Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathodu Oru Sitting
Manathodu Oru Sitting
Manathodu Oru Sitting
Ebook163 pages2 hours

Manathodu Oru Sitting

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா

மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே...

என்ற திருமூலரின் திருமந்திரக் கூற்றுப்படி குறையற்ற வாழ்விற்கு வேறு எதுவும் வேண்டாம். மனதை சரியாக வைத்துக் கொண்டால் போதும் என்பது தான் அவர் சொல்லியது. அவர் சொன்னது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக. இன்றைக்கும் நிலைமையில் மாற்றம் இல்லை.

அப்படிப்பட்ட மனது பற்றிய புத்தகம்தான் இது. வெற்றி தோல்விகளுக்கு மட்டுமல்ல, ஒன்றை வெற்றியாகவோ அல்லது அதையே தோல்வியாகவோ பார்க்க வைப்பதும் கூட மனதுதான்.

என்ன ஆராய்ந்தும் முடிக்க முடியாதது. எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் முழுதும் புரிந்துகொள்ள முடியாதது. எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது... எல்லாமே மனம்தான்.

மனதை வியந்து, நான் எழுதியதுதான் இந்தப் புத்தகம்.

சோம. வள்ளியப்பன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110103435
Manathodu Oru Sitting

Read more from Soma Valliappan

Related to Manathodu Oru Sitting

Related ebooks

Reviews for Manathodu Oru Sitting

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathodu Oru Sitting - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    மனதோடு ஒரு சிட்டிங்

    Manathodu Oru Sitting

    Author:

    சோம. வள்ளியப்பன்

    Soma. Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கூச்சலிடும் மனது

    2. மனம் என்ற அறை

    3. மனம் என்ற கூடை

    4. மனம் என்ற தராசு

    5. மனது என்ற முதலாளி

    6. மனதிற்குள் ஒட்டப்படும் போஸ்டர்கள்

    7. கிளவுஸ் போட்ட மனது...

    8. கோலோச்சும் எண்ணங்கள்

    9. மனதிற்குச் சொல்லிக்கொடுப்பது

    10. கண்டுபிடி, தூர எறி

    11. யார் காரணம்?

    12. ஒரே ஒரு முறை....

    13. மனதைக் கழுவி…

    14. மனசுக்கு வைத்தியம்

    15. மனதோடு ஒரு 'சிட்டிங்'

    16. மன அழுத்தம் விரட்டலாம்

    17. உடனேவா? தாமதித்தா?

    18. மனசுக்கு சொல்லும் டார்கெட்

    19. நேற்று இன்று நாளை

    20. கணக்குப் பார்ப்பது

    21. கேட்பதன் தாக்கம்

    22. கலந்துவிடும் உணர்வு

    23. பயம் வேறு எச்சரிக்கையாக இருப்பது வேறு

    24. வெற்றியாளர்களின் கருவி

    25. குவிக்கப்பட்ட கவனமே ஆற்றல்

    26. மைக்ராஸ்கோப் டெலெஸ்கோப் பார்வைகள்

    27. புதையல் இருக்கும் கிணறு

    முன்னுரை

    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா

    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா

    மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே...

    என்ற திருமூலரின் திருமந்திரக் கூற்றுப்படி குறையற்ற வாழ்விற்கு வேறு எதுவும் வேண்டாம். மனதை சரியாக வைத்துக் கொண்டால் போதும் என்பது தான் அவர் சொல்லியது. அவர் சொன்னது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக. இன்றைக்கும் நிலைமையில் மாற்றம் இல்லை.

    அப்படிப்பட்ட மனது பற்றிய புத்தகம்தான் இது. வெற்றி தோல்விகளுக்கு மட்டுமல்ல, ஒன்றை வெற்றியாகவோ அல்லது அதையே தோல்வியாகவோ பார்க்க வைப்பதும் கூட மனதுதான்.

    என்ன ஆராய்ந்தும் முடிக்க முடியாதது. எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் முழுதும் புரிந்துகொள்ள முடியாதது. எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது... எல்லாமே மனம்தான்.

    மனதை வியந்து, நான் எழுதியதுதான் இந்தப் புத்தகம்.

    1. கூச்சலிடும் மனது

    ஒரு அரசு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த பதவியில் இருந்த ஒரு நல்ல மனிதர் அவர். பொதுக்காரியங்களில் ஈடுபாடு கொண்டவர். பலருக்கும் தாராளமாக உதவியவர். பல, சாதாரண பின்புலம் இல்லாத மனிதர்களுக்கும் கூட தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் கொடுத்தவர். என்ன காரணமோ தெரியவில்லை. ஒரு முறை அவரைப்பற்றி ஒரு பத்திரிகையில் யாரோ மட்டமாக எழுதிவிட்டார்கள். அவர் பெயரைப் போடவில்லையே தவிர, மற்றபடி அவர்கள் விவரித்த விதத்தில் அவர் இன்னார் என்று சுலபமாக ஊகிக்கும்படி எழுதியிருந்தார்கள். அவர் பதவி உயர்வுகள் பெற சில கேவலமான வழிமுறைகளைப் பின்பற்றுகிறார் என்பதுதான் அவரைப் பற்றி எழுதியிருந்த விவரம்.

