Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennangal Tharum Abaara Vetri
Ennangal Tharum Abaara Vetri
Ennangal Tharum Abaara Vetri
Ebook205 pages1 hour

Ennangal Tharum Abaara Vetri

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

இந்த நூலின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிக்கும்பொழுது உங்கள் வாழ்வில் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்குமான பல வழிகள் நிச்சயம் புலப்படும். ஏனெனில், இது வெறும் தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகம் மட்டுமல்ல, அதற்கும் மேலாக, நமது அன்றாட வாழ்வில் நாம் வெற்றிக்கான உத்திகளைக் கடைபிடித்து, ஓர் இனிய ஆரம்பத்தையும், அபார வெற்றியையும் தரப்போகும் புத்தகம் ஆகும்.
நான் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பல்வேறு பயிற்சி வகுப்புகளில் பகிர்ந்து கொண்ட, பயிற்சிகளில் பயன்படுத்திய, வெற்றி கண்ட யுக்திகளை உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
‘மாற்றம் மட்டுமே என்றும் மாறாதது’. உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி வெற்றிகரமான மனிதராக உங்களை உருவாக்கப் போவது உறுதி.
எண்ணங்கள் சீரானால் அனைத்தும் சீராகும்.
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
என்றார் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஆகவே, சொல்வது யார் என்பதைவிட, சொல்லப்படும் விஷயங்களின் உண்மைத் தன்மையைக் காண்பதுதான் அறிவுடைமை ஆகும்.
திறந்த மனத்தோடு படியுங்கள்.
குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கதைப் புத்தகம் படிப்பதுபோல படிக்காமல், ஒவ்வொரு கட்டுரைக்கும் நேரம் ஒதுக்கி, ஆழ்ந்து படியுங்கள்.
இந்நூலில் உள்ள எண்ணங்களை உங்களின் எண்ணங்களோடு உரசிப் பாருங்கள்; உள்வாங்கிக் கொள்ளுங்கள். அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். இவை வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள். இவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், ‘அபார வெற்றி’ கிடைப்பது உறுதி.
உங்கள் எண்ணங்களைப் பட்டைத் தீட்டி வாழ்வில் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பேரன்புடன்,
உதய சான்றோன்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580131205026
Ennangal Tharum Abaara Vetri

Related to Ennangal Tharum Abaara Vetri

Related ebooks

Reviews for Ennangal Tharum Abaara Vetri

Rating: 2.5 out of 5 stars
2.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennangal Tharum Abaara Vetri - Dr. Udhayasandron

    http://www.pustaka.co.in

    எண்ணங்கள் தரும் அபார வெற்றி!

    Ennangal Tharum Abaara Vetri!

    Author:

    உதயசான்றோன்

    Udhayasandron

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udhayasandron

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. உங்கள் எண்ணங்களே உங்கள் எதிர்காலம்!

    2. எண்ணங்களின் மகத்தான சக்தி

    3. கனவுகளும் வெற்றியும்!

    4. எண்ணங்களும் வளர்ச்சியும்

    5. உங்கள் 101 கனவுகளை அடைவது எப்படி?

    6. தோல்விக்கு முடிவுகட்டுங்கள்! புதிய மனிதராகப் பிறந்திடுங்கள்!

    7. எண்ணங்களின் வலிமை!

    8. எண்ணங்களே நம் வாழ்வின் பிரதிபலிப்பு!

    9. வெற்றி மனோபாவம்!

    10. மாறட்டும் மனோபாவம்!

    11. மனோபாவமும் வெற்றி வாய்ப்பும்!

    12. இன்றைய லட்சியம் நாளைய மாற்றம்!

    13. வெற்றிக்கு அவசியமான பொறுப்புணர்வு!

    14. இனி ஒரு விதி செய்வோம்!

    15. பலம் படைத்தவர் நீங்கள்! அதை நம்புங்கள்!!

    16. காரணமா? காரியமா?

    17. சவால்களை சமாளியுங்கள்!

    18. உங்கள் சுயமதிப்பும், நம்பிக்கையும்!

    19. அற்புத ஆற்றல் கொண்டவர் நீங்கள்!

    20. உங்கள் இலக்கை விரைவாக அடையத் தேவையான முக்கிய குணங்கள்

    21. நம்பிக்கை விதைகளை நாள்தோறும் விதைப்போம்!

    22. விடாமுயற்சி என்னும் ‘பெருந்தவம்’!

    23. நல்லதே நடக்கும் என நம்புங்கள்!

    24. இலட்சியப் போராளியாக மாறுங்கள்!

    25. நீங்கள் வெல்லப்போவது உறுதி!

    26. உலக அதிசயம் நீங்கள்!

    27. எண்ணங்கள் விரிவடைகின்றன!

    28. அன்பும் ஆனந்தமும்!

    29. எண்ணங்களைச் சீராக்குங்கள்!

