Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாறியது நெஞ்சம்..!
மாறியது நெஞ்சம்..!
மாறியது நெஞ்சம்..!
Ebook380 pages2 hours

மாறியது நெஞ்சம்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"தேங்க்ஸ் அப்பா! தடையா இருக்கேன்னு சாப்பாட்டுல விஷம் வெக்காம பாட்டி வீட்லயாவது கொண்டு வந்து விடணும்னு தோணிச்சே!" 

"நிலாம்மா...!" - பதறினாள் அழகம்மாள்.

"தப்பு இல்ல பாட்டி... இப்படித் தினம் தினம் கொட்டிக் கொட்டியே சாகடிக்கிறதுக்கு ஒரே நாள் விஷம் வெக்கிறது பெரிய தப்பு இல்ல!" - என்றாள் கசப்பாய்.

"ஏன்டா சீனு! அந்தப் படிச்ச புள்ள மனசு எவ்வளவு வேதனைப்பட்டா இந்த வார்த்தையைச் சொல்லும். ஏன்டா இப்படி இருக்கே? நீயும் மாறுவே மாறுவேன்னு எத்தனை நாளா தவிக்கிறேன்! 

அப்படி என்னடா இந்தப் புள்ள பாவம் பண்ணிச்சு? அதையாவது சொல்லித் தொலையேன்! ஏன் இவளை இப்படி கரிச்சுக் கொட்டுற?" 

"அம்மா...!" 

"டேய்! பத்துப் புள்ள பெத்தாலும் பெத்தவனுக்கு எல்லாப் பிள்ளையும் ஒன்னுதான்டா! உன்னையும் அப்படித்தானே வளர்த்தேன். உம் புத்தி மட்டும் ஏன் இப்படிப் போகுது?" 

"பாட்டி!"

"என்னடாக் கண்ணு?"

"நான் ராசியில்லாதவ... அதிர்ஷ்டக்கட்டைன்னு நீயும் என்னை விரட்டிடாதே பாட்டி. எனக்கு வேற எந்தப் போக்கிடமும் இல்ல பாட்டி!" - கண்களில் நீர் மல்க, தொண்டை அடைக்கக் கூறிய பேத்தியைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

"என்ன ராஜாத்தி இப்படிச் சொல்ற? நீ இந்தக் குடும்பத்தோட ராஜகுமாரிம்மா. உன் அப்பன் கிடக்கிறான் விடு. நானும் தாத்தனும் இருக்கிறவரைக்கும் உன் கண்ல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக்கூடாது. கண்ணைத் துடை." 

"பாட்டீ...!"

"இவன் என்ன கண்ணு மாப்பிள்ளை பார்க்கிறது? உனக்கு நான் பார்க்கிறேன் மாப்பிள்ளை. இந்த வீட்ல வெச்சு ஊரே மூக்கு மேல கைய வெக்கிற மாதிரி உன் கல்யாணத்தை நாங்க நடத்திக் காட்டுறோம். அழக்கூடாது. ம்...! என் கண்ணு இல்ல?" 

"என்ன? என் குழந்தை ஏன் அழுதிட்டு இருக்கா?" - என்றவாறே தோளில் கோணி மூட்டையோடு வந்தார் சண்முக சுந்தரம். 

"வாங்கப்பா! எதுக்குப்பா இவ்வளவு வெயிட்டைத் தூக்கிட்டு வர்றீங்க?" - தந்தையிடம் இருந்து கோணியை வாங்கினார் சீனிவாசன். 

"இது என்னப்பா கனம்? இருநூறு பனங்கிழங்கும் ஒரு கிலோ கருவாடும்தான். நீ உன் பையில் அடுக்கி வெச்சுக்க!" 

"சரிப்பா!" 

"நிலாக் கண்ணு! நீ ஏன்டா அழுறே? அப்பன் கிளம்புறான்னா?" 

"ம்... ஆ... ஆமாம் தாத்தா!"

"என்னம்மா நீ? உன் அப்பனுக்கு அங்க உங்க அம்மா, ரெண்டு புள்ளைங்க இருக்காங்க. நானும் உன் பாட்டியும் பாவமில்லையா? தனியாக் கிடக்கிறோமே! உன் படிப்புதான் முடிஞ்சு போச்சாமே!

இனிமேலாவது எங்ககூட இருக்கக்கூடாதாம்மா? இவ்வளவு பெரிய வீட்ல நாங்க மட்டும் முடங்கிக் கிடக்கிறோமே! நீயும் கூட இருந்தா எங்களுக்கு எவ்வளவோ ஆறுதலா இருக்குமேம்மா! உனக்கு என்ன வேணுமோ தாத்தா வாங்கித் தர்றேன். 

எங்க போகணுமோ பாட்டியைக் கூட்டிட்டுப் போ. இது நம்ம ஊரு. நீ எங்க வேணாப் போகலாம்... வரலாம். சண்முகசுந்தரம் பேத்தின்னா ஒரு பய பக்கத்தில வரமாட்டான். எங்க கூடவே இருக்கிறியாம்மா?" - தாத்தாவின் குரலில் மனம் உருகியது. 

