஸ்பெஷல் துணை ஆசிரியர் திரு.மு.வெங்கடேசன் அடிக்கடி என்னை தொலைபேசியில் அழைத்து நினைவலைகளை சிலாகித்துப் பேசுவார். எனது இனிய நண்பர் புதுவை எழுத்தாளர் திரு.குமாரகிருஷ்ணன் அவர்கள் இவற்றை உடனுக்குடன் படித்து பாராட்டி மகிழ்வார். இவர் இவற்றைத் தொகுத்து நூலாகக் கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தார். எழுத்தாளர் திருமதி.வெ.இன்சுவை அவர்கள் வாட்ஸ்அப்பில் அவ்வப்போது பாராட்டுச் செய்திகளை அனுப்பி என்னை உற்சாகப்படுத்தினார். கிரேட்லேக்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் திரு.பச்சையப்பன், பாவினியில் பணிபுரியும் பொறியாளர் திரு.நரசிம்மன், எனது கல்லூரித் தோழன் மதுராந்தகம் திரு.ஜவஹர்மணி முதலான நண்பர்கள் எனது நினைவலைகளை மிகவும் ரசித்துப் படித்துப் பாராட்டியவர்களில் முக்கியமானவர்கள்.

    இந்த நூலினை 06 ஏப்ரல் 2020 அன்று எழுதத்தொடங்கி 20 மே 2020 அன்று ஐம்பது அத்தியாயங்களில் முடித்தேன். ஒருசில நாட்களில் இரண்டு நினைவலைகளைக் கூட எழுதினேன்.

    நாங்கள் 1978 முதல் 1981 வரை காஞ்சிபுரத்தில் வசிக்க நேர்ந்தது. அவ்வப்போது எங்கள் உறவினர்களைச் சந்திக்க செங்கற்பட்டிற்கும் வந்து சென்றோம். எனவே இந்த நூலில் ஆங்காங்கே காஞ்சிபுர வாழ்க்கையையும் சிறிது பதிவு செய்துள்ளேன்.

    இப்படி விளையாட்டாக எழுதத் தொடங்கிய என் சிறுவயது நிகழ்ச்சிகளே இப்போது உங்கள் கைகளில் நினைவுச் சாவியால் மனதைத் திறக்கிறேன் என்ற தலைப்பில் மின்னூலாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதைச் சிறந்த முறையில் மின் நூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்தின் உரிமையாளர் திரு.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் இனிய நன்றி.

    உங்கள் இனிய

    ஆர்.வி.பதி

    1. இராமலிங்க ஐயர் ஹோட்டல்

    செங்கற்பட்டில் அண்ணா சாலையில் அலிசன் கேசி உயர்நிலைப் பள்ளிக்கு வலதுபுறத்தில் ஒரு விறகு தொட்டி அதற்கு அருகில் அங்காளம்மன் கோயில் அமைந்திருக்கும். இடது புறத்தில் ஒரு வீடு இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும். இந்த வீட்டிற்கு அடுத்ததாக ஒரு சிறிய ஹோட்டல் இருந்தது. வீட்டிற்கும் ஹோட்டலுக்கும் இடையில் வெளிப்புறத்தில் செவ்வக வடிவத்தில் ஒரு கிணறும் இருந்தது. 1975 களில் இந்த ஹோட்டலானது இராமலிங்க ஐயர் ஹோட்டல் என்று புகழ் பெற்று விளங்கியது. அப்போது நான் பத்து வயது சிறுவன்.

    இரண்டு பெரிய தகரக் கதவுகள் முன்புறத்தில் காணப்படும். உள்ளே நுழைந்தால் இருபக்கத்திலும் தலா ஐந்து பேர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் நீட்டு டேபிள் மற்றும் பெஞ்சுகள் இருக்கும். டேபிளின் மீது மரப்பலகைக்கு பதிலாக வெள்ளைநிற மார்பிள் போடப்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து மரத்தினால் ஆன ஒரு உணவு வைக்கப்படும் ஷோ கேஸ் இருக்கும். ஷோகேஸின் முன்னால் ஒரு சிறிய மேஜை. அதுவே கல்லாப்பெட்டி. அதற்குப் பின்னால் ஒரு சிறிய சமையல் அறை அமைந்திருக்கும். இதுதான் அன்றைய இராமலிங்க ஐயர் ஹோட்டல்.