    அவருக்கு 'வேண்டிய ஒருவர் நினைவாக அவருக்கு போன் செய்து, 'உங்களைப் பற்றி இந்தப் பத்திரிகையில் என்னவோ போட்டிருக்கிறார்கள்' என்று சொல்லி விட்டார். அவர் அந்த பத்திரிகையை உடனே தேடி வாங்கி பதற்றத்துடன் படித்தார். படித்தவர் ஆடிப் போய் விட்டார். அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு, வீட்டிற்குக் கிளம்பிப்போய், அறைக்குள் நுழைந்து கதவைத் தாழ் போட்டுக் கொண்டவர் வெகு நேரம் கதவைத் திறக்கவேயில்லை.

    என்னைப்பற்றி இப்படி எழுதி விட்டார்களே, இனி என்ன செய்வது? மற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? இனி நான் என்ன செய்வேன்? நான் என்ன இப்படிப்பட்டவனா? இதெல்லாம் சரியில்லை பொய் என்று எப்படி என்னால் எல்லோருக்கும் நிரூபிக்க முடியும்? சமுதாயத்தில் இனி என் மதிப்பு என்ன ஆகும்? போச்சே! மதிப்பு மரியாதை எல்லாம் போச்சே!, போச்சே!!

    இராப்பகலாக அவர் மனது கிடந்து அரற்றியது. அதையே நினைத்து நினைத்து வருந்தியது. அதன்பிறகு அவரால் வேறு எதைப்பற்றியும் சிந்திக்க முடியவில்லை. மனிதர் தளர்ந்து போனார். இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அவரால் அலுவலகம் போக முடிந்தது. அதுவும் மனைவியின் வற்புறுத்தலால்.

    அலுவலகம் போய்விட்டாரே தவிர அவரால் அங்கே பழைய மாதிரி இயல்பாக இருக்கமுடியவில்லை. அதிகாரத்துடன் பேசமுடியவில்லை. அவரைப் பார்க்க வருகிற வெளி ஆட்களை மட்டுமல்ல, அவரது அலுவலக ஊழியர்களையே கூட சந்திப்பதைத் தவிர்த்தார். கூனிக் குறுகிப் போனார்.

    அவரைப் பற்றி எழுதப்பட்டிருந்த அந்தத் தாளை எவருக்கும் தெரியாமல் தனியாக பல முறை படித்துப் பார்த்தார். மனது வெதும்பினார். அதன் தாக்கம் அவர் மனதில் பல மாதங்களுக்கு இருந்தது. போகவேயில்லை.

    அவருடைய மன உளைச்சலுக்கு என்ன காரணம்? அவரைப் பற்றி வந்த தவறான கேவலப்படுத்தும் விதமாக வெளியான செய்திதானே!

    கேள்வி இதுதான். யாரோ சொல்லிவிட்டார்கள், பேசிவிட்டார்கள், தன்னைப்பற்றி தவறாக எதிலோ வந்துவிட்டது என்பதால் ஒருவர் இவ்வளவு மன உளைச்சல் அடையவேண்டுமா என்ன?

    சங்கடத்திற்குக் காரணம், தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற அவருடைய பயம் மற்றும் பதைபதைப்புதான். அவருடைய அந்த நினைப்பு தான் அவ்வளவு வருத்தத்திற்கும் காரணம்.

    அந்த நினைப்பு சரிதானா? சில சமயங்களில் மனது செய்கிற மாயைகளில் இதுவும் ஒன்று. நடந்துவிட்ட செயல் உண்மைதான். அவரைப்பற்றி அவதூறாக எழுதி விட்டார்கள். அது வெளிவந்து விட்டது. அது நிச்சயம் நடந்ததுதான். அதில் சந்தேகம் இல்லை. மாற்றம் இல்லை. அதை மாற்றவும் முடியாது.

    ஆனால், நடந்த ஒன்றை அவர் எப்படி எடுத்துக்கொள்ளுகிறார் என்பதைத்தான் இங்கே கவனிக்க வேண்டும். நிகழ்ந்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

    நடைபெற்ற செயலால் ஏற்பட போகும் விளைவினை மனது எடுத்துச் சொல்லும் விதத்தைப் பொறுத்துதான் எவருக்குமே அதன் தாக்கம் இருக்கும். ஒருவருடைய மனதுதான் நிகழ்வின் விளைவுகளை சம்மந்தப்பட்டவருக்கு எடுத்துச் சொல்லுகிறது.

