Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Illatharasigalukku Thevaiyana Veettu Kurippugal Part 1
Illatharasigalukku Thevaiyana Veettu Kurippugal Part 1
Illatharasigalukku Thevaiyana Veettu Kurippugal Part 1
Ebook45 pages20 minutes

Illatharasigalukku Thevaiyana Veettu Kurippugal Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீட்டுக் குறிப்புகள் என்பது பாட்டி வைத்தியம் மாதிரி பல தலைமுறைகள் கடந்து வருகிற ஒரு விஷயம். அக்கம் பக்கத்து வீட்டினரிடம், ஆபீஸ் தோழிகளிடம் என வீட்டுக் குறிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது என்பதே சந்தோஷமான அனுபவம்தான். நீண்ட காலமாக நம்மை டென்ஷன்படுத்திக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளுக்குக்கூட வீட்டுக் குறிப்புகள் போகிற போக்கில் தீர்வு சொல்லிவிடும். இந்நூலில் உள்ள குறிப்புகள் சமையலறை சார்ந்த குறிப்புகளாக மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இல்லத்தையும் பராமரிக்கக் கூடிய வீட்டுக் குறிப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580149807666
Illatharasigalukku Thevaiyana Veettu Kurippugal Part 1

Read more from A. Vijayalakshmi Ramesh

Related to Illatharasigalukku Thevaiyana Veettu Kurippugal Part 1

Related ebooks

Reviews for Illatharasigalukku Thevaiyana Veettu Kurippugal Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Illatharasigalukku Thevaiyana Veettu Kurippugal Part 1 - A. Vijayalakshmi Ramesh

    https://www.pustaka.co.in

    இல்லத்தரசிகளுக்குத் தேவையான வீட்டுக் குறிப்புகள் பாகம் 1

    Illatharasigalukku Thevaiyana Veettu Kurippugal Part 1

    Author:

    விஜயலெட்சுமி ரமேஷ்

    A. Vijayalakshmi Ramesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-vijayalakshmi-ramesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியரிடமிருந்து...

    வீட்டுக் குறிப்புகள் என்பது பாட்டி வைத்தியம் மாதிரி பல தலைமுறைகள் கடந்து வருகிற ஒரு விஷயம். அக்கம் பக்கத்து வீட்டினரிடம், ஆபீஸ் தோழிகளிடம் என வீட்டுக் குறிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது என்பதே சந்தோஷமான அனுபவம்தான். நீண்ட காலமாக நம்மை டென்ஷன்படுத்திக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளுக்குக்கூட வீட்டுக் குறிப்புகள் போகிற போக்கில் தீர்வு சொல்லிவிடும்.

    இந்நூலில் உள்ள குறிப்புகள் சமையலறை சார்ந்த குறிப்புகளாக மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இல்லத்தையும் பராமரிக்கக் கூடிய வீட்டுக் குறிப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கேலக்ஸி தயாரிப்பில் நான் இயக்கி, 7 வருடங்களாக சன் டி.வி.யில் ஒளிபரப்பான 'ஸ்டார் சமையல்' நிகழ்ச்சியில் வந்த குறிப்புகளாகும். நிகழ்ச்சியின் அபிமான நேயர்கள் தங்களுக்குத் தெரிந்த குறிப்புகளை கேலக்ஸிக்கு எழுதி அனுப்ப, அவற்றை நடிகை வனிதாவும், நடிகை வினோதினியும் திரையில் தோன்றி சுவைபட வழங்கினார்கள். அவற்றை உங்களுக்குப் பயனளிக்கும் வகையில் இங்கு தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

    விஜயலட்சுமி ரமேஷ்

    வீட்டுக் குறிப்புகள்

    * எலுமிச்சை பழத்தை லேசாக அனலில் காட்டி விட்டு பிழிந்தால், பிழிவதற்கு சுலபமாகவும் இருக்கும். நிறைய சாறும் கிடைக்கும்.

    * கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகளை நீண்ட நாள் பாதுகாக்க அத்துடன் கொஞ்சம் விளக்கெண்ணெய் கலந்து வைத்தால் நிறைய நாள் கெடாமல் இருக்கும். மேலும் வண்டுகள், பூச்சிகள் தாக்காதிருக்கும்.

    *. அரிசியில் வண்டுகள், புழுக்கள் வருவதை தடுக்க அரிசி டப்பாவில் நிறைய வேப்பிலையை போட்டு அதன் மேல் அரிசியை கொட்டி வைக்கவும்.

    * கோஸ் வேக வைக்கும் போது வரும் வாசனையை தவிர்க்க சிறு துண்டு இஞ்சியை தட்டி கோஸுடன் சேர்த்து சமைக்கவும். உடலுக்கும் நல்லது வாசனையும் இருக்காது.

    * பாகற்காய் சமைக்கும் போது அதை அரிசி கழுவிய தண்ணீரிலோ, தயிரிலோ சிறிது நேரம் ஊற வைத்து சமைத்தால் கசப்பே தெரியாது.

    * ஒரு ஸ்பூன் சர்க்கரையை வெறும் வாணலியில் போட்டு கறுகறுவென்று வறுத்து காபி பொடியுடன் கலந்து பில்டரில் போட்டால் டிகாக்ஷன் அடர்த்தியாகவும் நிறமாகவும் கிடைக்கும்.

    Enjoying the preview?
    Page 1 of 1