    ஒல்லியும் அல்லாத பருமனும் அல்லாத உயரமும் அல்லாத குள்ளமும் அல்லாத சிவப்பு நிறத்தில் ஒரு மனிதர் சுறுசுறுப்பாக சிரித்த முகத்துடன் ஹோட்டலுக்கு வருபவரை வரவேற்று உபசரிப்பார். சற்றே வழுக்கைத் தலை. மீசை இல்லாத முகம். நாலு முழ வேட்டியும் தோளில் ஒரு துண்டும் அணிந்திருப்பார். அவர் வெள்ளை உள்ளம் கொண்டவர். அவரைப் பார்த்தாலே நமது மனதில் அவர் நல்லவர் என்று தோன்றும் படியான செயல்கள். அவர் தான் இந்த ஹோட்டலின் முதலாளி.

    காலையில் இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபன்களை அவரே தயார் செய்து உபசரிப்பார். நியாயமான விலை. சுகாதாரமான உணவுகள். மாலை நேரந்தான் எனக்குப் பிடித்த நேரமாகும். காரணம் அவர் மாலை மூன்று மணிக்கு ஹோட்டலைத் திறந்து தேன்குழல் முறுக்கும், போண்டாவும் சட்னியும் செய்வார். மூன்றரை மணிக்கு இரண்டும் ரெடியாகிவிடும். அவரைப் போலவே தேன்குழல் முறுக்கு வெள்ளை நிறத்தில் காணப்படும். நாங்கள் அப்போது அடுத்த தெருவான சின்னமணியக்காரத் தெருவில் வசித்துக் கொண்டிருந்தோம். சனி, ஞாயிறு மற்ற விடுமுறை நாட்களில் சிறுவனான நான் மாலை மூன்று மணியானதும் அவருடைய ஹேட்டலுக்குச் சென்று விடுவேன். அன்பாக வரவேற்பார்.

    எனது முதல் தேர்வு தேன்குழல் முறுக்கு. அதை வாங்கிக் கடித்தால் அவ்வளவு சுவை. மனதில் குதூகலம் பிறக்கும். அதை உடைத்து ஊதினால் இந்தப்பக்கமிருந்து காற்று அந்தப்பக்கம் வரும். குழல் போன்ற முறுக்கு தேனாக இனிப்பதால் இதற்கு தேன்குழல் முறுக்கு என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். அடுத்த எனது தேர்வு போண்டாவும் தேங்காய்ச் சட்னியும். ஆஹா அற்புதம் என்று சொல்லும் அளவிற்கு அவ்வளவு சுவையாக இருக்கும். அனைத்து உணவுகளில் விலையும் நியாயமாகத்தான் இருக்கும். அதை வாங்கி சாப்பிட்ட யாருக்கும் எனக்குத் தெரிந்து வயிறு கோளாறு ஏற்பட்டதில்லை. காரணம் ஐயருடைய அன்புள்ளம். நேர்மை. மனசாட்சி.

    சில வருடங்களுக்குப் பின்னர் வயது முதிர்வின் காரணமாக அந்த ஹோட்டலை அவர் மூடிவிட்டார். இதுபோன்ற நியாயமான மனிதர்களை தற்போது நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படியும் இப்படியுமாக ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    07 ஏப்ரல் 2020

    2. ஜவ்வுமிட்டாய்

    செங்கற்பட்டு ஸ்ரீஇராமகிருஷ்ணா மிஷின் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 1973 ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது மாலை நேரங்களில் பள்ளியின் வெளியே ஒரு மிட்டாய்க்காரர் வந்து எங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பார். முதல் மாடியில் எங்கள் வகுப்பு. அங்குள்ள ஜன்னலில் இருந்து பார்த்தால் எதிரே உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷின் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் பெரிய கடிகாரம் தென்படும். அதில் எப்போது மணி நான்காகும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருப்போம். நான்கு மணி ஆனதும் மின்சார மணி ஒலிக்கும். நாங்கள் பையை தோளில் மாட்டிக் கொண்டு வெளியே ஓடி வருவோம்.

