Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mugam
Mugam
Mugam
Ebook91 pages31 minutes

Mugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தற்கால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட முப்பது சிறுகதைகள் தொகுப்பு 'முகம்'.

படிக்கப் படிக்க தற்கால நிகழ்வுகளும், உங்களைச் சுற்றியுள்ளோர் அனுபவங்களும் நினைவுக்கு வரும்.

Languageதமிழ்
Release dateAug 12, 2023
ISBN6580154010048
Mugam

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Mugam

Related ebooks

Reviews for Mugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mugam - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முகம்

    (சிறுகதைகள்)

    Mugam

    (Sirukathaigal)

    Author:

    தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பிறர்க்காக வாழு

    2. குடி

    3. வயிறு இல்லா மனிதர்?

    4. மூன்றாம் பிறை

    5. மடை மாற்றம்

    6. தோடு

    7. ஒரு துளி கண்ணீர்

    8. ஆயிரம் ரூபாய்

    9. சேவை

    10. ஷாப்பிங்

    11. புறக்கணிப்பு

    12. வாசல் கதவும் நெற்றி வடுவும்

    13. அம்மாவின் குறுக்கீடு

    14. முரட்டுத் தாத்தா

    15. உயிர்

    16. பூசாரியும் தாம்பூலமும்

    17. மாதுளா

    18. பவுன் தங்கத் தாலி

    19. முகம்

    20. இன்பா

    21. காப்பி

    22. ராணி - வாணி

    23. மன அசை

    24. க்ஷண நேர முடிவு

    25. 3 பவுன்

    26. சாட்சி

    27. 200 ரூபாய் நோட்டும் தண்ணீர் பாட்டிலும்

    28. சித்தப்பா

    29. ஒற்றைக் குழந்தை

    30. தங்கை

    1. பிறர்க்காக வாழு

    அம்மா... ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய்ட்டு வந்துடுறேன் பைக்கை உயிர்ப்பித்து ‘ஸர்’ரென ஆக்ஸிலேட்டரைக் கூட்டி அவசரத்தில் ஹெல்மெட் எடுக்க மறந்து நம் கண்ணுக்கெதிரே மறைந்து போனான் அந்த 18 வயசு இளைஞன். ஸிக்னலில் அவன் நேராப் போகணும்; பின்னாடி வரும் லாரி வலது பக்கம் 90 டிகிரி திரும்பணும் நெருக்கடியான கோவை - திருச்சி சிங்காநல்லூர் டிராஃபிக்ல. லாரியின் இடது நுனி பைக்கை முத்தமிட தார்ச்சாலையை முத்தமிட்டு தரையில் கோணல்மாணலாக விழுந்து சிவப்புக் கோலமிட்டான் இளைஞன். அவன் நிழலும் சிவப்பானது. பார்த்தவர் கண்களும் கோவைப்பழமாகின.

    டேய்... காஜா... எங்கேருக்கே. ஓந்தம்பி தலையில அடி. பைக் ஆக்ஸிடெண்ட். லாரிக்காரன் இடிச்சுட்டான். சிங்காநல்லூர் ஸிக்னல்கிட்டே வா... காஜா மொய்தீனின் நண்பன் விபத்தைத் தற்செயலா பார்த்தவன் மொபைல் பண்ணினான்.

    பக்கத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அந்த நண்பன் காஜா தம்பியைச் சேர்க்க. பத்தே நிமிடத்தில் காஜா பெற்றோருடன் ஆஸ்பத்திரியில் காலடி வைத்தான். தலைக்கு அறுவைச்சிகிச்சை. உடனடியா ஒரு லட்சம் வேணும். காஜாப்பா காய்கறிக் கடைக்காரர். காஜா மொய்தீன் சமையல் ஒப்பந்தக்காரன். எவ்வளவு புரட்ட முடியும்? எல்லோர் இருப்பையும் சேர்த்தும் ரூபாய் பத்தாயிரத்தைத் தாண்டவில்லை. பக்கத்துக் கடைகள், உறவினர்கள் நண்பர்கள் பக்கத்து வீட்டினர் ஒவ்வொருவரிடமும் 500, 1000 என அஞ்சாறு மணி நேரம் அந்த வேகா வெயிலில் அலைஞ்சு திரிஞ்சு பணத்தைப் புரட்டி ஆஸ்பத்திரியில் கட்டினர். அரசு ஆஸ்பத்திரி போனால் பிழைக்க வைப்பது கஷ்டம் என்பது காஜாவின் தனிப்பட்ட எண்ணம்.

    அடுத்த வாரம்... தன் தம்பியைக் காப்பாற்றியாச்சுன்னு நிம்மதியாக வீட்டு முன் நின்று கல்யாண சமையல் விஷயமாக மொபைலில் பேசிக்கொண்டிருந்தபோது பூனை போல தயங்கி தயங்கி பக்கத்தில் வந்து கண்ணீர் மல்க ஒரு பெண்மணி கைகளைக் குவித்தார் காஜாமொய்தீன் முன்பாக. யாரென்று தெரியாமல் கண்ணையும் மூக்கையும் சுளித்தவாறே யாராயிருக்குமென யோசிக்க ஆரம்பித்தான்.

    தம்பீ... ஏம்பொண்ணுக்கு பத்து வயசு... இதயத்திலே ஓட்டைன்னு டாக்டரு சொல்லுராறு... மூனு லட்சத்துக்கு மேலே செலவாகுமாம்; இந்த ஏரியால எல்லோரும் ஒங்க பேரைத்தான் சொல்றாங்க. நீங்க ஒங்க தம்பிக்காக பணம் புரட்டி அவனைக் காப்பாத்தினீங்களாம். எங்களுக்கு ஒரு பொண்ணைத் தவிர வேறு யாருமில்லை. பக்கத்து கிராமம். பழம் காய்கறி வியாபாரம். உங்கப்பாக்கும் காய், வாழைத்தார்லாம் போடுவோம். எங்க சொந்தம்லாம் சுற்று வட்டார கிராமங்கள்ல வாய்க்கும் வயித்துக்கும் வாழுதுங்க. நீங்கதான் பெரிய மனசு பண்ணி உதவி பண்ணனும். உங்க கையைக் காலா நினைச்சு கும்பிடுறேன் தம்பீ... கண்களில் ஈரம் மின்ன வார்த்தைகளில் உருக்கமாக வேண்டினாள் அந்தப் பெண்மணி.

    காஜா மொய்தீன் நாலு நிமிடம் கண்களை தியானம் பண்ணுவது போன்று மூடி யோசித்துக் கொண்டிருந்தான். ஆபத்து நேரம் ஆபரேஷனுக்குப் பணம் புரட்டுறது எவ்வளவு கஷ்டமா இருந்தது என்பது

    Enjoying the preview?
    Page 1 of 1