Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yetho Ariyen Enatharuyire
Yetho Ariyen Enatharuyire
Yetho Ariyen Enatharuyire
Ebook165 pages1 hour

Yetho Ariyen Enatharuyire

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuraha Ramanan, an exceptional Tamil novelist, written over 750 novels, 1200 short stories, One of her novel "Oru Veedu Iruvasal" were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada.Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465629
Yetho Ariyen Enatharuyire

Read more from Anuradha Ramanan

Related to Yetho Ariyen Enatharuyire

Related ebooks

Reviews for Yetho Ariyen Enatharuyire

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yetho Ariyen Enatharuyire - Anuradha Ramanan

    7

    1

    ‘தேடணும்...’

    ‘தேடியே ஆகணும். அவளைக் கண்டு பிடிக்காம ஊர் போய் சேர மாட்டேன்...’

    கார்த்தி, மறுபடி மறுபடி சொல்லிக் கொள்கிறான். அவளைத் தாரை வார்த்ததிலிருந்து இந்த ஆறு நாட்களில் ஒரு லட்சம் முறையாவது மனசுக்குள் இந்த வார்த்தைகளை முனகியிருப்பான்.

    ரயிலின் ‘தடக்தடக்’ கூட, ‘தேடணும் தேடணும்’ என்பது போல...

    ஐதராபாத்தில் புறப்பட்ட ரயில் பகல் முழுக்க ஓடி, ஓர் இரவையும் விழுங்கி, மறுநாள் காலை சென்னை வந்து சேரப் போகிறது.

    இங்கே இவனுக்கு வண்டி, நத்தை வேகத்தில் ஊர்வது போலத் தோன்றுகிறது.

    டேய்... தூங்குடா... இன்னுமா அந்த கிராக்கியையே நினைச்சிட்டிருக்கே... விடும்மா. நம்ம சென்னையில் கிடைக்காத சரக்கா...

    கூட வந்தவனில் ஒருவன், மேல் தட்டிலிருந்து குனிந்து பார்த்து நண்பனை அதட்டினான்.

    ச்சூ சும்மா இருடா... இது போன ஜென்மத்துலே இருந்து தொடரும் காதல்... கார்த்தி... உங்கப்பா உனக்காக ஊர்லே பொண்ணு பார்த்து வச்சிருக்கறதா போன தடவை பார்த்தப்பவே சொன்னார்டா. பொண்ணு கட்டின பசு மாதிரி...

    அவன் வார்த்தையை முடிக்கும் முன் வேறொரு பர்த்திலிருந்து குபீரெனச் சிரிப்பொலி...

    கார்த்தியின் மனசுக்குள் ஆறு நாட்கள் அழிக்கப்பட்டு, பிரீத்தியைப் பார்த்துப் பேசிய அந்தக் கணம் மட்டும் நிற்கிறது.

    "பிரீத்தி... இப்ப என்ன... உன் வீட்டுக்குப் போக முடியாது. அவ்வளவுதானே... அந்த சங்கம்மாவா, கங்கம்மாவா... அவகிட்டயிருந்து உன்னை மீட்டுட்டேன் இல்லையா... இன்னும் ஏன் அழறே... உன்னைக் கடைசி வரைக்கும் பத்திரமா வச்சுக் காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு..."

    அதை நினைச்சுத்தான் அழறேன். தயவு செஞ்சு, என்னை இங்கேயே இப்படியே விட்டுட்டுப் போயிருங்க... கைச் செலவுக்கு ஆயிரம் ரூபா போதும்... நான், இங்கே இந்த வியாதிக்குன்னு இருக்கற ஆஸ்பத்திரிக்குப் போனா... இலவசமா ட்ரீட்மெண்ட் கிடைக்கும். நானும் கொஞ்சம் படிச்சிருக்கேன். அங்கே, ஏதாவது வேலை பார்த்துட்டு... மிச்ச காலத்தை ஓட்டிடுவேன்...

