Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Olirum Thiramaigal
Olirum Thiramaigal
Olirum Thiramaigal
Ebook61 pages22 minutes

Olirum Thiramaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு இளம் பொதுத்துறை வங்கி அதிகாரி வங்கியை லாபகரமாக மாற்ற உதவிய தன்னம்பிக்கைக் கட்டுரைகள். உலகளாவிய சாதனை புரிந்த பொதுத்துறை வங்கி அதிகாரியின் வங்கி அனுபவங்கள்.

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580154010297
Olirum Thiramaigal

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Olirum Thiramaigal

Related ebooks

Reviews for Olirum Thiramaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Olirum Thiramaigal - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒளிரும் திறமைகள்

    Olirum Thiramaigal

    Author:

    தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    உங்கள் திறமை உங்களுக்குத் தெரியுமா? உங்கள் டூத்பேஸ்டில் உப்பு உள்ளதா விளம்பரம் போல திடீர் கேள்வி இது. நம் திறமை நமக்கு தெரியுமா... சில தெரியும்... சில தெரியாது... ஆம். நிறைய பேர் புதுசா ஏதும் பண்ணனும்னா பயப்படுவார்கள். பயம் சிறிதளவு இருந்தால் பரவாயில்லை; கவனமாக வேலை செய்வர். நிறைய பயம் எனில் புது விஷயத்தில் இறங்கவே விடாது. ஆழம் தெரியாமல் காலை விடாதே என பழமொழியை உதவிக்குக் கூப்பிடுவார்கள். ஒரு குச்சி எடுத்து ஆழம் பார்க்க சோம்பேறித்தனம்.

    சிலவற்றில் நமக்கு திறமை இருந்தாலும் செயலில் இறங்காத வரை திறமை வெளிப்படாது. சில நேரம் மற்றவர்கள் நம் திறமைகளை அவதானித்துத் தூண்டிவிடுவர். திறமைகளின் உதாரணத்துக்கு மத்யமரிலேயே (52000 உறுப்பினர்கள் கொண்ட பெரிய முகநூல் குழு) நிறைய பேரை நான் பார்த்ததுண்டு. வாழ்க்கையிலும் நேரடியாக பலரைப் பார்த்துள்ளேன். சிலர் புதிதாகக் கதை எழுத ஆரம்பித்தனர். சில ஓவியர்கள் போர்ட்ரெய்ட் ஆரம்பித்தனர். சிலர் பாட ஆரம்பித்தனர். சிலர் பழமொழிக் கதைகள், படத்துக்கேற்ற கதைகள், குறள் கதைகள், வெண்பா... இப்படி புதிய துறைகளில் இறங்கியுள்ளனர். நான் படித்த சில புதிய எழுத்தாளர்களின் குறள் கதை, பழமொழிக் கதை, படத்துக்கேற்ற கதைகள் அருமையாக இருந்தன. கொஞ்சம் பட்டை தீட்டினால் ஜொலிக்க ஆரம்பிப்பர். சிலர் அருமையாக பொதுக்கட்டுரைகள், வாழ்க்கைச் சம்பவங்கள், கவிதை, பாமாலை இயற்றுகின்றனர். இதில் நிறைய 60+ வயதுக்காரர்களும்.

    உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர முடியும்... நிச்சயமாக முடியும்... கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன். என்னென்ன சிறப்பான செயல்கள் இதுவரை செய்துள்ளீர்கள் என குறித்து வைத்து அடிக்கடி பாருங்கள்.

    என்னை எடுத்துக் கொண்டால்... வெகு சாதாரணமானவன். கிராமப்புறங்களில் 26 வயசு வரை வாழ்ந்தவன். தமிழ்நாட்டில் திருநெல்வேலி, நாகர்கோவில் விருதுநகர் மாவட்டங்களில் தமிழ் வழியாக சாதாரண பள்ளிக்கூடங்களில் படித்தேன். உள்ளூர் கல்லூரி. ரொம்ப ஃபேமஸ் கிடையாது. கல்லூரியில் போய் ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்தேன். பியூஸி, பிகாம் இரண்டிலுமே கல்லூரியில் முதலிடம். ஏதும் டியூஷனும் கிடையாது. பெற்றோர்க்கும் பிகாம் தெரியாத விஷயம். பல்கலைக்கழக ரேங்க் வாங்குமளவு முன்னேறினேன். இரண்டாமாண்டு படிக்கையில் வகுப்பு நண்பன் ராதாகிருஷ்ணன் டேய்... உனக்குதான் கணக்கு நல்லா வருமே... செஸ் விளையாடலாமே என்றான். அன்றிரவே... போர்ட் வாங்கு முன்பே, தரையிலே கட்டம் போட்டு, தீக்குச்சிகளையும் புளிய முத்துகளையும் ஸோல்ஜராக வைத்து தம்பியுடன் வீட்டிலேயே விளையாட ஆரம்பித்தேன். ஞாயிறன்று நண்பனுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1