Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iyalbe Engineering
Iyalbe Engineering
Iyalbe Engineering
Ebook131 pages37 minutes

Iyalbe Engineering

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"iyalbe Engineering " is for motivating & self-helping book for aspiring engineers especially written in Indian context, where highest numbers of engineers are produced every year. This book is now being published in Tamil ( Tamizh ). The Tamil word " iyalbe" இயல்பே means naturally, instinctively. The author in his career as an Engineer & as a recruiter have come across many engineering graduates who are struggling with fundamentals of Engineering. They feel much ashamed to even clarify fundamental principles of Engineering with others fear of being insulted by others. Many of the present day Engineers from many engineering colleges are considered unemployable or under finished by many top notch recruiters in India. Young engineers' unemployment rate is also quite high. Many are rusting in the shades of their homes without having any confidence to face the real world under the disappointed eyes of their parents.

This Book presents the engineering in a simple way to make the reader feel that it is simple to pursue the engineering & in fact fall in love with engineering. Engineering need not be only for the career or jobs but it can be a passion. There is an Engineer in everyone; it only needs a spark to excel in engineering. This book gives Engineering in a lighter version to give a kind of DIY approach to any aspiring engineer. Every creature has an engineering mind instinctively. This books gives detailed illustrations on how the Nature has inspired Engineers to design every object & how animals use engineering as a great tool for survival in this beautiful planet called Earth.

This book underscores on many of the fundamental concepts & theories of engineering to enable the readers to strengthen their fundamentals. This book is specially launched in Tamil before the English version as even in India, Tamilnadu has the maximum number of engineering colleges & churns out maximum number of Engineers year after year. The unemployment rate in Tamilnadu is quite a high especially among Engineers. The book attempts to be an eye opener to the parents who force their children in to Engineering to fulfil their own aspirations rather than their wards'. Book awakens the instinct of everyone & aids the soul searching of their passionate field to choose from many careers available in the world. Engineering should be studied for the joy of learning & not just for making an earning.

Languageதமிழ்
Publishersakritease
Release dateDec 1, 2017
ISBN9781370522026
Iyalbe Engineering
Author

sakritease

Sakritease is a continuously expanding universal being. In his constant endeavour seeking to understand the Nature- the environment , he is communicating with the human world through writings, books, posts, messages. In this process a author is slowly emerging from him. In his quest to realise universe - is becoming a farmer to closely interact with the nature's every form.

Related to Iyalbe Engineering

Related ebooks

Reviews for Iyalbe Engineering

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iyalbe Engineering - sakritease

    Foreword

    அணிந்துரை

    "இயல்பே இன்ஜினீயரிங்" எனும் நூல் அடிப்படை பொறியியல் அறிவை இயற்கை அமைப்போடு மேற்கோள் காட்டி, மாணவர்கள் கற்கும் போது சலிப்படையாமல் இருக்கும் வண்ணம் சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. ஒருவர் பொறியியல் துறையில் வளம் பெறுவதற்கு இந்நூலறிவு மிக அவசியம்.

    நூலாசிரியர் திரு. சத்தியவாகீஸ்வரன் கிருஷ்ணகுமார் (சகிருட்டிஸ்) அவர்கள் சிறுப்பிராயத்தில் சென்னையில் ஒரே குடியிருப்பில் வசிக்கும் காலத்தில் எனக்கு அறிமுகமானார், அப்பொழுது நான் அவரின் குடும்பத்தில் ஒருவராக பழகியமையால் அவருக்கு கணிதம் கற்பித்தேன். அக்காலகட்டத்தில் நான் ஆகாய விமான பொறியியல் மாணவனாக இருந்தேன். இன்றைக்கு 30 வருடங்களுக்கு மேலாக நான் இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன்.

    மாணவர்கள் எதையும் மனப்பாடம் செய்து கற்கும் சூழலில் நான் கற்பிக்கும் முறையை புரிந்து, உள்வாங்கி, கற்று பொறியியல் துறையில் பட்டம் பெற்று, பின் பொறியியல் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி படிப்படியாக உயர்ந்து, அந்நிறுவன நேர்முக தேர்வுக் குழு அங்கத்தவராக கடமையாற்றும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் காரணமாக் இந்நூலை எழுதியுள்ளார்.

    மாணவர்கள் பொறியியல் அறிவு படைத்தவர்களாக திகழ வேண்டும் என்ற அரிய நோக்கோடும், பொறியியல் துறை மட்டுமின்றி எத்துறையானாலும் அவரவர்கள் தத்தமது சுயவிருப்பத்தோடு தெரிவு செய்து பயின்றால்ப்வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற கருத்தை முன்வைத்து ஆசிரியர் இந்நூலை வெளியிட்டுள்ளார். இவரின் தொண்டுக்கும் ஊக்கத்துக்கும் ஆதரவளிப்பது கல்வியுலகின் கடமை. எனவே இந்நூலை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

    முயற்சி திருவினையாக்கும்.