    எவரும் நடந்த செயலுக்காக வருத்தப்படுவதில்லை, அச்சப்படுவதில்லை. அந்த நிகழ்வால் ஏற்படப்போகும் விளைவினை நினைத்துதான் கவலை உண்டாகிறது. நடந்தது வேறு, அதனைப்பற்றிய நினைப்பு வேறு.

    பத்திரிகையில் அவரைப்பற்றி அவதூறாக வந்த செய்தியின் விளைவு விபரீதமாக இருக்கும் என்று அவர் மனது எடுத்துச் சொல்லியதால்தான் அவருக்கு அத்தனை வருத்தமும் பயமும் ஏற்பட்டது. அவ்வளவு சங்கடப்படும் அளவு, அப்படி பூதாகரமாக ஏற்படப்போகும் விளைவினைப் பெரிதுபடுத்திக் காட்டியிருக்கிறது அவர் மனது.

    என்னவோ அந்த செய்தித்தாளை உலகமே படித்துவிடுவது போலவும், படித்துவிட்டு இவரைப் பார்த்து, சீ.. நீயெல்லாம் ஒரு மனிதனா? என்று பார்க்கிற எல்லோரும் கேட்பது போலவும் ஒரு பிரம்மையை உண்டாக்கியிருக்கிறது. இப்படியாக அவர் மனதிற்குள் பெரும் கூச்சல், இரைச்சல், அமளி. அதனால் குழப்பம்.

    மனது இப்படியெல்லாம் சொல்லுகிறதே! இப்படித்தான் நடக்கப்போகிறதா? உண்மையா? இப்படி நடக்கமுடியுமா? இப்படியா நடக்கும்? என்றெல்லாம் அந்த நேரம் அவரது அறிவால் அமைதியாகத் தெளிவாக யோசிக்க முடியவில்லை. காரணம், மனது செய்த மாயம். மனது சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு, மனிதர் வருத்தத்தில் ஆழ்ந்து போய்விட்டார்.

    அந்தப் பத்திரிக்கை என்ன உலகிலேயே அதிகம் விற்கும் பத்திரிக்கையா? அப்படியே கூடுதலாக விற்கும் பத்திரிக்கையாகவே இருந்தாலும் அந்தச் செய்தி என்ன தலைப்புச் செய்தியா? அந்தப் பத்திரிகையின் ஒரே செய்தியா அது? அந்தச் செய்தியைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும் அவரைத் தெரியுமா? அப்படியே அதைப் படித்தாலும் அதில் என்ன சொல்லுகிறார்கள் என்று புரியுமா? புரிந்தாலும் நம்புவார்களா?

    எதுவுமே இல்லை. ஆனால், அப்படி மனது கற்பனை செய்து கொள்ளும். அதுவாகவே பெரிதுபடுத்திக் கொள்ளும். இருப்பதை அதிகமாக்கிக் காட்டும். கம்பியூட்டரில் 150%, 200% 300% என்று பெரிது படுத்திப் பார்ப்பதைப் போல விஷயத்தை விஸ்தாரமாக்கும்.

    தவிர, அந்தச் செய்தி என்ன சாசுவதமானதா? ஒருநாள் செய்திதானே! மக்களுக்கு அந்த ஒரு செய்தியை நினைப்பு வைத்துக்கொள்ளுவது தவிர வேறு வேலை இல்லையா? நாளாக நாளாக மறந்து போகாதா? செய்தியின் தாக்கம் எவ்வளவு நாளைக்கு?

    ஆக, அப்படிப்பட்ட ஒரு செய்தி அவரை அவ்வளவு தூரம் கலங்கடித்திருக்கத் தேவையில்லை. ஆனாலும் கலங்கினார். அவர் மட்டுமில்லை. அப்படி ஏதும் நிகழ்ந்தால் நம்மில் பெரும்பாலானவர்கள் ஆடித்தான் போய்விடுவோம்.

    பத்திரிகையில் அவதூறான செய்தி வந்தால் மட்டுமா இப்படிப்பட்ட வருத்தம் வரும்? இதே போன்ற சோர்வும் மன உளைச்சலும் சங்கடமும் எவருக்கும் வரலாம். நிகழ்வு வேறாக இருக்கலாம். நிகழ்த்துபவர் வேறாக இருக்கலாம்.

    மனது தெரியாமல் செய்கிற தவறுகள் இரண்டு.

    Enjoying the preview?
    Page 1 of 1