Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manapenne Unakkaga
Manapenne Unakkaga
Manapenne Unakkaga
Ebook643 pages3 hours

Manapenne Unakkaga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“மணப்பெண்ணே உனக்காக” எனும் இந்தத் திருமணப் பரிசளிப்பு நூல் வெளியீடு நீண்ட நாட்களாகவே நான் கண்ட இலக்கியக் கனவு.

ஒரு குடும்பத்தின் ஆணிவேர் குடும்பத் தலைவி. ஒரு சிறந்த குடும்பத் தலைவனின் வெற்றிக்குப் பின்னாலும், குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்குப் பின்னாலும் தூணாக நின்று பொறுப்புக்களை ஏற்று திறம்பட இல்லறத்தை நிர்வகிப்பவள்தான் பொறுப்பான இல்லத்தரசி.

பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்து, வண்ண வண்ணக் கனவுகளுடன் பட்டாம்பூச்சியாய் கல்லூரி வாழ்வில் பவனி வந்து, எண்ணற்ற எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் மனதில் தேக்கி மணமேடை நோக்கி மணநாளில் அடியெடுத்து வைத்து, மணப் பந்தலில் மணமகனின் கரம் பற்றி, அவர் திருக்கரத்தால் மணநாண் சூட்டப்பெற்று “மனைவி” எனும் அந்தஸ்தைப் பெறும் போதுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் “பொறுப்பு” எனும் குழந்தை அவளை அறியாமலேயே மடியில் வந்து அமர்கிறது. தன் இல்லறத்தைத் திறம்பட நிர்வகிக்கும் பெண்தான் சமுதாயத்தில் உயர்த்தப்படுகிறாள்.

இல்லறத்தை நல்லறமாக நடத்த உதவும் சிறந்த நூல் இது. அறிவுரைக் கட்டுரைகள் அதாவது மனைவி, தாய், மருமகள் எனும் நிலைகளில் ஒரு பெண் நடந்து கொள்ள வேண்டிய முறை, ஆலோசனைக் கட்டுரைகள் அதாவது பூஜைப் பாடல்களிலிருந்து, கோலம், குழந்தை வளர்ப்பு, அழகுக் குறிப்புகள், வீட்டுக் குறிப்புகள், ஆரோக்கியக் குறிப்புகள், மற்றும் சமையல் குறிப்புகள் 200க்கும் மேற்பட்டவை, சமையலறைத் துணுக்குகள் உள்ளடங்கிய நூல் இது. ஒரு மணப்பெண்ணிற்குத் திருமணப் பரிசு நூலாக அன்பளிப்பு செய்ய ஏற்ற நூலாக இதை வடிவமைத்திருக்கிறேன்.

இதில் வெளிவந்துள்ள கட்டுரைகள், துணுக்குகள், சமையல் குறிப்புகள் ஆகியவை ஏற்கனவே நான் எழுதி பிரபல மாத இதழ்களான மங்கை, மங்கையர் மலர், வாசுகி, பெண்மணி, இதயம் போன்றவற்றில் வெளிவந்தவை.

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580134805869
Manapenne Unakkaga

Read more from Geetha Deivasigamani

Related to Manapenne Unakkaga

Related ebooks

Reviews for Manapenne Unakkaga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manapenne Unakkaga - Geetha Deivasigamani

    https://www.pustaka.co.in

    மணப்பெண்ணே உனக்காக

    Manapenne Unakkaga

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    முன்னுரை

    பாகம் I அறிவுரை

    பகுதி - 1

    புதுமணப் பெண்ணுக்கு…

    கணவன் - மனைவி உறவுகள் பலப்பட…

    நல்ல மருமகள்

    பகுதி - 2

    உட்புற அலங்காரக் கலை

    (இன்டீரியர் டெகரேஷன்)

    வரவேற்பறையை வசீகரமாக்க…

    குழந்தைகள் அறை

    படுக்கை அறை

    டைனிங் ஹால்

    புத்துணர்வுடன் சமைக்கலாமே!

    வீட்டில் தோட்டம் போட வேண்டுமா?

    பகுதி - 3

    பண்டிகை ஸ்பெஷல்

    பண்டிகை நாட்கள் பெற்றோர்களுக்குக் கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடங்கள்

    கணபதியே சரணம்!

    நலமெலாம் நல்கிடும் ‘நவராத்திரி’

    நவராத்திரி பூஜை வழிபாடு

    வித்தையை அருளும் விஜயதசமி

    குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்

    தித்திக்கும் தீபாவளி திகட்டாமல் இருக்க…

    சத்தான பத்து புத்தாண்டு தீர்மானங்கள்!

    அகல் விளக்கு

    பகுதி - 4

    உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்

    பருமனாக இருக்கிறீர்களா?

    எண் சாண் உடம்பிற்கு எட்டு பயிற்சிகள்

    மருத்துவக் குறிப்புகள்

    பகுதி - 5

    குடும்பம் நடத்திப் பார்!

    வேலைக்குப் போகும் பெண்களுக்கு…

    சின்னச் சின்ன சிக்கனம் பெரிய முதலீடு!

    தவணை முறையில் என்னென்ன வாங்கலாம்?

    குடும்ப பட்ஜெட்டைத் தாண்டி விலைவாசி ஏறும்போது…

    கேஸை மிச்சப்படுத்துங்கள்!

    தண்ணீர் சிக்கனம்!

    வேலைக்காரர்கள் உறவு வீட்டில் எதுவரை?

    வெள்ளி மழை பொழிகிறது…

    திருட்டைத் தவிர்க்கலாமே!

