Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasai Konda Devathai
Aasai Konda Devathai
Aasai Konda Devathai
Ebook201 pages1 hour

Aasai Konda Devathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003855
Aasai Konda Devathai

Read more from Anuradha Ramanan

Related to Aasai Konda Devathai

Related ebooks

Reviews for Aasai Konda Devathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasai Konda Devathai - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    ஆசை கொண்ட தேவதை

    Aasai Konda Devathai

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    ‘காத்திருத்தல்' என்பது, காதலிக்கும் பொழுது கொடுமையானதாகவும், கல்யாணத்துக்குப் பிறகு, பைத்தியக்காரத்தனமானதாகவும் தோன்றும்.

    யாரோ சொன்னது அந்த பிரம்மாண்டமான பங்களாவின் வரவேற்பறையில் நிதிக்காகக் காத்திருந்த முகிலனின் மனசில் அந்த சமயம், பார்த்து நினைவுக்கு வந்தது. புன்னகைத்துக் கொண்டான்.

    ஏதோ வேலையாய் அந்தப் பக்கம் வந்த சுமித்ரா, அவனைப் பார்த்து வியப்புடன் புருவத்தை உயர்த்தினாள்.

    அட, நீ இன்னுமா இங்கேயே உட்கார்ந்திருக்கே?

    வேற வழி... ஆன்ட்டீ, உங்க வீட்டுலேயிருந்து வெளியே போறதுக்கு வேற ஏதாவது வழி இருக்கா?

    ஏன் கேட்கறே?

    இல்லே... உங்க பொண்ணு நிதி, அது மாதிரி ஏதாவது வாசல் வழியாக் கிளம்பிப் போயிருப்பாளோன்னுதான்.

    சுமித்ராவினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    முகிலன் மகா பொறுமைசாலி என்று அவளுடைய மகள் நிதி அடிக்கடி சொல்வதுண்டு. அதற்காக இப்படி... இத்தனை பொறுமையா?

    காலையில் முகிலன் அந்த வீட்டுக்குள் வந்த போதே, அதிசயத்திலும் அதிசயமாய் நிதி, தூங்கி எழுந்து காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

    அம்மா, இந்தத் தடியனுக்கும் காபி கொடு...

    வேண்டாம் தாயே... நீ கிளம்பு. தூங்கிட்டு இருந்தியானா, திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பலாம்னுதான் வந்தேன். நல்ல வேளை... எழுந்துட்டே. மழைதான் வரப் போறது. சீக்கிரம் புறப்படுடா... பத்து மணிக்கு நீ மேடையில் இருக்கணும்.

    இதோ... அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். அம்மா, எனக்கும் இவனுக்கும் சேர்த்து, பிரேக் ஃபாஸ்ட் எடுத்து வைக்கச் சொல்லு மணி கிட்ட...

    ஆகட்டும். நீ போய் குளி.

    அம்மா, ரெண்டு இட்லி, ஒரு வடை, சட்னி சாம்பார் எல்லாம் இவனுக்குப் போதாதும்மா... பத்து, பன்ணெண்டு இட்லி, அஞ்சாறு வடை, ஒரு பெரிய கூஜா நிறைய காபி - அதெல்லாம் நாசூக்கு நாகரீகமே பார்க்க மாட்டான். டைனிங் டேபிளைப் பார்த்தா, பாய்ஞ்சுடுவான்...

    இப்படிக் கூறி, 'கலகல’வெனச் சிரித்தபடியே மாடிக்கு ஓடியவள்தான் நிதி. இன்னமும் வரப் போகிறாள்.

    முகிலனை வரவேற்பறை சோபாவில் உட்காரச் சொல்லி விட்டு, படிப்பதற்கு சில பத்திரிகைகளையும் கொடுத்து விட்டு, மெதுவாக நகர்ந்த சுமித்ரா, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு இப்பொழுதுதான் மறுபடியும் இந்தப் பக்கம் வந்திருக்கிறாள்.

    சுமித்ராவுக்கு அந்தக் காலை நேரத்தில் ஆயிரம் வேலைகள்

    கணவன் மனோகர் - சக்கர நாற்காலி வாசி. காலையில் பல் துலக்குவதிலிருந்து, குளியல், மாற்றுடை அணிதல், இப்படி சகலமும் மனைவியின் உதவியுடன்தான்...