தன்னைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கும் தந்தையைக் காட்டிலும் இவர்களின் அன்பு எத்தனை பெரியது! வருடத்தில் ஒரு முறை வந்து சில நாட்களே தங்கிவிட்டுப் போகும்போது கூடப் பாட்டியின் கண்கள் கலங்கும். பேத்தியின் மீது கொள்ளைப் பிரியம். 

இந்தப் பிரியத்தை உதாசீனம் செய்யக்கூடாது. தினமும் தந்தையிடம் அர்ச்சனை கேட்பதை விட இந்தக் கிராமத்தின் அமைதியில் தாத்தா பாட்டியின் மடியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட்டுப் போகலாம். வயதான காலத்தில் அவர்களுக்கும் ஆறுதலாய் இருக்குமே! பெருமூச்சுடன் நிமிர்ந்தாள் நிலா. 

"சரி தாத்தா! கடைசிவரைக்கும் உங்ககூடவே இருந்திடுறேன்!" - என்றவாறே தந்தையைப் பார்க்க, அவர் முகத்தில் துளியும் வருத்தமோ அதிர்ச்சியோ தென்படவில்லை. அதில் மனம் இன்னமும் பாரமாகிப் போனது. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 20, 2023
ISBN9798223487463
மாறியது நெஞ்சம்..!

Read more from Kalaivani Chokkalingam

Related to மாறியது நெஞ்சம்..!

Related ebooks

Reviews for மாறியது நெஞ்சம்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாறியது நெஞ்சம்..! - Kalaivani Chokkalingam

    1

    மஞ்சளும் உப்பும் சேர்த்து வேக வைத்திருந்த மரவள்ளிக் கிழங்கைப் பெரிய தட்டில் கொட்டி ஆவி பறக்கச் கொண்டு வந்தாள் அழகம்மாள். முக்காலியில் தட்டை வைத்துவிட்டு, சற்றுக் கோபமாய் நின்று கொண்டிருந்த மகனை நெருங்கினாள்.

    சீனு! எதுவா இருந்தாலும் பிறகு பேசலாம். முதல்ல உட்கார். கிழங்கு சூடா இருக்கு. சாப்பிடுய்யா. காபி எடுத்திட்டு வர்றேன்.

    இப்ப எனக்கு எதுவும் வேணாம்மா.

    வள்ளிக் கிழங்குன்னா உனக்கு உசுராச்சே. சோறுகூட வேணாம்னு கிழங்கை மட்டும் சாப்பிடுவியே.

    அதெல்லாம் அப்போம்மா. இப்ப இதெல்லாம் உடம்புக்கு ஒத்துக்கிடறதில்ல. சலித்துக் கொண்டார் சீனிவாசன்.

    ஏன்யா? உடம்புக்கு என்ன நோவு?

    உடம்புக்கு ஒரு கேடும் இல்ல. எல்லாம் நான் பெத்து வெச்சிருக்கேனே... அதனாலதான் என் உடம்பு, மனசு எல்லாம் நோகுது.

    சீனு! இப்படியெல்லாம் பேசாதய்யா. பாவம்... அது குழந்தைய்யா. அது என்ன பண்ணிச்சி உன்னை...!

    என்ன பண்ணலைன்னு கேளும்மா. அது பொறந்ததுல இருந்தே...

    பாட்டி! ஹைய்! மரவள்ளிக் கிழங்கு. மை ஃபேவரிட் கிழங்கு! - என ஓடி வந்த நிலா, ஆசையாய் இரண்டு துண்டை எடுத்தாள். தன்னைவிட உயரமாய் வளர்ந்து நின்ற பேத்தியை அணைத்து உச்சி முகர்ந்தாள் அழகம்மாள்.

    நிலா சிரித்துக்கொண்டே கிழங்கைச் சுவைக்க, சீனிவாசனின் முகம் கடுத்தது.

    ஏன் ரெண்டோட நிறுத்திட்ட? தட்டோட எடுத்துக்க வேண்டியதுதானே! - தந்தையின் குரலில் இருந்த கோபத்தை உணராமல் வியப்பாய்ப் பார்த்தாள்.

    அப்போ இது எல்லாமே எனக்குத்தானா?

    ஆமாண்டி கண்ணு. நீ வர்றேன்னுதான் தாத்தா காலையிலேயே தோட்டத்தில் போய்ப் பறிச்சிட்டு வந்தாரு. சாப்பிடு கண்ணு.

    தேங்க்யூ பாட்டி. உனக்கு மட்டும்தான் எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியுது! - என்றவாறு தட்டோடு எடுத்துக்கொண்டு மூங்கில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு சப்புக் கொட்டி அவள் சாப்பிட ஆரம்பிக்க, நெற்றியில் அறைந்து கொண்டார் சீனிவாசன்.

    கடவுளே! எனக்குன்னு வந்து பொறந்திருக்கு பாரு!

    ஏன்டா இப்படிச் சொல்ற? சின்னக் குழந்தைதானே!

    யாரு? இவ குழந்தையா? கழுதைக்கு இருபத்து மூனு வயசாகுது. இன்னொருத்தன் வீட்டுல போய் வாழவேண்டிய வயசாகிப் போச்சு. இன்னும் ஒரு சுதாரிப்பு கிடையாது.