    ஷாப்பிங் ஆசையா? பேன்ஸியா? அவசியமா?

    பெண்கள் தனியே நெடுந்தொலைவு பயணம் செய்தால்…

    குடும்பத்தோடு பயணமா?

    வெளியூர் போகிறீர்களா?

    போரடிக்கிறதா?

    முன்னேற்றத்தின் தடைக்கல் எது?

    பகுதி - 6

    இளம் தாயே… உனக்காக!

    தாயாகப் போகிறீர்களா?

    இளம் தாய்மார்களுக்கு 10 கட்டளைகள்

    இளம் தாய்மார்களுக்கு இருபது குறிப்புகள்

    மீண்டும் கட்டுடல் பெற…

    இளம் தாய்மார்களுக்கு எளிய மருத்துவக் குறிப்புகள்

    உங்கள் குழந்தை சரியான எடை, உயரம் இருக்கிறதா?

    குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில…

    பாப்பாவின் பார்வை

    சின்ன பாப்பாவுக்கு சின்னச் சின்ன சந்தோஷங்கள்

    அம்மா… டாட்டா

    குழந்தையை பத்திரமாகப் பள்ளிக்கு அனுப்புவது எப்படி?

    பிள்ளைகள் மதிப்பெண் பெற்றோர் கையில்

    தண்ணீர் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

    லீவு விட்டாச்சு!

    உங்கள் பெண்ணின் டீன்ஏஜ் குழப்பங்களைக் கவனித்ததுண்டா?

    பாகம் II ஆலோசனை

    பகுதி - 1

    ஆன்மீகம்

    அஷ்டலெக்ஷ்மிகளும் இஷ்டமுடன் உங்கள் இல்லம் தேடி வர…

    பகவத் கீதை

    கீதா சாரம்

    தினசரி தியான ஸ்லோகங்கள்

    பகுதி - 2

    பெண்களுக்காக ஆன்றோர் சிந்தனைகள்

    பெண்ணின் பெருமை

    இந்து மங்கையர்

    மூதுரை

    கொன்றை வேந்தன்

    திருக்குறள்

    பகுதி - 3

    சில ஆன்மீக விஷயங்கள்

    1. சூரியன் (ஞாயிறு)

    2. சந்திரன் (திங்கள்)

    3. செவ்வாய் (அங்காரகன்)

    4. புதன்

    5. வியாழன் (குரு)

    6. சுக்கிரன்

    7. சனி

    8. ராகு

    9. கேது

    பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

    புண்ய பலன்

    தான பலன்

    பொது விஷயங்கள்

    பகுதி - 4

    கோலம்

    வாரகோலம்

    பகுதி - 5

    பெண் மொழிகள்

    பகுதி - 6

    உங்கள் மழலைக்குச் சூட்ட அழகுப் பெயர்கள்

    பெண் குழந்தைகள்

    பகுதி - 7

    அழகுக் குறிப்புகள் - 100

    உச்சி முதல் பாதம் வரை

    பகுதி - 8

    ஆரோக்கியக் குறிப்புகள் - 100

    பகுதி - 9

    வீட்டுக் குறிப்புகள் - 100

    பாகம் III  சமையல்

    பகுதி - 1

    சமையல் உணவுப்பொருள் அளவு, மதிப்பீடு

    அளவுகள்

    சுமாரான மதிப்பீடு

    விசேஷ உணவுப் பொருட்கள்

    பகுதி - 2

    சமையல் செய்முறை குறிப்புகள்

    1. கேசரி (5, 6 பேருக்கு)

    2. அக்கார அடிசல்

    3. கோதுமை அல்வா

    4. லட்டு

    5. மைசூர் பாக்

    6. கோதுமை தேங்காய்ப்பால் கேக்

    7. தேங்காய் பர்பி

    8. பால்பர்பி

    9. குலோப் ஜாமுன்

    10. பாசிப்பயறு உருண்டை

    11. அதிரசம்

    12. பால் பணியாரம்

    13. பாதுஷா

    14. போளி

    15. கொழுக்கட்டை

    16. பால் கொழுக்கட்டை

    17. கல்கண்டு வடை

    18. பாம்பே ஜிலேபி

    19. பால் போளி

    20. மில்க் சாக்லேட்

    21. சர்க்கரைப் பொங்கல்

    22. தேங்காய்ப்பால் ஆப்பம்

    23. இனிப்பு இடியாப்பம்

    24. புட்டு

    25. இனிப்பு குழிப்பணியாரம்

    பகுதி - 3

    காரவகை சிற்றுண்டிகள்

    1. ரவா தோசை

    2. மசால் தோசை

    3. அவல் உப்புமா

    4. அவல்புளி உப்புமா

    5. ரவா உப்புமா

    6. வெண்பொங்கல்

    7. ரவா பொங்கல்

    8. பூரி

    9. சப்பாத்தி

    10. அடை

    11. கார தோசை

    12. கார இட்லி

    13. பஜ்ஜி (6 பேருக்கு)

    14. பக்கோடா

    15. குழம்பு பக்கோடா

    16. தூள் பக்கோடா

    17. போண்டா

    18. மெதுவடை

    19. தயிர் வடை

    20. மசால்வடை (ஆமவடை)

