Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Star Samayal Saivam
Star Samayal Saivam
Star Samayal Saivam
Ebook204 pages50 minutes

Star Samayal Saivam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொதுவாகவே திரைப்பட நட்சத்திரங்களுக்கு சமைக்கத் தெரியாது என்கிற கருத்து நிலவுகிறது. அது பொய்யானது என்பதை நேரடியாக உணரும் வாய்ப்பு, நான் இயக்கிய ஸ்டார் சமையல் நிகழ்ச்சி மூலம் எனக்குக் கிடைத்தது. அதே போல் சைவ சமையலில் விதவிதமான நிறைய வகைகள் கிடையாது என்கிற கருத்தும் நம் மத்தியில் பலருக்கு உண்டு. அதையும் பொய்யாக்கி இருக்கிறது இந்த நிகழ்ச்சி.

இத்தகைய புகழ் பெற்ற ‘ஸ்டார் சமையல் நிகழ்ச்சி’ இப்போது வண்ணமயமான நூல் வடிவில் உங்கள் கையில். திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த ஒரு சைவ சமையலை எடுத்துக் கொண்டு அதை செய்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்கியிருக்கிறார்கள்.

படிக்கவே சுவையாக இருக்கும். இதிலுள்ள சமையல் வகைகளை சமைத்துப் பார்த்தால் அதைவிட இன்னும் அதிக சுவையாக இருக்கும்.

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580149807675
Star Samayal Saivam

Read more from A. Vijayalakshmi Ramesh

Related to Star Samayal Saivam

Related ebooks

Reviews for Star Samayal Saivam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Star Samayal Saivam - A. Vijayalakshmi Ramesh

    https://www.pustaka.co.in

    ஸ்டார் சமையல் சைவம்

    Star Samayal Saivam

    Author:

    விஜயலெட்சுமி ரமேஷ்

    A. Vijayalakshmi Ramesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-vijayalakshmi-ramesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    மக்களின் தேவை, ரசனை இரண்டையும் அறிந்து தயாரிக்கப்படுகிற சமையல் நிகழ்ச்சி ஒன்றுக்கு மக்களிடையே எத்தகைய மகத்தான வரவேற்பு இருக்கும் என்பதை எங்களது தயாரிப்பில் சன் டி.வி.யில் கடந்த 9 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி மூலம், அதன் இயக்குனர் என்கிற முறையில் அனுபவப்பூர்வமாக என்னால் உணர முடிகிறது. இதில் தொடக்க காலத்தில், 7 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த ‘சக்தி மசாலா ஸ்டார் சமையல்’ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகத்தினர் மத்தியிலும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வந்த நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திரையுலகப் பிரமுகர்கள் ஒவ்வொருவருமே பல படங்களில் தங்களுக்கு கிடைத்த பெயர் புகழை விட இந்த நிகழ்ச்சியில் தாங்கள் சமைத்தது மூலமாக கிடைத்த பாப்புலாரிட்டி ரொம்ப அதிகம் என்று மனம் விட்டு சொல்லியிருக்கிறார்கள்.

    பொதுவாகவே திரைப்பட நட்சத்திரங்களுக்கு சமைக்கத் தெரியாது என்கிற கருத்து நிலவுகிறது. அது பொய்யானது என்பதை நேரடியாக உணரும் வாய்ப்பு, நான் இயக்கிய ஸ்டார் சமையல் நிகழ்ச்சி மூலம் எனக்குக் கிடைத்தது. அதே போல் சைவ சமையலில் விதவிதமான நிறைய வகைகள் கிடையாது என்கிற கருத்தும் நம் மத்தியில் பலருக்கு உண்டு. அதையும் பொய்யாக்கி இருக்கிறது இந்த நிகழ்ச்சி.

    இத்தகைய புகழ் பெற்ற ‘ஸ்டார் சமையல் நிகழ்ச்சி’ இப்போது வண்ணமயமான நூல் வடிவில் உங்கள் கையில். திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த ஒரு சைவ சமையலை எடுத்துக் கொண்டு அதை செய்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்கியிருக்கிறார்கள். இந்நூல் படிக்கவே சுவையாக இருக்கும். இதிலுள்ள சமையல் வகைகளை சமைத்துப் பார்த்தால் அதைவிட இன்னும் அதிக சுவையாக இருக்கும்.

