Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nermaiyai Sambathikka Ivvalavu Vazhigala?
Nermaiyai Sambathikka Ivvalavu Vazhigala?
Nermaiyai Sambathikka Ivvalavu Vazhigala?
Ebook203 pages1 hour

Nermaiyai Sambathikka Ivvalavu Vazhigala?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சம்பாதிக்கும் வழிமுறைகளுக்கா பஞ்சம்? சொல்லப்போனால் எல்லாருக்குமே தெரிந்ததுதான் இது. என்ன விஷயம் என்றால், பலரும் தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக்கூடத் தற்காலிகமாக மறந்துபோய், என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருப்பார்கள். நினைவூட்டி எடுத்துக்காட்டும் வேலை மட்டுமே என்னுடையது என்று முடிவு செய்துகொண்டேன். வெற்றி பெற்றவர்களைப் பற்றி எழுதுவது, அவர்களின் சிறப் பியல்புகளை, வித்தியாசமான முயற்சிகளை எடுத்துக் காட்டுவது என்று முடிவு செய்துகொண்டதும் வேலை சரசரவென ஓடியது. அதிகம் தேடவே தேவையிருக்கவில்லை.

நம்புங்கள்! இதுதான் உண்மை! நம் கண்முன்னே நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வெற்றியாளர்கள் வாழ்ந்துவருகிறார்கள்… அவர்களை ஊன்றிக் கவனித்து, பின்பற்ற முயற்சி செய்யவேண்டும். அவர்களிடமிருந்து பாடம் படிக்க வேண்டும்.

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580110107432
Nermaiyai Sambathikka Ivvalavu Vazhigala?

Read more from Soma Valliappan

Related to Nermaiyai Sambathikka Ivvalavu Vazhigala?

Related ebooks

Reviews for Nermaiyai Sambathikka Ivvalavu Vazhigala?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nermaiyai Sambathikka Ivvalavu Vazhigala? - Soma Valliappan

    https://www.pustaka.co.in

    நேர்மையாய் சம்பாதிக்க இவ்வளவு வழிகளா?

    Nermaiyai Sambathikka Ivvalavu Vazhigala?

    Author:

    சோம. வள்ளியப்பன்

    Soma. Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. புதிய உலகம், புதிய வாய்ப்புகள்

    2. நம் ஐடியா – வேறு ஒருவர் பணம்

    3. புதுப் புது வழிகள்

    4. ஜெராக்ஸ் போட்டே ஜெட் வேகம்…

    5. ஆசிரியரும் சம்பாரிக்கிறார் மாணவர்களும் சம்பாரிக்கிறார்கள்

    6. வீட்டுக்குள் இருக்கு பணம்

    7. பி.எஃப். ஒருவழி பங்குகள் வேறு வழி

    8. வித்தியாசம் காட்டு, வெளுத்து வாங்கு

    9. பண சமையல்

    10. பண சேவை

    11. பிடித்ததை செய் – காசு பார்

    12. பிரான்ச்சைகள் எடு – பணம் குவி

    13. தெரிந்த்தைச் செய்

    14. வேலையா, வியாபாரமா?

    15. துணிந்து இறங்கு – தீவையே வாங்கு

    16. ஆழகாக்கு… பணமாக்கு

    17. ஓவியத்தில் முதலீடு

    18. வேலையில் சம்பாதித்தே கோடீஸ்வரி

    19. வித்தியாகம் காட்டு – பணத்தை அள்ளு

    20. பிரான்ச்சைஸ் எடு - பணக்காரனாகு

    21. பணக்கட்டிடம் கட்டலாம்

    22. பங்குச் சந்தை – பணம் புரளுமிடம்

    23. சொல்லிக் கொடுத்தே செல்வந்தனாகு

    24. ஜூஸ் போடு – காசு சேரு

    25. குழந்தைகள் காப்பகமும் குவிக்குமே பணத்தை

    26. மனிதவளம் செய்யுமே மாயம்

    27. பணத்தையும் போடலாம் ஜிராக்ஸ்!

    28. ஆடை வடிவமைப்பும் ஆதாயம் அள்ளித் தரும்

    29. உலகம் உன் சந்தை

    முதல் பதிப்புரைக்கு எழுதிய முன்னுரை

    ஆனந்த விகடனில் இருந்து அழைப்பு வந்திருந்தது. ஒரு தொடர் எழுதுங்கள் என்றார்கள். தலைப்பை அவர்களே முடிவு செய்து வைத்திருந்தார்கள் & ப.ப.ப.ப. கூடவே ‘உங்கள் பர்ஸை புஷ்டியாக்கும் ப்ராக்டிகல் தொடர்’ என்ற சுண்டியிழுக்கும் துணை வரியும். எவ்வளவு பெரிய வாய்ப்பு! எழுதுவது மட்டுமல்ல. எழுத்தின்மூலம் எத்தனை பேருக்கு உபயோகமான சில யோசனைகளையாவது தெரிவிக்க இயலும்!

    புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அதுவரை தொடராக எதையும் எழுதிப் பழக்கமில்லாததால், அது முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. எழுத ஆரம்பித்த பிறகு வாரத்தில் இருக்கும் ஏழு நாள்களும் மிக மிக வேகமாக ஓடுவதாகப்பட்டது. அடிக்கடி புதன் கிழமைகள் வருவதாகப்பட்டது. நேர நிர்வாகம் பிரச்னை இல்லை என்றாலும் வார நிர்வாகம் முதலில் கொஞ்சம் உதைக்கவே செய்தது.

    சம்பாதிக்கும் வழிமுறைகளுக்கா பஞ்சம்? சொல்லப்போனால் எல்லாருக்குமே தெரிந்ததுதான் இது. என்ன விஷயம் என்றால், பலரும் தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக்கூடத் தாற்காலிகமாக மறந்துபோய், என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருப்பார்கள். நினைவூட்டி எடுத்துக்காட்டும் வேலை மட்டுமே என்னுடையது என்று முடிவு செய்துகொண்டேன். வெற்றி பெற்றவர்களைப் பற்றி எழுதுவது, அவர்களின் சிறப்பியல்புகளை, வித்தியாசமான முயற்சிகளை எடுத்துக் காட்டுவது என்று முடிவு செய்துகொண்டதும் வேலை சரசரவென ஓடியது. அதிகம் தேடவே தேவையிருக்கவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் வெற்றி பெற்றவர்கள் தெரிந்தார்கள். பெரும்பாலும் சாதாரண நிலையில் இருந்து, முயன்று வெற்றி பெற்றவர்கள்.

    நம்புங்கள்! இதுதான் உண்மை! நம் கண்முன்னே நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வெற்றியாளர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை நாம் கவனிப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்கா குறித்தும் ஐரோப்பா குறித்தும் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டுமென்றால் நமக்கிடையே இருக்கும் வெற்றியாளர்களை நாம் கொண்டாடித்தான் ஆகவேண்டும். அவர்களை ஊன்றிக் கவனித்து, பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். அவர்களிடமிருந்து பாடம் படிக்க வேண்டும்.

    தொடர் வெளியாகத் தொடங்கிய இரண்டாம் மூன்றாம் வாரங்களில் இருந்தே தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. ‘நான் முப்பது வருஷமா ஆனந்தவிகடன் வாசகி!’ என்று பேச ஆரம்பிப்பார்கள். தொடரில் குறிப்பிடப்பட்டிருப்பவரின் கூடுதல் விவரங்களைக் கேட்பார்கள். உரிமையோடு ஆலோசனை கேட்பார்கள். மிகவும் முயன்று நமது தொலைபேசி எண்ணை வாங்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வரும் பொழுது, வெற்றி பெறுவதற்கு மக்களிடம் இருக்கும் துடிப்பினை உணர முடிந்தது.

    தொடரில் சொல்லப்பட்ட ஆலோசனைகளைப் பயன்படுத்தி தொழில் தொடங்கியிருக்கிறோம் என்று சிலர் நன்றி சொன்னார்கள். சந்தோஷமாக இருந்தது. இதனை ஒரு ப்ராக்டிகல் தொடராக எழுதச் சொன்ன விகடனுக்குத்தான் அந்த நன்றி போகவேண்டும்.

    ஆசிரியர் அசோகனுக்கும், தொடருக்கு என்னுடன் கோ-ஆர்டினேட் செய்த எஸ்.பி. அண்ணாமலை மற்றும் முருகேஷ் பாபுவுக்கும் என்னுடைய நன்றி. தங்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்துகொண்ட வெற்றியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்,

    சோம. வள்ளியப்பன்

    1

    புதிய உலகம், புதிய வாய்ப்புகள்

    பணம்தான் பலருக்குக் கடவுள்!

    இந்தக் கடவுள், காட்சி தர மாட்டாரா என ஏறக்குறைய எல்லாருமே தவமாய் தவம் இருக்கிறார்கள். இன்று நல்ல நிலைக்கு வந்துவிட்ட பலரும்கூட வாழ்க்கையின் தொடக்கத்தில் அதற்காக ஏங்கியவர்கள்தான்!

    முன்பெல்லாம் சிலரிடம் மட்டுமே குவிந்திருந்த பணம், தற்சமயம் பரவலாகி இருக்கிறது. பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமல்ல! ஆனால், சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்வதும் முக்கியம்!

