Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal
Sirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal
Sirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal
Ebook164 pages50 minutes

Sirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித வாழ்க்கையில் நிகழும் சந்தேகம், சோம்பல், வேஷங்கள், சாதனைகள், ஊர்வலம் இதுபோன்ற பல்வேறுபட்ட கோணங்களில் வாழ்வியலுக்கு உகந்த கதைகருவாய் சிந்தனையை தூண்டும் விதத்தில் நகைச்சுவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வாருங்கள்...! குறும்பான குட்டிக்கதைகளை வாசித்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateAug 19, 2023
ISBN6580167410002
Sirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal

Read more from Karadikulam Jeyabharathypriya

Related to Sirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal

Related ebooks

Related categories

Reviews for Sirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal - Karadikulam Jeyabharathypriya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிரிக்க வைக்கும் குறும்பான குட்டிக் கதைகள்

    Sirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal

    Author:

    கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா

    Karadikulam Jeyabharathypriya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/karadikulam-jeyabharathypriya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. கோர்ட்டுக்குப் போகலாமா...?

    2. ஒரே குட்டையில்...!

    3. சந்தேகம்

    4. நீங்களுமா...?

    5. சோம்பல்

    6. மாங்கல்யத்தை காப்பாற்றுங்க..!

    7. பிடிக்காமல் விடமாட்டேன்

    8. காதலென்பது...

    9. ‘வரவேற்பு’

    10. போகாதே போகாதே...!

    11. கவலை

    12. தொழில்...!

    13. தொழில் தர்மம்

    14. ‘கஷ்’டமர்

    15. ‘ந்தா... போய்ட்டு வா...!

    16. நான்தாண்டா டாக்டர்...!

    17. எதிரும் புதிரும்

    18. வேஷங்கள்...!

    19. ‘போலிகள்’

    20. வீரர்கள்...!

    21. சாதனைகள்

    22. யோக்கியன்

    23. சர்க்கார் மெத்தைகள்

    24. யாருக்கு வந்த விருந்தோ?!

    25. தாம்பத்யம்

    26. அடையாளம்

    27. ‘சின்னப்புள்ளை ஞாபகம்...’

    28. முதல் கேஸ்

    29. கதாசிரியன்

    30. தேடல்

    31. பரம்பரை

    32. அர்த்தங்கள்...!

    33. ‘பிரம்மாக்கள்’

    34. நம்ம வீட்டுத் தம்பி!

    35. லோன்

    36. நரகம்

    37. ஊர்வலம்

    38. ‘மகளுக்கு வந்த கடிதம்’

    39. பேறுகாலம்

    40. காவல் பூனைகள்

    41. பிள்ளையைப் பெற்றவன்

    42. நாப் பழக்கம்

    43. ‘வசதிகள்’

    44. வாசகன்

    45. தகுதிகள்

    46. பைத்தியங்கள்...!

    47. ருக்குமணி ராக்கெட் வருது!

    48. நியாயம் பேசுறவங்க...

    49. ஏமாந்துட்டியே...!

    50. பூலாங்குளத்துக்கு பஸ் விடு

    51. இன்வெஸ்ட்மென்ட்

    என்னுரை

    முதல் முதலாகத் தமிழில் உரைநடையில் எழுதப்பட்டதே ஒரு நகைச்சுவை நூல்தான் என்பதை அறியும்போது பெருமையாக இருக்கிறது. அந்தப் புத்தகம் ‘பரமார்த்த குருவின் கதைகள்’ எழுதியவர் வீரமாமுனிவர்.

    இரண்டாவதும் நகைச்சுவை கலந்த நாவல்தான் அது ‘பிரதாப முதலியார் சரித்திரம்.’ இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், தமிழனின் நகைச்சுவை உணர்வை.

    சிரிக்கவே சிரிக்காதவன் ஒரு மனிதனா? புன்னகைக்காதவை மிருகங்கள்தான்.

    புன்னகைப் பற்றிய ஆராய்ச்சி முடிவு மொத்தம் 18 வகையான புன்னகைகள் இருப்பதாகக் கூறுகிறது. உலகப் புகழ்பெற்ற ஓவியம் ‘மோனாலிஸா’ அதன் புன்னகைக்காகவே புகழப்படுகிறது.

    நகைச்சுவை என்பது மகிழ்ச்சியில் பிறப்பது மட்டுமல்ல. அது மகிழ்ச்சியையும் பிரசவிக்கிறது!