    அன்புடன்

    திரு யோகனாதன் உமாஹரன்,

    ஆகாய விமான பொறியியலாளர்,

    மெல்போர்ன், அஸ்திரேலியா நவம்பர் 2017

    Preface

    ஆசிரியரின் முன்னுரை

    இயல்பே இன்ஜினீயரிங்

    உனக்குள் தூங்கும் பொறியாளனை (இன்ஜினீயரை) விழித்தெழச் செய்

    முன்னுரை :

    தமிழ் நாட்டில் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பொறியயல் பட்டதாரிகளை உருவாக்குகிறது. இதில் அதிகபட்சமாக 30% வேலை கிடைக்கிறது .மீதமுள்ளவர்கள் நடிகர் திரு. தனுஷ் நடித்ததைப் போல்

    " வேலை இல்லா பட்டதாரிகளாக" வலம் வருகிறார்கள்.

    பெற்றோர்கள் மிக கடுமையாக உழைத்து தங்கள் குழந்தைகளை ஒரு ஆளாக்கிப் பார்க்க ஆசைப்பட்டு வங்கியில் கடன் வாங்கி நகைகளை அடகு வைத்தும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கறுப்பாக பணம் (பெற்றோருக்கு கறுப்புப் பணம் அல்ல - தனியார் கல்லூரிகளுக்கு ) கொடுத்தாவது பிள்ளைகளின் விருப்பு அறியாமல் - இன்ஜினீயரிங் படித்தாலே நிறைய சம்பளம் என்ற கனவுடன் அனுப்பி வைக்கின்றனர்..

    ஆனால் 70% பெற்றோரின் கனவு நனவாகாமல் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நிரந்தர மனக்கசப்பு ஏற்படுத்திவிடுகின்றது. இதனை மேலும் புண்ணாக்கும் விதமாக வேலை கிடைக்கப் பெற்ற இளைஞர்களும் - ஒரு நிறுவனத்தில் செய்ய தேவையான செயல் திறன் பெற்றிருக்கவில்லை என்பதே பல நிறுவனங்களின் பொதுவான குற்றச்சாட்டு/ என்கிற யதார்த்த நிலை. பள்ளி கல்வி என்பது இயந்திரத்தனமான ஒரு வர்த்தகமாக பல கல்வி நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

    இதனால் எந்த ஒரு பாடத்தையும் விரும்பி படிக்க கூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. பல குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை என்றால் மகிழ்ந்து கொண்டாடும் குழந்தைகளே மிக அதிகம். கடந்த நவம்பர் 2015 ல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலும் கன மழை விட்டு விட்டு ஒரு மாதத்திற்கு மேலாக பெய்த வண்ணம் இருந்ததது. இந்த சமயத்தில் வானிலை ஆராய்ச்சி மைய

    இயக்குனராக இருந்த திரு. ரமணன் மாணவர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். காரணம் இவர் தொலைக்காட்சியில் தோன்றி இன்று இந்த மாவட்டத்தில் மழை என்றால் உடன் அந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கார்டூன் சேனல்களை தவிர வேறெதையும் பார்க்க விரும்பாத ஒரு புதிய தலைமுறை அந்த மாதத்தில் செய்தி தொலைக்காட்சிகளை விரும்பி தேடி பார்த்தனர். சென்னை மாவட்ட வேளச்சேரிக்கு விடுமுறை என்றால் 3 கி.மீ . தொலைவில் இருக்கும் மடிப்பாக்கம் ஏன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரவேண்டும் ? என்ற அளவிற்கு கேள்விகளை பள்ளி மாணவர்கள் எழுப்பினர். பெரியவர்களுக்கே தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களை சரியாக தெரிந்துக் கொள்ள முடியாத போது எப்படி சிறியவர்கள் இதனை தெரிந்துக் கொண்டனர் ? ஆர்வம் !!!. பள்ளிகளுக்கு போக

    வேண்டாம் என்கிற ஆர்வம் !?!?!?!

    பள்ளிகள் மீது பிள்ளைகளுக்கு வெறுப்பு வர முக்கிய காரணம் - அவர்கள் ஆர்வத்தை தூண்டாத படிப்பு சொல்லிக் கொடுக்கும் முறையே காரணம். பிள்ளைகளின் ஆர்வம் எங்கே நிலை கொண்டுள்ளது என்று அறிய முயற்சி செய்யாத பெற்றோர்களும் வேலைக்கு முழமையாக தயாராகாத மாணவர்களை வழி நடத்த திணறும் ஆசிரியர்களும், பணம் சம்பாதிப்பதற்காக கல்வி நிறுவனத்தை ஒரு வியாபார நிறுவனமாக நிர்வகிப்பவர்களே மிக முக்கிய காரணம்.

    .

    இதனைத் தாண்டி பள்ளியிலிருந்து கல்லூரிக்குள் அடியெடுத்து விட்டால் - எந்த விதத்திலும் ஆர்வம் தூண்ட விரும்பாத கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை பணம் கறக்கும் ATM இயந்திரங்களாக மட்டும் பார்ப்பதால் -பல மாணவர்கள் மிகவும் சலிப்புடன் படிப்பதில் முழு ஆர்வமில்லாமல் 4 வருடங்கள் படித்து விட்டு பல பாடங்களில் அர்ரியர்ஸ் (தேற தவறி) வைத்துவிட்டு படிப்பை முடிக்க முடியாமல் திணறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

    Enjoying the preview?
    Page 1 of 1