Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நான் தேடிய தேவதை...
நான் தேடிய தேவதை...
நான் தேடிய தேவதை...
Ebook118 pages40 minutes

நான் தேடிய தேவதை...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆனந்த இனியன்... கோயம்புத்தூரில் புதிதாய் தொழில் தொடங்க இடமொன்றைப் பார்க்கச் சென்றான்!

அவனுடைய தந்தை கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் போன்ற பெருநகரங்களில் நகைக்கடை, துணிக்கடை, நூல் மில் போன்றவற்றை நிறுவி கடலூர் மாவட்டத்திற்குள் தொழில் செய்தார்! கடலூரைச் சுற்றி எக்கச்சக்க விவசாய நிலங்கள் இருந்தன! அங்கு முந்திரி, பலா, திராட்சை, தென்னை போன்றவை பயிரிடப்பட்டன!

ஆனந்த இனியன் இலண்டனில் எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு இருபத்து மூன்று வயதில் இந்தியா வந்தான்! குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் தனியொருவனாய் கையிலெடுத்தான்!

நேரம் காலம் பாராமல் உழைத்தான்! இப்போது வயது முப்பது ஆரம்பம்! இந்த ஏழு வருடங்களில் அபார வளர்ச்சியைக் கண்டான்!

டூவீலர் ஷோரூம், ஃபோர் வீலர் ஷோரூம், பெரிய பெரிய மெகா மால் என தொழில் விரிந்து பரந்தது!

விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்ட தலைநகரங்களில் தொழில் விரிந்து பரவியது! 'நடு தமிழகத்தின் நெம்பர் ஒன் இளம் தொழிலதிபர்' என பெயர் எடுத்துவிட்டான்.

ஆனந்த இனியன் நல்ல சிவந்த நிறம்! ஆண்மை தழும்பும் அழகன்! பேரம்சத்துடன் நெடுநெடு உயரத்தில் பரந்து விரிந்த தோளுமாய் இருப்பான்!

அவனைக் கடக்கும் எந்தப் பெண்ணும் அவன் மேல் ஆசைப்படாமல் கடந்து போக மாட்டார்கள்!

அழகோடு பணமும், சொத்தும், தொழில்களும் இருந்ததால்... அவனை மயக்க முற்பட்ட பெண்கள் ஏராளம்!

ஆனால், அவன் எந்தப் பெண்ணிடமும் மயங்கியதில்லை. அவன் காணும் பெண்களில் ஒருத்திகூட அவன் மனதை வென்றதில்லை!.

அவனுள் தன் வருங்கால மனைவியைப் பற்றிய கற்பனை உண்டு! நிலவு போன்ற வட்ட முகம்! பிறை நெற்றி... தாமரை இதழ்... வெண்முல்லை மொட்டாய் பற்கள்... குழிவிழும் கதுப்பு கன்னங்கள்... கொடியிடை... அடர்ந்த நீண்ட தலைமுடி... நல்ல உயரம்... என்று பார்த்துப் பார்த்து ஒரு உருவத்தை மனதில் செதுக்கி வைத்திருக்கிறான்! அந்த உருவம் அவன் முன் நிஜத்தில் வந்தால்தான் அவன் மனம் நெகிழும்! மயங்கும்!

அவனுடைய பெற்றோர் அவனுக்கு திருமணம் செய்து பார்க்க பேராசைப்படுகின்றனர்! அவனுடைய கற்னையால்தான் திருமணம் தள்ளிப் போகிறது என்று சில நேரம் தன் மேலேயே ஆனந்த இனியனுக்கு கோபம் வரும்!

அவன் நண்பர்கள் பெரும்பாலானோருக்கு திருமணம் முடிந்து விட்டது!

"உன் மகனுக்கு எப்போது திருமணம்?" என்று கேட்போருக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் மீது பரிதாபம் ஏற்படுகிறது!

ஆனால், அவர்கள் காட்டும் எந்த ஒரு பெண்ணையும் கட்டிக் கொள்ள மனசு வரமாட்டேன் என்கிறது!

