Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andha Aarum Blue Busum
Andha Aarum Blue Busum
Andha Aarum Blue Busum
Ebook165 pages1 hour

Andha Aarum Blue Busum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் வேலை செய்த என் நிறுவனத்தின் மேல்,நான் வைத்த மதிப்பு, மரியாதைக்கு,நன்றிக்கடனாக என் நினைவுகளை தொகுத்து.....அன்பு காணிக்கையாக்குகிறேன்....நீங்கள் படித்து,மகிழ்ந்து,ஆதரவு அளித்து விமர்சியுங்கள்...நன்றி

இந்த என் நினைவுகளை Ebook காக வெளியிட ஆசைப்பட்டு ஊக்குவித்த என் பெண்,நாட்டுப்பெண்,பிள்ளை,கணவர் அனைவருக்கும் நன்றி... என் மனதிற்கினிய தோழி "வேதா கோபாலனுக்கு"நன்றிகள் பலப்பல..

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134705752
Andha Aarum Blue Busum

Related to Andha Aarum Blue Busum

Related ebooks

Reviews for Andha Aarum Blue Busum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andha Aarum Blue Busum - Radha Narasimhan

    http://www.pustaka.co.in

    அந்த ஆறும்! ப்ளூ பஸ்ஸும்

    Andha Aarum! Blue Busum

    Author:

    ராதா நரசிம்மன்

    Radha Narasimhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/radha-narasimhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    1

    பாட்டி போரடிக்குது, எதாவது 'இன்ட்ரஸ்டிங்கா' கதை சொல்லேன்?

    கதையா? ஒரு கதை பாக்கி விடாமா, அத்தனையும் காலை, மதியம், சாயங்காலம், இரவு என சொல்லியாகி விட்டது, கதை... நோ ஸ்டாக்!

    சரி விடு பாட்டி, நாங்க உன் 'செல்போனில்' லில் 'கேம்ஸ்' விளையாடுகிறோம், பாட்டு கேட்கிறோம்! என செல், Tab. என எல்லாம் எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடி விடுகிறார்கள் பேரக் குழந்தைகள்...

    யாரிடமிருந்து போன் வந்தாலும் சொல்வதில்லை, கொடுப்பதுமில்லை, உடனே ஆப் செய்து விட்டு, மறைக்கிறார்கள், விளையாட்டை தொடர்கிறார்கள்... எல்லாம் இந்த 'லாக் டவுனால்' தான்.

    "ப்ளீஸ் குட்டிகளா! போன் வேண்டாம், கண்ணு கெட்டுடும்!

    பாட்டி நீ மட்டும் தினமும் 'செல்போன்' பார்க்குறே, உன் கண் நன்னா தானே இருக்கு?

    நான் என்ன! என் சின்ன வயசிலிருந்தா பார்க்கிறேன்? எங்க காலத்திலே போன் கூட இருந்ததில்ல, இதில் செல்போன் என்னன்னே தெரியாது... இப்பத்தான் செல்போன் பார்க்கிறேன்

    ஐயோ! 'போன்' கூட இல்லாம நீ எப்படி வேலைக்கு போனே?! எப்படி வளர்ந்தே, அந்த கதை சொல்றியா,??? R u very poor people la? ஐந்து வயது பேரன்னின் கேள்வி

    ஏழையா? எனக் கேட்ட பேரனிடம்... எஸ் We are poor but very happy people என்றேன்.

    மனம் நாற்பது வருடம் பின்னோக்கி சென்றது... இனிமையான.அந்நாட்களை அசைப் போட்டப்படி

    அதை உங்களிடம் பகிர்கிறேன், உங்களுக்கும் கொரோனா ன்னு கேட்டு, கேட்டு போர் அடிச்சிருக்கும்... இதோ! பொழுதுபோக! (வேலை செய்யுமிடத்தில் நிறைய, ஜோக்'கும் நடந்தது... அதை குழந்தைகளிடம் பகிர்ந்துள்ளேன்)

    பதினாறு வயது... கனவு வரும் காலம்... நீங்க நினைக்கிற மாதிரி அப்போ எனக்கு கலர், கலரான கனவு வரலீங்க! கனவு வந்தது!

    ஆனால்... அதில் வந்தது? ஒரே ஒரு கலர் தான்... அது... 'புளூ கலர் பஸ்'

    பஸ்ஸா?

