Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Asathal Thozhilgal 64
Asathal Thozhilgal 64
Asathal Thozhilgal 64
Ebook177 pages51 minutes

Asathal Thozhilgal 64

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைக்கு மிகப் பெரிய நிறுவனங்களாக இருக்கக்கூடிய ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ , சி.டி.எஸ்., எச்.சி.எல்., போன்றவையெல்லாம் கூட, ஒரு காலத்தில் மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்டவையே. எனவே மிகக் குறைந்த முதலீட்டில் கூட ஒரு தொழிலைத் தொடக்கி, அதனை வளர்த்தெடுத்து, வாழ்வில் படிப்படியாக உயர்ந்து நீங்களும் "அம்பானி" ஆகலாம். உங்களுக்கு உதவுவதற்காகவே அசத்தலான 64 தொழில் யோசனைகளைத் தந்துள்ளோம். இந்தத் தொழில்களில் பெரும்பாலானவை நீங்கள் கேள்விப்பட்டவையாகக் கூட இருக்கலாம். சில தொழில்கள் நகர்ப்புறங்களுக்கு மட்டுமே பொருந்துவனவாக இருக்கலாம். சில தொழில்கள் முற்றிலும் புதுமையாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் பயன் தரக்கூடியவையாக இருக்கும். படியுங்கள்... பயன் பெறுங்கள்!

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580150907892
Asathal Thozhilgal 64

Read more from Ramkumar Singaram

Related to Asathal Thozhilgal 64

Related ebooks

Reviews for Asathal Thozhilgal 64

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Asathal Thozhilgal 64 - Ramkumar Singaram

    https://www.pustaka.co.in

    அசத்தல் தொழில்கள் 64

    Asathal Thozhilgal 64

    Author:

    இராம்குமார் சிங்காரம்

    Ramkumar Singaram

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ramkumar-singaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    நீங்கள் கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்க ஆசையா? சமூகத்திற்கு மிகப் பெரிய சேவையாற்ற விருப்பமா? உங்களின் எல்லாத் திறமைகளையும் ஒருசோ வெளிப்படுத்த வேண்டுமா?

    வாழ்க்கையில் எல்லா உயர்வு, தாழ்வுகளையும் பார்க்க வேண்டுமா?

    சுறுசுறுப்போடும், பரபரப்போடும், விறுவிறுப்போடும் உங்கள் வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமா?

    நாள்தோறும் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ள விருப்பமா? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் உங்கள் பதில் 'ஆம்' என்றால், ஒரே வழி... நீங்கள் தொழிலதிபராவதுதான். உங்கள் தொழிலின் மூலம் குறைந்தது பத்து பேருக்காவது வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்து, முறையாக தொழில் வரி, சேவை வரி, வருமான வரி செலுத்தினால், அதுவே நீங்கள் நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவையாகும்.

    இதன் பொருட்டே, உங்களையும் தொழிலதிபராக்க வேண்டும் என்கிற இலக்கோடு, இந்தப் புத்தகம் தரப்பட்டுள்ளது.

    தொழில் தொடங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல பிசினஸ் ஐடியா தேவை. இதில் 64 வகையான - பரிசோதித்துப் பார்த்து, வெற்றி கண்ட தொழில்கள் இடம் பெற்றுள்ளன. அதோடு இத்தொழிலை அணுகுவதற்கான அடிப்படைச் சிந்தனைகள் குறித்தும் கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நூல் 'மங்கையர் மலர்' மாத இதழில் தொடராக வெளிவந்தபோது வாசகப் பெருமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்தே பற்பல மதிப்புக் கூடுதல்களுடன் இந்த நூல் வெளியாகிறது.

