Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pasumai Vilaivugalin Pangaaligal
Pasumai Vilaivugalin Pangaaligal
Pasumai Vilaivugalin Pangaaligal
Ebook198 pages1 hour

Pasumai Vilaivugalin Pangaaligal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் பல்வேறு சமயங்களில் - பல்வேறு ஊர்களில் சந்தித்த பல வேறுபட்ட விவசாய நண்பர்களைப் பற்றி - அவர் தம் அனுபவங்கள் பற்றி 'தமிழக விவசாயி உலகம்' போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன். அந்த இயற்கை விவசாய அனுபவப் பகிர்வுகள், அனைத்து விவசாய நண்பர்களுக்கும் உதவ வேண்டுமெனக் கருதி அக்கட்டுரைகளை எல்லாம் தொகுத்து இந்த நூலை உருவாக்கி, அதற்கு 'பசுமை விளைவுகளின் பங்காளிகள்' என்ற தலைப்பிட்டு உங்கள் முன் நடமாட விட்டுள்ளேன்.

இனி, அதைத் தொட்டுப் பார்ப்பதும் - உச்சி முகர்வதும் - கொஞ்சிப் படிப்பதும் - நெஞ்சில் பதிப்பதும் - உங்கள் கையிலுள்ளது.

படியுங்கள் - பலனடையுங்கள்.

சந்தேகங்களை என்னுடன் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580131705156
Pasumai Vilaivugalin Pangaaligal

Read more from Dr. Ar. Solayappan

Related to Pasumai Vilaivugalin Pangaaligal

Related ebooks

Related categories

Reviews for Pasumai Vilaivugalin Pangaaligal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pasumai Vilaivugalin Pangaaligal - Dr. AR. Solayappan

    http://www.pustaka.co.in

    பசுமை விளைவுகளின் பங்காளிகள்

    (இயற்கை வழியில் விவசாயம் செய்த ஏற்றமிகு விவசாயிகளின் அனுபவப் பகிர்வு)

    Pasumai Vilaivugalin Pangaaligal

    Author:

    முனைவர் அரு. சோலையப்பன்

    Doctor Aru. Solaiappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/drarusolaiappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இந்த நூல்...

    காணிக்கை

    என்னுரை

    1. கூட்டுக் குடும்பத்தால் கோபுரமானவர்கள்

    2. திக்குத் தெரியாதவர்களுக்கு வழி காட்டும் சதாசிவம்

    3. இளைய பாரத்தில் - இவர் ஓர் அச்சு

    4. நம்பிக்கை - இவரது இன்னொரு கை

    5. சிங்கம்பட்டியில் சிறப்பு மிகு விவசாயம்

    6. உழைப்பின் வெற்றி

    7. வறட்சியை மாற்ற சருகு மூடாக்கு

    8. இயற்கை வழியில் இன்னொரு விவசாயி

    9. உழைப்பால் உயர்ந்தவர்

    10. கரும்பும் - காய்கறிகளும்

    11. இளைய பாரதத்தில் இன்னொரு கதாநாயகன்

    12. இயற்கையோடு இயைந்து

    13. மழை வேண்டி - திருவாசகம் சொல்லும் ஒரு விவசாயி

    14. சாகுபடிச் சங்கடங்கள் இல்லா சம்பாமோசனம்

    15. உழைப்பிற்கேற்ற ஊதியம்

    16. இயற்கைக்கு மாறும் இன்னொரு இளைய விவசாயி

    17. இயற்கைக்கு மாறிய இன்னொரு விவசாயி

    18. உலகத் தமிழ் செம்மொழி ஆண்டில் ஒரு வேண்டுகோள்

    19. பொன் விளையும் களத்தூர்

    20. 'இனி ஒரு தவம் செய்வோம்'

    21. இளைய பாரத்தினாய் வா... வா…

    22. 'விரல்களில்லை - ஆனால் வெறுங்கையுமில்லை'

    23. சுனாமியால் சூறையாடப்பட்டவர்கள்

    24. 'இயற்கை வழியில் இன்னொரு சாதனையாளர்'

    25. ஸ்ரீசாரதா ஆஸ்ரமம்

    26. கரும்பாக்கம் திரு. ராமலிங்கம்

    27. அரியனூர் திரு R.ஜெயச்சந்திரன்

    28. திருவாலங்காடு T. நாதமுனி

    29. பூவாலை திரு சௌந்தரராஜன்

    30. காவித்தண்டலம் திரு.கமலசேகரன்

    31. சிறுபேர் பாண்டி திரு. V. அனந்தகிருஷ்ணன்

    32. அத்தியூர் திரு P.B.முகுந்தன்.