    எம் பேத்திக்கு என்னடா குறைச்சல்? படிப்புல விளையாட்டுல எல்லாமே முத ஆளா இருக்காளே. வேற என்ன சுதாரிப்பு வேணும்?

    சும்மா இரும்மா. உன் பேத்தியை நீதான் மெச்சிக்கணும். வெறும் தத்திம்மா. யார்கிட்ட என்ன பேசணும், எங்கே எப்படி நடந்துக்கணும்னு ஒரு இழவும் தெரியமாட்டேங்குது.

    அப்படி என்னடா பண்ணினா?

    வேற ஒன்னும் வேண்டாம். நேற்று ட்ரெய்ன்ல வரும்போது என்ன பண்ணினான்னு கேளு!

    நிலாம்மா! என்னடா பண்ணினே?

    நான் ஒன்னுமே பண்ணல பாட்டி. அப்பாதான் சும்மா திட்டிட்டே வந்தாங்க.

    ஏய்! நான் என்ன சும்மாவா திட்டினேன்?

    பின்னே? காசு வாங்கிட்டா திட்டினீங்க?

    பாரும்மா. இந்த வாய்தான்... இந்த வாயாலதான் எல்லாச் சங்கடத்தையும் இழுத்திட்டு வர்றா. ஒரு நேரமும் வாயை மூடுறதே கிடையாது.

    ஏம்ப்பா! வாய்ன்னு இருந்தா பேசத்தானே செய்வோம். பேசுறது ஒரு தப்பா?

    பேசுறது தப்பில்லம்மா. ஆனா யார்கூட பேசுறதுன்னு இல்ல. நேத்து ட்ரெய்ன்ல ஒரு கண்ணு தெரியாத பிச்சைக்காரன் வந்தான். எல்லாரும் காசு போட்டாங்க. இவ என்ன பண்ணியிருக்கணும்? ஒன்னு பைசா போடணும். இல்ல... கையையும் வாயையும் வெச்சிகிட்டு சும்மா இருந்திருக்கணும். இவ என்ன பண்ணினா தெரியுமா?

    என்ன பண்ணினா?

    "நீ ஏன் பிச்சை எடுக்கிற? உனக்கு நிஜமாவே கண்ணு தெரியாதா? இல்ல, பிச்சை எடுக்கிறதுக்காகப் பொய் சொல்றியா? உண்மையிலேயே உனக்குக் கண் தெரியலைன்னா என்கூட வா. உன்னை ஹாஸ்பிடல்ல கூட்டிட்டுப் போய் கண்ணை செக் பண்ணி பார்வை வர்றதுக்கு ஏற்பாடு பண்றேன்னு வளவளன்னு பேசி ரகளை பண்ணிட்டா.

    அவன் கண்டபடி திட்டிட்டுப் போயிட்டான். பக்கத்தில இருந்தவங்க எல்லாம் சிரிக்கிறாங்க. இவளுக்குத் தேவையா இதெல்லாம்?"

    "அப்பா! அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன் நான்? பாட்டி! இப்பல்லாம் இப்படிக் கண்ணு தெரியாத மாதிரி பிச்சை எடுக்கிறது பேஷனாப் போச்சு பாட்டி. போன மாசம் என் பிரெண்ட் ரித்திகா அவ பேமிலியோட டூர் போயிட்டு வந்தாள்.

    அவ வந்த ட்ரெய்ன்ல இப்படித்தான் ஒருத்தன் பிச்சையெடுத்திட்டு வந்தானாம். ஏதோ ஒரு ஸ்டாப்பிங்ல நிக்கும்போது ஒரு பொண்ணோட கழுத்தில் கிடந்த செயினை அறுத்திட்டு இறங்கி ஓடிட்டானாம்."

    ஐயோ!

    ஆமா பாட்டி. அதனால நாம எச்சரிக்கையா இருக்கணுமேன்னு அவன் உண்மையாவே குருடனான்னு செக் பண்ணினேன்.

    ஆமா... இவ பெரிய கண் டாக்டர். செக் பண்ணினாளாம். கண்டுபிடிச்சிட்டியா?

    கண்டுபிடிச்சிட்டேம்பா. அவன் உண்மையாவே குருடன் இல்ல. சும்மா கண்ணை மூடிட்டு நடிக்கிறான்.

    என்ன?

    ஆமாம்ப்பா. நிஜமாவே அவனுக்குப் பார்வை இல்லன்னா நான் ஹாஸ்பிடலுக்குக் கூப்பிட்டதும் சந்தோஷமா சம்மதிச்சிருப்பான். ஆனா இவன் ஏன் கோபப்பட்டான்?

    ஏன்?

    ஏன்னா... இவனுக்குக் கண்ணு நல்லாத் தெரியும். ஹாஸ்பிடலுக்கு வந்து செக் பண்ணினா குட்டு உடைஞ்சிடுமேன்னு பயந்துதான் கோபப்பட்டான்.

    ம்... நல்லா வக்கணையாப் பேசு. அவன் பொய் சொன்னா நமக்கென்ன? உண்மையைச் சொன்னா நமக்கென்ன? நம்ம வேலையை மட்டும்தான் நாம பார்க்கணும்.