    முன்னுரை

    இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை பிரபல நிறுவனங்களின் அலுவலர்களுக்கு அளித்து வருபவர் இந்நூலாசிரியர் திரு. உதய சான்றோன். விழுப்புரம் மாவட்டம், குமாரமங்கலம் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரது வாழ்க்கை வரலாறே எழுச்சியூட்டக் கூடிய தன்னம்பிக்கைக் காவியம்.

    பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் இவரது தன்னம்பிக்கை பயிலரங்கங்கள் நடைபெறுகின்றன. 2013ஆம் ஆண்டு, தொடர்ந்து 72 மணி நேரம் தன்னம்பிக்கை பயிலரங்கம் நடத்தி உலக சாதனை புரிந்தார்.

    பல தொலைக்காட்சி ஊடகங்களும், சஞ்சிகைகளும் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன. தகுதியின் அடிப்படையில் சர்வதேச அரிமா சங்கத்தின் தலைவர் பதவி தேடி வந்தது. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், அமெரிக்கா, மெக்சிகோ, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளிலும் புகழ்பெற்றிருக்கிறார்.

    என்னுரை

    இந்த நூலின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிக்கும்பொழுது உங்கள் வாழ்வில் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்குமான பல வழிகள் நிச்சயம் புலப்படும். ஏனெனில், இது வெறும் தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகம் மட்டுமல்ல, அதற்கும் மேலாக, நமது அன்றாட வாழ்வில் நாம் வெற்றிக்கான உத்திகளைக் கடைபிடித்து, ஓர் இனிய ஆரம்பத்தையும், அபார வெற்றியையும் தரப்போகும் புத்தகம் ஆகும்.

    நான் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பல்வேறு பயிற்சி வகுப்புகளில் பகிர்ந்து கொண்ட, பயிற்சிகளில் பயன்படுத்திய, வெற்றி கண்ட யுக்திகளை உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

    ‘மாற்றம் மட்டுமே என்றும் மாறாதது’. உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி வெற்றிகரமான மனிதராக உங்களை உருவாக்கப் போவது உறுதி.

    எண்ணங்கள் சீரானால் அனைத்தும் சீராகும்.

    "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் – அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்ப தறிவு"

    என்றார் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஆகவே, சொல்வது யார் என்பதைவிட, சொல்லப்படும் விஷயங்களின் உண்மைத் தன்மையைக் காண்பதுதான் அறிவுடைமை ஆகும்.

    திறந்த மனத்தோடு படியுங்கள்.

    குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு கதைப் புத்தகம் படிப்பதுபோல படிக்காமல், ஒவ்வொரு கட்டுரைக்கும் நேரம் ஒதுக்கி, ஆழ்ந்து படியுங்கள்.

    இந்நூலில் உள்ள எண்ணங்களை உங்களின் எண்ணங்களோடு உரசிப் பாருங்கள்; உள்வாங்கிக் கொள்ளுங்கள். அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். இவை வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள். இவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், ‘அபார வெற்றி’ கிடைப்பது உறுதி.

    உங்கள் எண்ணங்களைப் பட்டைத் தீட்டி வாழ்வில் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பேரன்புடன்,

    உதய சான்றோன்.

    என்னுள் ஓடும் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். இவர் என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறார், எவ்வளவோ புத்தகங்கள் படித்து இருக்கின்றேன்; எல்லாம் படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், வாழ்வில் பெரிதாக மாற்றம் எதுவும் வரவில்லையே? படித்ததைச் செயல்படுத்தும்போது கஷ்டமாக இருக்கிறதே! இந்தச் சூழ்நிலையில், இவர் யார் இன்னும் சொல்வதற்கு? மேலும், நான் யார் தெரியுமா? என் படிப்பென்ன தெரியுமா? இப்படி பல எண்ணங்கள் இப்போது உங்களுக்கு ஏற்படலாம்.

    ஆனால், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சித் துறையில் லட்சக்கணக்கானோருக்குப் பயிற்சி அளித்தவன் என்ற முறையிலும், வாழ்வியலை மேலும் படிக்கும் மாணவனாகவும் இருப்பதால் நான் கண்டுணர்ந்த விஷயங்களையும் உங்கள் எண்ணங்களையும், வளமான எதிர்காலத்தைப் பற்றியும் மட்டுமே உங்களிடம் பேச விழைகின்றேன்.

    ‘எண்ணங்கள்தான் உலகை ஆள்கின்றன’ என்று கூறிய என் குருநாதர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியை இந்தக் கணத்தில் நான் நினைவில் நிறுத்துகிறேன். அவரை வணங்குகிறேன். நீங்கள் உற்சாகமான, நம்பிக்கையான எண்ணங்களோடு வாழ்வை நடத்திக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது போராடிக் கொண்டிருந்தாலும் சரி, பரவாயில்லை. நம்பிக்கையான எண்ணங்களால் மாற்றங்கள் வரும் என்று நம்புங்கள்!

