Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neengal Innum Yen Kodeesvarar Agavillai?
Neengal Innum Yen Kodeesvarar Agavillai?
Neengal Innum Yen Kodeesvarar Agavillai?
Ebook208 pages1 hour

Neengal Innum Yen Kodeesvarar Agavillai?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெற்றியாளர்களின் அனுபவங்களில் கிடைத்த சிலிர்ப்புகள், பார்த்த சில விஷயங்களின் பாதிப்புகள், பிரபலங்களின் வாழ்வைக் கடந்து சென்றபோது கிடைத்த உணர்வுப் பூர்வமான சிலாகிப்புகள்... எல்லாவற்றையும் யாரிடமாவது சொல்லியாக வேண்டும் என்ற எனது ஆவலின் வெளிப்பாடே இந்தப் புத்தகம்.

நான் கோடீஸ்வரர் ஆகும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதில் உங்களையும் கைகோர்த்துக் கொள்ள அழைப்பதே எனது எண்ணம். ஊர்கூடி கோடீஸ்வரர் ஆவோம் என்பதே திட்டம். அதை எனது வாழ்வியல் அனுபவத்தோடு, உலகியல் உதாரணத்தோடு தர வேண்டும் என்று விரும்பியதன் விளைவே ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?’ என்ற இந்தப் புத்தகம்.

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580150907881
Neengal Innum Yen Kodeesvarar Agavillai?

Read more from Ramkumar Singaram

Related to Neengal Innum Yen Kodeesvarar Agavillai?

Related ebooks

Reviews for Neengal Innum Yen Kodeesvarar Agavillai?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neengal Innum Yen Kodeesvarar Agavillai? - Ramkumar Singaram

    https://www.pustaka.co.in

    நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?

    (உங்கள் வருமானத்தை உயர்த்த உதவும் 25 உத்திகள்!)

    Neengal Innum Yen Kodeesvarar Agavillai?

    (Ungal Varumanathai Uyartha Uthavum 25 Uthigal!)

    Author:

    இராம்குமார் சிங்காரம்

    Ramkumar Singaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ramkumar-singaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    பணப் பாதையில் பயணிப்போம்!

    ஒரு நல்ல ஜோக் கிடைத்தால், பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லிச் சிரிப்பது ஆனந்தமான விஷயம். இந்தப் புத்தகமும் அப்படியே.

    என் அறிவுத் தேடலில் நான் படித்த பல விஷயங்கள், வெற்றியாளர்களின் அனுபவங்களில் கிடைத்த சிலிர்ப்புகள், பார்த்த சில விஷயங்களின் பாதிப்புகள், பிரபலங்களின் வாழ்வைக் கடந்து சென்றபோது கிடைத்த உணர்வுப் பூர்வமான சிலாகிப்புகள்... எல்லாவற்றையும் யாரிடமாவது சொல்லியாக வேண்டும் என்ற எனது ஆவலின் வெளிப்பாடே இந்தப் புத்தகம்.

    நான் கோடீஸ்வரர் ஆகும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதில் உங்களையும் கைகோர்த்துக் கொள்ள அழைப்பதே எனது எண்ணம். ஊர்கூடி கோடீஸ்வரர் ஆவோம் என்பதே திட்டம். அதை எனது வாழ்வியல் அனுபவத்தோடு, உலகியல் உதாரணத்தோடு தர வேண்டும் என்று விரும்பியதன் விளைவே ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?’ என்ற இந்தப் புத்தகம்.

    பணக்காரராக வாழும் உத்தியை, வாழும் உதாரணங்களைக் கொண்டே விளக்கினால் சிறப்பாக இருக்கும் என்பதால், பணத்தைச் சம்பாதித்த பிரபலங்களைத் தொட்டுக் காட்டி இருக்கிறேன். நமது பாரம்பரியத்தையும் மறக்காமல், மேலை நாட்டு வெற்றியையும் குறைக்காமல், இரண்டையும் கலந்து தந்திருக்கும் இந்தப் புதிய உத்தி உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

    இந்த நூலைத் தொகுக்க உதவிய திரு. எஸ்.பி. அண்ணாமலை, ‘தாய் வெளியீடு’ நிறுவனத்தின் உரிமையாளர் திரு. குமார் ராஜேந்திரன், ‘தாய் காம் (www.thaaii.com) இணைய இதழின் ஆசிரியர் திரு. மணா, உதவி ஆசிரியர் திரு. மோகன்ராஜ், பிழை திருத்தம் பார்க்க உதவிய திருமதி இராம. வள்ளியம்மை, நூலை வடிவமைத்த திரு. சத்யன், அச்சிட்ட திரு. பிச்சை, என்னை ஊக்கப்படுத்தி, எழுதத் தூண்டிகொண்டே இருக்கும் எனது எழுத்துலக ஆசான் ‘வளர்தொழில்’ திரு. க. ஜெயகிருஷ்ணன் மற்றும் எனது மதிப்புமிகு வாசகரும், மூத்த தமிழறிஞர்ருமான திரு. இரத்தினகிரி ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இறுதியாக - வாசிப்பாளராகிய உங்களுக்கு எனது நன்றியைப் பதிவு செய்வதுடன். நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்து, உந்துதல் பெற்று சில கோடிகளைச் சம்பாதித்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