    அப்படியெல்லாம் என்னால இருக்க முடியாதுப்பா. நான் ஒரு இந்தியப் பிரஜை. என் கண்ணு முன்னால ஒருத்தன் ஏமாத்துறதைப் பார்த்திட்டு சும்மா இருக்க முடியுமா?

    ஏன் சொல்லமாட்டே? வந்தவன் கோபப்பட்டு உன் கழுத்தில் கத்திய வெச்சா?

    வைச்ச கையை எப்படி உடைக்கிறதுன்னு எனக்குத் தெரியும். ஸ்கூல்ல படிச்ச கராத்தே எனக்கு மறக்கல! - என்ற பேத்தியை உச்சி முகர்ந்தாள் அழகம்மாள்.

    சீனு! எம்பேத்தி எவ்வளவு திறமையா அறிவா பேசுறா. இவளையா தத்தின்ற?

    அம்மா! உங்களுக்குத் தெரியாதும்மா. பேசுறதெல்லாம் நல்லாத்தான் பேசுவா. பேச்சு மட்டும் போதுமா? பொட்டக் கழுதையாச்சே, கொஞ்சமாவது நீக்கு போக்குத் தெரிஞ்சு நடக்க வேண்டாம்!

    அப்பா! சும்மா கழுதை அது இதுன்னு சொல்லாதீங்க. எனக்குக் கெட்ட கோபம் வரும்.

    அறைஞ்சேன்னா தெரியும்... கழுதை! - கோபமாய் நெருங்கியவரை அதட்டினாள்.

    சீனு! என்ன இது? வளர்ந்த பெண்ணைக் கை நீட்டுற? வா இப்படி... வந்து உட்கார். - மகனைப் பற்றி மற்றொரு இருக்கையில் அமர வைத்தாள் அழகம்மாள்.

    அம்மா! இவளால... எனக்கு நிம்மதியே இல்லம்மா. எப்ப என்ன செய்திட்டு வந்து நிற்பாளோன்னு பயந்திட்டே இருக்க வேண்டியது இருக்கு. நான் எப்படி பொழைப்பைப் பார்க்கிறது? தினமும் இவளால வீட்ல சண்டைதான்! - சலிப்பும் வெறுப்புமாய் சீனிவாசன் சொல்ல, வாய்க்குக் கொண்டு போன கிழங்கை அப்படியே வைத்தாள் நிலா.

    அழகம்மாள் பரிவோடு மகனின் கையைப் பற்றினாள். எப்பா! ஏம்ப்பா இப்படிப் பேசுற?

    அம்மா! இனிமே இவ இங்கேயே உன்கூடவே இருக்கட்டும்மா!

    சீனு!

    ஆமாம்மா! இதை எப்பவோ செய்திருக்கணும். இவ அம்மாதான் எப்படியாவது படிக்க வைக்கணும்னு பிடிவாதம் பண்ணினா. இப்பப் படிப்பும் முடிஞ்சு போச்சு. இனிமே இங்கே இருக்கட்டும். - தன் உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டே சீனிவாசன் சொல்ல, நிலாவின் கண்கள் தளும்பின. உதட்டைக் கடித்துக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள்.

    கண்களில் நீர் மின்ன உட்கார்ந்திருந்த பேத்தியைத் தவிப்பாய் ஒருமுறை பார்த்துவிட்டு, மகனிடம் திரும்பினாள் அழகம்மாள்.

    சீனு! என்னப்பா சொல்ற?

    ஆமாம்மா! துணிமணி எல்லாம் எடுத்திட்டு வந்திட்டோம். எதுவும் தேவைன்னா இந்தாங்க... இதை வெச்சு வாங்கிக் கொடுங்க...! - என்றவாறு பர்சைத் திறந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை உருவி நீட்டினார்.

    பணம் எதுக்குப்பா? எம் பேத்திக்கு நான் வாங்கிக் கொடுக்க மாட்டேனா? அதை விடு. இப்ப... லீவுக்காகத்தானே நிலாவைக் கூட்டிட்டு வந்தே?

    அதான் படிப்பு முடிஞ்சு போச்சேம்மா! இனி இங்கேயே இருக்கட்டும். பெரியவளுக்கு நல்லதா இடம் அமையட்டும். அவ கல்யாணம் முடிஞ்சதும் இவளையும் கல்யாணம் பண்ணி அனுப்பிடணும். அதுவரை இங்கேயே இருக்கட்டும்.

    நான் எம்.ஃபில். பண்ணணும்! - என்றாள் நிலா அழுத்தமாய்.

    நீ படித்துக் கிழித்தது போதும். பேசாம பாட்டி வீட்ல இரு!

    ஏம்ப்பா! நீலா மட்டும் படிக்கலாம். நான் படிக்கக்கூடாதா?

    வாயை மூடு கழுதை. அவளும் நீயும் ஒன்னா?

    ஏன்? அவ மட்டும்தான் உங்க பொண்ணா? நான் இல்லையா?