    21. தவலை வடை

    22. ஓமப்பொடி

    23. காராசேவு

    24. காராபூந்தி

    25. ரிப்பன் பகோடா

    26. முறுக்கு

    27. பொட்டுக்கடலை முறுக்கு

    28. சீடை

    29. எள்ளடை

    30. நிப்புட்டு

    31. வெஜிடபிள் சமோசா

    32. மிக்ஸர்

    33. கடலைமாவு அடை

    பகுதி - 4

    பொடி வகைகள்

    5. சாம்பார் வாசனைப் பொடி

    6. ரசப்பொடி

    7. இட்லிப் பொடி

    8. தோசைப் பொடி

    9. மசாலா பொடி

    10. மிளகுப் பொடி

    11. பருப்புப் பொடி

    12. தேங்காய்ப் பொடி

    13. ஏலப் பொடி

    1. ஆவக்காய் ஊறுகாய்

    2. எலுமிச்சை ஊறுகாய்

    3. நார்த்தங்காய் ஊறுகாய்

    4. தக்காளி ஊறுகாய்

    5. மாவடு

    6. மாகாளிக் கிழங்கு

    வடகம்

    1. வற்றல்

    2. இலைவற்றல்

    3. ஜவ்வரிசி வற்றல்

    4. வெங்காய வடகம்

    பொதுவான வற்றல் அளவுகள்

    6. சுண்டவற்றல்

    பகுதி - 5

    சட்னி வகைகள்

    1. தேங்காய் சட்னி

    2. மிளகாய் சட்னி

    3. வெங்காயச் சட்னி

    4. புளி சட்னி

    5. வடகச் சட்னி

    6. கருவேப்பிலை சட்னி

    7. மல்லித் துவையல்

    8. புதினா துவையல்

    9. தக்காளி சட்னி

    10. தக்காளி சட்னி (வேறு முறை)

    11. பர்மா சட்னி

    12. தக்காளி குருமா

    13. வெஜிடபிள் குருமா

    14. பூரி மஸால்

    15. இட்லி சாம்பார் (3, 4 பேருக்கு)

    1. எலுமிச்சம்பழ சாதம் (2, 3 பேருக்கு)

    2. புளியோதரை

    3. தேங்காய் சாதம்

    4. தயிர் சாதம்

    5. சாம்பார் சாதம்

    6. தேங்காய்ப் பால் சாதம்

    7. தக்காளி சாதம்

    8. வெஜிடபிள் பிரியாணி

    பகுதி - 6

    குழம்பு வகைகள்

    1. சாம்பார் (3 - 4 பேருக்கு)

    2. வெங்காயக் குழம்பு

    3. பொரித்த குழம்பு

    4. பாசிப்பயறு குழம்பு

    5. பருப்பு உருண்டைக் குழம்பு

    6. மோர்க் குழம்பு

    7. சால்னா

    8. குருமா

    9. மிளகுக் குழம்பு

    10. பக்கோடா குழம்பு

    பகுதி - 7

    சூப் வகைகள்

    1. வெஜிடபிள் சூப்

    2. தக்காளி சூப்

    3. பருப்பு சூப்

    1. பருப்பு ரசம்

    2. வெங்காய ரசம்

    3. தேங்காய்ப் பால் ரசம்

    4. எலுமிச்சம்பழ ரசம்

    5. மிளகுரசம்

    பகுதி - 8

    மதிய உணவிற்கு அடிக்கடி செய்யும் துணை பதார்த்தங்கள்

    1. பொரியல்

    2. கூட்டு

    3. கதம்பக் கூட்டு

    4. பால்கறி

    5. உருண்டைகள்

    6. காய்கறி மண்டி

    7. அவியல்

    8. பச்சடி

    9. வறுவல்

    10. மசியல்

    பகுதி - 9

    பாயசம்

    1. சேமியா பாயசம்

    2. ஜவ்வரிசி சேமியா பாயசம்

    3. பாசிப்பருப்பு பாயசம்

    4. காரட் கீர்

    பகுதி - 10

    அவைச உணவு வகைகள்

    1. கறி வறுவல்

    2. கறி பொடிமாஸ்

    3. கறி குழம்பு (2 அல்லது 3 பேருக்கு)

    4. கறிகுருமா

    5. கறி உருண்டைக் குழம்பு

    6. கட்லட்

    7. முட்டை

    8. பிரியாணி

    9. மீன் குழம்பு

    10. மீன் வறுவல்

    11. கோழிக் குழம்பு

    12. மசால் கோழி

    13. சிக்கன் சில்லி ப்ரை

    14. தந்தூரி சிக்கன்

    15. முட்டைக் குழம்பு

    16. மட்டன் கட்லெட்

    17. முட்டை பரோட்டா

    18. கொத்துக்கறி பொடிமாஸ்

    19. கொத்துக்கறி கோப்தா

    பகுதி - 11

    வேறு சில சுவையான சமையல்கள்

    1. கோதுமை ராகி அப்பம் (ஸ்வீட்)

    2. காலிபிளவர் பஜ்ஜி

    3. முட்டைக்கோஸ் சீஸ் கோலா (காரம்)

    4. பச்சைக் கொத்துமல்லி தொக்கு

    5. பாலக் பக்கோடா

    6. ரவை தட்டை

    7. தக்காளி அடை

    8. காப்ஸிகம் ஸ்பெஷல்

    9. கடலைமாவு தேங்காய் பர்பி

    10. மாங்காய் தொக்கு

    11. காலிபிளவர் கிரேவி

    12. ரவை போளி

    13. கேரட் பால் அல்வா

    14. ஸ்வீட் காஷ்யூ

    15. முள்ளங்கி கட்லெட்

    16. சேனைக்கிழங்கு ப்ரெஞ்ச் ரோஸ்ட்

    17. பீட்ரூட் கோலா உருண்டை

    18. வெஜிடபிள் கட்லெட்

    பகுதி - 12

    பழரசம், ஜாம், சாஸ் வகைகள்

    A. பழரசம் தயாரித்தல்

    1. திராட்சைப் பழரசம்

    2. கமலா ஆரஞ்சு ஸ்குவாஷ்(Comminuted Beverage)