    ஆங்கிலேயர்கள் சிரிப்பை இருபது வகைகளாகப் பிரித்தார்கள். அதில் விட் (Wit), ஹியூமர் (Humour), ஜோக் (Jake), சடையர் (Satire) என்று யாரையும் புண்படுத்தாத பண்பாடு மிக்க சிலவற்றையே பயன்படுத்துகிறோம் நாம்.

    தமிழில் சிரிப்பை, முறுவல், நகை, புன்னகை, இளநகை, குறுநகை, பெருநகை என்றெல்லாம் பிரித்துள்ளார்கள். இன்னும் குழந்தைச் சிரிப்பு, தெய்வீகச் சிரிப்பு, வசீகரச் சிரிப்பு, கேலிச் சிரிப்பு, கிண்டல் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, அலட்சியச் சிரிப்பு, விரக்திச் சிரிப்பு என்று ‘கலைவாணர்’ பட்டியலிட்டுப் பாடியதுபோல நிறைய வகைப்படுத்தியும் வைத்துள்ளார்கள்.

    முல்லாவின் குட்டிக் கதைகளும், பீர்பால், தெனாலிராமன், மரியாதைராமன் கதைகளும் பிரபலமானவை. ஆங்கிலத்தில் பெர்னாட்ஷா, சார்லஸ் டிக்கின்ஸ், மார்க்ட்வைன் போன்றோரும் நல்ல நகைச்சுவையாளர்கள்.

    கொஞ்சம் விரசமானாலும், ரசமானது குஷ்வந்த் சிங்கின் சர்தார்ஜி ஜோக்குகள்.

    தமிழில், நாடோடி, தேவன் கல்கிக்கப்புறம் நம்பிக்கை நட்சத்திரம் பாக்யம் ராமசாமி அவர்கள்தான்.

    முன்பு நறுக்குத் தெரித்தாற்போல ரசிக்கும்படி குட்டி கதைகள் சொன்னவர்கள் ரெண்டே பேர்தான். ஒருத்தர் சிரிப்புக்கோர் சின்ன அண்ணாமலை. இன்னொருத்தர் வாரியார். எனக்குத் தெரிந்த வரையில் தற்போது குட்டிக் கதைகள் சொல்ல தமிழில் ஆளில்லை.

    சிரிப்பை சீரியஸாக எடுத்துக்கொண்ட ஒரே ஆள் P.H. பாண்டியன் என்கிற முன்னாள் சபாநாயகர் மட்டும்தான். அவர்தான் ஒரு ஜோக்குக்காக பத்திரிகை ஆசிரியரையே ஆறு மாதம் தண்டித்தவர்.

    மற்றபடி இன்றைக்கு எழுதுகிறவர்களும் சரி, படிக்கிறவர்களும் சரி, ஜோக்கை விளையாட்டாக, தமாஷாக எழுதிக் கொண்டிருக்கிறார்களே அல்லாது அதன் சீரியஸ்னஸ் அறிந்தவர்கள்போலத் தெரியவில்லை.

    தொற்றுநோயைவிட படுவேகமாகப் பரவக்கூடியது ‘ஜோக்’ மட்டும்தான். அதனால்தான் அதற்கு ‘காபிரைட்’ இல்லாமல்... எந்த ஜோக்கை, யார் வேண்டுமானாலும் தங்கள் சொந்தச் சரக்கைப்போல அவிழ்த்து விடுவதைக் கேட்கிறோம், பார்க்கிறோம். இன்றைக்கு எழுத்தாளர்கள் மட்டுமில்லாமல், நாடகம், சினிமா, டி.வி. சீரியல் என்று சக்கைப்போடு போடும் அத்தனை பேரும், ஜோக்குகளைக் காப்பியடித்து தோரணம் கட்டி பிழைப்பாகவே நடத்திக்கொண்டு வருகிறார்கள். எனது ஜோக்குகளையே சினிமாவில் கவுண்டமணியும், செந்திலும் பேசுகிறபோது, நிஜமாகவே நான்தான் அவர்களது ஜோக்கை காப்பியடித்துவிட்டேனோ என்று சமயத்தில் குழம்பிப் போகிறேன். ஊரான் எழுதின ஜோக்காச்சே என்று எவரும் கிஞ்சித்தும் யோசிப்பதில்லை, வாழ்க வளமுடன்!