    அன்பு கலந்த நன்றியுடன்,

    இராம்குமார் சிங்காரம்

    98410 47455 /rkcatalyst@gmail.com

    அணிந்துரை

    பிரம்ம ரகசியப் புதையல்!

    ‘நாம் எதை அடைய நினைக்கிறோமோ, அது நம் கைக்கு வந்தே தீரும்!’ என்பது வெற்றியாளர்களின் ஃபார்முலா. வெற்றி, பணம், பதவி, புகழ்... எல்லாமே நம் எண்ணத்தில்தான் இருக்கிறது. அதைத்தான் சொல்கிறது இந்தப் புத்தகம்.

    நாம் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை...?

    நாம் அதுபற்றி நினைக்கவில்லை... அதனால் ஆகவில்லை. நம் ஆழ்மனதுக்கு அதுபற்றித் தகவல் தரவில்லை. ஏனெனில், அது நடக்கும் என்று நமக்கே நம்பிக்கை இல்லை என்பதை ஆழ்மனதுக்கு எட்டுமளவுக்குப் பதிவு செய்திருக்கிறார், நண்பர் இராம்குமார் சிங்காரம்.

    அவரது துடிப்பான செயல்பாட்டைப் போலவே, எழுத்தும் இளமை துள்ளலோடே இருக்கிறது. ஆம்! அவரது எழுத்துப் பிரவாகம், நம் இதயத்துக்குள் புகுந்து இதமான சிந்தனைகளைத் தூண்டுகிறது.

    1. மூடப்பட்ட கதவுகள் எல்லாமே தாழ் போட்டே இருக்கும் என்று எண்ணாதீர்கள். சிலது தள்ளினால் திறந்து விடுவதாகக் கூட இருக்கும்.

    2. ஒரு சிறு நெருப்பை, ஊதி ஊதி காட்டுத் தீயாக மாற்றிவிட முடியும்.

    3. மக்களின் சோம்பேறித்தனத்தில் இருக்கிறது நமக்கான வருமானம்.

    4. கிடைக்கும் வாய்ப்புகளைக் கெட்டியாகப் பற்றிக் கொள்.

    5. வெற்றிக்கு எஸ்கலேட்டர், லிப்ஃட் எல்லாம் கிடையாது. படிகள் மட்டும்தான் உண்டு!

    6. வெளியில் மட்டுமல்ல... வீட்டிலும் ஜெயிக்கும் வழிகள்.

    7. நல்லா சம்பாதியுங்க... ஜாலியா செலவழியுங்க!

    இப்படி பலே தத்துவங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ கட்டுரை முழுக்க அள்ளித் தெளித்து, நம்மை ஈர்த்து விடுகிறார் இராம்குமார் சிங்காரம்.

    ‘குரு’ பட டயலாக்கில் ஆரம்பித்து குடும்பத்தில் உலவும் புளிக் குழம்பைத் தொட்டு முடிகிற உதாரணம் ‘ஆஹா’ ரகம். தெரிந்த ஹீரோ ஜாக்கி சான் பற்றிய தெரியாத தகவல்கள் நமக்கு புத்தி ஞானம் என்றால், அவரது அயராத உழைப்பில் கிடைத்த வெற்றி பற்றிய செய்திகள், வரும்படி ஞானம். அதாவது, வருமானம்.

    உள்ளூர் உதாரணம் தொடங்கி, உலக உதாரணம் வரை அவர் கொடுத்துள்ள வெற்றிச் சூத்திரங்கள் எல்லாமே பிரம்ம ரகசியங்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ரகசியங்களை, கை நிறைய தந்திருக்கிறார் எழுத்தாளர் இராம்குமார்.

    அனைத்துக் கட்டுரைகளையும் படித்து முடித்து, அதை செயல்படுத்தத் தொடங்கினால், நீங்களும் கோடீஸ்வரர்தான். இராம்குமாரின் எண்ணமும் அதுதான்.

    பணக்காரராக பழகலாம், வாங்க!

    எஸ்.பி. அண்ணாமலை

    கிரியேட்டிவ் ஹெட், யா மீடியா இண்டர்நேஷனல்

    98409 96745

    சமர்ப்பணம்

    எனது எழுத்துலக ஆசானாகிய - திரு. க. ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்

    பொருளடக்கம்

    1. நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?