    அப்படியே வாய் மேலேயே போடுவேன்! - கையை ஓங்கிக்கொண்டு எழுந்த சீனிவாசனை அதட்டினாள் அன்னை.

    ஏன்டா... அவ கேட்கிறதுல என்ன தப்பு?

    "என்னம்மா நீயும் புரியாமப் பேசுற? நீலு யாரு? எம் பொண்ணு. இதுவரை என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினதில்லை. அக்கம் பக்கம் யார்கிட்ட வேணா வந்து கேட்டுப் பாருங்க. நீலாவை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்காதுன்னு சொல்வாங்க. அவ பேச்சு வீட்டை விட்டு வெளியே கேட்காது.

    காலேஜுக்குப் போறதும் தெரியாது, வர்றதும் தெரியாது. அவ்வளவு அடக்கம், பொறுமை, பணிவு. இதுல ஏதாவது ஒன்னு இந்தக் கழுதைகிட்ட இருக்கான்னு கேளுங்க. வீட்டுக்கும் அடங்காது, ஊருக்கும் அடங்காது."

    அப்படி என்னப்பா நான் அடங்காம அலைஞ்சேன்? கண்டவனோட ஊரைச் சுத்தினேனா? இல்ல, பொய் பித்தலாட்டம் பண்றேனா? நான் நீலாவை விட நல்லா படிக்கிறேன். இப்பக்கூட எப்படியும் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிடுவேன்.

    போதும்... நீ படிச்சது போதும்!

    இன்னும் ஒரு வருஷம் தானேப்பா!

    மூச்! கூடக்கூடப் பேசாதே. ஒழுங்கா நான் சொன்னபடி கேட்டு நடந்தா மாசத்தில் ஒரு வாட்டி அம்மாவும் நானும் வந்து பார்க்க வருவோம். இல்லன்னா நீ தனியாத்தான் கிடக்கணும். – உத்தரவாய் மிரட்டிய தந்தையை வெறித்தாள் நிலா.

    அப்பாவுக்கு அப்படியென்ன என் மீது வெறுப்பு? இந்த வெறுப்பு இன்று நேற்றல்ல... சிறு வயது முதலே வளர்ந்து வரும் நெருப்பு. பள்ளியில் படிக்கும் போது கூட தன்னை விட ஐந்து நிமிடங்கள் மூத்தவளாகிய நீலாவை சைக்கிளில் அமர வைத்துச் செல்வார்.

    நிலா சைக்கிள் பின்னே நடந்துதான் வர வேண்டும். தூக்கிக் கொஞ்சியதில்லை. ஆசையாய்ப் பேசியதில்லை. மார்க் ஷீட்டுக்களைக்கூட வாங்கிப் பார்க்கவும் மாட்டார். பாராட்டவும் மாட்டார். தாய்தான் கையெழுத்துப் போடுவாள்.

    நீலா நாற்பது மார்க் வாங்கியிருக்கிறாள் என்றால் கைதட்டி உற்சாகப்படுத்துவார். நிலா தொண்ணூற்று இரண்டு வாங்கியிருக்கிறாள் என்று கூறும் மனைவியின் வார்த்தை அவரது காதில் விழாது.

    அதற்குப் பிறகு புதிதாய்த் தம்பி பிறந்த பிறகு இன்னும் வேண்டாதவளாகி போனாள் நிலா. ஒரு கையில் நீலா, மறு கையில் சூர்யா என இருவரையும் பிடித்துக்கொண்டு அவர் புறப்படுகையில் பரிதாபமாய்ப் பார்க்கும் மகளை அணைத்துக் கொள்வாள் அன்னலட்சுமி.

    இறுதிவரை இந்த அணைப்பாவது தனக்கு நிலைத்தால் போதும் என்ற நினைப்பில் இதோ டன் கணக்கில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார் அப்பா. தந்தையைக் காணாமல் இருந்து விடலாம். ஆனால்... அம்மா...!

    அம்மாவைக் காணாமல் எப்படி இருப்பேன்? சிறு வயது முதல் தனக்குக் கிடைத்த ஒரே நிழல், அடைக்கலம், அரவணைப்பு. அதையும் இழப்பதா? கூடாது. வைராக்கியமாய் நிமிர்ந்தாள்.

    நான் அங்கே வரக்கூடாதுன்னா என் அம்மாவை இங்கே அனுப்பிடுங்க. அம்மா இல்லாம என்னால இருக்க முடியாது.

    பார்த்தியாம்மா... எம்மேல கோபப்படுறியே! இப்படிப் பேசினா எவனுக்குத்தான் கோபம் வராது?

    நான் பேசாம இருந்தாலும் உங்களுக்குக் கோபம் வருதேப்பா. நான் என்ன செய்யட்டும்?

    நிலாம்மா! அமைதியாய் இரு.

    நீ சும்மாயிரு பாட்டி. அமைதியா இருந்தா உடனே உம் புள்ளை என்ன என்னைக் கொஞ்சவா போறார்.. எப்படியும் திட்டுக் கிடைக்கும். அதைப் பேசிட்டே வாங்கிடுறேன்.

    இந்த வாய் என்னிக்குக் குறையுதோ அன்னிக்குத்தான் நீ உருப்படுவ. அம்மா! நான் கிளம்புறேன்.