    அந்த மிட்டாய்க்காரர் நான்கரை அடி உயரம் இருப்பார். பற்கள் சற்றே துருத்திக் கொண்டிருக்கும். இடது கையில் மணிக்கட்டுப் பகுதியில் ஒரு காக்கி துணிப்பை தொங்கிக் கொண்டிருக்கும். செருப்பு அணியாத கால்கள். ஒரு தடிமனான நான்கடி உயரமுள்ள மூங்கில். அதன் உச்சியில் ஒரு கவுன் அணிந்த சிறுமியின் பொம்மை பொருத்தப்பட்டிருக்கும். மூங்கில் தான் அந்த சிறுமியின் கால்கள். இரண்டு கைகளிலும் சின்னஞ்சிறிய தட்டு பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு கைகளுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு யூ வடிவிலான நீளமான சைக்கிள் டியூப் மூங்கிலின் கீழ்ப்பகுதி வரை நீண்டிருக்கும். அதில் மிட்டாய்க்காரர் தன் வலது கால் கட்டை விரலினை நுழைத்து மேலும் கீழும் இழுக்க பொம்மை கையைத் தட்டி ஓசையை எழுப்பும். மிட்டாய் வாங்கிச் சுவைக்க வாருங்கள் என்பது போல அந்த ஓசை இருக்கும். பொம்மையின் கீழே ரோஸ், வெள்ளை, பச்சை, சிவப்பு வண்ணக்கலவைகளில் மிட்டாய் ஒரு சுருள் போல சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதைப் பார்ப்பதற்கே மிகவும் வண்ணமயமாக அழகாக இருக்கும். அதை இழுத்தால் கொத்தாய் தடிமனான வண்ண நூலைப்போல மிட்டாய் அவர் கைக்கு வரும்.

    ஐந்து காசு கொடுத்தால் மிட்டாய்க்காரர் அதை வாங்கி இடது கையில் தொங்கும் பைக்குள் போட்டுவிட்டு அந்த மிட்டாயின் கீழ்ப்பகுதியில் இருந்து மிட்டாயை இழுத்துப் பிய்த்து பாம்பு, தேள், கைகடிகாரம் போன்ற வடிவங்களில் மிட்டாயைச் செய்து தருவார். பெரும்பாலான மாணவர்கள் கைகடிகாரத்தையே விரும்பிக் கேட்பார்கள். அவர் அரைநிமிடத்தில் வண்ணமயமான கடிகார மிட்டாயைச் செய்து கையில் ஒட்டிவிடுவார். அதைச் சிறிது நேரம் அழகு பார்த்து பின்னர் அதைப் பிரிக்க மனமில்லாமல் பிரித்து சாப்பிட்டுக் கொண்டே மாணவர்கள் வீடு திரும்புவார்கள். நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்தும் இந்த காட்சிகள் அப்படியே இப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. நாம் விரும்பி இரசித்துப் பார்க்கும் காட்சிகள் நம் மனதுள் நம்மையறியாமல் நிரந்தரமாய்ப் பதிந்து போகும். எவ்வளவு மகிழ்ச்சிகரமான நாட்கள் அவை.

    06 ஏப்ரல் 2020

    3. குச்சி ஐஸ்

    நான் சிறுவனாக இருந்த போது எங்கள் தெருவிற்கு ஒரு ஐஸ் வண்டிக்காரர் தினமும் வருவார். அவர் நம் கண்ணெதிரேயே உருண்டை வடிவிலான குச்சி ஐஸைத் தயாரித்துத் தருவார். அவர் ஐஸ் தயாரிக்கும் விதமே அலாதியானது.

    நான்கு சக்கர வண்டியின் மீது ஒரு சிறிய பெட்டி போன்ற அமைப்பு காணப்படும். அதன் மீது ஒரு துருவல் பொருத்தப்பட்டிருக்கும். அவர் நின்று கொண்டிருக்கும் பக்கத்திலிருந்து அந்த பெட்டிக்குள் ஒரு கையை நுழைக்கும் விதத்தில் அப்பெட்டி அமைந்திருக்கும். வண்டியின் மீது மற்றொரு இடத்தில் ஒரு ஐஸ் பெட்டி இருக்கும். அவருடைய இடது புறத்தில் குச்சிகளும் வலது புறத்தில் வண்ண நீர் பாட்டில்களும் காணப்படும்.

    நாம் ஐஸ் கேட்டால் ஐஸ் பெட்டியைத் திறந்து அதனுள் வெள்ளை நிறத்தில் இருக்கும் சற்றே பெரிய ஐஸ் கட்டியை எடுத்து அந்த துருவலின் மீது வைத்து தன வலது கையால் பரபரவெனத் தேய்ப்பார். ஐஸ் துகள்கள் கீழ்ப்புறத்தில் விழும். அந்த சிறிய பெட்டிக்குள் தனது இடது கையை நுழைத்து விழும் ஐஸ் துகள்களைச் சேகரிக்கத் தொடங்குவார். ஒரளவிற்குச் சேர்ந்த பின்னர் கையை வெளியில் எடுத்து அதை உருண்டை போல மிக லாவகமாக உருட்டுவார். அந்த ஐஸ் உருண்டை எலுமிச்சைப் பழத்தை விட சற்று பெரியதாகவும் கிரிக்கெட் பந்தைவிட சற்று சிறியதாகவும் இருக்கும். பின்னர் ஒரு குச்சியை எடுத்து அதன் நடுவில் சொருகி அருகில் பாட்டிலில் இருக்கும் சிவப்பு வண்ண நீரை அதன் மீது ஊற்றுவார். இப்போது அவர் தயாரித்த குச்சி ஐஸ் ரெடி. பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாப்பிட அதைவிட இனிமையாக இருக்கும். ஒரு முறை அதை சாப்பிடத் தொடங்கினால் முழுவதும் சாப்பிட்டு முடிக்கும் வரை நம் கவனம் வேறெங்கும் செல்லாது. அவ்வளவு சுவை.