    3. ஆரஞ்சு ஸ்குவாஷ்

    4. அன்னாசி ஸ்குவாஷ்

    5. மாம்பழ ஸ்குவாஷ்

    6. லெமன் கிரஷ்

    7. லெமன் பார்லி

    8. பழ காக்டெய்ல் (Fruit Cocktail)

    9. செயற்கைப் பழரசங்கள்

    10. ஜிஞ்சர் ஏல்

    11. ஜாம் ஜெல்லி

    12. சிந்தடிக் ஜெல்லி

    பகுதி - 13

    பழங்களிலிருந்து… செய்முறைகள்

    1. மாம்பழ ஐஸ்கிரீம்

    2. மாம்பழ ஸ்குவாஷ்

    3. மாம்பழ பாயசம்

    4. மாம்பழ அல்வா

    5. மாம்பழ பர்பி

    6. மாம்பழ புட்டிங்

    7. ப்ரூட் பன்ச் அல்லது காக்டெயில்

    8. தக்காளி கெட்சப்

    9. லெமன் பார்லி

    10. சில்லி சாஸ் (மிளகாய் சாஸ்)

    11. தக்காளி ஸ்குவாஷ்

    12. பைன் ஆப்பிள் பிஸ்கெட்

    13. கிஸ்மிஸ் பழ கேக்

    பகுதி - 14

    கிச்சன் டிப்ஸ் சமையல் துணுக்குகள் - 100

    அருஞ்சொற்களும், இணையான ஆங்கிலச் சொற்களும்

    APPENDIX - 1

    CLASSIFIED VOCABULARY

    1. NAMES OF VEGETABLES

    2. NAMES OF FRUITS

    3. NAMES OF CEREALS AND PULSES

    4. NAMES OF SOME CONDIMENTS, SPICES AND NUTS

    5. NAMES OF FLOUR

    சமர்ப்பணம்

    மணப்பெண்ணே உனக்காக…

    எனும் இந்தத்

    திருமணப் பரிசு நூலினை,

    சிவகங்கை வழக்கறிஞரும்

    சிவகங்கைக் கம்பர் எனத்

    தமிழறிஞர்களால் பாராட்டப் பெறுபவரும்,

    என் தாத்தாவும் ஆன

    அறிஞர் அமரர் திரு நல்லசாமி பிள்ளை

    அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

    - கீதா தெய்வசிகாமணி

    சிவசங்கரி

    ‘மானஸரோவர்’ 7, முதல் லிங்க் தெரு,

    கற்பகம் கார்டன்ஸ், அடையாறு,

    சென்னை - 600 020

    தொ.பே.எண். 491 88 99

    ஜூன் 30, 2000

    திருமதி கீதா தெய்வசிகாமணி

    சென்னை.

    அன்பான கீதா தெய்வசிகாமணி,

    வணக்கம்.

    மணப்பெண்ணே உனக்காக என்ற தலைப்பில் நீங்கள் புத்தகம் வெளியிடவிருப்பது குறித்து மகிழ்ச்சி. இப்புத்தகம் சிறப்பான முறையில் வெளியாகி, பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் வகையில் இதில் நீங்கள் கூறி உள்ள கருத்துக்கள் நல்ல வரவேற்பைப் பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்

    சிவசங்கரி.

    ஓம் ஸ்ரீஸாயிராம்

    முன்னுரை

    மணப்பெண்ணே உனக்காக எனும் இந்தத் திருமணப் பரிசளிப்பு நூல் வெளியீடு நீண்ட நாட்களாகவே நான் கண்ட இலக்கியக் கனவு.

    ஒரு குடும்பத்தின் ஆணிவேர் குடும்பத் தலைவி. ஒரு சிறந்த குடும்பத் தலைவனின் வெற்றிக்குப் பின்னாலும், குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்குப் பின்னாலும் தூணாக நின்று பொறுப்புக்களை ஏற்று திறம்பட இல்லறத்தை நிர்வகிப்பவள்தான் பொறுப்பான இல்லத்தரசி.

    பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்து, வண்ண வண்ணக் கனவுகளுடன் பட்டாம்பூச்சியாய் கல்லூரி வாழ்வில் பவனி வந்து, எண்ணற்ற எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் மனதில் தேக்கி மணமேடை நோக்கி மணநாளில் அடியெடுத்து வைத்து, மணப் பந்தலில் மணமகனின் கரம் பற்றி, அவர் திருக்கரத்தால் மணநாண் சூட்டப்பெற்று மனைவி எனும் அந்தஸ்தைப் பெறும் போதுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் பொறுப்பு எனும் குழந்தை அவளை அறியாமலேயே மடியில் வந்து அமர்கிறது. தன் இல்லறத்தைத் திறம்பட நிர்வகிக்கும் பெண்தான் சமுதாயத்தில் உயர்த்தப்படுகிறாள்.