    அப்போது வாசகியர் கேட்ட பல கேள்விகளும், அதற்கான பதில்களும் இந்த நூலில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நூலை எழுதத்தூண்டிய கல்கி குழும நிர்வாக இயக்குநர் லக்ஷ்மி நடராஜன், 'மங்கையர் மலர்' பொறுப்பாசிரியர் அனுராதா சேகர், 'கல்கி' பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ், 'கோகுலம்' பொறுப்பாசிரியர் சுஜாதா, புத்தக வடிவம் பெற உதவிய எஸ்.பி.அண்ணாமலை, வடிவமைத்த கோவி.செந்தில், தட்டச்சில் உதவிய ந.கற்பகம், எம்.பாஸ்கரன் மற்றும் பிழை திருத்தம் பார்த்து, கட்டுரைகளுக்கு முதல் வாசகியாக இருந்து, கருத்துத் தெரிவித்த எனது மனைவி வள்ளியம்மை ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

    வணிக இதழ்களில் மட்டுமே கட்டுரைகள் எழுதி வந்த என்னை , 'மங்கையர் மலர்' போன்ற வெகுஜன இதழில் கட்டுரை எழுதத் தூண்டிய எனது எழுத்துலக ஆசான் 'வளர்தொழில்' க.ஜெயகிருஷ்ணனுக்கு சிரந்தாழ்ந்த நன்றிகள்.

    இந்தப் புத்தகத்தை வாங்க. நீங்கள் செலவழித்த தொகை, செலவல்ல... முதலீடு! உங்கள் வாழ்வு வளம் பெற இது நிச்சயம் உதவும்.

    வாசகராகத் தொடங்கி, தொழிலதிபராக உயரவிருக்கும் உங்கள் பயணத்தில், நானும் ஒரு திசைகாட்டியாக இருந்திருந்தால், அதுவே எனக்கு மகிழ்ச்சி.

    உங்கள் இலக்கை விரைவில் எட்ட வாழ்த்துகள்!

    தோழமையுடன்

    இராம்குமார் சிங்காரம்

    rkcatalyst@gmail.com

    0091/9841047455

    உள்ளே ...

    1. தயக்கம் என்ன?

    2. தொழில் தொடங்கும் தாரக மந்திரம்!

    3. ஜெயிப்பது யாரு.... பின்னணி ஆறு!

    4. முதலீடு எவ்வளவு?

    5. பணம் திரட்டப் பத்து வழிகள்!

    6. புரியாத மொழி... தெரியாத தொழில்!

    7. கூட்டாளிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

    8. பேர் சொல்லும் பிராண்ட்!

    9. சந்தைப்படுத்தும் முறைகள்

    10. பார்ட் டைம் பாஸ் ஆகணுமா?

    11. சீஸன் பிசினஸ் சிறப்பானதா?

    12. ஆடிக் காற்றில் அள்ளலாம் லாபம்!

    13. கம்ப்யூட்டரில் காசு பார்க்கலாம்!

    14. நெட்வொர்க் மார்க்கெட்டிங்

    15. தொழிலாளி TO முதலாளி!

    முதலீடில்லா முதலாளி

    காரின் விலை குறையக் குறைய, காரின் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஒன்றரை லட்சம் ரூபாய் விலையில் நானோ காரும் வந்து விட்டது. அதை விட குறைந்த விலைக்கு சந்தையில் செகண்ட் ஹாண்ட் கார்கள் கிடைக்கின்றன. இதனால் கார் வாங்குவோர் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கிறது.

    விலை குறைவு, அபரிமிதமாகக் கிடைக்கும் வங்கிக் கடன் போன்ற காரணங்களால், கார் வாங்குவோர் பெருகி விட்டனர். இந்த கார்களைப் பராமரிப்பதை ஒரு சேவையாகக் கொண்டால், அதுவே சிறந்த வருமானம் தரும்.

