Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pugazh Petra Aanmeega Kathaigal
Pugazh Petra Aanmeega Kathaigal
Pugazh Petra Aanmeega Kathaigal
Ebook121 pages45 minutes

Pugazh Petra Aanmeega Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆன்மிகத்திற்குப் புகழ் பெற்ற நாடு நம் இந்திய நாடு. இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும். இந்து மதத்தில் ஏராளமான ஆன்மிக நீதிக் கதைகள் உள்ளன. இவற்றில் பல கதைகள் மிகவும் புகழ் பெற்றவை. நம்மில் பலருக்கு பல விஷயங்கள் பெயரளவிலேயே தெரிந்திருக்கின்றன. மக்களிடையே நீண்ட நெடுங்காலமாக வழங்கி வரும் பலவிதமான ஆன்மிகக் கதைகளிலிருந்து புகழ் பெற்ற இருபத்தி ஆறு கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்த புத்தகத்தில் எளிய நடையில் எழுதியுள்ளேன்.

புகழ் பெற்ற ஆன்மிகக் கதைகளைப் படித்து அதில் கூறப்பட்டுள்ள நீதிகளை புரிந்து கொள்ளுங்கள். நல்ல நீதிகளை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள். இந்த செயல் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் நிச்சயம் உயர்த்தி உங்களுக்கு பெருமை சேர்க்கும்.

“புகழ் பெற்ற ஆன்மிகக் கதைகள்” என்ற நூலினை சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் படித்து மகிழலாம். பயனுள்ள வகையில் பொழுதைச் செலவிடலாம். பயனுள்ள புராண நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய கதைகளை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை மகிழ்விக்கலாம். சிறந்த மனிதர்களாகவும் உருவாக்கலாம்.

“புகழ் பெற்ற ஆன்மிகக் கதைகள்” என்ற இந்த நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றிகள் பல.

ஆர் .வி .பதி

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138806354
Pugazh Petra Aanmeega Kathaigal

Read more from R.V.Pathy

Related to Pugazh Petra Aanmeega Kathaigal

Related ebooks

Reviews for Pugazh Petra Aanmeega Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pugazh Petra Aanmeega Kathaigal - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    புகழ் பெற்ற ஆன்மிகக் கதைகள்

    Pugazh Petra Aanmeega Kathaigal

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    புகழ் பெற்ற ஆன்மிகக் கதைகள்

    ஆர்.வி. பதி

    என்னுரை

    ஆன்மிகத்திற்குப் புகழ் பெற்ற நாடு நம் இந்திய நாடு. இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும். இந்து மதத்தில் ஏராளமான ஆன்மிக நீதிக் கதைகள் உள்ளன. இவற்றில் பல கதைகள் மிகவும் புகழ் பெற்றவை. நம்மில் பலருக்கு பல விஷயங்கள் பெயரளவிலேயே தெரிந்திருக்கின்றன. மக்களிடையே நீண்ட நெடுங்காலமாக வழங்கி வரும் பலவிதமான ஆன்மிகக் கதைகளிலிருந்து புகழ் பெற்ற இருபத்தி ஆறு கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்த புத்தகத்தில் எளிய நடையில் எழுதியுள்ளேன்.

    புகழ் பெற்ற ஆன்மிகக் கதைகளைப் படித்து அதில் கூறப்பட்டுள்ள நீதிகளை புரிந்து கொள்ளுங்கள். நல்ல நீதிகளை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள். இந்த செயல் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் நிச்சயம் உயர்த்தி உங்களுக்கு பெருமை சேர்க்கும்.

    புகழ் பெற்ற ஆன்மிகக் கதைகள் என்ற நூலினை சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் படித்து மகிழலாம். பயனுள்ள வகையில் பொழுதைச் செலவிடலாம். பயனுள்ள புராண நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய கதைகளை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை மகிழ்விக்கலாம். சிறந்த மனிதர்களாகவும் உருவாக்கலாம்.

    புகழ் பெற்ற ஆன்மிகக் கதைகள் என்ற இந்த நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றிகள் பல.

    ஆர்.வி.பதி

    நவம்பர் 2020

    பொருளடக்கம்

    1. பிரகலாதன் கதை

    2. துருவன் கதை

    3. ஆண்டாள் கதை

    4. பீஷ்மர் கதை

    5. அபிராமி பட்டர் கதை

    6. நளாயினி கதை

    7. மனுநீதி சோழனின் கதை

    8. பிட்டுக்கு மண் சுமந்த கதை

    9. விநாயகர் கனியை வென்ற கதை

    10. கஜேந்திர மோட்சம்

    11. கம்சன் கதை

    12. மார்கண்டேயன் கதை

    13. வாமனர் கதை

    14. வால்மீகி முனிவரின் கதை

    15. திருஞானசம்பந்தர் கதை

    16. திருமூலர் கதை

    17. சிபிச் சக்கரவர்த்தியின் கதை

    18. காரைக்காலம்மையார் கதை

    19. நாரதர் கதை

    20. நந்தனார் கதை

    21. பரசுராமர் கதை

    22. நீலகண்டர் கதை

    23. நசிகேதன் கதை

    24. சாவித்திரியின் கதை

    25. கண்ணப்பர் கதை

    26. ததிபாண்டன் கதை

    1. பிரகலாதன் கதை

    ஸ்ரீமந்நாராணயனன் வராக அவதாரம் எடுத்து இரணியாட்சனைக் கொன்றார். இரணியாட்சனை ஸ்ரீமந்நாராயணன் வதம் செய்த விஷயத்தை அறிந்த அண்ணன் இரணியன் கடும் அதிர்ச்சியும் கோபமும் கொண்டான். கடும் கோபத்துடன் அரக்கர்கள் அனைவரையும் அழைத்து ஒரு உத்தரவு பிறப்பித்தான்.