    அட இருப்பா! அப்பா வந்திடட்டும். மருமகளுக்குப் பிடிக்குமேன்னு மாசிக் கருவாடு வாங்கப் போயிருக்காங்க. அப்படியே பனங்கிழங்கும் பறிச்சிட்டு வந்திடுவாங்க.

    அதெல்லாம் எதுக்கும்மா இப்போ? எனக்கு நிறைய வேலை இருக்கு!

    இருக்கட்டும்ப்பா... பொறு! மெய்யாவே நிலாவை விட்டுட்டுத்தான் போறியா?

    இவ்வளவு நேரமா அதைத்தானே சொல்லிட்டு இருக்கேன்!

    என்னடா நீ? புள்ள எத்தனை நாளைக்குத் தாயைக் காணாம இருப்பாள்?

    இவ என்ன கைக்குழந்தையா? அதெல்லாம் இருப்பா! வருஷா வருஷம் லீவுல வந்து இருப்பாள்ல... அப்படி இருப்பாள்.

    எப்பா! லீவுன்னா ஒரு மாசம் போல இருந்திட்டுக் கிளம்பிடுவா. இப்போ...

    கொஞ்ச நாள் இருக்கட்டும்மா! நீலுவுக்கு வரன் தேடி வந்திட்டு இருக்கு. நல்லபடியா முடியட்டும். பிறகு பார்க்கலாம்.

    இவளுக்கு மும்பையில எல்லாம் மாப்பிள்ளை கிடைக்காது!

    ஏன்?

    "அங்கே உள்ளவங்களுக்கெல்லாம் இவளை மாதிரி தாம்தூம்ன்னு ஆட்டம் போடுற பொண்ணுங்களைப் பிடிக்கிறதில்ல. நீலு மாதிரி குடும்பப்பாங்கான பெண்தான் வேணும்ன்றாங்க. ஏற்கெனவே வந்த ரெண்டு இடம்

    இவளாலதான் தட்டிப்போச்சு. அதுக்காகவேதான் இவளை இங்கே கூட்டிட்டு வந்தேன்." - தந்தை சொன்னதும் பாட்டியோடு சேர்ந்து நிலாவும் திடுக்கிட்டாள்.

    எ... ன்... ன...?

    வர்றவன் எல்லாம் இவ வாயாடுறதப் பார்த்திட்டு இவளை மாதிரித்தான் நீலுவும் இருப்பான்னு பயந்து போய்க் கிளம்பிடுறாங்க!

    என்னப்பா சொல்ற?

    இவ வாயை வெச்சிக்கிட்டு சும்மா இருந்தாத்தானே! ஒரு அடக்க ஒடுக்கம் வேண்டாம்?

    போதும்ப்பா! - கையமர்த்தித் தடுத்தாள் நிலா. முகத்தில் இருந்த குழந்தைத்தனம் மறைந்து முகம் கல்லாய் இறுகியிருந்தது.

    "போதும்ப்பா! எம் மேல உள்ள வெறுப்பால் ஒரு பெண்ணைப் பழிச்ச பாவம் உங்களுக்கு வர வேண்டாம். உங்களுக்கு எப்பவுமே என்னைப் பிடிக்காதுன்னு தெரியும். ஆனா அதுக்காக இப்படி வாய் கூசாம பழியைப் போடுவீங்கன்னு எதிர்பார்க்கல்ல.

    ஏம்ப்பா! உங்க மனசைத் தொட்டுச் சொல்லுங்க. அந்த அகர்வால் பேமிலி பெண் பார்க்க வந்தாங்களே... அவங்க என்ன சொல்லிட்டுப் போனாங்க... சொல்லுங்கப்பா. உங்களைத்தான் கேட்கிறேன்... - நிலா குரலை உயர்த்திக் கேட்க, சீனிவாசன் பற்களைக் கடித்துக்கொண்டு நின்றார்.

    அழகம்மாள் பேத்தியின் பக்கம் திரும்பினாள். நிலாம்மா! அப்படி என்னதான் சொன்னாங்க?

    உங்க சின்னப் பொண்ணோட துறுதுறுப்பும் கலகலப்பும் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்தப் பொண்ணையே கொடுத்திடுங்கன்னு கேட்டாங்க பாட்டி.

    ம்... கேட்காம என்ன பண்ணுவாங்க? நீ வீட்டுக்குள்ள அடங்கிக் கிடக்கணும். சும்மா மாப்பிள்ளை முன்னால வந்து நின்னா... அவங்க மனசு தடுமாறத்தான் செய்யும்!

    அப்படித் தடுமாறின மாப்பிள்ளை நமக்கு எதுக்கு? நீலாவை மட்டும்தானே அவங்க பார்க்கணும்? வந்தவங்களை வாங்கன்னு கேட்டு உபசரிக்கிறது தப்பா?

    அதைப்பத்தியெல்லாம் இப்ப பேச வேண்டாம். மொத்தத்தில் நீதான் தடையா இருக்க. அதனால நீ இங்கேயே இரு. - கடுப்பாகவே சொன்ன தந்தையைப் பார்த்து விரக்தியாய் புன்னகைத்தாள்.