    33. சாத்தணன்சேரி திரு. S.தனபால்

    34. விவசாயமும் வியாபாரமே

    35. தமிழ் மண்ணையாவது காப்போம்

    36. நிறைவாக

    இந்த நூல்...

    சென்னை முதல் குமரி வரை பல மாவட்டங்களில் பல ஊர்களில் இயற்கை வழியில் முயற்சி பல செய்து செய்யும் சாகுபடிகளில் செயற்கரிய சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் வேளாண் பெருமக்களின் நேரடி அனுபவப் பகிர்வு.

    *****

    காணிக்கை

    சிறு வயது முதல் இன்று வரை என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்துக் கொண்டிருக்கும் மாபெரும் சக்தி என் அன்புத் தந்தையார் அருணோதயம் அருணன் அவர்களுக்கு

    - சோலையப்பன்

    *****

    என்னுரை

    நான் பல்வேறு சமயங்களில் - பல்வேறு ஊர்களில் சந்தித்த பல வேறுபட்ட விவசாய நண்பர்களைப் பற்றி - அவர் தம் அனுபவங்கள் பற்றி 'தமிழக விவசாயி உலகம்' போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன். அந்த இயற்கை விவசாய அனுபவப் பகிர்வுகள், அனைத்து விவசாய நண்பர்களுக்கும் உதவ வேண்டுமெனக் கருதி அக்கட்டுரைகளை எல்லாம் தொகுத்து இந்த நூலை உருவாக்கி, அதற்கு 'பசுமை விளைவுகளின் பங்காளிகள்' என்ற தலைப்பிட்டு உங்கள் முன் நடமாட விட்டுள்ளேன்.

    இனி, அதைத் தொட்டுப் பார்ப்பதும் - உச்சி முகர்வதும் - கொஞ்சிப் படிப்பதும் - நெஞ்சில் பதிப்பதும் - உங்கள் கையிலுள்ளது.

    படியுங்கள் - பலனடையுங்கள்.

    சந்தேகங்களை என்னுடன் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளுங்கள்.

    அன்புடன்

    அரு. சோலையப்பன்

    செங்கல்பட்டு.

    94433 31393

    99443 15793

    email: arsolayappan@yahoo.com

    *****

    1. கூட்டுக் குடும்பத்தால் கோபுரமானவர்கள்

    காஞ்சிபுரம் வட்டத்தைச் சேர்ந்த களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜா பண்ணை கூட்டுக் குடும்ப மேன்மையையும், உழைப்பின் உயர்வையும் உலகிற்கு உணர்த்தும் ஒப்பற்ற இடம். இங்கு கிடைக்கும் அனுபவ அறிவு பல்கலைக்கழகப் படிப்பிற்கும் மேல். இந்தப் பண்ணையைப் பார்வையிடாத அலுவலர் பெருமக்களையும், அறிவியல் அறிஞர்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

    இந்தப் பண்ணை 76 ஏக்கர்களையும், நான்கு அண்ணன், தம்பி குடும்பங்களையும் தன்னகத்தே கொண்டது. இது பயிர் வளர்க்கும் பண்ணை மட்டுமல்ல - தமிழ் வளர்க்கும் பண்ணையும் கூட!

    இந்தப் பண்ணையின் நிறுவனர் திருமிகு. தியாகராஜ முதலியார் அவர்களின் முதலாண்டு நினைவு தினத்தன்று அவரது வாழ்க்கை வரலாறு - லயோலா கல்லூரியின் முன்னாள் தமிழ் பேராசிரியர் முனைவர் பாலறாவாயன் அவர்களால் (தியாகராஜ முதலியார் அவர்களின் உறவினர்) எழுதப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது.

    தியாகராஜப் பண்ணையில் நடக்கும் விழாக்களெல்லாம் விழாக்களல்ல - திருவிழாக்கள்!

    இங்கு நான்கு அண்ணன் - தம்பிக்களும் ஆளுக்கொரு பொறுப்பேற்று அற்புதமாய்ப் பண்ணையைத் திறம்பட நிர்வகித்து வருகின்றனர்.

