Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennanga, Konjam Siringa!
Ennanga, Konjam Siringa!
Ennanga, Konjam Siringa!
Ebook90 pages26 minutes

Ennanga, Konjam Siringa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அலுவலகங்களில் வேலை பார்க்கும் அதிகாரிகள் முதல் ப்யூன்கள் வரை, பிச்சைக்காரன் முதல் கோடி லஞ்சம் வாங்கும் குடிகாரன்கள் வரை 'பேராசையே' தலைவிரித்தாடுகிறது. பெண் குழந்தை பெற்ற பெற்றோர்களின் துன்ப நிகழ்வுகளையும் ஒரு, நகைச்சுவை துணுக்குகளாக ரசித்துப் பார்ப்போம். வாருங்கள்...! "என்னங்க கொஞ்சம் சிரிங்க..."

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580167409995
Ennanga, Konjam Siringa!

Read more from Karadikulam Jeyabharathypriya

Related to Ennanga, Konjam Siringa!

Related ebooks

Related categories

Reviews for Ennanga, Konjam Siringa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennanga, Konjam Siringa! - Karadikulam Jeyabharathypriya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என்னங்க, கொஞ்சம் சிரிங்க!

    Ennanga, Konjam Siringa!

    Author:

    கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா

    Karadikulam Jeyabharathypriya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/karadikulam-jeyabharathypriya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கரடிகுளம் ஜெயாபாரதி ப்ரியா

    தூங்கு மூஞ்சி ஆபீஸ் ஜோக்ஸ்:

    கணவன் மனைவி ஜோக்ஸ்:

    டாக்டர் - நர்ஸ் நோயாளி ஜோக்ஸ்:

    அரசியல்வாதி ஜோக்ஸ்:

    பிச்சைக்கார ஜோக்ஸ்:

    தீபாவளி ஜோக்ஸ்:

    மாணவர் ஜோக்ஸ்:

    கலப்பட ஜோக்ஸ்:

    திருடன் - போலீஸ் ஜோக்ஸ்:

    காதலர் ஜோக்ஸ்:

    தண்ணீர் பஞ்ச ஜோக்ஸ்:

    பேய் ஜோக்ஸ்:

    அப்பவே சொன்னேனேக் கேட்டியா?

    கரடிகுளம் ஜெயாபாரதி ப்ரியா

    சிதம்பரனார் மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, கழுகு மலைக்கு அருகில் உள்ள கரடிகுளம் எனும் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் வைத்த பெயர் பாரதி. பெயரோடு மனைவி ஜெயா, மகள் ப்ரியா ஆகியோர் பெயர்களைத் தன் பெயரோடு இணைத்து, ‘கரடிகுளம் ஜெயா பாரதி ப்ரியா’ ஆகிவிட்டார்.

    இவரது தந்தையார், அமரர் V. M. சம்பாரி அவர்கள் தென்மாவட்டங்களில் மிகப் பிரபலமான ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

    கடந்த இருபது வருடங்களாக, சுமார் 10,000 நகைச்சுவைத் துணுக்குகளும், 1,000 புதுக் கவிதைகளும் 450 சிறு கதைகளும் வெளிவந்துள்ளன. தமிழில் வரும் அனைத்துப் பத்திரிகைகளிலும் மட்டுமல்லாமல் மலையாள மனோரமா, மங்களம் போன்ற மலையாளப் பத்திரிகைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இந்தியன் வங்கி திருத்துறைப்பூண்டி கிளையில் பணிபுரியும் இவர் கொஞ்சகாலம் திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள் நடத்தி வந்த ‘சிரிப்பே சிறப்பு’ எனும் நகைச்சுவை மாத இதழிலும் துணையாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

    வானொலி, டி.வி.யிலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளரின் படைப்புகள், பல்கலைக்கழகத்தில் M.Phil பட்டத்திற்காக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அது இவரது நகைச்சுவைத் துணுக்குகள்தான் என்ற பெருமைக்குரியவர்.

    தூங்கு மூஞ்சி ஆபீஸ் ஜோக்ஸ்:

    மேனேஜர் ஊழியர்களைப் பார்த்து,

    ஆபீஸ்ல தூங்குங்க வேண்டாம்னு சொல்லலை... ஆனா தள்ளித் தள்ளிப் படுத்துத் தூங்குங்க... லேடி கிளார்க்குகளெல்லாம் ஆம்பளைக் கிளார்க்குகள் மேல ‘வேணும்னே காலைத் தூக்கிப் போடறதா’ நிறையக் கம்ப்ளைண்ட் வருது... பாத்துக்குங்க...?

    ***

    கொஞ்ச நேரம் தூங்கறாரு, அப்புறம் முழிச்சுக்கிறாரு. காலம்பறையிலேருந்து ‘விட்டு விட்டு’த் தூங்கறாரே யாரது...?

    அவரு ‘டெம்பரரி’ ஸ்டாஃபுங்க, அப்பிடித்தான் தூங்குவாரு.

    ***

    டேய் பசங்களா... கண்ணை மூடிக்கிட்டுத் ‘தூங்குற மாதிரி’ என்னடா பண்றீங்க...?

    ‘ஆபீஸ் விளையாட்டு’ விளையாடறோம் மாமா...!

    ***

    பியூன்: இவருதான் சார் நம்ம மேனேஜர் மன்னார்சாமி.

    கிளார்க்: புது மேனேஜரா... இவரு எப்ப வந்தாரு, பழைய ஆள் என்ன ஆனாரு?

    பியூன்: நீங்க தூங்கிட்டிருக்கும்போதே அவரு ரிடையர்டு ஆகி இவரு புரமோஷன்ல மேனேஜராகிட்டாருங்க.

    ***

    சார் யார்னு தெரியுதா?

    ஏன் தெரியாம? ஹெட் ஆபீஸ் பெர்ஸனல் டிபார்ட்மென்டுல பக்கத்து பக்கத்து சீட்டுல நாலு வருஷம் ஒண்ணாத் தூங்கியிருக்கோமே?

    ***

    ராமசாமி சார் யாரு...?

    அதோ... ஏ. 1. பெர்த்துல ‘தூங்கறாரே’ அவருதான்.

    ***

    ஏன் எல்லாரும் முழிச்சுக்கிட்டிருக்காங்க?

    தூங்கித் தூங்கி அலுப்பாகிப் போய் என்ன பண்றதுன்னு தெரியாம ‘முழிச்சுக்கிட்டிருக்காங்க!’

    ***

    தூக்கக் கலக்கத்திலிருந்த மேனேஜர் வந்திருந்த மனிதரிடம் எரிச்சலுடன் கேட்டார்...

    உமக்கென்னய்யா வேணும்?

    உங்க ஆபீசுக்கு ‘இன்ஸ்பெக்ஷன்’ வந்திருக்கேன்...!

    அப்டியா...

    Enjoying the preview?
    Page 1 of 1