    வீடு நிறைய ஆட்களுக்குப் பஞ்சமில்லை. சமையலுக்கு மணி, பல வருடங்களாய். தோட்டத்தைக் கவனிக்க பொன்னுசாமி, அவன் மனைவி பட்டு வீட்டு வேலைக்கும், சுமித்ரா கூப்பிட்ட குரலுக்கும். தவிர இரண்டு டிரைவர்கள். வீட்டைப் பார்த்துப் பார்த்து நேர்த்தியாகத் துடைத்து வைத்துக் கொள்ள இரண்டு பேர். கணக்குப் பிள்ளை சாமா அய்யர். மனோகருக்கு அலுவலகத்தில் உதவ ஒரு பொடியன், எப்பொழுதும் கூடவே...

    'இத்தனை வசதிகளுடன் வளர்த்த தன் மகளை, புகுந்த வீட்டுக்கு அனுப்பினால், அங்கே எத்தனை சிரமப்படுவாளோ’ என்கிற கவலை ஒரு பக்கம்...

    'வருகிற மாப்பிள்ளை வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து விட்டால் தேவலையே' என்கிற பேராசை ஒரு பக்கம் சுமித்ராவை அலைக்கழிக்காமல் இல்லை.

    அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, முகிலன், நிதிக்கு ஏற்றவன் என்கிற எண்ணமும் அவளுக்கு உண்டு. மனோகரிடம் இதைச் சொன்னால் மட்டும் சிரிப்பான்.

    சுமி... உன் பொண்ணு, 'விஷுவல் கம்யூனிகேஷன்’லே டிகிரியே இன்னும் வாங்கலே. அவன், இவளை விட கொஞ்சம் சீனியர்; அவ்வளவுதான். ஏதோ... பள்ளிக் கூடத்துல இருந்து ஒண்ணாப் படிக்கிறதுனால, அவசரப்பட்டு எந்த முடிவுக்கும். வந்திடக் கூடாது. ஒருத்தன் பெண்டாட்டிய இன்னொருத்தன் கட்ட -

    இந்த வார்த்தையை மட்டும் முடிக்காமல், அவசரமாய் மனைவியின் - முகத்தைப் பார்ப்பான்.

    அதில் கவிந்திருக்கும் கவலை கண்டு, 'சட்'டெனத் தன் பேச்சை இப்படி மாற்றிக் கொள்வான்.

    ஒருத்தன் பெண்டாட்டிய இன்னொருத்தன் கட்ட முடியாதுதான். அப்படியே கட்டினாலும், அவ, எவனுக்கு உடைமையோ அங்கேதான் போய் சேருவா. என்ன... புரியறதா... மலைச்சு நிற்காதே. ஓடு... என்னோட கார் கதவைத் திறந்து விடு. நீ திறந்து விட்டாத்தான் ராசி.

    சுமித்ரா பதிலேதும் பேசாமல் போவாள். ஆனாலும் மனசுக்குள், கணவனின் - 'ஒருத்தன் பெண்டாட்டியை இன்னொருத்தன்...' என்ற வார்த்தைகள் மந்திரம் போல ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    நிற்க நேரமில்லாமல் சுற்றிக் கொண்டே இருந்தாலும் முகிலனுக்கும், நிதிக்கும் இடையில் நட்பை மீறிய ஏதோ ஒரு இழை ஓடுவதை, சுமித்ரா நினைக்காத நேரமில்லை.

    மனோகருக்கு முகிலனைப் பிடித்திருக்கிறதோ இல்லையோ... சுமித்ராவுக்குப் பிடித்திருக்கிறது.

    'இவன் மட்டும், நிதிக்குக் கணவனாக வந்தால் நன்றாக இருக்கும். அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவான்’

    'போதுமா...? பணம் வேண்டாமா...? அவன் குடும்பம் அப்படியொன்றும் வசதியானதில்லை... நடுத்தரம்தான். உனக்குப் பணம் முக்கியமில்லையா?'