    இவர்கள் திராட்சையிலிருந்து - கறிவேப்பிலை வரை கிட்டத்தட்ட எல்லாப் பயிர்களையும் சாகுபடி செய்து வந்துள்ளனர்.

    காலத்திற்கும் - பருவத்திற்கும் ஏற்ப இவர்களின் சாகுபடி முறைகள் மாறுகின்றன.

    இவர்கள் பசுமைக் குடிலையும் பயன்படுத்தியுள்ளனர் - சொட்டு நீர்ப் பாசனத்தையும் பயன்படுத்துகின்றனர்.

    இந்தப் பண்ணையின் ஆளுமையின் கீழ் 76 ஏக்கர்கள் உள்ளன. பாலாற்றங்கரையில் பண்ணை அமைந்திருந்தாலும் இவர்களின் பகுதி மேடு, என்பதால் நீருக்குக் கொஞ்சம் கஷ்டம்தான்.

    இவர்கள் 4.00 ஏக்கர்களில் பப்பாளி

    10.00 ஏக்கர்களில் கரும்பு

    3.00 ஏக்கர்களில் கறிவேப்பிலை

    2.00 ஏக்கர்களில் பீர்க்கு

    5.00 ஏக்கர்களில் சுரை

    சாகுபடி செய்துள்ளார்கள்.

    இவர்கள் மலர் சாகுபடியிலும் முன்னோடிகள்.

    ரோஜா, மல்லி, காக்கட்டான், முல்லை, மயில் கொண்டை போன்றவைகளையும், வாழையும் சாகுபடி செய்துள்ளனர்.

    மாவும் தென்னையும் இவர்கள் பண்ணையில் உண்டு.

    இந்தப் பண்ணையின் பொது ஜனத் தொடர்பாளர் போல் திகழ்பவர் திரு.தர்மராஜ் அவர்கள்.

    இந்தப் பண்ணையில் புடலைப் பந்தலுமுண்டு. இது 4.00 ஏக்கர்களில் உள்ளது.

    பப்பாளி கிழக்கு - மேற்காக நடப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு ஒரு முறை பழம் பறிக்கின்றார். மகசூல் பரவாயில்லை.

    உயிர் உரங்களைப் பயன்படுத்திய சில முன்னோடிப் பண்ணைகளில் தியாகராஜா பண்ணையும் ஒன்று.

    இங்கு மிகப் பரவலாக மண்புழு கழிவு உரம் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. சொந்தமாகவே பஞ்சகவ்யா தயாரிக்கப்ட்டு உபயோகப்படுத்தப்படுகிறது.

    இது தவிர கறுப்பு யூரியா, பாஸ்போ பாக்ட்டீரியா போன்ற உயிர் உரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    கரும்பு 7.50 ஏக்கர்களில் மறு தாம்பும், 2.50 ஏக்கர்களில் நடவும் வைத்துள்ளனர். இவை அனைத்துமே கோ 86032 ரகம்தான். ஜனவரியில் நடவு செய்துள்ளனர். சரியான நீர் வசதி இல்லாததால் 7.50 ஏக்கரில் சொட்டு நீர்ப் பாசன வசதி அமைந்துள்ளனர்.

    இவர்கள் சாகுபடி செய்யும் காய்கறிப் பயிர்களெல்லாம் சொட்டு நீர்ப் பாசன வசதி பெற்றுள்ளது.

    நெல் 7 ஏக்கர்களில் வெள்ளைப் பொன்னி, 3 ஏக்கர்களில் ஆடுதுறை 37 போன்ற ரகங்களைச் சாகுபடி செய்துள்ளனர். நெல் பயிர் முழுவதுமே மிக மிக நன்றாக உள்ளது.

    தொடர்ந்து கறிவேப்பிலை சாகுபடி செய்து வருகின்றனர். 4 மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்கின்றனர். மகசூலைப் பொறுத்தவரை பிப்ரவரி - மார்ச்சில் அறுவடை செய்யும் போது அதிகபட்ச மகசூல் கிடைக்கிறது. கறிவேப்பிலை சாகுபடி ஆந்திராவில் செய்வதைப் போலவே செய்கின்றனர்.