    தினந்தோறும் காலையில் 4 மணிக்கு கிளம்பினால், எட்டு மணிக்கு முடியும் இந்த வேலைக்கு ஒரு பணியாளை நியமித்து விடலாம். ஒரு டிரைவரின் பொறுப்புணர்வோடு இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். நான்கு மணி நேரத்தில் சுமார் 12 கார்கள் வரை துடைக்கலாம். ஒரு காருக்கு மாதம் ஒன்றுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். வாளியும், தண்ணீ ரும், துணியும், பகுதி

    நேர வேலைக்கு பையன்களும் இருந்தால் போதும். அபார்ட்மெண்ட்களை நாடிச் சென்று ஆர்டர் பிடிக்கலாம். பைக்குகளைத் துடைத்துக் கொடுத்தால் மாதம் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம். முதலீடு இல்லாமல் முதலாளி ஆகும் தொழில் இது.

    ***

    பத்திரமா பார்த்துக்கங்க!

    பல குடியிருப்புகளில் காரை நிறுத்த வசதி இல்லாத காரணத்தால் கார் உரிமையாளர்கள் வீட்டு வாசலிலேயே காரை நிறுத்துகின்றனர்; இல்லையென்றால் பார்க்கிங் இடம் தேடுகின்றனர். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் காலி மனைகள் இருக்குமானால், அவற்றை வாடகைக்கு எடுத்து, சுற்றிலும் வேலி அமைத்து காரை பார்க் செய்ய வாடகைக்கு விடலாம். ஒரு காருக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் மாதம் ரூ.1,000 வரை வாடகை பெறலாம்.

    இதில் செலவு என்ன தெரியுமா? அந்த காலி இடத்திற்கான வாடகை மற்றும் மூன்று ஷிஃப்ட் வாட்ச்மேன்களுக்கான சம்பளம். கூடுதலாக கார் வாஷ் தொழிலையும் செய்தால் வருமானம் இரட்டிப்பாகும்.

    தரையைச் செப்பனிட்டு, விளக்குகள் அமைத்து, வாட்ச்மேனுக்கு ஒரு ஷெட் நிறுவினால் போதும். பிட் நோட்டீஸ் விநியோகித்து பார்க்கிங் இடத்தை நிரப்பி விடலாம். பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள் போன்றவற்றுக்கு அருகில் இடம் கிடைத்தால், மேலும் சிறப்பு. மாத வாடகைக்குப் பதிலாக, மணிக்கணக்கிலும் வாடகைக்கு விடலாம்.

    ***

    செல்லங்கள் தருமே லாபம்

    சிற்றூர்களில் கோழித் தீவனங்கள், மாட்டுத் தீவனங்களுக்கான கடைகள் இருப்பது போல், நகரங்களில் நாய், பூனை, கிளி, புறா, மீன் போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவுகளை விற்கும் கடைகளுக்குத் தேவை இருக்கிறது. சற்று ஆடம்பரமான குடியிருப்புப் பகுதிகள் இத்தொழிலுக்கு ஏற்றதாகும்.

    கூடு தலாக வளர்ப்புப் பிராணிகளுக்குத் தேவைப்படும் செயின், பெல்ட், கூண்டு உள்ளிட்ட துணைப் பொருள்களையும் வாங்கி விற்கலாம். சிறிய முதலீட்டில் கடை ஆரம்பித்து, வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப பொருட்களை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

    வர்த்தகம் செழிக்கத் தொடங்கியவுடன் வளர்ப்புப் பிராணிகளையே கூட வாங்கி விற்பனை செய்யலாம். ஒருவேளை அவற்றுக்கான முதலீடு கூடுதலாக இருக்கும்பட்சத்தில், வாங்குவோர் விற்போரிடையே பாலமாக இருந்து பிராணிகளை கைமாற்றிவிட்டு, கமிஷன் பெற்றுக்கொள்ளலாம்.

    இந்தத் தொழிலுக்கு ஆர்வமும், சகிப்புத் தன்மையும் அதிகம் தேவை.

    ***

    ஆரோக்கிய வருமானம்

    மக்களிடத்தில் உடல் நலம்

    Enjoying the preview?
    Page 1 of 1