    2. வெற்றிக்குத் தேவை பஞ்ச தந்திரம்!

    3. எட்டு மணி நேரத்தை என்ன செய்யலாம்...?

    4. வெற்றிக்கான எஸ்கலேட்டர்!

    5. பேச்சின் மொழி!

    6. யாரையும் எதிர்பார்க்காதே...!

    7. பின்னாலே பார்க்காதே... முன்னேறு, முன்னேறு!

    8. வீட்டில் வெற்றி பெறுவது எப்படி..?

    9. ‘ரூம் போட்டு யோசித்தாலும், சரித்திரம் இடம் தரும்!’

    10. எது உங்கள் போர்க்களம்..?

    11. எது நமது ஆயுதம்...?

    12. உங்களுக்காகச் சிந்தியுங்கள்!

    13. கொஞ்சம் வேலை... நிறைய வருமானம்!

    14. பூந்தோட்டமா, போராட்டமா..?

    15. நம்மால் முடியும், நம்புவோம்!

    16. வெட்டியாக இருங்கள்... சில நேரங்களில் மட்டும்!

    17. ஒட்டகச் சிவிங்கியாக இருங்கள்...!

    18. காதலில் ஜெயிப்பது எப்படி..?

    19. புத்தாண்டு சபதம் நிறைவேற வேண்டுமா..?

    20. உங்கள் வேலை பாதுகாப்பாக இருக்கிறதா..?

    21. உள்ளங்கையில் பல கோடி ரூபாய்..!

    22. உங்களை எத்தனை பேருக்குத் தெரியும்...?

    23. நீங்களும் ஆகலாம், விராட் கோலி!

    24. அடிப்படை வசதிகள் பெருக வேண்டுமா..?

    25. தூணிலும், துரும்பிலும் தொழில் வாய்ப்பு!

    1

    நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?

    நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை? என்கிற கேள்வியை நாம் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை? என்றும் கேட்கலாம்.

    இது பலருடைய மனங்களில் எதிரொலிக்கும் கேள்வி.

    பிறக்கும்போதே வசதியான குடும்பத்தில் பிறந்திருப்பவர்கள் ஒரு ரகம். அதை விட்டுவிடலாம்.

    அதே சமயம் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னைத் தானே முன்னேற்றிக் கொண்டு, பெரும் வசதியை அடைந்தவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.

    வாழ்க்கை என்கிற சதுரங்க விளையாட்டில் தன்னைத் தானே காயைப் போல நகர்த்திக் கொண்டவர்கள் அவர்கள்.

    கல்வியில் முனைப்பு, செய்கிற வேலையில் காட்டும் தீவிரமான ஈடுபாடு, சுற்றியுள்ள சமூகத்திடம் பழகும் விதம், முக்கியமாகப் பொறுமை, எதற்கும் சோர்ந்துவிடாத திட நம்பிக்கை எல்லாம் சேர்ந்து தான் ஒருவரைப் பிறர் அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றன.

    இந்த உயர்விற்கு எளிய சூத்திரங்கள் இருக்கின்றன.

    அந்தச் சூத்திரங்கள் அல்லது ரகசியங்கள் என்ன? என்பதுதான் இன்று நம்மில் பலருக்கும் உள்ள கேள்வி.

    நான் பார்த்த, கேட்ட, படித்த, ரசித்த விஷயங்களை உங்களுக்கு அளிப்பதன் மூலம் தடைகளை உடைக்கும் ரகசியங்களை அளிக்கிறேன்.

    இதோ அந்த ரகசியம்!! படித்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    ‘தி சீக்ரெட்’ என்ற புத்தகம் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய ரோண்டா பைர்ன் என்ற பெண் எழுத்தாளர், எப்படி தடைகளை உடைத்து தன்னை வெளிப்படுத்தினார் என்பது பலரையும் வியக்க வைக்கும் விஷயம்.

    சுவாரஸ்யமான நாவலுக்கும் மேல் பல ட்விஸ்ட்களைக் கொண்டது அவரது வாழ்க்கை.

    சாதனை செய்ய வயதொன்றும் தடையில்லை என்பதைத் தாண்டி, நம்மைச் சுற்றியே பல வாய்ப்புகள் வலம் வருகின்றன என்பதை சொல்லாமல் சொல்லிய வாழ்க்கை அது.

    "வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா...

    தடைகளை உடைத்திடும் வழி சொல்லப்பா…!"

    என்பதற்கு உதாரணம். அவரது வாழ்க்கை

    ஆஸ்திரேலியரான ரோண்டா, ‘தி சீக்ரெட்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதும் வரை, எழுத்துப் பழக்கமே இல்லாதவர். தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி வந்த இவர், 59-வது வயதில் ஒரு விபத்தில் சிக்கினார். படுத்த படுக்கையாக ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம்.ஒரு வேலையும் இல்லை. சும்மாவே இருப்பதை அவர் விரும்பவில்லை.