    இல்லறத்தை நல்லறமாக நடத்த உதவும் சிறந்த நூல் இது. அறிவுரைக் கட்டுரைகள் அதாவது மனைவி, தாய், மருமகள் எனும் நிலைகளில் ஒரு பெண் நடந்து கொள்ள வேண்டிய முறை, ஆலோசனைக் கட்டுரைகள் அதாவது பூஜைப் பாடல்களிலிருந்து, கோலம், குழந்தை வளர்ப்பு, அழகுக் குறிப்புகள், வீட்டுக் குறிப்புகள், ஆரோக்கியக் குறிப்புகள், மற்றும் சமையல் குறிப்புகள் 200க்கும் மேற்பட்டவை, சமையலறைத் துணுக்குகள் உள்ளடங்கிய நூல் இது. ஒரு மணப்பெண்ணிற்குத் திருமணப் பரிசு நூலாக அன்பளிப்பு செய்ய ஏற்ற நூலாக இதை வடிவமைத்திருக்கிறேன்.

    இதில் வெளிவந்துள்ள கட்டுரைகள், துணுக்குகள், சமையல் குறிப்புகள் ஆகியவை ஏற்கனவே நான் எழுதி பிரபல மாத இதழ்களான மங்கை, மங்கையர் மலர், வாசுகி, பெண்மணி, இதயம் போன்றவற்றில் வெளிவந்தவை.

    என்னுள் ஒளிந்திருந்த எழுத்துத் திறமையை வெளிக்கொணர்ந்ததில் முக்கிய பங்கு என் கணவரும் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான திரு என். தெய்வசிகாமணி அவர்களையே சாரும். ஒரு எழுத்தாளருக்குத்தான் இன்னொரு எழுத்தாளரின் அருமையும், எழுத்தின் பெருமையும் புரியும். சிறந்த எழுத்தாளரான என் கணவர் அண்மையில் மகாத்மாவின் நடை எனும் சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிட்டிருக்கிறார். என் எழுத்துலக வெற்றிக்குத் துணை நிற்கும் அவருக்கு என் நன்றி என்றும் உரியது.

    என் தாயார் எழுத்தாளர், நாவலாசிரியை திருமதி லீலா கிருஷ்ணன் அவர்களால் என் எழுத்தார்வம் இரத்தத்தில் ஊட்டப்பட்டது எனலாம். ஊக்கமும், உறுதியும் சுறுசுறுப்பும் என் அன்புத் தந்தை பொறியாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களால் இரத்தத்தில் ஊட்டப்பட்டது எனலாம். அவர்களைப் பெற்றோராகப் படைத்த அந்த இறைவனுக்கு என்றென்றும் நன்றி.

    இந்நூல் சிறப்பாக வெளிவர துணைபுரிந்த அனுபவ சமையல் மூலம் ஆலோசனைகள் வழங்கிய என் அத்தை திருமதி லெஷ்மி உலகநாதன், கோலக் கலையில் தேர்ந்து வழங்கி உதவிய என் அத்தைகள் திருமதி சுபத்ரா முனுசாமி, மற்றும் திருமதி ஹம்ஸா சதாசிவம், எனக்கு அவ்வப்போது ஆலோசனைகள் கூறி அருமைத் தோழியாக விளங்கி வரும் உடன்பிறந்த சகோதரி திருமதி அகிலா செந்தில் வேலன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

    இந்த நூலுக்குப் பெருமை சேர்த்த திருமதி சிவசங்கரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

    அன்புடன்

    கீதா தெய்வசிகாமணி

    23, அபிநவ்பேலஸ்,

    ஜெத் நகர், முதல் மெயின் ரோடு,

    மந்தவெளி, சென்னை - 600 028.

    ஃபோன்: 9884858014, 24933886

    பாகம் I அறிவுரை

    பகுதி - 1

    புதுமணப் பெண்ணுக்கு…

    கல்லூரிப் படிப்பு முடிந்த கையோடு தகுந்த மாப்பிள்ளை கிடைக்க, மணமுடித்து பெண்ணைத் தனிக் குடித்தனமும் வைத்து விடுகிறார்கள். வீட்டுப் பெரியவர்கள் புது மணமக்களோடு ஏதோ இரண்டு மூன்று நாட்கள் இருந்துவிட்டுப் போய்விடுவார்கள். புதுமணப் பெண்ணிற்கு தனியாக வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பு வந்துவிடும், முதலில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட சந்தேகம் வரும். அம்மா இதை எப்படிச் செய்வார்கள்? இதற்கு என்ன செய்வார்கள்? என்ற குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும்.

    வீட்டைப் பராமரிப்பது என்பது இனிய கலை. வீட்டைப் பராமரிக்க சில எளிய முறைகள் இதோ,

    வீட்டைப் பொறுத்து சாமான்கள் சேகரித்தல் அவசியம். பீரோ, கட்டில், மேஜை, நாற்காலிகள் இவைகளை தினம் துடைத்து, பீரோவில் உள்ள உடைகளையும், மற்ற சாமான்களையும் ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும்.

    வீட்டில் உள்ள அலமாரிகள், பலகைகள், இவைகளில் உள்ள சாமான்களை அடுக்கி தினம் துடைக்க வேண்டும்.

    சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை அளவோடு எடுத்து புழக்கத்தில் வைக்க வேண்டும். வேலை முடிந்தவுடன் அவைகளை சுத்தமாகத் துலக்கி, தண்ணீர் வடியும்படி அடுக்கி வைக்க வேண்டும்.

    சமையல் செய்வதற்கு, அடுப்பில் வைக்க இண்டோலியம் எவர்சில்வர் பாத்திரங்கள் நல்லது. சமைத்த உடன் அவைகளை துலக்கி வைத்தால் புள்ளிகள் விழாமல் நீண்ட நாள் உழைக்கும்.

