Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vainavam Valartha Mahaangal
Vainavam Valartha Mahaangal
Vainavam Valartha Mahaangal
Ebook206 pages1 hour

Vainavam Valartha Mahaangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பான வாசகர்களுக்கு
வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு “வைணவம் வளர்த்த மகான்கள்” என்ற இந்த ஆன்மிக நூலினை எழுதி வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்ளுகிறேன். வைணவம் சமயம் பக்தியையும் தமிழையும் வளர்த்த ஒரு மகாசமுத்திரம். வைணவத்தை வளர்த்த ஆச்சார்ய குருபரம்பரை மகான்களையும் அவர்களுக்கு சிஷ்யர்களாக அமைந்து வைணவம் வளர்த்த சிஷ்யர்கள் சிலரைப் பற்றியும் இந்த நூலில் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள். ஒரு சிறுகுறை கூட இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மிக கவனமாக இந்த நூலை எழுதியுள்ளேன்.
இந்த நூலினை மின் புத்தகமாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன்
ஆர்.வி.பதி
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138806254
Vainavam Valartha Mahaangal

Read more from R.V.Pathy

Related to Vainavam Valartha Mahaangal

Related ebooks

Reviews for Vainavam Valartha Mahaangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vainavam Valartha Mahaangal - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    வைணவம் வளர்த்த மகான்கள்

    Vainavam Valartha Mahaangal

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஸ்ரீவைஷ்ணவம்

    2. ஸேனை முதலியார்

    3. நம்மாழ்வார்

    4. ஸ்ரீமந்நாதமுனிகள்

    5. உய்யக்கொண்டார்

    6. மணக்கால்நம்பி

    7. ஆளவந்தார்

    8. பெரியநம்பி

    9. ஸ்ரீஇராமானுஜர்

    10. எம்பார்

    11. பராசர பட்டர்

    12. நஞ்ஜீயர்

    13. நம்பிள்ளை

    14. வடக்கு திருவீதிப்பிள்ளை

    15. பிள்ளை லோகாச்சாரியார்

    16. திருவாய்மொழிப் பிள்ளை

    17. ஸ்ரீமணவாள மாமுனிகள்

    18. பெரிய திருமலைநம்பி

    19. திருக்கோட்டியூர் நம்பி

    20. திருக்கச்சி நம்பி

    21. வடுகநம்பி

    22. மாறநேர் நம்பி

    23. கூரத்தாழ்வான்

    24. அனந்தாழ்வான்

    25. உறங்காவில்லிதாசர்

    26. தனுர்தாசர்

    27. திருவரங்கத்தமுதனார்

    28. ஸ்ரீவேதாந்த தேசிகர்

    29. நடாதூரம்மாள்

    30. எறும்பியப்பா

    31. பொன்னடிக்கால் ஜீயர்

    32. அன்னமாச்சாரியார்

    33. தரிகொண்டா வேங்கமாம்பா

    34. நாலாயிரத் த்வ்ய ப்ரபந்த விவரங்கள்

    35. நூற்றியெட்டு த்வ்ய தேசங்கள்

    முன்னுரை

    அன்பான வாசகர்களுக்கு

    வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு வைணவம் வளர்த்த மகான்கள் என்ற இந்த ஆன்மிக நூலினை எழுதி வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்ளுகிறேன். வைணவம் சமயம் பக்தியையும் தமிழையும் வளர்த்த ஒரு மகாசமுத்திரம். வைணவத்தை வளர்த்த ஆச்சார்ய குருபரம்பரை மகான்களையும் அவர்களுக்கு சிஷ்யர்களாக அமைந்து வைணவம் வளர்த்த சிஷ்யர்கள் சிலரைப் பற்றியும் இந்த நூலில் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள். ஒரு சிறுகுறை கூட இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மிக கவனமாக இந்த நூலை எழுதியுள்ளேன்.

    இந்த நூலினை மின் புத்தகமாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    1. ஸ்ரீவைஷ்ணவம்

    இந்து மதத்தில் முக்கியமாக சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், கணபதி ஆகிய ஆறு கடவுள்களை அந்தந்த பிரிவிற்கு முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் ஆறு சமயங்கள் உள்ளன. இவை முறையே சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்தியம் என அழைக்கப்படுகின்றன.

