Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Asanam
Asanam
Asanam
Ebook95 pages33 minutes

Asanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் நிறை குறைகள், பொதுவாக அனைத்து குடும்பங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை உயிரோட்டமாக இரண்டிரண்டு பக்கங்களில் வடிக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateJan 20, 2024
ISBN6580154010645
Asanam

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Asanam

Related ebooks

Reviews for Asanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Asanam - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அசனம்

    Asanam

    Author:

    தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    பொருளடக்கம்

    1. பெரியண்ணா

    2. சாக்லேட் உறை உறவுகள்

    3. உறவுகள்

    4. உறவுகள் மீளுமா

    5. கொஞ்ச நேரமில்லை

    6. அக்கா

    7. பட்டாசு

    8. எல்கேஜிபாடம்

    9. சிவன்

    10. புதுத் துணி

    11. சேர்ந்து வாழு

    12. கைக்குழந்தை

    13. காப்பித்தண்ணி

    14. புகலிடம்

    15. கஞ்சப்பிரபு

    16. ஒவ்வொரு ஆசையா...

    17. வெள்ளக்காதல்

    18. ஆசை வெள்ளம்

    19. எனக்கு மட்டும் ஏன் இப்படி?

    20. பால் 48 ரூபாய்

    21. தடிப்பசங்க

    22. சந்தோஷம்

    23. வாழ்வதா வீழ்வதா

    24. அன்னபூரணன்

    25.ரேஷன் கடையும் அவனும்

    26. பிஞ்ச தோசை

    27. அசனம்

    28. மோதிரம்

    29. இலவம் காத்த கிளி

    30. அம்மா ஒரு சங்கீதம்

    1. பெரியண்ணா

    கருணாகரனால் அலுவலகத்தில் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. முன்னாடி இருந்த ஃபைல் களை வெறுமனே வெறித்துக் கொண்டிருந்தான். மனதில் தம்பிகள், தங்கைகள் மற்றும் அவர்கள் இணையர்கள் பேசினதெல்லாம் மனதில் மீண்டும் மீண்டும் கடலலைகள் போல வந்து கொண்டேயிருந்தன. லா ஆஃப் அட்ரேக்ஷன் விதி போல மனசு அங்கேயே சுழன்று கொண்டிருந்தது. ஒருவிஷயத்தை நொடியில் அலட்சியப்படுத்தி மனதை சந்தோஷமாக்கும் வித்தை தனக்கில்லையே என சுய இரக்கம் வேறு.

    எதிர் இருக்கையிலிருந்த வீரமுத்துக்கு வினோதமாக இருந்தது. சரி... வெளியே தேனீர் அருந்தச் செல்லும்போது விசாரிப்போம் என தன் வேலைகளில் கவனம் செலுத்தினான்.

    டேய்... ஒரு வாரம் பயங்கர டென்ஷன்... ரெண்டு தம்பிகள் ரெண்டு தங்கைகள்... கேள்வி மேல் கேள்வியா கேட்டு தொல்லை பண்றாங்க... திடீர்னு ஒருவன் எப்படி தற்கொலை வரை போறான்னு இப்ப புரியுதடா. குரல் கம்ம கண்களில் நீர் எப்போது வேணும்னாலும் மேசையில் குதிக்க தயார் என துளி துளியாக சேகரம் பண்ணிக்கொண்டிருக்க... கருணாகரனை இந்நிலையில் வீரமுத்து கற்பனை கூட பண்ணியதில்லை.

    கேட்டுக்கொண்டிருந்த வீரமுத்து தன் நண்பன் இந்தளவு வேதனைப்படுவதை இத்தனை வருஷமா பார்த்ததேயில்லை. இரண்டு பசங்களுடனும் அன்பு மனைவியுடனும் தன் வீட்டிற்கு மாதந்தோறும் கலகலப்பாக வந்து போகும் கருணாகரனை மேலும் பேசவிட்டான் தோள்களில் கைகளைப் போட்டு.