    மனம் பொல்லாதது. கடிவாளம் போட்டு ஒரு கட்டுக்குள் வைக்கா விட்டால், நம்மையும் சேர்த்து அறுத்துக் கொண்டு ஓடும்.

    இத்தனை வருட வாழ்க்கையில், சுமித்ரா இதை நன்றாகத் தெரிந்தே வைத்திருந்தாள்.

    ஏம்மா... இவனுக்கு நீ இன்னும் டைனிங் டேபிளைக் காட்டவே இல்லையா?

    நிதி வந்து விட்டாள்... அடர்ந்த கூந்தல் அலைபாய, ரோஜா வர்ண சூரிதாரும், அதற்கேற்ற பிளாஸ்டிக் சமாச்சாரங்களுமாய்... மிருதுவான வாசனை அவளைச் சுற்றி...

    சுமித்ராவுக்கே, தன் மகளைப் பார்க்கையில் பிரமிப்பாக இருக்கும். முகிலன் மாதிரி இளைஞனுக்குக் கேட்க வேண்டுமா என்ன?

    இது நேரம் வரையில் காத்திருந்த ஏக்கம் எல்லாம் காற்றில் பறக்க உற்சாகமானான்."

    ஏய்... இன்னிக்கு நடக்கப் போறது தமிழ் பட்டிமன்றம்தான். இதெல்லாம் உனக்கு ஊதித் தள்ளற விஷயம். 'சடபுட'ன்னு ஒரு பேண்ட்டையும், ஷர்ட்டையும் மாட்டிட்டுக் கிளம்பிடுவே. இன்னிக்கு என்னாச்சு? பிரமாதமான 'கெட் அப்'லே கிளம்பறே? நம்ம காலேஜுக்கு புதுசா புரபஸர்தாம்மா வர்றாரு, அவருக்கு வயசாயிடுச்சு. எனக்குத் தெரிஞ்சு அவருக்குப் பையனுங்க யாரும் இல்லே. ஏன், கல்யாணமே ஆகாத மனுசன்.

    நிதி, அவனை நெட்டித் தள்ளினாள்.

    த்ச். சும்மாயிரு. பட்டிமன்றம், கருத்தரங்கம் இது மாதிரிப்பட்ட மேடைங்கள்லே, அழுக்கு ஜீன்ஸ், அரைக்கை டீ ஷர்ட், சோடா புட்டி, 'பப்பரப்பே’யின்னு ஒரு பார்வை - இப்படி வந்து நின்றாலே, பாதி மார்க் போயிடும். ஆள் பாதி ஆடை பாதி கேள்விப் பட்டதில்லே நீ?

    முகிலன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். உதட்டு முனையில் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

    அவன், அவளிடம் பேசாது, சுமித்ராவிடம் பேசினாள். பார்வை மட்டும் நிதி மீதே.

    ஏன் ஆன்ட்டீ... இந்தப் பொண்ணை நீங்க தவிட்டுக்கு வாங்கினீங்களா? ஏன் கேட்கறேன்னா, நீங்களும், அங்கிளும் ரொம்பப் பொறுமையா, இருக்கற இடமே தெரியாம இருக்கீங்க. இவளானா, பறக்கா வெட்டி மாதிரி பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டியின்னு எல்லாத்துலேயும் சகட்டு மேனிக்குப் பேரைக் கொடுத்துட்டு, அப்படியே கிளம்பிடுவா... ஒவ்வொரு சமயம், கடைசி நிமிஷத்துல அரக்கப் பறக்க ஓடி வருவா பாருங்க... தெருப் புழுதி எல்லாம் இவ மேலயும், இவ ஓட்டிட்டு வர்ற ஸ்கூட்டி மேலயும்தான். அதையெல்லாம் விடுங்க. மெல்லிசைப் போட்டியில கலந்துக்க வந்துட்டு, காலேஜ் அடையாள அட்டையையே தொலைச்சிட்டு, காமராஜர் அரங்கத்துல ஒரு கலாட்டா செஞ்சிருக்கா பாருங்க... அப்படியாப்பட்டவ இப்படி சொல்றான்னா இதுல ஏதோ இடிக்கலே?