கோயமுத்தூரின் நடு மையமான காந்திபுரத்தில்... பஸ் ஸ்டாண்டின் அருகிலேயே அரை ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இடத்தைக் காட்டினான், புரோக்கர்! இடம் ரொம்ப பிடித்துப் போனது! பட்டு, தங்கம், வைரம், வெள்ளி என தனித்தனி பிரிவு, சிறுவர்களுக்கான ஆடைப் பிரிவு, பெண்களுக்கான ஆடைப்பிரிவு, ஆண்களுக்கான ஆடைப் பிரிவு, மளிகை, பழங்கள், காய்கறிகள், தோல் பொருட்கள், ப்ளாஸ்டிக் பொருள்கள் என விற்பனை செய்யும் பெரிய அடுக்குமாடி ஷாப்பிங் மால் கட்டதான் இடம் பார்த்துக் கொண்டிருக்கிறான்!

என்ன விலை என்றாலும் வாங்கிவிட முடிவு செய்தான்!

"இடம் பிடிச்சிருக்கா, சார்?" என புரோக்கர் கேட்டான்.

"பிடிச்சிருக்குப்பா!" என்றான் ஆனந்த இனியன்.

"இதுபோல இடம் கிடைப்பது அரிது, சார்! இந்த இடம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு வந்தது! இந்த இடம் விற்பனைக்கு வந்தது நிறைய பேருக்குத் தெரியாது! சார்!"

"இந்த இடத்தின் சொந்தக்காரர் ஏன் விற்கிறார்?"

"பணத்தேவைதான், சார்! விலை அதிகமாகத்தான் இருக்கும்!"

"பரவாயில்லை! இதையே முடித்து விடலாம்!"

"நீயும், இடத்தின் சொந்தக்காரரும் நாளை ஹோட்டல் கௌதம்' வந்து விடுங்கள்! அங்கேதான் தங்கப் போகிறேன்!" என்றான்.

 

Languageதமிழ்
Release dateFeb 27, 2024
ISBN9798224701964
நான் தேடிய தேவதை...

Read more from R.Maheswari

Related to நான் தேடிய தேவதை...

Related ebooks

Reviews for நான் தேடிய தேவதை...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நான் தேடிய தேவதை... - R.Maheswari

    1

    கடலூர்!

    நகரைவிட்டு தள்ளி... மெயின் ரோட்டிலேயே... அந்த மிகப்பிரமாண்டமான பங்களா இருந்தது!

    "துதிப்போர்க்கு வல்வினைபோம்,

    துன்பம்போம் நெஞ்சிற்

    பதிப்போர்க்குச் செல்வம்

    பலித்துக் கதித்தோங்கும்

    நிஷ்டையும் கை கூடும்

    நிமலரருள் கந்தர் சஷ்டி கவசந்தனை..."

    ராஜேஸ்வரி அம்மாள் பூஜையறையில் விளக்கேற்றி... ‘கந்தர் சஷ்டி கவசம்’ பாடிக் கொண்டிருந்தார்!

    காலை உணவை சமைத்து விட்டுதான் ராஜேஸ்வரி அம்மாள் பூஜையறைக்குள் நுழைந்தார்!

    எத்தனை வேலைக்காரர்கள் இருந்தாலும்... தனது கணவருக்கும், மகனுக்கும் பார்த்துப் பார்த்து சமைத்து... தன் கையாலேயே பரிமாறுவார்! வேலைக்காரர்கள் சுத்தம், சுகாதாரம், சமையலுக்குத் தேவையான காய் கறிகளை நறுக்கித் தருவார்கள்!

    கணவன் மேலும், மகன் மீதும் பெரும்பாசம் கொண்டவர்! எத்தனைப் பார்த்துப் பார்த்து வேலைக்காரர்கள் சமைத்தாலும்... பெற்ற தாய்... தனது அன்பையும், அக்கறையையும், பாசத்தையும் கலந்து சமைப்பது போல இருக்காது என்பதால்... உடம்புக்கு முடியவே இல்லையென்றாலும்... பெரும் சிரமப்பட்டு... அடுப்பருகில் நின்று கிண்டி, கிளறி, தாளித்து என்று உணவைச் சமைத்து விடுவார்!