    இதோ இன்னொரு தொகுதி. எழுபதுக்கும் மேற்பட்ட கரும்பான குறும்பான குட்டிக் கதைகள். அங்கங்கே கொஞ்சம் சீரியஸான சமாச்சாரமும் உண்டு. போனஸாக ஒரு குட்டி நாடகம், ஒரு டிவி தொடருக்காக தயாரிக்கப்பட்டு கைவிடப்பட்டதும் கூட. பெயர் ‘போஸ்ட் மார்ட்டம் சக்ஸஸ்!’

    இதில் உள்ள பல கதைகளை அவ்வப்போது வெளியிட்டு ஆதரவு தந்த குமுதம், விகடன், குங்குமம், சாவி, தாய், வாரமலர், மந்திரக்கோல், சிரிப்பே சிறப்பு ஆகிய தமிழ் வார இதழ்களுக்கும், வழக்கம்போலத் தொகுத்துத் தந்த என் மனைவி திருமதி. ஜெயாபாரதிக்கும், அவ்வப்போது ஆலோசனை நல்கும் அருமை நண்பர் திரு. கமலா கந்தசாமி அவர்களுக்கும், திரு. ஜெ. பிஸ்மி அவர்களுக்கும் அப்புறம் வாசகர்களாகிய உங்களுக்கும் நன்றி.

    திருத்துறைப்பூண்டி

    28-2-2001.

    என்றென்றும் அன்புடன்

    கரடிகுளம் ஜெயபாரதி ப்ரியா

    1

    கோர்ட்டுக்குப் போகலாமா...?

    இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தர் சொன்னார்:

    ஆனாலும் நீங்க இவ்வளவு அவசரப்பட்டிருக்கக்கூடாதுண்னே!

    ஏன்...?

    கேவலம் ஒரு அம்பது ரூபாக் காசுக்காக கோர்ட்டுக்கே போனீங்களாமே?

    அப்போ... கொடுத்த கடனைத் திரும்பக் கேட்கக் கூடாதுங்கிறியா?

    கேட்க வேண்டாம்னு சொல்லலே... அவசரப்பட்டிருக்க வேண்டாம்னு நினைச்சேன்...!

    அடப் போய்யா... எத்தனை வருஷமாச்சு தெரியுமா? கடனைக் கேட்டு அவன் வீட்டுக்கு நூறு தடவை நடையா நடந்திருக்கேன்...!

    அப்பிடியா...?

    பின்னே நடு ரோட்டுல வழிமறிச்சும்கூட மானத்தை வாங்கினேன், அப்பவும் தரலே...!

    அடக் கடவுளே...!

    வேற வழியே இல்லாமத்தான்பா கோர்ட்டு வரைக்கும் போனேன்...!

    ஆனாலும் அம்பது ரூபாய்க்காக...

    என்னடா அம்பது ரூபான்னா எளக்காரமா இருக்கா? ஒரு ஆள் காலையிலேருந்து சாயந்தரம் வரை இரத்தத்தை வியர்வையா வடிச்சு உழைச்சாலும் முப்பது ரூபாதான் சம்பளம் கிடைக்குது... தெரியுமா?

    வாஸ்தவம்தான். ஆனா நான் சொல்ல வந்தது என்னன்னா...

    என்னய்யா சொல்ல வந்தே?

    இல்லே.. கேவலம் அம்பது ரூபாய்க்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யணுமா?

    ஆயிரக்கணக்கில் ஏன் செலவாகுது?

    பின்னே கோர்ட்டுக்குப் போனா வக்கீலுக்கு ஃபீஸ் அழணுமே?

    வக்கீலுக்கு ஃபீஸா... அதெதுக்கு?

    பின்னே... கோர்ட்டுக்குப் போய் வக்கீல் வச்சு வாதாடினா ஆயிரக் கணக்கில் செலவாகாதா?

    நாசமாப் போச்சு போ. நான் அம்பது ரூபாயை வசூலிக்க கோர்ட்டு வரைக்கும் போனதாச் சொன்னது கேஸ் போட்டு வாதாடி வசூலிக்கிறதுக்கில்லப்பா...!

    பின்னே எதுக்காக கோர்ட்டுக்குப் போகணும்?

    "அடப்பாவி...

    Enjoying the preview?
    Page 1 of 1