    சுமித்ரா, மகளைப் பார்த்துச் சிரித்தாள். அது என்னவோ, எப்போதையும் விட, மகள் அக்கறை எடுத்துக் கொண்டு, அலங்கரித்துக் கொண்டிருப்பது அவளுக்கும் தெரிந்துதான் இருந்தது.

    நிதி - தாயைப் போல சிவப்பில்லை. மனோகரனைப் போல மாநிறமும் இல்லை. மஞ்சள் கலந்த கண்ணாடி தேகம். அந்த உயரமும், வாளிப்பும் தனி. முகத்தில் கண்களே மிகப் பெரிய வசீகர ஆயுதம்.

    அழகான எத்தனைப் பெண்கள், மக்காய், அசடாய், பிடித்து வைத்த மண் பொம்மை போல இருக்கிறார்கள்.

    நிதியின் புத்தி கூர்மைக்கு இனிமேல் கிடைப்பதற்கு எந்த விருதும் மிச்சமில்லை. முகிலன் சொன்னது போல... சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்தப் பக்கம் பரதநாட்டியம், குச்சுபுடி... அந்தப் பக்கம் ரஷ்யன் பாலே... கல்லூரியில் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கிக் கொண்டே ஏதோ ஒரு மாதர் சங்கம் நடத்திய கோலப் போட்டியில் அபாரமாய் வரைந்து பெயர் தட்டிக் கொண்டு போயிருக்கிறாள்.

    நிதியைப் பற்றி நாலு பேர், நல்ல வார்த்தைகளாய் பேசும் போது, சுமித்ராவுக்குள் கர்வமும் பெருமிதமும் பொங்குகிற அதே சமயத்தில்...

    'இந்த சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டிய ஜீவன் இன்னொன்றும் இருக்கிறது. அதை மறந்து விடாதே...'

    - இப்படியொரு குரல். அவளுள் ஒலிக்கும். இப்போதும் அதுபோன்றதொரு பிரம்மையில் இருந்தவளை நிதிதான் உலுக்கினாள்.

    என்ன, உட்கார்ந்தே தூங்கறே... நானும் முகிலும் சாப்பிட்டாச்சு. இன்டர் காலேஜ் காம்படிஷன். பேச்சுப் போட்டியில் இதோ, இந்த முகிலனுக்கு எதிரா நின்னுப் பேசப் போறேன். புது புரபசர் வந்திருக்கார்னு சொன்னேன் இல்லையா... அவர்தான் கருத்தரங்கத்துக்கான - கருத்தைச் சொல்லியிருக்கார். கருத்து என்ன சொல்லவா?

    என்ன... வழக்கமான வரதட்சணை கொடுமை... பெண் விடுதலைதானே...?

    சுமித்ரா அலட்சியமாய் உதட்டைச் சுழித்தாள். முகிலன், அவசர அவசரமாய் மறுத்தான்:

    அதான் இல்லே... சொல்றேன். கவனமாக் கேளுங்க... உடன் இருந்து, உண்டி கொடுத்து, உடலும் கொடுத்து, உள்ளம் மட்டும் கொடாதவளை என்னென்பது...? - இதுதான் ஆன்ட்டி கருத்து. இதை வச்சுத்தான் நாங்க ரெண்டு பேரும் பின்னியெடுக்கப் போறோம்.

    நிதி, தாயின் கன்னத்தைச் செல்லமாய் தட்டி விட்டுப் பறக்க - சுமித்ரா, அடித்து வைத்த சிலையாய் நிற்கிறாள்.

    *****

    2

    அம்மா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். வீட்டுல மிக்ஸி கிரைண்டர் அது, இதுன்னு ஆயிரத்தெட்டு 'எலக்ட்ரானிக்' சமாச்சாரமெல்லாம் இருக்கு. இன்னும் விடாம, அம்மியைக் கட்டி இழுக்கறியே... பழைய பழக்கங்களை எல்லாம் தூக்கிப் போடவே மாட்டியா...?

    விசுவம், தாயின் அருகில் வந்து அமர்ந்தார்.

    பழுத்த வெள்ளரிப் பழம் போல இருந்தாள் கிழவி. கொஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1