    அசுரர்களே. அந்த நாராயணன் என்னுடைய தம்பியான இரணியாட்சனை வதம் செய்து கொன்றுவிட்டான். இதற்குக் காரணமான தேவர்கள் ஒருவர் கூட உயிரோடு இருக்கவே கூடாது. உங்கள் கண்களில் தென்படும் தேவர்களைப் பிடித்து கொன்று குவியுங்கள்

    இரணியனின் கட்டளையை ஏற்று வெறியோடு அசுரர்கள் புறப்பட்டார்கள். தங்கள் கண்களில் தென்பட்ட தேவர்களையெல்லாம் கொல்லத் தொடங்கினார்கள்.

    இரணியன் ஸ்ரீமந்நாராயணனைத் தனது முதல் எதிரியாகக் கருதத் தொடங்கினான். ஸ்ரீமந்நாராயணனை அழிக்கும் வரை ஓயமாட்டேன் என்று சபதம் செய்தான். நாராயணனை அழிக்கப் புறப்பட்ட இரணியனைத் தடுத்து நிறுத்தினார் அசுரகுரு.

    இரணியனே. கோபத்தில் முடிவெடுப்பது ஆபத்தான செயல். ஸ்ரீமந்நாராயணனை அழிப்பது ஒரு மானிடனை அழிப்பது போல அவ்வளவு சுலபமல்ல. அவர் கடவுள். அவசரப்பட்டு முடிவு செய்து உன் உயிரை இழந்து விடாதே. முதலில் நீ பிரம்மதேவனை நினைத்து தவம் செய்து அவரிடமிருந்து இறவாவரத்தைப் பெற்ற பின்னர் நீ ஸ்ரீமந்நாராயணனுடன் போரிடலாம்

    இரணியன் ஒரு கணம் யோசித்துப் பார்த்;தான். அசுரகுருவின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த இரணியன் உடனே புறப்பட்டு மந்தரமலைக்குச் சென்று பிரம்மதேவனை நினைத்து கடும் தவம் செய்யத் தொடங்கினான்.

    அசுரர்கள் தேவர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். இப்படியே போனால் தங்கள் குலமே அழிந்து விடும் என்று முடிவு செய்து தேவர்கள் அனைவரும் ஒளிந்து வாழத் தொடங்கினார்கள். இரணியனின் மனைவி லீலாவதி கர்ப்பமாக இருந்தாள். இந்திரனோ இரணியனின் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான். ஆனால் இரணியனின் மனஉறுதி காரணமாக முயற்சி பலிக்கவில்லை. எனவே ஆத்திரமடைந்த இந்திரன் இரணியனின் அரண்மனைக்குச் சென்று லீலாவதி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அவளை இழுத்துக் கொண்டு சென்றான். இதை அறிந்த நாரதர் இந்திரனை சந்தித்தார்.

    நாரதர் இந்திரனுக்கு அறிவுரைகள் கூறினார்.

    இந்திரனே. கர்ப்பவதியாக இருக்கும் லீலாவதியை உனது இருப்பிடத்திற்கு அழைத்து வந்தது பெரும் குற்றம். உனது புகழுக்கு இந்த செயல் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும். பெரும் பாவத்தை நீ தேடிச் செல்லாதே. இரணியனின் மனைவியை என்னிடம் ஒப்படைத்துவிடு

    நாரதரே. லீலாவதியின் வயிற்றில் வளர்வது இரணியனின் வாரிசு. அந்த வாரிசு பிறந்தால் இரணியனைவிடக் கொடியவானாக இருக்கும். எனவே அந்த குழந்தை பிறந்ததும் அதை நான் அழிப்பேன்

    இந்திரனே. உன்னுடைய இந்த எண்ணம் தவறு. லீலாவதிக்குப் பிறக்கப் போகும் குழந்தை திருமால் பக்தியில் சிறந்து விளங்கும்

    இதனால் இந்திரனும் இரணியனின் மனைவியை நாரதரிடத்தில் ஒப்படைத்துவிட்டு தேவலோகம் சென்றான்.

    நாரதர் லீலாவதியை ஒரு ஆசிரமத்தில் தங்க வைத்து தினந்தோறும் அவளுக்கு ஆன்மீகக் கதைகளைச் சொல்லி வந்தார். ஸ்ரீமந்நாராயணனின் பெருமைகளை நாள்தோறும் எடுத்துரைத்தார். லீலாவதியின் வயிற்றுக்குள் இருந்த குழந்தை இத்தகைய கதைகளைக் கேட்டு வளர்ந்தது. நாளடைவில் லீலாவதி ஓர் ஆண்மகனைப் பெற்றாள். குழந்தைக்கு நாரதர் பிரகலாதன் என்று பெயர் சூட்டினார்.

    இரணியன் கடும்தவம் செய்து கொண்டிருந்தான். இரணியனின் கடும் தவத்தினைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த பிரம்மதேவன் நேரில் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    "பிரம்மதேவனே. எனக்கு இறவா வரம்

    Enjoying the preview?
    Page 1 of 1