    வேலைக்காரர்களுக்கு பின்புறம் குடியிருப்பு வீடுகள் உண்டு! அங்கே அத்தனை பேருக்கும் உணவு சமைக்கப்படும்!

    முரளிதரன் - ராஜேஸ்வரியின் ஒரே தவப்புதல்வன், ஆனந்த இனியன்! நீண்ட, பத்து வருட காத்திருப்பிற்கு பிறகு பிறந்தவன், ஆனந்த இனியன்!

    ஆனந்த இனியன் குளித்துவிட்டு... ஆகாய வண்ண முழுக்கை சட்டையும், கறுப்பு பாண்டும் அணிந்தான்! தலையை வலது புறம் வகிடெடுத்து சீவினான்! செண்டை எடுத்து மேலே பீய்ச்சினான்!

    லேப் டாப் அடங்கிய சிறிய பெட்டியை எடுத்துக்கொண்டு... மாடிப்படிகளில் இரண்டிரண்டு படியாய் தாவி இறங்கினான்!

    டைனிங் ஹாலில் அப்பா முரளிதரன் அமர்ந்து இவனுக்காக காத்திருந்தார்!

    வாப்பா... இரவு உன்னறையில் ரொம்ப நேரம் லைட் எரிந்ததே... ரொம்ப நேரம் விழித்திருந்தாயா, ஆனந்தா...?

    ஆமாம்ப்பா! படுக்க விடியற்காலை மூன்றாகி விட்டது! இன்று ஆஸ்திரேலியனோடு தொழில் முறை ஒப்பந்தம் போடப் போகிறோம், இல்லையா...? அந்த வேலை கொஞ்சம் பாக்கி இருந்தது! அதை முடிக்க லேட் நைட்டாகி விட்டதுப்பா! என மகன் கூறவும்...

    வேலை வேலைன்னு உடம்பை வருத்திக்காதே, ஆனந்தா! அங்கு வந்த ராஜேஸ்வரி அம்மாள் கூறவும்... சரிம்மா! ஆமாம்... இன்றைக்கு என்ன டிபன்?

    இட்லி, பொங்கல்! தொட்டுக்க சட்னி, சாம்பார்!

    தினமும் இதே தானா...? போர் அடிக்குதும்மா! ஏதாவது வகை வகையாக சமைக்கக்கூடாதா? என்றான், ஆனந்த இனியன்.

    எனக்கு இவ்வளவுதான் தெரியும்! என கொஞ்சம் வேகமாய் கூறவும்...

    ஏம்மா கோபித்துக் கொள்கிறே...?

    அம்மா சமையல் பிடிக்கலேன்னால் நீ ஒரு கல்யாணத்தைச் செய்து கொள்! அவள் வந்து உனக்கு வகை வகையாக சமைப்பாள்!

    இந்தக் காலத்தில் எந்த பொண்ணும்மா சமைக்கப் பழகி இருக்கிறாங்க? ம்கூம்! அதுவும் மேல் தட்டு வர்க்கத்து பொண்ணுங்களுக்கு தங்கள் பங்களாவில் சமையலறை எந்த மூலையில் இருக்குனுகூட தெரியாது! அங்கே இங்கே சுற்றி என் கல்யாணத்தில் வந்து நிற்கலேன்னால் உங்களுக்கு பொழுதே போகாதே! என ஆனந்த இனியன் புன்னகைக்கவும்.

    இதைப் பார், ஆனந்த இனியா! என்றவர் ஒரு கவரை நீட்டினார்!

    என்னம்மா இது?

    பொண்ணோட போட்டோ! எனவும் பிரித்துப் பார்த்தான்! ஒப்பாய் வெட்டிய முடியை முன்புறமாய் போட்டு... அழகான புன்னகையுடன் இருந்தாள், அந்தப் பெண்! நல்ல நிறத்தில் அழகாகத்தான் இருந்தாள்!

    பெண் அழகாக இருக்கிறாள், இல்லையா ஆனந்தா...?

    ஆமாம்மா!

    அப்போ இவளை உனக்கு பேசி முடித்து விடலாமா...?

    என்னம்மா சொல்லறீங்க...? என அவன் அதிர் வுடன் கேட்கவும்...