    செங்கற்பட்டில் 1975-1977 களில் மிகப்பிரபலமாக இருந்த ஒரு திண்பன்டம் ஜீவஜோதி. செங்கற்பட்டில் இது தயாரிக்கப்பட்டது. ஒரு அங்குல நீளம் ஒரு அங்குல அகலம் கால் அங்குல உயரம் உடைய இந்த மிட்டாய் சற்று சிவந்த நிறத்தில் காணப்படும். அதன் மீது ஒரு பேப்பர் வைத்து மடிக்கப்பட்டிருக்கும். அந்த பேப்பரில் ஜீவஜோதி என்று அச்சிடப்பட்டிருக்கும். அப்போது அதன் விலை ஐந்து காசுகள் என்று நினைக்கிறேன். இதை அக்காலத்தில் விரும்பி வாங்கிச் சாப்பிடாதவர்களே செங்கற்பட்டில் இருக்க முடியாது. சிறுவர் முதல் பெரியவர் வரை இதை வாங்கித் தின்று மகிழ்வார்கள். வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களுக்கு இதை வாங்கித் தருவோம். அவர்களும் இதன் சுவையில் மயங்கி அதைப் பற்றி விசாரிப்பார்கள். ஊருக்குத் திரும்பும் போது மறக்காமல் ஜீவஜோதியைக் கேட்டு வாங்கியும் செல்வார்கள். ஜீவஜோதி என்ற பெயர் அப்போது செங்கற்பட்டில் மிகவும் பிரபலமாக விளங்கியது. மிகப் பெரும் வெற்றியை அடைந்த இந்தத் தின்பண்டம் நாளடைவில் காணாமல் போனது.

    செங்கற்பட்டில் சின்னக்கடை பகுதியில் ஒரு மலையாளி கடை ஒன்றை வைத்திருந்தார். காலை மற்றும் பகல் நேரங்களில் டீ போடுவார். மாலையானதும் மசால்வடை தயாரிக்கும் பணியில் இறங்கி விடுவார். அவர் தயாரிக்கும் சிறிய அளவிலான மசால்வடையை வாங்கிச் செல்ல பெருங்கூட்டம் கூடி நிற்கும். பூரி மாவு அளவை விட சற்று குறைந்த அளவில் வடைமாவை கையில் எடுத்து உருட்டி அதை தன் இடது உள்ளங்கையில் வைத்து வலது உள்ளங்கையால் அழுத்தி எடுத்து காய்ந்து கொண்டிருக்கும் கடாயில் மளமளவென போட்டுக் கொண்டே இருப்பார். அந்த மசால்வடை ஒரு ரூபாய் காயின் அளவை விட சற்று சிறிதாகவே இருக்கும். ஒரு தடவையில் சுமார் நூறு வடைகளைத் தயாரிப்பார். ஒரு வடையை அரை நிமிஷத்தில் சாப்பிட்டு விடலாம். அப்போது அதன் விலை ஐந்து காசுகள். மாலை ஆறரைக்குத் தொடங்கும் வியாபாரம் இரவு ஒன்பது மணி வரை நீளும். ஒருவர் வடையை வாங்க எப்படியும் குறைந்தது அரைமணி நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டும். பலர் அந்த வடைகளை வாங்கிக் கொண்டு சென்று வீட்டில் அதை இரவு உணவிற்குத் தொட்டுக் கொள்ளும் பதார்த்தமாக சாப்பிடுவார்கள். எனக்குத் தெரிந்து 1981 வரை இந்த கடை இயங்கிக் கொண்டிருந்தது.

    08-ஏப்ரல்-2020

    4. ஒண்ணாங்கிளாஸ்

    அது 1969 ஆம் வருடம். ஒருநாள் எனது தாயார் என்னை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1