    அரிசி, பருப்புகள் இவைகளை டின்னிலும், புளி, மிளகாய், உப்பு இவைகளை பிளாஸ்டிக் டப்பாக்களிலும், தாளிக்கும் சாமான்களை பாட்டில்களிலும், எண்ணெய் வகைகளை எவர்சில்வர் அல்லது அலுமினிய தூக்குகளிலும், மாவு, ரவை போன்ற பொருட்களை எவர்சில்வர் சம்படங்கள் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களிலும் வைக்க வேண்டும். ஊறுகாய்களை ஜாடியிலும், வத்தல், வடகம் போன்றவற்றை டின்களிலும் பாதுகாத்து வைக்கலாம்.

    மேற்கூறிய சாமான்கள் தீர்ந்தவுடன் சுத்தப்படுத்தி (சோப்புத்தூள் போட்டு தேய்த்துக் கழுவிக் காய வைத்து) மீண்டும் போட்டு வைக்கலாம். டின்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கழுவித் துடைத்து காய வைத்து சாமான்களைக் கொட்டி வைக்கலாம்.

    மாதம் ஒரு தடவை ஒட்டடை அடிக்க வேண்டும். வாரம் ஒரு தடவை வீட்டைக் கழுவிவிட வேண்டும். மொஸைக் தரையாக இருந்தால் தினம் ஒருமுறை துடைத்துவிடலாம். சமையல் அறையை தினமும் இரவு கழுவிவிட வேண்டும். சாப்பிடும் மேஜையை ஈரத்துணி கொண்டு துடைக்க வேண்டும். பாத்திரம் விளக்கும் இடம், குளிக்கும் இடம் போன்ற தண்ணீர் புழக்கம் உள்ள இடங்களை தினமும் நார் பிரஷ் கொண்டு ஒரு தடவை தேய்க்கவும். 15 நாட்களுக்கு ஒரு தடவை பிளீச்சிங் பவுடர் இரவில் போட்டு வைத்து காலையில் கழுவினால் பாசி பிடிக்காமல், வழுக்காமல் இருக்கும்.

    குளிக்கும் பிளாஸ்டிக் வாளிகளை துணி துவைக்கும் போது சோப்புப் போட்டு கழுவி வைத்துவிட வேண்டும். சோப்பு, மஞ்சள், துவைக்கும் சோப்பு, இவைகளை வேலை முடிந்த உடன் குறித்த இடத்தில் வடித்து எடுத்து வைக்க வேண்டும். எந்த சாமான்களையும் குறித்த இடத்தில் வைக்கும் கைப் பழக்கம் வர வேண்டும்.

    காஸ் அடுப்பானால் வேலை தொடங்கும் போது காஸ் சிலிண்டரைத் திறந்து வேலை முடிந்தவுடன் மறக்காமல் மூடிவிட வேண்டும். இரவில் படுக்குமுன் மூடி இருக்கிறதா என்று பார்க்கும் பழக்கம் வேண்டும். தினமும் சமையல் அறை கழுவும் போது காஸ் அடுப்பை சோப் தண்ணீரால் துடைத்து அல்லது லேசாகக் கழுவி காய்ந்த துணியால் துடைக்கவும். தட்டுகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். எண்ணெய் பிசுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சின்ன சாமான்களை அடுப்பில் வைத்தால் எரியும் அளவைக் குறைக்க வேண்டும். பாத்திரங்களை இறக்கும் பொழுது தீயை சிறிது படுத்திவிட்டு இறக்கவும். கைப்பிடித் துணிகளை ஓரம் தைத்து உபயோகப்படுத்தினால் தீப்பிடிக்காது.

    ஸ்டவ் அடுப்பானால் இரண்டு வைத்திருக்க வேண்டும். தினமும் திரியை சுத்தப்படுத்தி துடைத்து, தினமும் எண்ணெய் ஊற்றி வைக்க வேண்டும். கரி பிடிக்காமல், பர்னர்களை அழுத்திப் பொருந்தும்படி வைக்கவேண்டும். பற்ற வைத்த உடன் ஒரு சிறு குச்சி எடுத்து மற்ற திரிகளைப் பொருத்த வேண்டும். நிறுத்தும்போது திரியை இறக்கிவிட்டு நிறுத்தவும். உடனே நிற்காவிட்டால் மேலும் ஊதக்கூடாது. சிறிது தண்ணீரைத் தொட்டு தெளித்து நிறுத்த வேண்டும்.

    சாமான்களை இறக்கும் போது கைப்பிடி துணி இல்லாமல் அவசரத்திற்கு சேலைத் தலைப்பை பயன்படுத்தக் கூடாது. நைலக்ஸ் புடவையை உடுத்திக்கொண்டு அடுப்படியில் வேலை செய்யக் கூடாது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    இட்லி, தோசை மாவுகள் சீக்கிரம் புளித்துவிடும். அளவாகத் தயார் செய்ய வேண்டும். காலையில் ஊற்றின மாவு மீதமானால் பிரிட்ஜில் வைக்கலாம். பிரிட்ஜ் இல்லாவிட்டால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுள் மாவு பாத்திரத்தை வைத்தால் மாவு புளிக்காமல் இருக்கும்.

    தயிருக்கு இரவில் உறை ஊற்றி பகலிலும், காலையிலும் ஊற்றி இரவிலும் பயன்படுத்த வேண்டும். அப்படியும் மீதமானால் ஒரு சிறு துண்டு இஞ்சியும், பச்சை மிளகாயும் போட்டு வைத்திருந்து, 2, 3 நாள் சேர்ந்தால் மோர் குழம்பு வைக்கலாம். பிரிட்ஜ் இருந்தால் அதில் மீதமுள்ள தயிரை வைத்தால் புளிக்காது.