    வைணவ சமயம் ஸ்ரீமகாவிஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் ஒரு சமயமாகும். இச்சமயம் ஸ்ரீவைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. உலகில் எங்கெல்லாம் தீமைகள் தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் ஸ்ரீமகாவிஷ்ணு அவதாரம் எடுத்து தீமைகளை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. ஸ்ரீமகாவிஷ்ணு இவ்வாறாக தீமைகளை அழிக்க பல்வேறு காலகட்டங்களில் பத்து அவதாரங்களை எடுத்தார். இவ்வாறாக மகாவிஷ்ணு எடுத்த மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    ஸ்ரீமகாவிஷ்ணு இந்த உலகில் வாழும் மனிதர்கள் தங்களது பிறவிப் பயனை அடையும் பொருட்டு மறை, இதிகாசம், புராணம், சாத்திரம் போன்றவற்றைப் படைத்து அருளினார். இதுமட்டுமின்றி நல்ல குணம் கொண்ட மனிதர்களைக் காக்கவும் தீய குணம் கொண்ட மனிதர்களைத் திருத்தவும் எண்ணி அவரே இராமர், கிருஷ்ணர் என பத்து அவதாரங்களை எடுத்தார்.

    மனிதர்களை நல்வழிப்படுத்தி தன்வசப்படுத்த திருமால் திருமாமகளோடு ஆலோசித்தார். இதன் விளைவாக தனது கதை (பூதத்தாழ்வார்), வாள் (பேயாழ்வார்), வில் (திருமங்கையாழ்வார்), சங்கு (பொய்கையாழ்வார்), சக்கரம் (திருமழிசையாழ்வார்), ஆகிய ஐந்து ஆயுதங்களையும், ஸ்ரீவத்சம் (திருப்பாணாழ்வார்), வனமாலை (தொண்டரடிப்பொடி ஆழ்வார்), கௌஸ்துபம் (குலசேகராழ்வார்), ஆகிய மூன்று சின்னங்களையும் குமுதன் எனும் நித்யசூரி (மதுரகவியாழ்வார்), பூமாதேவி (ஆண்டாள்), விஷ்வக்சேனர் (நம்மாழ்வார்), ஆகியோரையும் தனது வாகனமான கருடன் (பெரியாழ்வார்) முதலான அம்சங்களாகக் கொண்டு பன்னிரு ஆழ்வார்களை இந்த உலகில் அவதரிக்கச் செய்தார்.

    வைணவ சமயத்தை மக்களிடையே பரவலாக கொண்டு சேர்ப்பித்தவர்கள் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் ஆவார்கள். பன்னிரு ஆழ்வார்களின் காலம் கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஆகும். திருமாலின் பரந்த திருக்கலியாண குணங்களில் ஆழ்ந்து கிடந்தமையால் அவர்கள் ஆழ்வார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆழ்வார்கள் அருளிச்செய்தவை நாலாயிரத் த்வ்யப் பிரபந்தம் என்ற பெயரைப் பெற்றன. ஆச்சார்யர்கள் ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் த்வ்யப் பிரபந்தப் பாசுரங்களை மக்களிடையே கொண்டு சென்று வைணவ சமயத்தை வளர்த்தார்கள்.

    ஆழ்வார்கள் பாடிய வைணவத் திருத்தலங்கள் த்வ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாறாக ஆழ்வார்கள் பாடிய திருத்தலங்கள் நூற்றி எட்டாகும். இந்த நூற்றி எட்டு திருத்தலங்களும் நூற்றியெட்டு த்வ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    ஸ்ரீமந்நாதமுனிகள் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர். இவர் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களை ஒன்று திரட்டித் தொகுத்தார். அவ்வாறாகத் தொகுத்த பாசுரங்களை நான்காகப் பிரித்துத் தொகுத்து நான்கு பகுதிகளையும் நான்கு வேதங்களாக அறிவித்தார். இதில் முதலாயிரத்தில் 947 பாசுரங்களும் இரண்டாமாயிரத்தில் 1134 பாசுரங்களும் மூன்றாமாயிரத்தில் 593 பாசுரங்களும் நாலாமாயிரத்தில் 1102 பாசுரங்களும் உள்ளன. இவை அனைத்தும் நாலாயிரத் த்வ்யப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன.