    தேங்க்ஸ் அப்பா! தடையா இருக்கேன்னு சாப்பாட்டுல விஷம் வெக்காம பாட்டி வீட்லயாவது கொண்டு வந்து விடணும்னு தோணிச்சே!

    நிலாம்மா...! - பதறினாள் அழகம்மாள்.

    தப்பு இல்ல பாட்டி... இப்படித் தினம் தினம் கொட்டிக் கொட்டியே சாகடிக்கிறதுக்கு ஒரே நாள் விஷம் வெக்கிறது பெரிய தப்பு இல்ல! - என்றாள் கசப்பாய்.

    "ஏன்டா சீனு! அந்தப் படிச்ச புள்ள மனசு எவ்வளவு வேதனைப்பட்டா இந்த வார்த்தையைச் சொல்லும். ஏன்டா இப்படி இருக்கே? நீயும் மாறுவே மாறுவேன்னு எத்தனை நாளா தவிக்கிறேன்!

    அப்படி என்னடா இந்தப் புள்ள பாவம் பண்ணிச்சு? அதையாவது சொல்லித் தொலையேன்! ஏன் இவளை இப்படி கரிச்சுக் கொட்டுற?"

    அம்மா...!

    டேய்! பத்துப் புள்ள பெத்தாலும் பெத்தவனுக்கு எல்லாப் பிள்ளையும் ஒன்னுதான்டா! உன்னையும் அப்படித்தானே வளர்த்தேன். உம் புத்தி மட்டும் ஏன் இப்படிப் போகுது?

    பாட்டி!

    என்னடாக் கண்ணு?

    நான் ராசியில்லாதவ... அதிர்ஷ்டக்கட்டைன்னு நீயும் என்னை விரட்டிடாதே பாட்டி. எனக்கு வேற எந்தப் போக்கிடமும் இல்ல பாட்டி! - கண்களில் நீர் மல்க, தொண்டை அடைக்கக் கூறிய பேத்தியைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

    என்ன ராஜாத்தி இப்படிச் சொல்ற? நீ இந்தக் குடும்பத்தோட ராஜகுமாரிம்மா. உன் அப்பன் கிடக்கிறான் விடு. நானும் தாத்தனும் இருக்கிறவரைக்கும் உன் கண்ல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக்கூடாது. கண்ணைத் துடை.

    பாட்டீ...!

    இவன் என்ன கண்ணு மாப்பிள்ளை பார்க்கிறது? உனக்கு நான் பார்க்கிறேன் மாப்பிள்ளை. இந்த வீட்ல வெச்சு ஊரே மூக்கு மேல கைய வெக்கிற மாதிரி உன் கல்யாணத்தை நாங்க நடத்திக் காட்டுறோம். அழக்கூடாது. ம்...! என் கண்ணு இல்ல?

    என்ன? என் குழந்தை ஏன் அழுதிட்டு இருக்கா? - என்றவாறே தோளில் கோணி மூட்டையோடு வந்தார் சண்முக சுந்தரம்.

    வாங்கப்பா! எதுக்குப்பா இவ்வளவு வெயிட்டைத் தூக்கிட்டு வர்றீங்க? - தந்தையிடம் இருந்து கோணியை வாங்கினார் சீனிவாசன்.

    இது என்னப்பா கனம்? இருநூறு பனங்கிழங்கும் ஒரு கிலோ கருவாடும்தான். நீ உன் பையில் அடுக்கி வெச்சுக்க!

    சரிப்பா!

    நிலாக் கண்ணு! நீ ஏன்டா அழுறே? அப்பன் கிளம்புறான்னா?

    ம்... ஆ... ஆமாம் தாத்தா!

    "என்னம்மா நீ? உன் அப்பனுக்கு அங்க உங்க அம்மா, ரெண்டு புள்ளைங்க இருக்காங்க. நானும் உன் பாட்டியும் பாவமில்லையா? தனியாக் கிடக்கிறோமே! உன் படிப்புதான் முடிஞ்சு போச்சாமே!

    இனிமேலாவது எங்ககூட இருக்கக்கூடாதாம்மா? இவ்வளவு பெரிய வீட்ல நாங்க மட்டும் முடங்கிக் கிடக்கிறோமே! நீயும் கூட இருந்தா எங்களுக்கு எவ்வளவோ ஆறுதலா இருக்குமேம்மா! உனக்கு என்ன வேணுமோ தாத்தா வாங்கித் தர்றேன்.

    எங்க போகணுமோ பாட்டியைக் கூட்டிட்டுப் போ. இது நம்ம ஊரு. நீ எங்க வேணாப் போகலாம்... வரலாம். சண்முகசுந்தரம் பேத்தின்னா ஒரு பய பக்கத்தில வரமாட்டான். எங்க கூடவே இருக்கிறியாம்மா?" - தாத்தாவின் குரலில் மனம் உருகியது.

    தன்னைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கும் தந்தையைக் காட்டிலும் இவர்களின் அன்பு எத்தனை பெரியது! வருடத்தில் ஒரு முறை வந்து சில நாட்களே தங்கிவிட்டுப் போகும்போது கூடப் பாட்டியின் கண்கள் கலங்கும். பேத்தியின் மீது கொள்ளைப் பிரியம்.

