Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhu Oru Mooligai Kaalam
Idhu Oru Mooligai Kaalam
Idhu Oru Mooligai Kaalam
Ebook123 pages28 minutes

Idhu Oru Mooligai Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது ஒரு மூலிகைக் காலம்

வேளாண் துறையைச் சேர்ந்தவர்கள் வேளாண் துறையைச் சேராதவர்கள் இப்படிப் பலபேர் இன்று மூலிகைகளைப் பற்றிப் பேசி - எழுதி வருகின்றனர். உபயோகிப்பாளர்கள் உபயோகிக்கத் துவங்கி விட்டனர். உற்பத்தியாளர்கள் தெரிந்த அளவில் உற்பத்தி செய்யத் துவங்கி விட்டனர்.

ஆனால் -

சாகுபடியாளர்களுக்கு ஏராளமான சந்தேகங்கள். எந்தெந்த மூலிகைகளைச் சாகுபடி செய்யலாம் - எப்படிச் செய்தால் லாபம் கிடைக்கும் - இதில் சந்தை வியாபார நிலை என்ன? சங்கடங்கள் இல்லாது சந்தைகளில் விலை போகுமா? எதை எதை ஏற்றுமதி செய்யலாம்? எப்படி எப்படி ஏற்றுமதி செய்யலாம்? இப்படி எண்ணற்ற சந்தேகங்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு தீர்வு காண, எழுதும் இந்த முயற்சியில் நான் இறங்கினேன் - அதன் விளைவுதான் இந்த நூல் - 'இது ஒரு மூலிகைக் காலம்.’

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580131705152
Idhu Oru Mooligai Kaalam

Read more from Dr. Ar. Solayappan

Related to Idhu Oru Mooligai Kaalam

Related ebooks

Related categories

Reviews for Idhu Oru Mooligai Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhu Oru Mooligai Kaalam - Dr. AR. Solayappan

    http://www.pustaka.co.in

    இது ஒரு மூலிகைக் காலம்

    (முக்கிய மூலிகை வகைகளும் சாகுபடி விவரங்களும்)

    Idhu Oru Mooligai Kaalam

    Author:

    முனைவர் அரு. சோலையப்பன்

    Doctor Aru. Solaiappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/drarusolaiappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காணிக்கை

    என்னுரை

    பதிப்புரை

    1. இது ஒரு மூலிகைக்காலம்

    2. நோய் மறுப்பு

    3. உலக அரங்கில் மூலிகைகள்

    4. இந்தியாவில் பயிரிடப்படும் ஒரு சில முக்கியமான மூலிகைப் பயிர்கள்

    5. குறிப்பிட்ட அல்கலாய்டுகளின் சர்வதேச விலை

    6. தமிழ் நாட்டில் மூலிகை பயிர்கள் சாகுபடி

    7. சீனித் துளசியும் அதன் சிறப்புகளும் (ஸ்டிவியாரி புதினா)

    8. இவை எல்லாம் மூலிகைகள்

    9. மூலிகைகளின் அறுவடைக்காலம்

    10. வெள்ளைப் பூண்டுத் தூள் தயாரிப்பு

    11. மூலிகைகளின் சாகுபடி முழு விவரங்கள்

    12. மூலிகை தொழில் முனைவோர் சிறப்புப் பயிற்சி

    13. தமிழ்நாட்டில் மூலிகைப் பயிர் சாகுபடிக்கேற்ற மண்டலங்கள்

    14. மாதுளை

    15. ஸபத் முசிலி

    16. வசம்பு

    17. கத்தாழை

    18. செம்பருத்தி

    19. மணத்தக்காளி

    20. புதினா

    21. மிளகு

    22. கொத்துமல்லி

    23. சிறுகீரை

    24. முடக்கத்தான் கீரை

    25. கற்பூரவல்லி

    26. கீழாநெல்லி

    27. முள்ளங்கி

    காணிக்கை

    என் எழுத்துக்களைப் பார்த்து படித்து - ரசித்து - ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் உளுந்தூர்பேட்டை இராமகிருஷ்ண ஆஷ்ரம தலைமை சுவாமிஜி ஸ்ரீமத் அனந்தானந்தஜி குருமஹராஜ் அவர்களின் பாதார விந்தங்களுக்கு.