    நீ என்னம்மா லூசா என நீங்கள் நினைத்தாலும் அது தான் உண்மை

    எப்போது நான் வெளியில் போனாலும், சாலைகளில் 'ப்ளூ' வண்ண பஸ்களில், அழகாக பயணிக்கும், ஜன்னலோர. இளம் பெண்களின்! முகங்களை பார்த்து மயங்குவேன்!

    நானும் இந்த ப்ளூ கலர் பஸ்ஸில் பயணிக்கனும், (BEL பொதுத்துறை நிறுவன தொழிளாளர்களை வேலைக்கு அழைத்து போகும் பஸ்) அதில் வேலைக்கு போகனும் என்கிற ஆசை, கனவு... என் மனதில், அந்த நீல கலர் பஸ்... தினமும் இரவு கனன்று, அது கனவாக வந்துக் கொண்டே இருந்தது.

    படிப்பு முடிந்ததும், அந்த காலத்தில் 'எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில்' பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கனும் மூன்று மாதமொரு முறை (renewal) மறுபதிவு செய்யனும்! (அது எங்க கால பாஸ்ப்போர்ட்).

    ஒரு வருடம் ஆனப்பின் காத்திருப்பிற்கு பலன் கிடைத்தது... மஞ்சள் கார்டு போஸ்டலில் வந்தது, இன்டர்வியூவிற்கு ரினீயுவல் கார்டுடன் வருமாறு அதில் எழுதியிருந்தது.

    'அடடா! ரினிவல் செய்யவேயில்லை, மறந்தே போச்சு...' மறுநாள் கார்டை எடுத்துக்கொண்டு சிவாஜீ நகரிலிருக்கும் ஆபீஸிற்கு படப்படப்பு, பயத்துடன் போனேன்...

    கூட்டம்... அப்படி ஒரு கூட்டம்... பட்டாம்பூச்சிகள் போன்று வண்ணமயமாக..எங்கும் இளம் பெண்களின் கூட்டம்.

    பெங்களூரின் நான்கு பிரபல கம்பெனிகளான பாரத் எலக்ரானிக்ஸ்! ஐ.டி.ஐ, எச்.எம்.டி எச்.ஏ.எல் என எல்லா கம்பெனிகளிலும் இளம் பெண்களை வேலைக்கு எடுக்கிறார்கள், எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் மூலமாக...

    கேட்கனுமா? வந்திருந்த அனைவர் முகத்திலும், சந்தோஷம். ஆனால் எனக்கு?

    கடந்த ஆறு மாதமாக என் கார்டு புதுப்பிக்க படாததால் என் கார்டு நிராகிக்கப்பட்டது.

    சார் என் கார்டை ரினீவல் செய்து கொடுங்க ப்ளீஸ்! அங்கையே நின்று கண்களில் கண்ணீருடன் கெஞ்சியப்படி இருந்தேன்.

    சட்டென என் கையிலிருந்த கார்டை பிடிங்கி எடுத்தான் உள்ளே இருந்த ஒரு பையன்... என்ன செய்கிறான் என திகைப்புடன் பார்க்க... கார்டில் இரண்டு முறை 'ரப்பர் ஸ்டாம்ப்' பில் டக்கு, டக்குன்னு குத்தி, கார்டை என்னிடம் நீட்டி.. எந்த கம்பெனியில் வேலை வேண்டும்? உங்க உயரம் என்ன? என்பதை Formல் எழுதி கொடுத்துட்டு போங்க! உங்களுக்கு ஆர்டர் வரும். எனக் கூறி அடுத்த கவுண்ட்டருக்கு போய் விட்டான் அந்த 16 வயதுள்ள முஸ்லீம் சிறுவன்.(தலையில் பாதி நெட் குல்லாய்!)

    என் வாழ்நாளின் அதிர்ஷ்டம் ஆரம்பித்த நாள்... 6ம் தேதி... என் கனவு நிஜமாக போகிறது... சட்டென ஃபாரம்'மில் BEL என எழுதிக்கொடுத்து விட்டு வந்தேன்.