    ‘பணத்தின் வரவுக்கு ஒரு வழி, வெளியேற பலவழி!’ என்பார்கள். அந்த ஒரு வழியை அகலத் திறந்து வைப்பதுதான் எப்படி? அந்தச் சொர்க்க வாசலுக்கான சாவியை யாரும் கைமாற்றி உங்களிடம் நீட்ட வேண்டியது இல்லை. அந்தச் சாவி உங்களிடம்தான் இருக்கிறது. ஒற்றை வாசலாக இருக்கும் அதைத் தங்க நான்கு வழிச்சாலையாக மாற்ற முயற்சிப்பதற்கான வேலைதான் இது!

    பெரிய சாதனைகள் எதுவும் ஒரே நாளில் நடந்து விடாது. 600 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் திறமையும் ஒருவருக்குள் இருக்கலாம். ஆனால் எப்போது ஆரம்பித்து, எப்படி முடிப்பது என்ற மலைப்பே அந்த வேலையைத் தொடங்க விடாமல் முடக்கிப் போட்டுவிடும். அதை உடைப்பது எப்படி? ரொம்ப சிம்பிள். ஒரு நாளைக்கு இரண்டு அத்தியாயம், 15 பக்கங்கள் என்று வேலையைத் திட்டமிட்டுப் பிரித்துக் கொண்டால், இரண்டே மாதத்தில் புத்தகம் உங்கள் கையில் இருக்கும்.

    ஒரு நாளைக்குப் பத்து வார்த்தைகள் என்று கற்றுக் கொண்டால், உலகின் எந்த மொழியும் ஒரே வருஷத்தில் உங்கள் வசமாகிவிடும். சரிதானே?

    பணம் சம்பாதிப்பதும் அப்படித்தான்! ஒரு லட்சத்தை எட்டிப் பிடிக்க முடியுமா என்று பிரமிக்காதீர்கள். லட்சங்கள் ஒரே நாளில் வந்து இறங்கிவிடாது. லட்சம் என்பது நூறு ஆயிரங்கள்தான்! இன்றைய நிலையில் லட்சம் என்பதே சாதாரணம் ஆகிவிட்டது. ஒரு கோடி என்பதே சில லட்சங்கள்தானே! என்று பெரிய தொகையைக்கூட சர்வ சாதாரணமாக யோசியுங்கள், திட்டமிடுங்கள். இந்த நினைப்பும் திட்டமும் செயலாக்கமும்தான் உங்களைக் கோடீஸ்வரராக்கும்!

    சம்பாதிக்கிற காசில் ஒரு பங்கை தினம் தினமோ, வாரம் ஒரு முறையோ, மாதா மாதமோ எடுத்து வைத்துக்கொண்டே வந்தால், அதுவே ரெக்கரிங் டெபாஸிட் மாதிரி உங்கள் பீரோவில் பெருகும். அதற்காக வெறுமனே சேர்த்து வைத்தால் போதாது. காரணம், சும்மா இருக்கிற பணம் யாருக்கும் உதவாது. அதை நாம் நன்கு அறிந்த, லாபம் வரும் என்று உறுதியாகத் தெரிந்த, புத்தி சாலித்தனமான ஒரு முதலீடாக்க வேண்டும். நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டே இருக்க, நீங்கள் முதலீடு செய்த தொகை, உங்களுக்கு உபரி வருமானத்தைத் தர ஆரம்பிக்கும்.

    லட்சாதிபதி, சொந்த வீடு, வாகனம், நகை நட்டுகள் - இவையெல்லாம் நடுத்தர வர்க்கத்தினரின் கானல் கனவு என்கிற காலம் மலையேறிவிட்டது. நகர்ப்புறங்கள் அதிகரித்து வருகின்றன. நகரவாசிகளின் வருமானமும் வாழ்க்கை வசதிகளும் பெருகி வருகின்றன.

    பெசன்ட் நகரில் வாடகைக் கார்கள் விடும் அலுவலகம் வைத்து இருக்கிறவர் பதி. கூடவே பி.சி.ஓ., குளிர்பானங்கள் என்று துணை வியாபாரங்கள். காலை ஆறு ஆறரைக்கே கடை திறந்துவிடுவார். இரவு பதினோரு மணிவரை கடைதான் கதி! நேரம் காலம், நல்ல நாள் பெரிய நாள் என ஏதும் பாராத கடுமையான உழைப்பு.

    காஞ்சிபுரத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சின்னக் கிராமம்தான் அவரது சொந்த ஊர். சென்னையில் பிழைப்பு. தினம் 500 ரூபாய் வரை சம்பாதிப்பார். செலவுகள் போக, 250 ரூபாய் வரை கையில் நிற்கும். அதிலேயே அவருக்குத் திருப்திதான்.