    தேங்காய்களை குடுமி பகுதி மேலே இருக்கும்படி அடுக்கி வைத்தால் கெடாது.

    முட்டைகளை குறுகின பாகத்தை மேலே இருக்குமாறு அடுக்கி வைக்க வேண்டும்.

    இரும்பு சட்டி, தோசைக்கல் இவைகளை எண்ணெய் பிசுக்கில்லாமல் நன்றாகத் தேய்த்து வைக்கவேண்டும்.

    குக்கர் பாத்திரத்தில் அடியில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் குக்கரில் தண்ணீர் கறை பிடித்து கறுப்பாக இருக்கும். தண்ணீரில் அரை மூடி எலுமிச்சம்பழம் போட்டால் சுத்தமாகக் கறை நீங்கி வெண்மையாக இருக்கும்.

    கணவன் - மனைவி உறவுகள் பலப்பட…

    இனிமை தவழும் இல்வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இருப்பது கணவன் - மனைவி உறவு. வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவர் ஒரே கூரையின் கீழ் கருத்தொருமித்து கலந்து வாழ நேரிடும் போது சின்னச் சின்ன பிரச்னைகள் தோன்றுவது இயற்கையே. கணவன் - மனைவி இருவரின் ஆழமான அன்பு எனும் ஒளியின் முன் இந்த சின்னச் சின்னப் பிரச்னைகள் என்னும் பனித் துளிகள் மாயமாக மறைந்து விடுவதும் உண்டு. சமயங்களில் மிகச் சிறிய பிரச்னைகள் பூதாகாரமாக வளர்ந்து, கணவன் - மனைவி இருவராலும் வளர்த்துவிடப்பட்டு, மணவாழ்க்கை என்னும் மாளிகை தரை மட்டமாகி விடுவதும் உண்டு. இதனால் இவர்கள் இருவரின் வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, இவர்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வும் பாதிக்கப்படுகிறது அல்லவா? இதைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் - மனைவி உறவு பலப்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகிறது.

    கணவன் - மனைவி உறவு பலப்பட என்ன செய்ய வேண்டும்?

    மனதிற்குள் வைத்துக் கொள்ளாதீர்கள்:

    எந்தப் பிரச்னையானாலும் கணவன் - மனைவி இருவரும் வெளிப்படையாகப் பேசித் தீர்த்துக் கொள்வதே நல்லது. மனம் விட்டுப் பேசுவதால் மனபாரம் குறைவதோடு ஒருவருக்கொருவர் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. எதையும் மனதிற்குள் வைத்துக் கொண்டு புழுங்கித் தவிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.

    பிரச்னைகளை வளரவிடாதீர்கள்:

    வீட்டுக்கு வீடு பிரச்னைகள் இல்லாமல் இருக்காது. என்னதான் கவனமாக இருந்தாலும் சிறு பிரச்னை ஏற்பட்டு சின்னச் சின்ன சண்டைகள், பூசல்கள் வருவது இயற்கை. என்னதான் பூசலானாலும் அதை அடுத்த நாள் வரை வளர விடாதீர்கள். நாளை என்பது உங்களுக்காகவே மலரப் போகும் பொன்னாள். இன்றைய பூசல்கள் நாளை மெதுவாகத் தலை தூக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். ஊடலை அன்றே கூடலாக மாற்ற வேண்டியது உங்கள் இருவரின் கையில்தான் இருக்கிறது.

    விட்டுக் கொடுக்காதீர்கள்:

    கணவன் - மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் நிறைகுறைகளை அறிந்து வைத்திருப்பீர்கள். மற்றவர்கள் முன் ஒருபோதும் ஒருவர் மற்றவரது குறைகளை வெளிப்படுத்தாதீர்கள். என் கணவருக்கு சமர்த்துப் போதாது என்று வெளிப்படையாக சொல்லும் மனைவியை கணவனும், என் மனைவி எதுக்கும் லாயக்கில்லை என்று மற்றவர் முன் குறைப்படும் கணவனை மனைவியும் விரும்புவதில்லை. மாறாக நிறைகளை மற்றவர் முன் வெளிப்படுத்திப் பாருங்கள். பரஸ்பர அன்பு நிறைகுடமாகத் ததும்பி வழியும்.

    உதவ மறுக்காதீர்கள்:

    கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் சிறு உதவிகள் செய்து கொள்வது உங்கள் அன்பிற்கு பெரும் பாலமாக அமையும். மனைவியின் வீட்டு வேலைகளில் கணவன் தன்னால் முடிந்த அளவு உதவலாம். அதே போல் கணவரது பணிகளில் மனைவியும் தனக்குத் தெரிந்த அளவு ஈடுபடலாம்.

    ஒப்பிட்டுப் பேசாதீர்கள்:

    கணவன் - மனைவி இருவருக்குள்ளும் பெரும்பாலும் கருத்து வேறுபாடு ஏற்படுவது மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்து பேசுவதால்தான். ‘உங்க பிரெண்ட் பாருங்க வீடு வாங்கிட்டார். நீங்களும் தான் அதே ஆபிஸிலே வேலை பார்க்கறீங்க’ எனும் மனைவியின் பேச்சை கணவனும்; ‘உன் பிரெண்ட் மாலாவைப் பாரு, என்ன அழகா வீட்டை வச்சிருக்கா, நீயும் இருக்கியே’ என்று ஒப்பிட்டுக் கூறும் கணவரது பேச்சை மனைவியும் விரும்புவதில்லை.