    அங்கு வந்திருந்த திடீர் தோழிகளான சுமார் எட்டு பேரும், 'HMT Watch Factory' யில் வேலை செய்ய விருப்பம் என எழுதி கொடுத்தார்களாம், ஏனெனில் வாட்ச் பேக்ட்ரியில் யூனிப்பாரம் சேலை அழகாக இருக்குமாம்! போனஸ் உண்டாம்! அது மட்டுமல்ல முழுக்க முழுக்க பெண்கள் வேலை செய்யும் இடம்! அந்த கால பெண்களின் வேலை எதிர்ப்பார்ப்பு பாருங்க!

    எனக்கு மிகப் பிடித்த 'ப்ளூ கலர்' பஸ், என் கனவு அதில் பயணிப்பது, இதை நினைத்தால் இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

    பஸ்ஸின் கலரை பார்த்து! அந்த கம்பெனியில் வேலை செய்யனும் என்கிற ஆசைபட்ட வெகுளித்தனம்.

    என்ன வேலை? எத்தனை சம்பளம், என எதுவும் எனக்கு தெரியாது.

    மறுவாரம் வெள்ளி அன்று தபாலில் 'திங்கட்கிழமை இன்டர்வியூ" என வந்தது.

    சனி, ஞாயிறு, தூக்கம் போச்சு, மனசு முழுக்க சந்தோஷம்...

    இத்தனை பெரிய கம்பெனியை பார்ப்பது இது தான் முதன் முறை.

    எங்கு பார்க்கினும் ஆணும், பெண்ணும், பேசி, சிரித்தப்படி நடந்து அவரவர் செக்க்ஷனுக்கு(Section) போவது... எங்கள் இன்டர்வியூ ஹால் 'இல் இருந்தே தெரிந்தது.

    இன்டர்வியூல் எங்க காலத்தில் 'டெஸ்ட் பேப்பர்' Written test! கொடுப்பார்கள்... மனங்கொள்ளா சந்தோஷத்துடன், எழுதினேன்... கையெழுத்தை பார்த்த எக்ஸாமினர் 'சூப்பர், நீட்' என்றார்... பிறகு ஓரல், சுமார் 16 பேர்கள் நாங்கள் இன்டர்வியூ ஹாலில்லேயே ஒருவருக்கொருவர் தோழிகளானோம்.

    அடுத்த வாரமே அப்பாயின்மெண்ட் லெட்டருடன், சம்பள விபரமும் குறித்திருந்தது.

    மாத சம்பளம் 60/- ரூபாய்... ஆறு மாதம் Training period... பிறகு கன்பர்மேஷன் ஆகி... பர்மனென்ட் ஆகும்.

    வேலையில் சேர இஷ்டமிருந்தால்!, 'பாரம்' மில் கையெழுத்து போட்டு அனுப்பனும்... சட்டு, புட்டுன்னு, உடனே அனுப்பியாகி விட்டது.

    போலீஸ் வெரிபிகேஷனாம்!

    போலீஸ் என்றாலே பயந்து நடுங்கும் காலம் அது! அதுவும் நம் வீட்டிற்கே வந்து விசாரிக்க மாட்டார்கள்... நம் வீட்டின் அக்கம் பக்கம் நம்மைப் பற்றி விசாரித்து, எதுவும் நம் மேல் கேஸ் இல்லை எனும் லெட்டர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஆபீஸிற்கு போகும்.

    பிறகு ஆபீஸிலிருந்து நமக்கு வரும் Join லெட்டருடன் நம் போட்டோ, மார்க்ஸ் கார்டு, நாம் படித்த பள்ளியிலிருந்து NOC... மற்றும் MLA, or Judge ஜிடமிருந்தும் ஒரு Noc letter அவர்களின் Stamp புடன் கையெழுத்தும் வாங்கி எல்லாவற்றையும் இணைத்து நாம் வேலைக்கு சேரும் நாளில் எடுத்துப் போய் கொடுக்கனும்... அப்பாடி... ஒரு வழியாக எல்லாம் நல்ல விதமாக முடிந்துது... நான் வேலையில் சேரும் நாள் திங்கள் 3ம் தேதி.

    ஆபீஸில் எல்லாம் சரி பார்த்தனர்... ஆனால் என்னுடைய மார்க்ஸ் கார்டு 'ஜெராக்ஸ்'சில் உள்ளது... (கார்பன் காபி) ஒரிஜனல் வேண்டும்! என திருப்பி அனுப்பபட்டேன்.

    பணம் கட்டி

    Enjoying the preview?
    Page 1 of 1