Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veettu Kanakku
Veettu Kanakku
Veettu Kanakku
Ebook109 pages51 minutes

Veettu Kanakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

S Valliyappan ( Known as Soma Valliappan) is a renowned writer, author, speaker, trainer, and an expert in the areas of Human Resource Management, Personality development, and Financial Investments. He has written over 50 books in Tamil and English on various subjects including Self Development,, Stock market, Emotional Intelligence, Time management, Sales, Leadership, and Personality development. Known for his erudite writing style, his articles and columns are widely published in leading Tamil newspapers and periodicals regularly. His book on Stock investing, titled Alla Alla Panam, released in 2004 by Kizhakku Publishers (New Horizon Media), has been a phenomenal success and has sold over 1,25,000 copies. Valliyappan is regularly invited by many Tamil Television channels for his opinions on stock market and economic events.

He is a Graduate in Economics from Madras University and Post Graduate in Business Administration with human resource and Marketing specializations. Valliyappan has undergone a comprehensive educational program on Emotional intelligence at XLRI , a premier Business Management Institute Jamshedpur, India.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580110104558
Veettu Kanakku

Read more from Soma Valliappan

Related to Veettu Kanakku

Related ebooks

Reviews for Veettu Kanakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veettu Kanakku - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    வீட்டுக்கணக்கு

    செலவு குறைப்பதும்- பணத்தை சேமிப்பதும்

    Veettu Kanakku

    Silavu Kuraippathum, Panathai Semippathum

    Author:

    சோம. வள்ளியப்பன்

    Soma. Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வாழ்க்கை விளையாட்டில் வெற்றி

    2. எழுதிப்பார்

    3. எல்லாச் செலவுகளும் ஒன்றல்ல.

    4. ரொட்டின் பர்சேஸ் & இம்பல்சிவ் பர்சேசஸ்

    5. நோஷனல் பர்சேஸ்

    6. தோலைச் சீவு... பழத்தையே அல்ல.

    7. எல்லாம் பெர்செப்ஷன் செய்யும் வேலை

    8. விலை பொருளுக்கா, பிராண்டுக்கா?

    9. புரவைடு பாஃர்— ஒதுக்கி வைத்தல்

    10. ‘முக்கியமானவை முதலில்’

    11. முடித்து, ஆரம்பி – Zero based Budgetting

    12. சஸ்டெயினபிள் சிக்கனம்

    13. லாங் டர்ம் பெனிபிட்ஸ்

    14. அதே மாவு-கூடுதல் இட்லிகள்!

    15. சிக்கனம் ஒரு மனோபாவம்

    16. சின்ன யோசனை- பெரிய மிச்சம்

    17. வாழ்க்கை மராத்தன்

    18. கேள்வி கேளுங்கள்

    19. செலவு என்ன – பயன் எவ்வளவு?

    வீட்டுக்கணக்கு- சிக்கனமும் சேமிப்பும் மொத்தத்தில்

    1. வாழ்க்கை விளையாட்டில் வெற்றி

    என்னுடைய நிலைமை முன்பை விடப் பரவாயில்லை. சம்பாத்தியம் அதிகம்தான். ஆனாலும் சிரமம் குறைந்தபாடாகத் தெரியவில்லையே!

    இவ்வளவு சம்பாரித்தும்கூட கைக்கும் வாய்க்குமாக இருக்கிற நிலைமையில மாற்றம் இல்லையே

    முயற்சி செய்து வருமானத்தைக் கூட்டிவிட்டுத் திரும்பிப் பார்த்தால் அட! செலவு அதைவிட அதிகமாக வளர்ந்திருக்கிறதே!

    ஒரு மாதமாவது கடன் வாங்காமல் ஒட்டிவிடலாம் என்றால் முடிய மாட்டேன் என்கிறதே

    எதைக் குறைப்பது என்ன செய்வதென்று புரியாமலேயே இருக்கிறதே

    சம்பாரிப்பது மொத்தமும் செலவாகிவிடுகிறது. இதில் எங்கிருந்து சேமிப்பது, சொந்தவீடு வாங்குவது!

    பணத்தை சேர்த்துப் பார்க்க எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது! ஆனால் முடிந்தால்தானே!

    வருமானத்தை விட வேகமாக அல்லவா தேவைகள் வளருகின்றன! இதில் எங்கே வருங்காலத்திற்க்காக சேமிப்பது!

    அப்படி இப்படி என்று ஒரு மாதம் கொஞ்சம் மீதம் செய்தால், அடுத்த மாதமே ஒன்றுக்கு இரண்டாக அல்லவா செலவு வருகிறது!

    செலவைக் குறைப்பதா? வாய்க்கு ருசியாக சாப்பிடாமலோ, பிள்ளைகள் கேட்பதை வாங்கிக்கொடுக்காமலோ எப்படி இருக்கமுடியும்!