    இந்தப் பிரியத்தை உதாசீனம் செய்யக்கூடாது. தினமும் தந்தையிடம் அர்ச்சனை கேட்பதை விட இந்தக் கிராமத்தின் அமைதியில் தாத்தா பாட்டியின் மடியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட்டுப் போகலாம். வயதான காலத்தில் அவர்களுக்கும் ஆறுதலாய் இருக்குமே! பெருமூச்சுடன் நிமிர்ந்தாள் நிலா.

    சரி தாத்தா! கடைசிவரைக்கும் உங்ககூடவே இருந்திடுறேன்! - என்றவாறே தந்தையைப் பார்க்க, அவர் முகத்தில் துளியும் வருத்தமோ அதிர்ச்சியோ தென்படவில்லை. அதில் மனம் இன்னமும் பாரமாகிப் போனது.

    2

    புதுடெல்லி. அந்த ஏழு மாடி அடுக்குக் கட்டடத்தின் ஆறாவது மாடியறையில் குளிரூட்டப்பட்ட அறைக்குள் தன் கணினியின் முன் அமர்ந்திருந்தான் தமிழ்ச்செல்வன். தலை கொள்ளாமல் அடர்ந்திருந்த கேசத்தைப் படிய வாரி விட்டிருந்தான். மணிக்கட்டு வரை நீண்டிருந்த முழுக்கைச் சட்டை. மடிப்புக் கலையாத, துளியும் அழுக்கில்லாத உடை. நல்ல நிறம். கருகருவென்ற மீசை.

    ஆகாய வண்ண சர்ட்டில் வெள்ளி நூல் போல் மெல்லிய கோடுகள். அடர் நீல நிறத்தில் கழுத்தை ஒட்டியிருந்த டை என வெகு கம்பீரமாய் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வனுக்கு இருபத்தெட்டு வயது. பிரபலமான கம்பெனியின் ஸாப்ட்வேர் இன்ஜினியர்.

    அந்த அலுவலகத்தின் உரிமையாளரது மகன் முரளியின் நெருங்கிய நண்பன் என்பதால் நண்பனின் கெஸ்ட்ஹ வுஸில் வசிப்பவன். மாதம் ஒரு முறை மும்பை சென்று பெற்றோர்களைப் பார்த்துவிட்டு வருபவன். வேலையில் கெட்டிக்காரன். பயங்கரச் சுறுசுறுப்பு. இவையெல்லாவற்றையும் விட தன்னடக்கத்துடன் கூடிய பணிவு.

    அந்தப் பணிவால் எம்.டி.யின் அடுத்த நிலையில் இருந்து நிர்வகிப்பவன். நெற்றியில் தீவிரமான சிந்தனைக் கோடுகளுடன் கண்களில் கூர்மையோடு கணினியில் வேலையில் ஆழ்ந்திருந்தவனை மேஜை மீதிருந்த செல் ஃபோன் ரகசியக் குரலில் அழைத்தது.

    முக்கியமான வேலையில் இருக்கும்போது போனில் வால்யூமைக் குறைத்து விட்டு வேலையில் இறங்குவது அவனது வழக்கம். மீண்டும் மீண்டும் அது அழைக்க, கணினித் திரையை விட்டுப் பார்வையை விலக்கினான்.

    ‘யாரது? வேலை நேரத்தில்...’ - என்றவாறே போனை எடுத்தவனின் முகம் தானாய்ப் புன்னகைத்தது. ‘அப்பா!’ - போனை உயிர்ப்பித்துக் காதில் வைத்தான்.

    அப்பா!

    செல்வா! எப்படியப்பா இருக்க? - உற்சாகமாய்க் கேட்டார் சிவசங்கரன்.

    ம்... நல்லா இருக்கேம்ப்பா! என்னப்பா இப்ப போன் பண்ணியிருக்கீங்க?

    வேலையா இருக்கியா செல்வா? தொந்தரவு பண்ணிட்டேனா?

    சேச்சே! அப்படி யெல்லாம் இல்லப்பா. லன்ச் டைம்தான். கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு நானே பண்ணணும்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே பண்ணிட்டீங்க. சொல்லுங்கப்பா! என்ன விஷயம்?

    செல்வா! எல்லாம் நல்ல விஷயம்தாம்பா. நேற்றுக்கூடச் சொன்னேனே!

    என்ன விஷயம்பா!

    அதான்... என் பிரெண்ட் சீனிவாசனோட பொண்ணு. நாளை மறுநாள் பொண்ணு பார்க்கப் போகணும்னு சொல்லியிருந்தேனே!

    ஸ்ஸ்... - என நெற்றியில் தட்டிக் கொண்டான் தமிழ்ச்செல்வன். ஸாரிப்பா... நான் மறந்தே போயிட்டேன்.

    என்னப்பா இப்படிச் சொல்ற? நீ இன்னிக்குப் புறப்படலியா?

    இன்னிக்கா?

    "ஆமா! இன்னிக்கே கிளம்பினாத்தானே சரியா

    Enjoying the preview?
    Page 1 of 1