    கருத்துக்களைத் திணிக்காதீர்கள்:

    என்னதான் நீங்கள் கணவன் மனைவியானாலும் ஒருவரது கருத்தை மற்றவர் மீது திணித்து அதன்படிதான் அவர்கள் நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகும் போது இல்வாழ்க்கையின் சுவை குறைய ஆரம்பிக்கிறது. அவரவர் சுதந்திர உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்.

    எந்நேரமும் நச்சரிக்காதீர்கள்:

    வீட்டின் பொருளாதார நிலை உணராமல் மனைவி எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என எந்நேரமும் நச்சரிப்பது விரும்பத்தகாத செயல். அதேபோல் ‘உன் பிறந்த வீட்டிலிருந்து அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா’ என நச்சரிக்கும் கணவரது செயலை மனைவியும் விரும்புவதில்லை.

    வேறுபாடு காட்டாதீர்கள்:

    இருதரப்பு உறவினர்களையும் சமமாக பாவிக்க வேண்டுவது இருவரின் கடமையாகும். தன் பக்கத்து உறவினர்களை தாங்கோ தாங்கு என்று தாங்கிவிட்டு தன் கணவன் (அ) மனைவி தரப்பு உறவினர்களை தாக்கு தாக்கு என்று தாக்குவதும் கூடாது.

    எந்த விஷயத்தையும் மறைக்காதீர்கள்:

    கணவன் - மனைவி இருவருக்குள்ளாக ஒளிவு மறைவு என்பதே கூடாது. எந்த விஷயத்தையும் அது உப்புப் பெறாத அற்ப விஷயமாக இருந்தாலும் கூட மறைக்காதீர்கள். நீங்கள் சின்ன விஷயம்தானே என மறைப்பது உங்கள் கணவன் (அ) மனைவியின் மனதில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.

    பரிசுகள் வழங்க மறக்காதீர்கள்:

    கணவனோ மனைவியோ அவ்வப்போது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான சிறு பரிசுகள் வாங்கி வந்து ஒருவரை ஒருவர் மகிழ்வூட்டலாம். எதிர்பாராமல் நீங்கள் வாங்கிப் பரிசளிக்கும் ஃபாரின் செண்ட்டால் உங்கள் மணவாழ்க்கை எப்படி மணக்கிறது என்று பாருங்களேன்.

    சினிமா வாழ்க்கையல்ல:

    உங்கள் கணவருக்கு ஆயிரம் வெளி வேலைகள் அலுவலகப் பொறுப்புகள் இருக்கலாம். அதே போல மனைவிக்கும் பல வெளி வேலைகள் வீட்டுப் பொறுப்புகள் இருக்கலாம். சினிமாவில் காட்டுவது போல தினமும் கணவர் தன்னைக் கூட்டிக் கொண்டு ஜாலியாக சுற்றவில்லையே என மனைவி நினைப்பதும், சினிமா கதாநாயகி போல தன் மனைவி பளிச் என உடுத்திக் கொண்டு எந்நேரமும் அழகாக காட்சியளிக்க வேண்டும் என கணவன் நினைப்பதும், அங்கலாய்ப்பதும் தவறு. சினிமாவிற்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் ரொம்ப தூரம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

    இயந்திர வாழ்க்கை வாழாதீர்கள்:

    ஆயிரம் வேலைகள்தான் இருக்கட்டுமே. மாதம் ஒரு நாளை உங்கள் இருவரின் சந்தோஷத்திற்காக ஒதுக்குங்கள். மனம் விட்டுப் பேசி மகிழ எங்காவது அருகில் உள்ள பிடித்தமான இடங்களுக்குச் சென்று வாருங்கள். என்னதான் பிரச்னை, மனப்பூசல் இருந்தாலும் அதை அந்த ஒருநாள் இனிமை மாற்றிவிடும்.

    மொத்தத்தில் உலகிலேயே உங்கள் கணவர் (அ) மனைவிக்குத் துணை நீங்கள்தான் என்பதை உங்கள் ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் வெளிப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் நிரந்தர இன்பம் பூத்துக் குலுங்கும்.

    நல்ல மருமகள்

    புகுந்த வீட்டில் பொறுப்புடன் உள்ள பெண்ணே எல்லோராலும் விரும்பப்படுகிறாள்.

    என்னதான் நீங்கள் பெருமை வாய்ந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் எப்போது பார்த்தாலும் பிறந்த வீட்டுப் பெருமை பேசக் கூடாது. எங்க வீட்டிலேயே இப்படி என ஆரம்பித்து பெருமை பேசாதீர்கள்.

    ஒவ்வொரு வீட்டுப் பழக்கவழக்கங்களும் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொரு விஷயத்திற்கும் பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.

    எதையும் நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

    சினிமாக்களிலும் கதைகளிலும் வருவது போல மாமியார் என்றாலே கொடுமைக்காரி என்றெல்லாம் உங்கள் மாமியாரைப் பற்றி நீங்களாக ஒரு இமேஜ் செய்து கொண்டு புகுந்த வீட்டினுள் நுழையாதீர்கள்.

    மருமகளை மகளாகப் பாவிக்கும் மாமியார்கள் ஏன் இருக்கக் கூடாது?

    நாத்தனார், கொழுந்தனார் போன்றவர்களிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்.

    வந்த உடனே உரிமை எடுத்துக் கொண்டு அட்வைஸில் இறங்கி

    Enjoying the preview?
    Page 1 of 1