    அசடு. உன்னை அநாதையா நிறுத்திட்டுப் போகறதுக்காகவா, அந்த கங்கம்மா கிட்ட வாதாடி, என் மூணுபவுன் சங்கிலி, ரெண்டு பவுன் பிரேஸ்லெட், வாட்ச் எல்லாத்தையும் கழட்டிக் கொடுத்துட்டு, உன்னை அழைச்சிட்டு வந்திருக்கேன்... உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையின்னா சொல்லு... இங்கேயே, இப்பவே, ஏதாவது ஒரு கோயில்லே வச்சு, உன் கழுத்துல தாலியக் கட்டறேன்...

    அவன் பேசப் பேசப் அவள் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

    வேண்டாம். என்னாலே உங்களுக்கு சிரமம்தான் அதிகமாகும். நீங்க எனக்கு செய்யற உபகாரங்களுக்குப் பதிலா - என்னாலே எதுவுமே தரமுடியாது... படுக்கையில பெண்டாட்டியாகக் கூட இருக்க லாயக்கில்லாதவ...

    பிரீத்தி... இதை எத்தனை தடவை சொல்லிட்டே? எனக்கு உன் அன்பு போதும். வேற எதையும் எதிர்பார்க்கலே... நீ... நீ மட்டும் போதும்...

    அத்தனை அழுகையினூடேயும் சிரித்தாள் அவள். மேகத்தை விலக்கிக் கொண்டு, நிலா எட்டிப் பார்ப்பது போல இருந்தது.

    கார்த்தி, அந்தச் சிரிப்பையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்...

    புத்தம் புது ஆப்பிள் போல, கடித்துத் தின்னலாம் போல இருந்தாள்...

    ‘இவளுக்கா எய்ட்ஸ்...?’

    ‘ச்சே... கடவுள் கொடூரமானவன்...’

    அவன், தன்னைச் சுதாரித்துக் கொண்டு கேட்டான்:

    எதுக்கு சிரிச்சே?

    இல்லே... கங்கம்மாவைத் தேடிட்டு வர்ற அறுபது வயசுக் கிழத்துக்குக் கூட, பொம்பிளைங்க உடம்புதான் வேண்டியிருக்கு. நீங்க மட்டும்தான் இப்படிச் சொல்றீங்க. இதெல்லாம் காலத்துக்கும் நினைச்சு நிற்கப் போற வார்த்தை இல்லே. பின்னாலே, உங்க மனசும், இளமையும் தகுந்த துணை வேண்டி ஏங்கும். அந்த சமயத்துல நான், எனக்கான ரயில் வந்து, போயிருப்பேன். இல்லாட்டி. ஆர்.ஏ.சி.யிலக் காத்துட்டிருப்பேன்...

    ஆர்.ஏ.சி.யா...?

    ஆமா. புரியல்லையா... ஆர்.ஏ.சி.யின்னா, ரிசர்வ்டு அகைன்ஸ்டு கான்ஸலேஷன்... அதாவது பரலோகத்துக்கு டிக்கட் கொடுத்திருப்பாரு சாமி. ஆனா, தீர்மானமாத் தெரியாது, வெயிட்டிங் லிஸ்ட்லே என் பேரு வர்ற வரைக்கும் காத்திட்டிருக்கணும். எப்படியும் இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள டிக்கட் கன்ஃபர்ம் ஆயிடும்...

    அவன், தன் கூட வந்த நண்பர்கள் எங்கே என்று விழிகளால் துழாவினான்.

    எட்டு பேர். இவனையும் சேர்த்து மொத்தம் ஒன்பது...

    ஜெயராமனுக்கு பக்தி அதிகம். ஐதராபாத் வந்து இறங்கியது முதலே - கோல்கொண்டா கோட்டைக்குப் போய், அங்கே, ராமதாஸர் சிறையிருந்த குகையைப் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான்...