    ஊர் சிதம்பரம்! அப்பா கைலாஷ் பெரிய பிசினஸ் மேன்! உனக்குக்கூட தெரியும்! அவர் பெண் ப்ரியா நரம்பியல் மருத்துவராக இருக்கிறாள்! சிறந்த டாக்டர்ன்னு நகரில் பேர் எடுத்துக் கொண்டிருக்கிறாளாம்! உன்னைக் கட்டிக்க இதைவிட வேறென்ன தகுதி வேண்டும், ஆனந்தா...? ம்...? என்று ராஜேஸ்வரி கேட்கவும்...

    இவள் வேண்டாம்!

    ஏன்? பெண் அழகாகதானே இருக்கிறாள்?

    ஆமாம்!

    அப்புறம் எதற்கு மறுக்கிறே, ஆனந்த இனியா...?

    பிடிக்கவில்லைம்மா!

    பெண் ரதிபோல இருக்கிறாள்! உனக்கும் இவளுக்கும் பத்துப் பொருத்தமும் பொருந்தி இருக்கு! கைலாஷ் நம்மோட சம்பந்தம் செய்துக்க பெரிசா விரும்பறார், இனியா! என முரளிதரன் சொன்னார்.

    அந்தப் பொண்ணுக்கும் உன்னைப் பிடிச்சிருக்காம்! டாக்டருக்கு படிச்ச பொண்ணுங்க எனக்கு டாக்டர் மாப்பிள்ளையே வேண்டும்ன்னு கேட்கும்ங்க! இந்தப் பொண்ணு உன்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கு! அதனால், சட்டென்று எந்த நிபந்தனையும் இன்றி உன்னைக் கட்டிக்கிறேன்னு சொல்லியிருக்கு! அம்மா ராஜேஸ்வரி சொல்லவும்...

    இதையெல்லாம் உங்களுக்கு யாரும்மா சொன்னது?

    ஏன்? நம்ம தரகர்தான்!

    அந்த வீணாப்போன தரகர் என் கையில் சிக்கினால் செத்தார்! ஒருநாள் நம்ம பங்களாவுல வைத்து எச்சரித்தும்... திரும்ப வருகிறார்ன்னால் என்ன அர்த்தம்? அந்தாளுக்கு என்மேல் பயமில்லேன்னுதானே?

    அவரை எதுக்கு குறை சொல்கிறே?

    அந்தாளு பொண்ணுங்க போட்டோவை தூக்கி வந்து உங்ககிட்ட கொடுக்கறதால்தானே நீங்க என் உயிரை வாங்கறீங்க!

    இந்தப் பொண்ணு ஏன் வேண்டாம்? ம்?

    பொண்ணு அழகாத்தான் இருக்கிறாள்! நிறமாகத்தான் இருக்கிறாள்! டாக்டராகவும் இருக்கிறாள்! அவளுக்கு எந்தக் குறையும் இல்லைதான்! ஆனால், அவளை என் மனசுக்குப் பிடிக்கலேம்மா!

    என்ன மனசோ... உன் பாழாப்போன மனசுக்கு ஒருத்தியையும் பிடிச்சி தொலைக்க மாட்டேங்குது! சொந்தம், சுற்றம், கம்பெனியிலன்னு ஏகப்பட்ட பெண்களைப் பார்க்கிறே! நாங்க காட்டுகிற பெண்களும் பேரழகிகளாகத்தான் இருக்கிறார்கள்! ஒருத்தியையும் பிடிக்கலேன்னால் என்ன அர்த்தம்?

    "அம்மா... உங்களுக்கு எப்படி புரிய வைக்கறதுன்னு தெரியவில்லை! ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் இவள்தான் உன் இணை... உன் துணைன்னு என் மனசு அவளைக் கை காட்டணும்! பார்த்த முதல் பார்வையிலேயே அவள் என் மனசை கவர்ந்து விடணும்! அந்த நொடியே கண்களின் வழி நுழைந்து... என் இதயத்துக்குள் நுழைந்து... சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடணும்! அவள் நினைவாகவே நாள் முழுக்க... உறங்கும்போது கூட என் மனசு அவளிடம் அலைபாயணும்!

    Enjoying the preview?
    Page 1 of 1