    எல்லாம் நம் செயல்!

    நாம் செய்வதெல்லாம் பிடித்துச் செய்கிறோமா, பிறருக்காகச் செய்கிறோமா என்று ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை.

    வெயில் பிடிக்காவிட்டாலும், வெயிலில் அலைகிறோம்... மழை பிடித்திருந்தாலும் நனையாமல் ஒதுங்குகிறோம்.

    இதுதான் வாழ்க்கை!

    நாம் பார்ப்பது ஆறா, ஒன்பதா என்பது எந்தக் கோணத்தில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது.

    அப்போது அவரது மகள் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அம்மா, இதைப் படியுங்கள்... பிடித்திருந்தால், இதுபோல அடுத்தடுத்து புத்தகங்கள் தருகிறேன். பொழுது போகும்... அனுபவமும் கிடைக்கும்! என்றார் மகள்.

    அந்தப் புத்தகம் ‘வேலஸ் வாட்டில்ஸ்’ என்பவர் எழுதிய ‘சயின்ஸ் ஆஃப் பீயிங் ரிச்’. பணக்காரர் ஆவதற்கான விஞ்ஞான ரீதியான விளக்கங்களைக் கொண்டிருந்த புத்தகம் அது.

    அதைப் படித்தவுடன், ஒரு புதிய யோசனை தோன்றியது ரோண்டாவுக்கு.

    அதைப் படித்து சில குறிப்புகளை எழுதிக் கொண்டே வந்தார். அதில் சினிமாவுக்கான ஸ்கோப் தெரிவதைப் பார்த்து, திரைக்கதையாக உருவாக்க முடிவு செய்தார். உடல்நிலை சரியானதும், ‘தி சீக்ரெட்’ என்ற பெயரில் சினிமாவாக எடுத்தார். படம் மிகப் பெரிய வெற்றி.

    படத்தால், ஆஸ்திரேலியாவில் புகழ் பெற்ற ரோண்டா, அதை எழுத்தாக்கினால், உலகம் முழுக்கப் பிரபலமாகலாம் என நினைத்தார்.

    அதே 2006-ஆம் ஆண்டில் ‘தி சீக்ரெட்’ புத்தக வடிவில் வந்தது. புத்தகம் சூப்பர் டூப்பர் ஹிட். எந்த அளவுக்கு என்றால், உலகின் 50 மொழிகளில் 2 கோடி பிரதிகள் விற்பனை ஆகின. இதன் மூலம் ரோண்டா பெற்ற வருமானம், ரூ. 2 ஆயிரம் கோடி. அப்படி உலகம் முழுவதுமே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம் அதில் இருந்தது.

    இத்தனைக்கும் அந்தப் புத்தகத்தில் இருப்பது, நமக்கு தெரிந்த விஷயம்தான். அதை விஞ்ஞான ரீதியில், அனுபவ உதாரணங்களோடு அழகாகச் சொல்லியிருக்கிறார் ரோண்டா. ஏற்கனவே ராபர்ட் பில்லிங்ஸ் அதேமாதிரியான கதையை சொல்லியிருக்கிறார். மேடம் பிளாவட்ஸ்கை சொல்லியிருக்கிறார். ஜேம்ஸ் ஆலன் சொன்னதுதான். புதிதாக ஒன்றுமில்லை.

    ‘லா ஆஃப் அட்ராக்சன்’ (ஈர்ப்பு விதி). என்பதை அடிப்படையாக வைத்து அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தது.

    எது ஒன்றைக் கற்பனையில் பார்த்து, அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருந்து, அதுவாகவே மாறி, அந்த உணர்விலேயே இருந்தால், அந்த சிந்தனை அப்படியே பால் வீதிக்குப் போய் அது சார்ந்த மனிதர்களை, அது சார்ந்த விஷயங்களை ஈர்த்து உங்களை நோக்கி கொண்டு வரும். இதுதான் ஈர்ப்பின் விதி. அந்த ஈர்க்கக் கூடிய சக்தி உங்கள் மனதுக்கு இருக்கிறது. அதை நம்புங்கள்.

    எது ஒன்றை நீங்கள் திரும்பத் திரும்ப நினைக்கிறீர்களோ, எதை எதிர்பார்த்து ஏங்குகிறீர்களோ, எது கிடைத்தே தீரும் என்று நம்புகிறீர்களோ... அது கிடைத்தே தீரும்.

    நீங்கள் ஆசிரியர் ஆக வேண்டுமா... பணக்காரர்

    Enjoying the preview?
    Page 1 of 1