    - விஜயலட்சுமி ரமேஷ்

    உள்ளே.....

    எஸ்.வி. சேகர் சைனா கிராஸ் புட்டிங்

    பாடகர் டி.எல். மகாராஜன் மெக்ஸிகன் ரைஸ்

    மோகினி பாகற்காய் பிட்லே அரிசி பாயசம்

    இசையமைப்பாளர் பாலபாரதி பாலடைப் பிரதமன்

    ராதாரவி வெஜிடபிள் ரைஸ்

    அனுராதா ரமணன் கார சோழி இனிப்பு சோழி

    அமரர் மேஜர் சுந்தர்ராஜன் ஃப்ரைடு இட்லி

    விசாலி கண்ணதாசன் புட்டு உருண்டை

    வனிதா கிருஷ்ணசந்தர் வெஜிடபிள் கட்லட்

    டாக்டர் கமலி ஸ்ரீபால் கோதுமை கோளா

    கார ஃப்ரூட் சாலட் பட்டர் பனீர்

    வீணை காயத்ரி சேனைக் கிழங்கு அடை

    கவிதாஸ்ரீ கத்திரிக்காய் சிப்ஸ்

    சீர்காழி சிவசிதம்பரம் பனானா ப்ரிட்டர்ஸ் மீகோரேங்

    ஜெனிபர் சந்திரன் நிலாச் சோறு

    பாடகி சிந்து சக்க வறட்டி

    ஒய்.ஜி. மகேந்திரன் வெங்காய குழம்பு மோர்க்களி

    புஷ்பவனம் குப்புசாமி தம் ஆலு புல்கா ரொட்டி

    விஜய் கிருஷ்ணராஜ் குழிப்பணியாரம்

    குற்றாலீசுவரன் பொட்டேட்டோ க்ராக்கே

    அஞ்சு அரவிந்த் மாம்பழ பச்சடி

    பாத்திமா பாபு வேர்க்கடலை கத்திரிக்காய் மசாலா

    சுதா ரகுநாதன் முந்திரி பச்சடி முந்திரி பக்கோடா

    எஸ்.என். லட்சுமி கேழ்வரகு பக்கோடா ரவை பணியாரம்

    சச்சு பிடி கொழுக்கட்டை கொத்தமல்லி சட்னி

    சித்ரா கத்திரிக்காய் சாதம்

    மதன்பாப் பனீர் டிக்கா மசாலா

    சிவசங்கரி பிஸி பேளா ஹுளி அன்னா வெஜிடபிள் சாண்ட்விச்

    தாரிணி ஸ்டஃப்டு கேப்ஸிகம்

    குமரிமுத்து ஜவ்வரிசி கிச்சடி

    காத்தாடி ராமமூர்த்தி ரவா நெய் கொழுக்கட்டை

    விஜயசந்திரிகா வாழைப்பூ, வடை

    லிவிங்ஸ்டன் மஷ்ரூம் கறி

    ஸ்ரீகாந்த் புளியோதரை

    கே.ஆர். வத்சலா வெஜிடபிள் பக்கோடா

    வையாபுரி கோல்டன் பேபி கார்ன்

    சி.ஆர். சரஸ்வதி பால் பணியாரம் வெள்ளை பணியாரம்

    நீனா வாழைப்பழ பாயசம்

    குன்னக்குடி வைத்தியநாதன் மாம்பழ சாதம்

    கே.பி. மோகன் நவரத்தின அடை பத்ரு அடை

    நித்யஸ்ரீ கத்திரிக்காய் மசாலா குழம்பு

    ரஞ்சிதா பாலக் கச்சோரி

    சுந்தரிபாய் பருப்பு உருண்டை குழம்பு

    ராஜ்குமார் பாரதி ஆலு கோபி மசாலா

    பாப் ஷாலினி வெஜிடபிள் பீட்ஸா த்ரீ லேயர் சாண்ட்விச்

    அனுபமா எக்லெஸ் சாக்லேட் கேக் பாஸ்தா

    சுப்பு ஆறுமுகம் ஓமப்பொடி

    கே.வி. ஆனந்த் ரவா பூரி க்ரீம் ஆஃப் பொட்டேட்டோ

    எஸ்.பி. சைலஜா குத்தி வங்காய் கூரா

    டி.கே. கலா கருணைக் கிழங்கு வடை

    ரகுராம் பருப்பு உசிலி

    ஸ்ரீகலாபரத் சவர் சேனை ரூட் டிலைட்

    கமலா காமேஷ் ஒக்காரை பொரித்த பேரீச்சம் பழம் நேந்திரம் பழ வறுவல்

    ஜெமினி கணேசன் ஹெர்பல் சட்னி

    ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் கேழ்வரகு வெஜிடபிள் அடை ஸ்டஃப்டு பாகற்காய் ஃபிரை

    தனஞ்செயன் வெந்தயக் குழம்பு

    மனோஜ்குமார் பால் கொழுக்கட்டை

    பாபு கணேஷ் கேழ்வரகு கஞ்சி

    ஓவியர் அரஸ் பால் கறி

    அனுமோகன் பட்டர் மஷ்ரூம் மசாலா சோயா தோசை

    வி.எஸ். ராகவன் குடை மிளகாய் மோர்க்குழம்பு

    பட்டுக்கோட்டை பிரபாகர் கசகசா பாயசம் தேங்காய் தோசை உப்புமா

    எஸ்.வி. சேகர்

    இந்த சைனா கிராஸ் புட்டிங் செய்ய என் மனைவி உமா அவுங்க தோழிகிட்ட கத்துக்கிட்டாங்க. பால் வெண்ணெய், நெய், முந்திரி பருப்பு இப்படி எல்லாமே கலோரிஸ் ஜாஸ்தியா உள்ள பொருட்களை போட்டு பண்ற புட்டிங் இது. ஆனா ரொம்ப டேஸ்டா இருக்கும்கறதால எங்க வீட்டுல அடிக்கடி இதை செய்வாங்க. நான், என் பொண்ணு அனுராதா, என் பையன் அஸ்வின் எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவோம்.

    சைனா கிராஸ் புட்டிங்

    தேவையான பொருட்கள்:

    சைனா கிராஸ் - 10 கிராம்

    பால் – 1/2 லிட்டர்

    கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

    மில்க் மெய்ட் - 3/4 கப்

    மேரி பிஸ்கட் - IO

    முந்திரி பருப்பு - 50 கிராம்

    பொடித்த சர்க்கரை - 100 கிராம்

    வெணிலா எஸன்ஸ் - 2 துளிகள்

    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 ஸ்பூன்

    செய்முறை:

    1. சைனா கிராஸை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

    2. பிஸ்கட்டை கையால் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    3. ஒரு வாணலியில் பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பை பொன்னிறமாக நெய்யில் வறுத்தெடுத்து கொள்ளவும்.

    4. வாணலியில் வெண்ணெயை சூடாக்கி பிஸ்கட், வறுத்த முந்திரி, பொடித்த சர்க்கரையில் பாதி போட்டு லேசாக வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.

    5. பாலை காய்ச்சி ஆற வைத்து, அத்துடன் மில்க் மெய்ட், கஸ்டர்டு பவுடர் இரண்டையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

    6. அடுப்பை பற்ற வைத்து தயாராக உள்ள கஸ்டர்டு கலவையுடன் மீதியுள்ள சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

    7. அடுப்பில் தீயை குறைத்து வைத்து கஸ்டர்டை கொதிக்க விடவும்.

    8. மற்றொரு வாணலியில் ஊற வைத்திருக்கும் சைனா கிராஸ் போட்டு அதில் அரை கப் தண்ணீர் விடவும். அடுப்பில் தீயை குறைத்து வைத்து சைனா கிராஸை நன்கு கரைய விடவும்.

    9. சைனா கிராஸ் சூடாக இருக்கும் போதே, தயாராக உள்ள

    Enjoying the preview?
    Page 1 of 1