Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nodi Kathaigal
Nodi Kathaigal
Nodi Kathaigal
Ebook80 pages20 minutes

Nodi Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் 20/20 மேட்ச்போல தான் இலக்கிய உலகில் ஒரு பக்கக் கதைகளும், நொடிக் கதைகளும். வாசிக்க அதிக நேரம் இல்லை எனக் கூறும் வாசகர்களையும் படிக்க வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இவைகள் ஜனரஞ்சக பத்திரிகைகளில் அதிகம் வெளியிடப்படுகின்றன. ஒரு சில நொடிகளில் படித்துவிட முடிகிற எளிமைதான் இவற்றின் பலம். ஆனால், எழுதுகிறவர்களுக்கு இது மிகவும் சவாலான பணி. ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு விரட்ட முனையும் மட்டையாளரின் துரித வேகமும், கவனமும், ஒவ்வொரு வார்த்தைகளிலும் எழுதுகிறவர்களுக்கு வர வேண்டும்.

இப்படியான கதைகளை 10 Second Story என்ற தலைப்பில் ஆனந்த விகடன் 2016-2017-ஆம் ஆண்டு வாக்கில் நிறையவே வெளியிட்டு வந்தது. அவற்றில் பிரசுரமான ஒவ்வொரு கதைகளுக்கும் ரூ.500/-ஐ சன்மானமாகவும் கொடுத்து வந்தது. இங்கே இடம்பெற்றிருக்கும் கதைகள் பலவும் அவற்றின் தரத்துக்கு எழுதப்பட்டவை. கதைகள் மூலமாகவே நன்னெறிகளையும், நற்பண்புகளையும் வளரும் சமுதாயத்திடம் ஊட்டி வளர்த்தவர்கள் நமது தாத்தா, பாட்டிகள். கதைகளை வாசிப்பதென்பது நேர விரயமல்ல. அது உங்களை செதுக்கும் ஒரு சிறு உளி.

இந்நூல் புதிதாக கதைகள் எழுத வருகிறவர்களுக்கு பெரிதும் உதவும். மேலும் வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும் பயன்படும்.

Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580165009821
Nodi Kathaigal

Read more from Thirumayam Pe. Pandian

Related to Nodi Kathaigal

Related ebooks

Reviews for Nodi Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nodi Kathaigal - Thirumayam Pe. Pandian

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நொடிக் கதைகள்

    Nodi Kathaigal

    Author:

    திருமயம் பெ. பாண்டியன்

    Thirumayam Pe. Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thirumayam-pe-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    மாற்றம்

    வருமானம் குறைந்ததும் வேறு கோவிலுக்கு மாறிவிட்டனர்... பிச்சைக்காரர்கள்!

    ***

    நம்பிக்கை

    ஆண்டவனே நம்ம பக்கம்தான் சொன்னான்... கோவிலில் திருடியவன்!

    ***

    வழக்கு

    வழக்கில் தனக்கு நல்ல தீர்ப்பு வருமா? கவலைப்பட்டார்... ஊர் நாட்டாமை!

    ***

    ஆசை

    இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடிக்க ஆசைப்பட்டாள்... டைவோர்ஸ் வாங்கினதும் நடிகை!

    ***

    கவலை

    யாரிடம் முறையிடுவார்...? கடவுளின் கவலைகள்!

    ***

    துரத்து

    குழந்தைகளின் அம்மா, அப்பா விளையாட்டில் அம்மாவாக நடித்த குழந்தை சொன்னது... உங்க அம்மாவை என்னால சமாளிக்க முடியலை. முதியோர் இல்லத்துல விட்டுடுங்க... என்று!

    ***

    பிரார்த்தனை

    வாட்ஸ்-அப் குரூப்பில் இன்றைக்கு எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என கடவுளை வேண்டினார்... அட்மீன்!

    ***

    வேண்டுதல்

    மகனுக்கு வேலை கிடைக்க சாமியை வேண்டிக்கொண்டு, அவசரமாக வேலைக்கு கிளம்பினார்... ரிட்டையர்டான அப்பா!

    ***

    சேமிப்பு

    குழந்தை சிறுக, சிறுகச் சேர்த்த உண்டியல் பணம் கோவிலுக்கு காணிக்கையாய் போயிற்று... அப்பா குடி மறக்க!

    ***

    நிறுத்தம்

    அழைப்புமணி ஒலித்ததும் அம்மாவும், அப்பாவும் நிறுத்தினர்... சண்டையை!

    ***

    கிணறு

    வற்றிய கிணற்றில் கிடந்தன... வாட்டர் பாட்டில்கள்!

    ***

    வீடு

    கட்டட வேலைக்கு சித்தாள் அம்மாவோடு வந்திருந்த குழந்தைகள் விளையாடினர்... மணல்வீடு கட்டி!

    ***

    பொறுமை

    பேஷண்ட்டின் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொன்னார் அரசு டாக்டர்... தன் கிளினிக்கில்!

    ***

    வளர்ப்பு

    விற்பனை அதிகரிக்க மீனவன் வீட்டில் வளர்த்தான்... வாஸ்து மீன்கள்!

    ***

    கூட்டம்

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது... பிரசாதத்துக்கு!

    ***

    அனுபவம்

    ஒற்றை பலூன் வாங்கி தந்ததும் சமாதானமான பையன், வளர்ந்ததும் சொத்து முழுவதையும் கேட்கிறான்!

    ***

    படம்

    படத்தோட ஒன்லைன் கேட்ட புரொடியூசரிடம்,டென் செகண்ட் கதை சொன்னார் இயக்குனர்!

    ***

    வீடு

    புது வீட்டில் நோயாளி அம்மாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது... பின்புற மாட்டு கொட்டகையில்!

    ***

    சந்திப்பு

    வேலைக்குச் செல்லும் கணவனும், மனைவியும் சந்தித்துக்கொண்டனர்... வீக் என்ட்டில்!

    ***

    நடிப்பு

    நடிப்பு வராத மும்பை நடிகை, தாராளம் காட்டினார்... கவர்ச்சியில்!

    ***

    லைக்ஸ்

    ஃபேஸ்புக்கில் தனக்கு லைக்ஸ் போடாத மனைவியை

    Enjoying the preview?
    Page 1 of 1