    இங்கு நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    சகோதரர்கள் நால்வரில், இருவர் எல்லாப் பண்ணை வேலைகளையும் முன் நின்று செய்கின்றனர். எல்லோருக்கும் எல்லா வேலையும் தெரியும். ஏர் கட்டி ஓட்டுவது முதல் - டிராக்டர் ஓட்டுவது வரை அனைத்துப் பணிகளும் அனைவருக்கும் அத்துபடி.

    ஒரு சகோதரர் கணக்கு - வழக்கு நிர்வாகங்களைக் கவனிக்கிறார் - ஒரு சகோதரர் வெளிவட்டாரப் பணிகளைப் பார்க்கிறார்.

    இந்த வீட்டு மருமகள்கள் அனைவரும் தங்கள் கணவர்களுக்கு எல்லா விதத்திலும் உதவியாய்த் திகழ்கின்றனர். இவர்களின் வருவிருந்து உபசரிப்பு ஏகப் பிரசித்தம்.

    இயற்கை விவசாயத்தை நேசிக்கும் இந்தக் குடும்பத்தின் சூத்திரதாரி பெருமகனார் தியாகராஜ முதலியாரும் அவர்தம் துணைவியாருமாவார்கள். ஆனால் அவர்கள் இருவரும் இன்றைக்கு இப்பூவுலகில் இல்லை. ஆனால் அவர்கள் விட்டுச் சென்றுள்ள விருந்தோம்பலும் - இயற்கையை நேசிப்பதும் இன்றைக்கும் அந்தப் பண்ணையில் விருட்சமாய் வியாபித்துள்ளது. அந்தப் பண்ணையில் மண்புழுக்களுக்கும் பஞ்சமில்லை. காரணம் அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் இயற்கை மற்றும் உயிர் உரங்கள்தான். அது மட்டுமல்லாமல் இந்தப் பண்ணையில் பூச்சி மருந்துகளை விட பூச்சி விரட்ட உயிரியல் இடு பொருள்களையே அதிகமாகப் பயன்படுத்திப் பலன் கண்டு வருகின்றனர்.

    தொழில் நுட்பம் தொலை தூரம் என்றாலும் திரு தர்மராஜ் மற்றும் அவர்தம் சகோதரர்கள் அதனை அந்த இடத்திற்கே சென்று - கண்டு- கொண்டு வந்து பயன்படுத்துவதில் தவறுவதே இல்லை.

    இந்தப் பண்ணை இன்றைக்கும் - என்றைக்கும் உயிர் உரங்களின் மேன்மையை உரக்கச் சொல்லும்.

    பண்ணையின் முகவரி:

    தியாகராஜர் பண்ணை

    களக்காட்டூர் வழி – அஞ்சல்

    காஞ்சிபுரம் வட்டம் - மாவட்டம்.

    631 502.

    தொலைபேசி: 044- 67272557

    *****

    2. திக்குத் தெரியாதவர்களுக்கு வழி காட்டும் சதாசிவம்

    செய்யூர் - இது காஞ்சிபுரம் மாவட்ட - கடற்கரையோரத்து கிராமம் மட்டுமல்ல; ஒரு வட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

    மீன் வாசனையோடு மண் மணமும் - மனித நேயமுள்ள மனிதர்களும் நிறைந்த பகுதி.

    இந்தப் பகுதியிலுள்ள அம்மனூர் கிராமத்திற்குள் வேளாண்மை செய்வதோடு விருப்பமுடன் சமூக சேவையும் செய்யும் இளைஞர் ஒருவரைக் காணச் சென்றேன்.

    மெல்லிய உருவம் - சிரித்த முகம்;

    'வாங்கய்யா' என்று வாய் நிறைய வரவேற்கும் இ. சதாசிவம் பி.எஸ்.சி. பி.எட். பட்டதாரி; பி.எஸ்.சி. தாவரவியல் பட்டதாரி.

    ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்த பின்பும், ஆசிரியராகாமல் மாடுகளோடும், மனிதர்களோடும், மண்ணோடும், பயிர்களோடும் - அதே நேரத்தில் பண்போடும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

    இவர் நான்கு பசுமாடுகளை வைத்து பால் கறந்து விற்பதோடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஒன்றையும் நிறுவி அதன் செயலாளராய் இருந்து நிர்வகித்து வருகிறார்.

    இவரது கூட்டுறவு சங்கத்தில் 25 பசு மாடுகள் பால் கறக்கின்றன.

    Enjoying the preview?
    Page 1 of 1