    உனக்கே தெரியும் நான் இந்த வேலையில் சேரும்போது தம்பிகள் கல்லூரிகளில் தங்கைகள் ப்ளஸ் ஒன், டூல. அப்பா உள்ளூர்ல தனியார் கம்பெனில ஏதோ பெயருக்கு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். சொந்த வீடென்பதால் நான் அனுப்பிய பாதி சம்பளத்தை வைத்து சிதம்பரத்தில் ஒப்பேத்திக்கொண்டிருந்தனர். நான்தான் சென்னைலருந்து மாசாமாசம் நேர்ல போய் என் செலவுக்குப் போக்குவரத்து மீதி எல்லாத்தையும் குடும்பச் செலவுக்குக் குடுத்தேன். தம்பி தங்கைகளுக்கு கல்யாணம் நகை வரதட்சணை எல்லாவற்றிலும் என் பணம். பிறகு எனக்குக் கல்யாணம்... ரெண்டு பசங்க... பழைய வீட்டை சிதம்பரத்திலே புதுப்பிக்க பத்துலட்சம் வங்கிக்கடன். மாசாமாசம் இஎம்ஐ. அப்பா போன வருஷம் போன திலிருந்து நாலு பேரும் வீட்டுச் சொத்தைப் பிரிச்சுக்குடு பிரிச்சுக்குடுன்னு நச்சரிப்பு. ஒரு கோடி மதிப்புள்ள பெரிய வீடு. ஆறு பங்கா வைங்கிறாங்க. தெனம் ஒரு ஃபோன். நான் இவ்வளவு பண்ணியிருக்கிறேன்... எனக்கு திரும்பக்கிடைக்காது. வீட்டுக்கடன் இன்னும் ஏழு லட்சம் இருக்கு... இதெல்லாம் கணக்குலே எடுக்கமாட்டாங்கலாம் நன்றி கெட்ட பயலுக. கடன் வாங்கி தங்கச்சிங்க கல்யாணத்துக்கு நகை செஞ்சேன்... எல்லாத்தையும் மறந்துட்டாங்க... நீயே சொல்லுடா... நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டான் கருணாகரன்.

    ஓம்மனைவி என்ன சொல்றாங்க

    இந்த டென்ஷன் வேண்டாங்க... உங்களுக்கு உடம்புக்கு ஏதும் வந்துடும்... அவங்க சொன்னபடி செஞ்சுடுங்கோ என வேண்டா வெறுப்பா பேசுறா.

    நல்லதாப் போச்சு... ஒரு லைன் க்ளியர்... இந்தத் தலைவலியிலிருந்து நீ தப்பிச்சுட்டேன்னு சந்தோஷப்படு. நீ அப்பாட்ட கொடுத்ததெல்லாம் அப்பா செஞ்சதுன்னுதான்னு தம்பி தங்கச்சிங்க அப்பாவின் கடமை ன்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க... வாழ்க்கை முழுசா கோர்ட்... சண்டை... பேசாமலிருப்பதுங்கறதை விட ஒரு ஆளு நீ மூத்தவனா விட்டுக் குடுத்துட்டா ப்ராப்ளம் வராது... உனக்கு பணரீதியா லாஸ்... ஆனா தம்பி தங்கச்சிங்களுக்குத்தானே செஞ்சோம்னு பெருமைபட்டுக்கலாம்... ஓன் உடம்புக்கும் நல்லது... இந்த இடத்துல நியாயம் பாத்தாக்க குடும்பமே சிதறிப் போயிடும்...நாலுபேரும் ரொம்ப கஷ்டத்துல வேறு வாழ்ந்துட்டுருக்காங்க...கடவுள் வேறவிதமா உனக்கு காம்பென்ஸேட் பண்ணுவார். புண்ணியம் கூட... என அறிவுரைத்தான் வீரமுத்து.

    யோசிக்க ஆரம்பித்தான் கருணாகரன். நண்பனுக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு இன்னும் இரண்டு டீ சூடா ஆர்டர் பண்ணினான்.

    2. சாக்லேட் உறை உறவுகள்

    மதியம் சூரியன் உச்சத்தைத் தொட்டு வானில் சறுக்கிக்கொண்டு இறங்க ஆரம்பித்த நேரம், வைகை எக்ஸ்பிரஸில் D 8 கோச்சிலிருந்து பள்ளிக்கூடப்

    Enjoying the preview?
    Page 1 of 1