    அரு. சோலையப்பன்

    *****

    என்னுரை

    இது ஒரு மூலிகைக் காலம்

    ஆம் -

    வேளாண் துறையைச் சேர்ந்தவர்கள் வேளாண் துறையைச் சேராதவர்கள் இப்படிப் பலபேர் இன்று மூலிகைகளைப் பற்றிப் பேசி - எழுதி வருகின்றனர். உபயோகிப்பாளர்கள் உபயோகிக்கத் துவங்கி விட்டனர். உற்பத்தியாளர்கள் தெரிந்த அளவில் உற்பத்தி செய்யத் துவங்கி விட்டனர்.

    ஆனால் -

    சாகுபடியாளர்களுக்கு ஏராளமான சந்தேகங்கள். எந்தெந்த மூலிகைகளைச் சாகுபடி செய்யலாம் - எப்படிச் செய்தால் லாபம் கிடைக்கும் - இதில் சந்தை வியாபார நிலை என்ன? சங்கடங்கள் இல்லாது சந்தைகளில் விலை போகுமா? எதை எதை ஏற்றுமதி செய்யலாம்? எப்படி எப்படி ஏற்றுமதி செய்யலாம்? இப்படி எண்ணற்ற சந்தேகங்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு தீர்வு காண, எழுதும் இந்த முயற்சியில் நான் இறங்கினேன் - அதன் விளைவுதான் இந்த நூல் - 'இது ஒரு மூலிகைக் காலம்.’

    இந்த நூலை உருவாக்கப் பெரிதும் உதவிய 'எக்ஸிம் வங்கியின்’ வெளியீடுகளுக்கும், பொலம்பாக்கம் முத்து மல்லா அறக்கட்டளையின் திருவண்ணாமலை மூலிகை சாகுபடி கருத்தரங்க நிகழ்வுகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மைய - மாநில அரசு நிறுவனங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் 2004-ல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பூண்டி புட்பம் கல்லூரியில் நிகழ்த்திய உரையின் தொடர்ச்சியாகத்தான் இந்நூல் உருவானது. ஆகவே அதற்காக பூண்டி புட்பம் கல்லூரியின் தாளாளர் திருமிகு. துளசியய்யா வாண்டையார் அவர்களுக்கும், தாவரவியல் துரைப் பேராசிரியர் முனைவர் பாலு அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவைகளுக்கும் மேலே என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் பூண்டி புட்பம் கல்லூரியின் முன்னாள் தாவரவியல் தலைவர் சி. லட்சுமி நரசிம்மன் அவர்களுக்கும் நான் சார்ந்துள்ள Foundation For Organic Agriculture -ன் வேளாண் அங்கத்தினர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக என் உதவியாளர்கள்:

    பெ. பழநி

    இரா. வாசுதேவன்

    பி. அழகிரி

    ஆகியோருக்கும் நிச்சயம் என் நன்றி சென்றாக வேண்டும்.

    என்னை மேலும்.. மேலும் எழுதத் தூண்டும் இவர்களெல்லாம் உள்ளவரை இன்னும்.. இன்னும்... எழுதுவேன்.

    அன்புடன்

    அரு. சோலையப்பன்

    *****

    பதிப்புரை

    இது அறிவுச்சோலை வரிசையின் 2வது நூல்.

    இந்திய மக்களை - குறிப்பாக தமிழகத்து வேளாண் பெருமக்களைத் தெளிவுப் படுத்த இது போன்ற எண்ணற்ற நூல்களைக் கொண்டுவரும் திட்டத்தில் உள்ளோம்.

    உங்கள் ஆதரவு என்றும் தேவை.

    முனைவர் அரு.சோலையப்பனைப் போன்ற மூத்த விஞ்ஞானிகள் உங்களுக்காகவும் எங்களுக்காகவும் எழுதச் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாம் அவர்களின் ஆழ்ந்த அறிவினைப் பயன்படுத்தி பயன் பெறுவோம்.

    இந்நூல் பற்றிய கருத்துக்களை தயவு செய்து எங்களுக்கு எழுத வேண்டுகிறோம்.

    அன்புடன்

    சோ.சொர்ணவல்லி

    பதிப்பாளர்

    *****

    விபரங்கள் சேகரிக்க உதவிய அத்துணை ஆய்வுத் தாள்களுக்கும் - பிரசுரங்களுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் நன்றி

    *****

    1. இது ஒரு மூலிகைக் காலம்

    காலங்களில் எத்தனையோ உண்டு. மாரிக்காலம். கோடைக்காலம் என்றும், வசந்த காலம், இளவேனிற் காலம், வேனிற் காலம், குளிர் காலம் என்றும் - இலையுதிர் காலம், பூ பூக்கும் காலம், என்றும் - இப்படி காலா காலமாக காலங்களை

    Enjoying the preview?
    Page 1 of 1