    2. ஸேனை முதலியார்

    ஸ்ரீவைணவ குரு பரம்பரையில் முதல் ஆச்சார்யர் ஸ்ரீமந் நாராயணன். இரண்டாவது ஆச்சார்யர் பெரியபிராட்டியார். ஸ்ரீமந்நாராயணன் தாயாரான ஸ்ரீதேவிக்கு வேதங்களை உபதேசிக்க அவர் அதை விஷ்வக்சேனருக்கு உபதேசித்தார். இதன் காரணமாக விஷ்வக்ஸேனர் ஸ்ரீவைணவ ஆச்சார்ய பரம்பரையில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றார். இவரே பின்னர் நம்மாழ்வாராக இவ்வுலகில் அவதரித்து நான்கு வேதங்களையும் திருவாய்மொழியாக அளித்தார். இவர் மூலமாகவே ஸ்ரீவைணவ ஆச்சார்ய பரம்பரை வளர்ந்தது. தாயார் பெரிய பிராட்டியாரே இவருக்கு ஆச்சார்யராக அமைந்தார். ஆழ்வார்கள் அனைவரும் இவருடைய சிஷ்யர்கள் ஆவர்.

    ஸ்ரீமகாவிஷ்ணுவின் படைகளுக்கெல்லாம் தலைவர் என்பதால் விஷ்வக்ஸேனருக்கு 'சேனை முதலி' என்ற பெயர் உண்டானது. மரியாதை கருதி இவரை சேனை முதலியார் என்று அழைக்கிறார்கள். உலகைக் காத்தருளும் பெருமாளுக்கு வலது கரமாக இருப்பவர் இவர். 'விஷ்வக்' என்றால் அனைத்து இடமும் என்றும் எங்கும் எப்போதும் செல்லக்கூடிய படைகளை உடையவர் என்று பொருள். சேனை முதல்வர், சேனாதிபதி, வேத்ரதரர், வேத்ரஹஸ்தர் என்று பல திருநாமங்கள் கொண்டவர்.

    சைவர்கள் எந்த ஒரு நல்ல செயலையும் தொடங்கும் முன்னால் விநாயகரை வழிபட்டு தொடங்குவது வழக்கம். இதே போல வைஷ்ணவர்கள் விஷ்வக்ஸேனரை வழிபட்டே எந்த செயலைத் தொடங்குவது வழக்கமாக உள்ளது.

    வைணவத் தலங்களில் பெருமாளை தரிசிப்பதற்கு முன்னால் துவாரபாலகர்களை வணங்கி விஷ்வக்ஸேனரை மனதுள் தியானித்த பின்னர் பெருமாள் சன்னிதிக்குள் நுழைய வேண்டும் என்பது மரபு. இவர்களுடைய அனுமதி இல்லாமல் சன்னிதிக்குள் நுழைந்து வேண்டிக் கொண்டார் பெருமாள் வேண்டுதலுக்கு செவிசாய்க்க மாட்டார்.

    பொதுவாக சேனை முதலியார் அமர்ந்த கோலத்தில் மேல் வலது கரத்தில் சக்கரம், மேல் இடது கரத்தில் சங்கையும் கீழ் வலது திருக்கரத்தில் ஆள் காட்டி விரல் மேல் நோக்கி இருக்கும்படியும் கீழ் இடது கரத்தில் கதாயுதம் தாங்கியும் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து வைத்த நிலையில் காட்சி அளிப்பது வழக்கம். இவருக்கு சூத்ராவதி என்ற மனைவி உண்டு.

    3. நம்மாழ்வார்

    ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் ஸ்ரீமந்நாராயணன், தாயார் ஸ்ரீதேவி, சேனைமுதலி எனும் விஷ்வக்சேனர் இவருக்கு அடுத்தபடியாக நம்மாழ்வார் வருகிறார்.

    முதல் மூவர் பரமபதத்தை இருப்பிடமாகக் கொண்டவர்கள். பூலோகத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் ஆச்சார்யர்களின் வரிசையில் நம்மாழ்வாரே முதல் ஆழ்வாராக ஆச்சார்யராக விளங்குகிறார். ஆழ்வார்கள் அனைவருக்கும் நம்மாழ்வார் முதல்வராய் போற்றப்படுகிறார். ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல விளங்கியவர் நம்மாழ்வார். இதன் காரணமாக இவரை உயிராகவும் மற்ற ஆழ்வார்களை உறுப்புகளாகவும் கருதி மகிழ்வது வைணவ மரபு. பூதத்தாழ்வாரை தலையாகவும் பொய்கைஆழ்வார் மற்றும் பேயாழ்வார்களை கண்களாகவும் பெரியாழ்வாரை முகமாகவும் திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும் குலசேகராழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார்களை கைகளாகவும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரைத் திருமார்பாகவும் திருமங்கையாழ்வாரை வயிறாகவும் மதுரகவியாழ்வாரை திருவடிகளாகவும் அமைத்துப் போற்றுவது வைணவமரபு.