    எண்ணங்களைப் பற்றியும், மனதின் ஆழத்தைப் பற்றியும் ஆழமாகப் படித்து இருக்கின்றேன். ‘எண்ணம் போல் வாழ்வு’ என்ற வாசகத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். என் விருப்பம், எதிர்பார்ப்பு, வேண்டுகோள். நீங்கள் ஒரு மகிழ்வான, அழகான, ஆனந்தமான வாழ்வை வாழ வேண்டும் என்பதுதான்.

    எண்ணங்களைப் பற்றி பல்வேறு மனோதத்துவ நிபுணர்கள் கூறிய கருத்துகளும், என் வாழ்வில் நான் கண்டறிந்த உண்மைகளும் எண்ணங்களுக்கு மாபெரும் சக்தியாக இருக்கிறது என்பது தான் மாபெரும் உண்மையாகும்.

    நீங்கள் இப்பொழுது இருக்கின்ற நிலைமைக்கு உங்கள் எண்ணங்கள்தான் காரணம் என்றால் நம்புவீர்களா? எண்ணங்களை ஒரு தோட்டத்தோடு ஒப்பிடலாம். நல்ல காய்கறிகளும், பூக்களும், பழங்களும் கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்வோம். தேவையில்லாத களைகளை அகற்றிவிட்டு, தோட்டத்தைச் சுற்றி பாதுகாப்பான வேலி அமைத்து, நல்ல முறையில் பராமரிக்கும்போது நமக்கு அபரிமிதமான பலன் கிடைக்கிறது. அதைபோல, மனம் எனும் நல்ல நிலத்தில் நல்லெண்ணங்கள் எனும் செடிகளை நட்டு எதிர்மறை எண்ணங்களான களைகளை அகற்றி தினந்தோறும் செயல்படும்போது நிச்சயமாக உயர்வுதான் கிடைக்கும்.

    போட்டிகள் நிறைந்த பரபரப்பான உலகில் ஆறுதலாக, அக்கறையாக, கனிவாக, அன்பாகப் பழக அநேகம் பேருக்கு அக்கறையும் இல்லை, நேரமும் இல்லை. ஆகவே, உங்களுக்கு நீங்களே உற்ற நண்பனாக இருங்கள். உங்கள் பலத்தை உங்கள் நண்பனிடம் கூறுங்கள். உங்களை முழுமையாக 100 சதவீதம் அங்கீகரியுங்கள். உங்கள் மனதில் எழுகின்ற எண்ணங்களை வேறு ஒருவரைப் போல கவனியுங்கள். உங்களுக்கு எழுகின்ற எதிர்மறையான எண்ணங்களுக்கும், உங்களைத் தாழ்த்துகின்ற எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். அவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள். அதற்குப் பதிலாக நம்பிக்கை தரும் எண்ணங்களை சிந்தியுங்கள்.

    ஓர் உதாரணம். உங்களால் இந்தச் செயலைச் செய்ய முடியாது என்று ஒருவர் கூறுகிறார் என்றால், ஏன் முடியாது? என்ற கேள்வியை மனதுக்குள் எழுப்புங்கள். அதற்கான மூன்று காரணங்களைக் கண்டு பிடியுங்கள். நீங்கள் கடந்த காலத்தில் செய்து முடித்த, பாராட்டப்பட்ட மூன்று விஷயங்களை நினைத்துக் கொள்ளுங்கள். ஓர் எதிர்மறை எண்ணம் தோன்றும்போது அதற்கு எதிரான ஆக்கப்பூர்வமான மூன்று விஷயங்களை மனதில் நினையுங்கள். உடனே அந்த எதிர்மறையான விஷயம் ஆக்கப்பூர்வமான விஷயமாக மாறிவிடும். இன்னும் எண்ணங்களைப் பற்றி பல்வேறு கோணங்களில் கூறலாம்.

    உங்கள் குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள். உறவினரை வரவேற்றிருப்பீர்கள். ஓடியாடி பல வேலைகளைச் செய்திருப்பீர்கள். விருந்தினர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். உங்களை யாராவது வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட்டுச் சென்றிருப்பார்கள். தினசரி உணவைவிட குறைவாகத்தான் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருக்கும்போது அந்த உற்சாகமான எண்ணங்களே வயிறு நிறைந்த திருப்தியைக் கொடுத்துவிடுகின்றன.

    இதற்கு மாறாக, நெருங்கிய உறவினர் இறந்தபோது இரங்கலுக்குச் சென்று இருக்கிறீர்கள். அங்கு சில மணி நேரங்கள் இருந்துவிட்டு வருவதாக வைத்துக்கொள்வோம். அப்போது என்ன மன நிலையில் நீங்கள் இருந்திருப்பீர்கள்? உங்கள் சக்திகள் குறைந்து போயிருப்பதாக உணர்வீர்கள். வாழ்க்கைப் பற்றி ஒருவிதமான விரக்தியும்,

    Enjoying the preview?
    Page 1 of 1