Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Five Star Samayal Part 1
Five Star Samayal Part 1
Five Star Samayal Part 1
Ebook91 pages27 minutes

Five Star Samayal Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நமது இல்லங்களில் தயாரிக்கப்படும் உணவு மிகவும் ருசியானது, ஆரோக்கியமானது. அதைக்காட்டிலும், அதனை தயாரிக்கும் நமது தாயோ, தாரமோ, சகோதரியோ நமக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எது உடலுக்கு ஏற்றுக் கொள்ளும், ஏற்றுக் கொள்ளாது என்றெல்லாம் பார்த்துப் பார்த்து ஆசையாக செய்வார்கள். என்றாலும், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் நம்மில் பலர் ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களே அதிக சுவையானவை என்று நம்புவோம். அடிக்கடி வெளியே சென்று ஹோட்டல்களில் சாப்பிடும் வழக்கமும் நம்மில் அனைவருக்குமே உண்டு.

சமையல் கலையில் மிகுந்த ஈடுபாடு உடையவள் என்ற முறையில், வீட்டுச் சமையலுக்கும், ஹோட்டல் சமையலுக்கும் அதிலும் குறிப்பாக 5 ஸ்டார் ஹோட்டல் சமையலுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். மேலும், 5 ஸ்டார் ஹோட்டல்களில் செய்யப்படும் பல்வேறு உணவு வகைகளையும் சாப்பிட மட்டுமல்ல, சமைத்துப் பார்க்கவும் நம் பெண்கள் அனைவருமே ஆசைப்படுவதுண்டு. 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவது என்பது பலர் வாழ்க்கையில் கனவாகவே இருந்து விடுவது என்றாலும் அவற்றை வீட்டிலேயே சமைக்கவாவது சொல்லித் தரலாமே என்று எனக்குத் தோன்றியது. அதன் விளைவுதான், இந்தப் புத்தகம்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580149807672
Five Star Samayal Part 1

Read more from A. Vijayalakshmi Ramesh

Related to Five Star Samayal Part 1

Related ebooks

Reviews for Five Star Samayal Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Five Star Samayal Part 1 - A. Vijayalakshmi Ramesh

    https://www.pustaka.co.in

    5 ஸ்டார் சமையல் பாகம் 1

    Five Star Samayal Part 1

    Author:

    விஜயலெட்சுமி ரமேஷ்

    A. Vijayalakshmi Ramesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-vijayalakshmi-ramesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியரிடமிருந்து...

    நமது இல்லங்களில் தயாரிக்கப்படும் உணவு மிகவும் ருசியானது, ஆரோக்கியமானது. அதைக்காட்டிலும், அதனை தயாரிக்கும் நமது தாயோ, தாரமோ, சகோதரியோ நமக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எது உடலுக்கு ஏற்றுக் கொள்ளும், ஏற்றுக் கொள்ளாது என்றெல்லாம் பார்த்துப் பார்த்து ஆசையாக செய்வார்கள். என்றாலும், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் நம்மில் பலர் ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களே அதிக சுவையானவை என்று நம்புவோம். அடிக்கடி வெளியே சென்று ஹோட்டல்களில் சாப்பிடும் வழக்கமும் நம்மில் அனைவருக்குமே உண்டு.

    சமையல் கலையில் மிகுந்த ஈடுபாடு உடையவள் என்ற முறையில், வீட்டுச் சமையலுக்கும், ஹோட்டல் சமையலுக்கும் அதிலும் குறிப்பாக 5 ஸ்டார் ஹோட்டல் சமையலுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். மேலும், 5 ஸ்டார் ஹோட்டல்களில் செய்யப்படும் பல்வேறு உணவு வகைகளையும் சாப்பிட மட்டுமல்ல, சமைத்துப் பார்க்கவும் நம் பெண்கள் அனைவருமே ஆசைப்படுவதுண்டு. 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவது என்பது பலர் வாழ்க்கையில் கனவாகவே இருந்து விடுவது என்றாலும் அவற்றை வீட்டிலேயே சமைக்கவாவது சொல்லித் தரலாமே என்று எனக்குத் தோன்றியது. அதன் விளைவுதான், எங்களது தயாரிப்பில், எனது இயக்கத்தில் ‘சன் டி.வி.’யில் ஞாயிறுதோறும் பிற்பகல் 3.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சன்டே சமையல்’ நிகழ்ச்சியில் உருவான ‘5 ஸ்டார் சமையல்’ பகுதி.

    இந்த 5 ஸ்டார் சமையலை உங்களுக்கு செய்து காட்டும் செல்வி தனலட்சுமி எண்ணற்ற 5 ஸ்டார் ஹோட்டல்களைக் கொண்ட சென்னை நகரத்தில் பிறந்து வளர்ந்தவர் அல்ல, திருவாரூரைச் சேர்ந்தவர் என்பது ஆச்சரியமான ஒரு தகவல். சமையல் கலையின் மீதுள்ள ஆர்வத்தால், தனது கேட்டரிங் படிப்பை முடித்து சென்னையிலுள்ள பார்க் ஷெரட்டன் 5 ஸ்டார் ஹோட்டலில் சிறிது காலம் பணிபுரிந்து, தற்சமயம் தாஜ் கோரமண்டல் 5 ஸ்டார் ஹோட்டலில் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். சமையல் செய்வது என்பது சிலருக்கு அன்றாட கடமை, சிலருக்கு பொழுதுபோக்கு, சிலருக்கு தொழில். ஆனால், தனலட்சுமிக்கு அதுவே உயிர் மூச்சு. இந்நூலில் இடம்பெற்றுள்ள ‘சீதா பழ பாயசம்’, ‘மஷ்ரூம் ஆனியன் கபாப்’ ஆகிய உணவு வகைகளை தானே புதிதாக உருவாக்கியதன் மூலம் அவற்றிற்கென பல விருதுகளை பெற்றிருக்கிறார் தனலட்சுமி.

    நிகழ்ச்சியில் தனலட்சுமி செய்து காண்பித்த சில 5 ஸ்டார் உணவு வகைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். அப்புறமென்ன, இனி 5 ஸ்டார் உணவுகளை உங்கள் வீட்டிலேயே தயாரித்து மகிழுங்கள்.

    - விஜயலட்சுமி ரமேஷ்

    உள்ளே…

    1. தாமரைத் தண்டு வறுவல்

    2. பட்டர் கார்ன் ஃப்ரை

    3. பைனாப்பிள் சூப்

    4. மீன் ரோஸ்ட்

    5. டேட்ஸ் அல்வா

    6. வீச்சுப் பரோட்டா

    7. கொய்யா பழ சட்னி

    8. நுங்கு மோர்க் குழம்பு

    9. ஃபிஷ் கார்லிக் ரோல்ஸ்

    10. கீமா ரைஸ்

    11. சிக்கன் சுக்கா

    12. நண்டு புட்டு

    13. காரா பூந்தி கறி

    14. கருணைக் கிழங்கு லட்டு

    15. ஸ்பைஸி கார்லிக் ப்ரான்ஸ்

    16. மாம்பழ பாயசம்

    17. கடச்சக்கா கறி

    18. கறேபாக்கு மாமிசம்

    19. மஷ்ரூம் ஆனியன் கபாப்

    20. ஃபிஷ் பிக்கிள்

    21. பரங்கிக்காய் சூப்

    Enjoying the preview?
    Page 1 of 1