    சென்ற மாதம் மகாதேவன் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். ‘சார்! இன்ஜினீயரிங் படிச்ச என் அண்ணன் பையனுக்கு வேலை கிடைச்சுடுச்சு. சாஃப்ட்வேர் கம்பெனி. எடுத்த எடுப்பிலேயே சம்பளம் 24 ஆயிரமாம்! நம்பவே முடியலீங்க! இப்பல்லாம் காசை அள்ளித் தர்றாங்க! சின்னப் பையன்! அவனுக்கு என்னைப்போல மூணு மடங்கு வருமானம். இத்தனைக்கும் எட்டு மணி நேரம்தான் வேலையாம்!’ - நம்ப முடியாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

    எங்கோ ஒருவர், இருவருக்கு நடப்பது அல்ல இது. இன்ஃபோசிஸ், சத்யம், டி.சி.எஸ். போன்ற நிறுவனங்கள் ஒரே நாளில் 500 பேர், 780 பேர் எனப் போட்டி போட்டுக்கொண்டு ஆள்களை வேலைக்கு எடுக்கின்றன. இன்ஜினீயர்களுக்குத்தான் என்றில்லை. பி.எஸ்ஸி. , பி.காம், பி.ஏ. என்று இளநிலைப் பட்டதாரிகளுக்கும்கூட டிமாண்ட் இருக்கிறது. கால் சென்ட்டர்கள், BPO-க்களில் இவர்களுக்கு நல்ல வாய்ப்பு. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களை அடுத்து, ‘டூ டயர்’ நகரங்கள் என்று சொல்லப்படும் கோவை, திருச்சி, நெல்லை போன்ற நகரத்துவாசிகளுக்கும் சாஃப்ட்வேர், பி.பீ.ஓ. நிறுவனத் தேடல்கள் வந்தாயிற்று.

    கைகட்டி வேலை செய்பவன் என்று சாதாரணமாகப் பார்த்த காலம் போயே போய்விட்டது. ஊதியம் வாங்கியே பெரும் பணக்காரர்களாக வாழ்பவர்கள் நம் நாட்டிலும் மிக அதிகமாகி விட்டார்கள். இந்த ஆண்டு பெங்களூர் ஐ.ஐ.எம்-மில் எம்.பி.ஏ. படித்த ஒருவரின் வருஷச் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் 84 லட்சம். யெஸ், மாதம் 7 லட்சம்!

    நம்மூர்க்கார சுரேஷுக்கு அமெரிக்காவின் பிரபல நிறுவனமான மைக்ரோ சாப்டில் வேலை கிடைத்தது. சம்பளம் இருக்கட்டும். வேலையில் சேருவதற்கு இவருக்கு ஜாய்னிங் போனஸாக அந்த நிறுவனம் கொடுத்த தொகை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஒரு டம்ளர் தண்ணீரை பக்கத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ரூபாய் 60 லட்சம்!

    அங்குதான் என்றில்லை, நமது நாட்டிலும் பெரிய வேலைகளில் சேருபவர்களுக்கு தாராளமான ஜாய்னிங் போனஸ் கொடுக்கப்படுகிறது. திறமையானவர்களை, அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனத்திற்கு இழுப்பதற்குக் கொடுக்கப்படும் விலை! வேலையில் சேர்வதற்கே இவ்வளவு! இதை ‘ஹெட் ஹன்ட்ட்டிங்’ என்று சொல்கிறார்கள். இப்படி ஆள்களைப் பிடித்துக் கொடுக்கும் ‘ஹெட் ஹன்ட்டர்ஸ்!’ என்ற பதவியே, வேலை வாங்கித் தரும் நிறுவனங்களான கன்சல்டன்சிகள் சிலவற்றில் உண்டு.

    உலகத்தில் பலரும் பிரமாதமாகச் சம்பாதித்துக்கொண்டு இருக்க, நாம் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதா? நம்மாலும் முடியும். படித்தவர்களுக்குத்தான் பணம் என்பதில்லை. படிக்காதவர்களும் புத்திசாலித்தனமாக சம்பாதிக்கத்தான் செய்கிறார்கள். அதற்குத் தேவை விடாமுயற்சியும் , வித்தியாசமான அணுகுமுறையும். விட்டொழிக்க வேண்டிய விஷயங்கள் - கூச்சமும் தயக்கமும்.

    இன்னதுதான் என்றில்லை. இப்படித்தான் என்பதும் இல்லை. வாய்ப்பு எத்தனையோ விதங்களில்

    Enjoying the preview?
    Page 1 of 1