    தாமிரபரணி நதிக் கரையில் அமைந்த திருக்குருகூரில் வைணவத் தொண்டாற்றி வாழ்ந்த பொற்காரியார் என்பவருடைய மகன் காரியார். திருவண்பரிசாரத்தில் வாழ்ந்து வந்த திருவாழ்மார்பருடைய மகள் உடையநங்கையை காரியாருக்கு மணமுடித்து வைத்தார்கள். குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. எனவே காரியாரும் உடையநங்கையும் திருக்குறுங்குடியினை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த பெருமாளை சேவித்து மக்கட்பேறு வேண்டி வழிபட்டார்கள். திருக்குருகூர் என்றழைக்கப்பட்ட ஆழ்வார்திருநகரியில் பெருமாளின் கருணையால் விஷ்வக்சேனரின் அம்சமாக அவதரித்தவர் நம்மாழ்வார்.

    குழுந்தை பிறந்தது முதல் அழாமல் பால் உண்ணாமல் இருந்தது. இது இயற்கைக்கு மாறாக விளங்கியது. பனிரெண்டாம்நாள் பெயர்சூட்டு விழா நடத்தி உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அக்குழந்தைக்கு மாறன் என்று பெயர் சூட்டி அழைத்தார்கள்.

    இறைவனின் முன்னால் குழந்தையைக் கிடத்தி மாறன் எனும் திருநாமத்தைச் சூட்டி பெருமாளை வணங்கி குழந்தைக்கு அருள்புரியுமாறு வேண்டினார்கள்.

    அப்போது அக்குழந்தை தவழ்ந்து சென்று அங்கிருந்த புளியமரப் பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது. நம்மாழ்வார் அவதரித்தற்கு முன்பாக ஆதிசேஷன் அப்பகுதியின் திருக்கோயிலில் ஒருபுளியமரமாய்த் தோன்றி விளங்கலானார்.

    நம்மாழ்வாருக்கு அருளாளன் அமுதத்தை அளித்துச் சென்றான். இதன் காரணமாக நம்மாழ்வார் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளின் செயலிலிருந்து மாறுபட்டு நின்று திருமாலின் திருவடிகளையே தனது உள்ளத்தில் நிறுத்தி தியானநிலையில் இருந்தார். இந்த விஷயங்களை அறியாத பெற்றோர் வருந்திக் கொண்டிருந்தார்கள்.

    வைகுந்தவாசன் சேனைமுதலியிடம் நம்மாழ்வார்க்கு உண்மைப் பொருள்களை உபதேசித்து அருள்வாயாக என்று பணிக்க அவரும் திருக்குருகூர் சென்று யாரும் அறியாவண்ணம் நம்மாழ்வாருக்கு உபதேசித்தார். இவ்வாறாக நம்மாழ்வார் கோயிலின் புளியமரத்தின் அடியில் பதினாறு ஆண்டுகள் யோகநிலையில் இருந்தார்.

    மாறன் பதினாறு ஆண்டுகள் தவநிலையில் மூழ்கி இருந்தார். வெயில் மழை என்று பாராமல் தவமியற்றினார். ஒருசமயம் இவருடைய உடலிலிருந்து பேரொளி தோன்றியது. இந்த சமயத்தில் வடநாட்டுயாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவியாழ்வார் திருக்கோளுர் பெருமானை வழிபட தென்திசை நோக்கித் திரும்பினார். அப்போது அவர் பேரொளியினைக் கண்டார். உடனே தென்நாட்டிற்குத் திரும்பினார்.

    ஸ்ரீராமபிரான் வைகுண்டம் செல்வதற்கு சில காலத்திற்கு முன்பாக எமதர்மராஜா அவரைக் காண அயோத்திக்கு வந்திருந்தார். அப்போது இராமபிரான் இலக்குவணனிடம் யாரையும் உள்ளே அனுமதிக்காதே என்று சொல்லி உரையாடலைத் தொடங்கினார். அச்சமயத்தில் துர்வாசமுனிவர் அங்கே வந்தார். அவருடைய கோபத்தை அறிந்திருந்த காரணத்தினால்

    Enjoying the preview?
    Page 1 of 1