    சங்கரனுக்கு இங்கே பஞ்சாரா ஹில்ஸ்ஸில் அத்தை வீடு. டிகிரி படிக்கும் அத்தை பெண்... கையில் ஒரு கிலோ திராட்சையுடன் அப்பொழுதே புறப்பட்டுச் சென்றிருப்பான்.

    வெங்கட்ராமன் கஞ்சப் பிசுநாரி. அவனிடம்தான் உல்லாசப் பயணம் வந்த, மொத்தக் குழுவுமே தங்களது பணத்தைக் கொடுத்திருந்தது... பதினைந்து நாட்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து, திரும்பும் வரையில் ஆகிற மொத்தச் செலவுக்கும் ஜவாப்தாரி அவன்தான். ஆதலால்... இருப்பதிலேயே ஓரளவுக்கு மத்தியதரமான உணவு விடுதிகள் எங்கெங்கு இருக்கிறது எனத் தேடிப் போயிருக்கிறான்.

    மற்ற ஐந்தும், எங்கே, ‘பலான’ பகுதிகள் இருக்கின்றன எனத் தேடிப் போய், அங்கே தாவணி விசிறலில் லாவணி பாடிக் கொண்டிருக்கும்.

    அப்படிப் போன இடத்தில்தானே கார்த்திக்கு பல்லவ காலத்துச் சிற்பம் போல ப்ரீத்தி கிடைத்திருக்கிறாள்...

    மற்ற விஷயங்களில் எப்படியோ... பிரீத்தியை மீட்க, கார்த்தி சிபிச்சக்ரவர்த்தி மாதிரி ஒவ்வொன்றாய் கழற்றிக் கொடுத்தது யாருக்கும் பிடிக்கவில்லை...

    தலைக்குத் தலை கத்தினார்கள்...

    பிரீத்தியின் விசாலமான விழி வாசலில், அப்பொழுதுதான் குடம் தண்ணீரைத் தெளித்தாற் போன்ற பளபளப்பும், ஆரஞ்சு உதட்டோரத்தின் மெல்லிய படபடப்பும் தான் ஜெயித்தன.

    இப்ப என்னடா... இவளையும் கூடவே சென்னைக்கு அழைச்சிட்டு வரப்போறியா...

    பின்னே... நடுத்தெருவுல விட்டுட்டுப் போறதுக்காகவாடா அத்தனை பேரம் பேசி முடிச்சேன்?

    நீ நாசமாத்தான்டா போவே... நான் வயிரெறிஞ்சு சொல்றேன். உங்கப்பா என்னைத்தான்டா கேட்பார்... நான், ‘எனக்கு ஒண்ணுமே தெரியாது சுவாமி’யின்னு கைய விரிச்சிடுவேன்...

    வெங்கிட்டு கத்தினான்.

    அவன்தான் இந்த டூரை ஏற்பாடு பண்ணியது. கார்த்தியின் குடும்பத்தை அவனுக்குத் தெரியும். மைலாப்பூரில் வீடு. மகனின் சம்பாத்தியத்தை நம்பிய குடும்பம். கார்த்தியின் அம்மா, தேய்த்து வைத்த வெண்கலக் குத்து விளக்கு மாதிரி இருப்பாள். என்ன, பல வருடங்களாகத் தேய்த்துத் தேய்த்து மழுங்கின குத்து விளக்கு... கார்த்தி ஒரே மகன்... அவன் பத்தாவது படிக்கும் போது, எண்ணத்தில் இல்லாத எண்ணமாய் ‘பொசுக்’கென கற்பகம் பிறந்தாள்.

    மைலாப்பூரிலே தினம் தினமும் அம்பாளைச் சேவிச்சிட்டு இருக்கேனோல்லியோ... அதான், அவளே என் வீடு தேடி வந்துட்டா...

    நரைத்த முள்தாடியைச் சொறிந்து கொண்டே,

    Enjoying the preview?
    Page 1 of 1