    மேலே இருக்கிற எண்ண ஓட்டங்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது இதேபோல வேறு நினைப்பில் இருக்கிறீர்களா?

    எகிறுகிற விலைவாசியில் தடுமாறாதவர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எதைச் சொல்ல எதை விட?

    கணவன்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த சிரமம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கடைக்குப் போகிற, சமையல் அறையில் இருக்கிற இல்லத்தரசிகளுக்கு அதன் முழு சிரமம் தெரியும்.

    ஆனாலும் இதை இப்படியே விடமுடியாது. தீர்ப்பதற்கான வழிமுறைகளை யோசித்துத்தான் ஆகவேண்டும்.

    புட்பால் விளையாட்டு நடந்துகொண்டிருந்தது. இரண்டு அணிகள் மோதுகின்றன. நம்ம ஊர் அணி போட்ட கோல்கள் மொத்தம் பத்து. நாம் வெற்றிபெற்றிருக்கவேண்டுமல்லவா? ஆனால் நமக்கு வெற்றி கிடைக்கவில்லை!

    பத்து கோல் போட்டுமா என்ற கேள்வி வருகிறதல்லவா? நாம் போட்டது பத்து கோல்கள்தான். அதை மட்டுமே வைத்து ஆட்டத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்யமுடியாதே! நாம் வாங்கிய கோல்கள் எவ்வளவு என்றும் பார்ப்பார்களே! நாம் வாங்கிய கோல்கள் பதினொன்று!!

    ஆக, பத்துகோல் போட்டும் பலன் இல்லை. ஏறிவிளையாடுபவர்கள் சிறப்பாக ஆடினால் மட்டும் போதாது. டிபென்ஸ் எனப்படும் தடுத்து ஆடுவதும் சிறப்பாக இருக்கவேண்டும். எதிரணியிணர் கோல் போடாமல் தடுத்தும் ஆடவேண்டும்.

    நம் குடும்பத்தின் வருமானம் உயர்ந்துகொண்டே போவது என்னமோ உண்மைதான். அது நாம் போடும் கோல்கள் போல. கூடவே நம் செய்யும் செலவுகளும் உயர்ந்துகொண்டே போனால் அது எதிரணியினர் போடும் கோல்கள் போல. நாம் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் வருமான உயர்வு மட்டும் போதாது. கூடவே சிக்கனமும் சேமிப்பும் செய்தாகவேண்டும்.

    குழாயில் நன்றாக தண்ணீர் வந்துதான் என்ன பயன்? வாளியில் ஒட்டைகள் இல்லாமல் இருக்கவேண்டுமே! செலவு என்கிற ஓட்டைகளை முழுவதும் அடைக்க முடியாவிட்டாலும் குறைக்கவாவது செய்யவேண்டும்.

    மிகவும் கனமான உடம்பு இருக்கிற சிலர், உடனடியாக எடையைக் குறைக்கிறேன் என்று என்ன என்னவோ செய்து ஒரேயடியாக இளைத்து பார்க்கவே சகிக்காத வண்ணம் மட்டும் இல்லை, உடம்பு ஆரோக்கியமும் கெட்டுப் போய்விடுவார்கள்.

    அப்படி அதிரடியாக முக்கிய செலவுகளை குறைக்கவேண்டாம். அதே சமயம் தேவையில்லாதவறைக் கண்டறிந்து நீக்கிவிடலாம். அது ஒன்றும் முடியாததல்ல.

    உங்கள் குடும்ப வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறை பட்ஜெட் அல்ல, உபரி பட்ஜெட்டே போடலாம். முகத்திலும் பர்ச்சிலும் ஆரோக்கியத்தின் புதுப் பொலிவு பெறலாம்.

    இந்தபுத்தகத்தில் அப்படிப்பட்ட சிரமம் தராத அதே சமயம் சாத்தியம் இருக்கிற சிக்கன வழிகள் பலவற்றைப் பார்க்கலாம்.

    2. எழுதிப்பார்

    விலைவாசி தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் சிக்கனமும் சேமிப்பும் எப்படி சாத்தியம் ஆகும்! உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 40 க்கும் குறைவு. ஆனால் இப்போது? லிட்டர் ரூ 75 க்கு அருகில். முன்பு கொடுத்ததைப் போல கிட்டத்தட்ட இரண்டு மடங்கு செலவு செய்யவேண்டியதாகிவிட்டது.

    பெட்ரோல் டீசல் விலைகள் உயர்வது சர்வதேச காரணங்களால் என்கிறார்கள். அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா என்ன? அப்படியென்றால் பெட்ரோல் விலை போகப் போக மேலும்

    Enjoying the preview?
    Page 1 of 1