Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arockiya Vazhvirku Pranayamam
Arockiya Vazhvirku Pranayamam
Arockiya Vazhvirku Pranayamam
Ebook97 pages50 minutes

Arockiya Vazhvirku Pranayamam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்”, “ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்” என்ற நூலினை உங்களுக்காக எழுதியுள்ளேன். தற்போது “ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்” என்ற நூலினை எழுதியுள்ளேன். தற்போதைய கோவிட்-19 சூழலில் ப்ராணயாமம் நமது உயிர்காக்கும் கவசம் என்பதை பலர் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

ப்ராணயாமா பயிற்சியினை ஒரு குருவின் துணைகொண்டு கற்றுக்கொள்வதே நல்லது. பாதுகாப்பானது. ப்ராணாயாமா பற்றிய ஒரு அறிமுக நூல் இது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ப்ராணயாமா பற்றிய அடிப்படை அறிவினை உங்களுக்கு இந்த நூல் தரும். இந்த நூல் அளவில் மிகவும் சிறியது. ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல் என்றால் அது மிகையாகாது. உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியத்தைக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் ஒரு சிறந்த நூல்.

ஆரோக்கிய வாழ்விற்கு பிராணயாமம்” என்ற இந்த நூலை தனது புஸ்தகா நிறுவனத்தில் மின்னூலாக வெளியிடும் டாக்டர்.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580138807186
Arockiya Vazhvirku Pranayamam

Read more from R.V.Pathy

Related to Arockiya Vazhvirku Pranayamam

Related ebooks

Reviews for Arockiya Vazhvirku Pranayamam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arockiya Vazhvirku Pranayamam - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்

    Arockiya Vazhvirku Pranayamam

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இறைவனின் இருப்பிடம்

    கடவுள் முழுமையானவர்

    குரு பிரம்மா

    சாந்தி மந்திரம்

    அஷ்டாங்க யோகம்

    திருமூலர்

    ஓம் எனும் மந்திரம்

    ப்ராணாயாமாவின் அடிப்படைத் தத்துவம்

    சுவாசத்தை அறியும் முறை

    ஞான முத்ரா (Gnana Mudra)

    பிரம்ம முத்ரா (Bhramha Mudra)

    அர்த்த பத்மாசனம்

    பத்மாசனம்

    வஜ்ஜிராசனம்

    உஜ்ஜயி மூச்சு

    பூரகம் கும்பகம் ரேசகம் சூன்யகம்

    நாடிசுத்தி

    பஸ்திரிகா ப்ராணாயாமா

    கபாலபதி (Kapalabathi)

    அனுலோமா விலோமா

    பயப் ப்ராணாயாமா

    மூலப் ப்ராணாயாமா

    சர்வதோமுகி ப்ராணாயாமா

    பிரமரி

    உத்கீத் ப்ராணாயாமா

    முத்ரா

    ருத்திராட்சை

    ஆரோக்கிய வாழ்விற்கு உணவு

    என்னுரை

    ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு விஷயம் ஆரோக்கியம். நன்றாக இருக்கும் போது நாம் நமது உடலைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. உடலானது சீர்கெட்டு வியாதிகள் வரும்போதுதான் நாம் ஆரோக்கியத்தைப் பற்றியே சிந்திக்கத் தொடங்குகிறோம்.

    நமது உடலை முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் பாதுகாக்க வேண்டும். பண்பாடு மிக்க நமது பாரத நாட்டில் யோகிகள் யோகம், பிராணாயாமம், தியானம், முத்திரைகள் என பல அதிசயமான வழிமுறைகளைக் கண்டறிந்து நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். இவை அனைத்தும் பொக்கிஷங்கள் என்றால் அது மிகையாகாது. இவை அறிவியல்பூர்வமாகவும் நிரூபணமாகியுள்ளன. வெளிநாட்டினர் இத்தகைய பொக்கிஷங்களைப் பயின்று முழுப்பலன்களையும் அனுபவித்து வருகிறார்கள். நாமோ அவற்றின் அருமை பெருமைகளைப் பற்றி இன்னமும் தெரியாதவர்களாகவே இருக்கிறோம்.

    ஏற்கெனவே ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம், ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள் என்ற நூலினை உங்களுக்காக எழுதியுள்ளேன். தற்போது ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம் என்ற நூலினை எழுதியுள்ளேன். தற்போதைய கோவிட்-19 சூழலில் ப்ராணயாமம் நமது உயிர்காக்கும் கவசம் என்பதை பலர் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

    ப்ராணயாமா பயிற்சியினை ஒரு குருவின் துணைகொண்டு கற்றுக்கொள்வதே நல்லது. பாதுகாப்பானது. ப்ராணாயாமா பற்றிய ஒரு அறிமுக நூல் இது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ப்ராணயாமா பற்றிய அடிப்படை அறிவினை உங்களுக்கு இந்த நூல் தரும். இந்த நூல் அளவில் மிகவும் சிறியது. ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல் என்றால் அது மிகையாகாது. உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியத்தைக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் ஒரு சிறந்த நூல்.

    ஆரோக்கிய வாழ்விற்கு பிராணயாமம்" என்ற இந்த நூலை தனது புஸ்தகா நிறுவனத்தில் மின்னூலாக வெளியிடும் டாக்டர்.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி.

    ஆர் .வி .பதி

    இறைவனின் இருப்பிடம்

    பொம்மலாட்டம் மெல்ல மெல்ல அழிந்து வரும் ஒரு தொன்மையான கலை. நாமெல்லாம் சிறியவர்களாக இருந்த சமயத்தில் இந்த கலையை மிகவும் ஆச்சரியத்தோடு ரசித்துப் பார்த்திருக்கிறோம். பொம்மலாட்டக்காரர் விதவிதமான பொம்மைகளை நூலால் இணைத்து அதை தனது விரல்களின் மூலம் அசைத்து பொம்மைகளை ஆட்டுவித்து நிகழ்ச்சியை நடத்துவார். அவர் நிகழ்த்தும் பொம்மலாட்டத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் என பலவிதமான இயல்புகளை உடைய கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். சில வருடங்கள் உபயோகித்த பின்னர் பழையதாகிப் போன பொம்மைகளை தூக்கிப் போட்டுவிட்டு புதிய பொம்மைகளை உருவாக்கி பொம்மலாட்டத்தில் பயன்படுத்துவார்கள். பார்க்கப் போனால் நாமும் பொம்மலாட்டக்காரரின் கைவிரல்களால் இயக்கப்படும் பொம்மைகளைப் போலத்தான். நம்மிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் என விதவிதமான மனிதர்கள் இருக்கிறோம். இறைவனால் நாம் உருவாக்கப்படுகிறோம். பொம்மலாட்டக்காரனைப் போல இறைவன் நம்மை வைத்து இந்த உலகத்தில் பலவிதமான ஆட்டங்களை நிகழ்த்திக் காட்டுகிறான். நாம் சில பல வருட வாழ்க்கைக்குப் பின்னர் உலகத்திலிருந்து நம்மைப் படைத்த இறைவனால் அப்புறப்படுத்தப்படுகிறோம். மீண்டும் பல புதிய மனித பொம்மைகள் இறைவனால் படைக்கப்பட்டு வாழ்க்கை எனும் ஆட்டத்தில் பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது.

    கடவுள் என்பவர் இருக்கிறாரா ?

    Enjoying the preview?
    Page 1 of 1