Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாலை சூடும் மணநாள்!
மாலை சூடும் மணநாள்!
மாலை சூடும் மணநாள்!
Ebook142 pages52 minutes

மாலை சூடும் மணநாள்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஞாயிற்றுக் கிழமையின் கூடுதல் உறக்கத்தைக் கலைத்த அலைபேசியை எடுக்கத் தோன்றாமல் போர்வையை நன்றாய் போர்த்திக் கொண்டு வாகாய் படுத்துக் கொண்டாள் கீதாஞ்சலி. 

முடிந்த மட்டும் கதறிவிட்டு அடங்கிய அலைபேசி சில கண இடைவெளியில் மீண்டும் கதற, அறைத்தோழி வசுமதி குரல் கொடுத்தாள். 

"கீத்து! போன் அடிக்குது பார்!" 

"ம்ப்ச் விடு வசு! ஸன்டே கூட நிம்மதியாய் தூங்கவிடமாட்டாங்க! சும்மா அடிக்கட்டும்!" 

"யாருன்னு பாரேன்... ஏதாவது அர்ஜெண்ட் காலாயிருக்கப் போகுது" 

"வேற யாரு? அக்காவாத்தான் இருக்கும். இன்னிக்கு லீவு தானே? வீட்டுக்கு வாயேன்! வரும்போது அப்படியே அதை வாங்கிட்டு வந்திடு... இதையும் அப்படியே வந்திடுன்னு லிஸ்டப் போடுவா! நான் இன்னிக்கு எங்கேயும் போவதாய் இல்லை" - சலிப்பாய் கூறிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொள்ள மீண்டும் அலைபேசி அழைத்தது. வசுமதி போனைக் கையில் எடுத்தாள். 

"கீத்து அக்கா இல்ல அம்மா பண்றாங்க" என்றதும் விருட்டென எழுந்தமர்ந்தாள். 

'அம்மாவா? இவ்வளவு காலையில ஏன்?' சட்டென போனை வாங்கி காதில் வைத்தாள். 

"அம்மா என்னம்மா இவ்வ..." 

"அக்கா நான் சிவ் பேசுறேன்" தங்கையின் குரலில் நெற்றியைச் சுருக்கினாள் கீதாஞ்சலி. 

"என்ன சிவ்? ஏன் இவ்வளவு காலையிலே போன் பண்ணியிருக்க? தம்பி நல்லாயிருக்கானில்ல?" 

"ம். நல்லாயிருக்கான். இந்த அப்பா தான்" 

"ஏன் அப்பாவுக்கு என்ன ஆச்சு. உடம்பு எதுவும் சரியில்லையா?"

"இல்லக்கா இந்த அப்பா யார்கிட்டயோ கடன் வாங்கிக் குடிச்சிருக்காரு! நிறைய பணத்துக்கு" 

"என்ன" 

"ஆமா அந்த ஆளு வீட்டுக்கே வந்து கத்துறான். பணத்தைத் தர்றியா இல்ல போலீசுக்கு போகட்டுமான்னு கேட்டு சண்டை போடுறார். தெருவே நின்னு வேடிக்கை பார்க்குது" சிவரஞ்சினி அழுகுரலில் சொல்ல, கீதாஞ்சலிக்கு உறக்கம் விலகி கோபம் எட்டிப்பார்த்தது. 

"அப்பா எங்கே" 

"நேத்து குடிச்சது இன்னும் தெளியல போலிருக்கு. எழுந்துக்கவே மாட்டேங்கிறாரு" 

"அம்மா" 

"அம்மாதான் அந்த ஆள்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்காங்க. அவர் கேட்கமாட்டேங்கிறார்" 

"போனை அந்த ஆள்கிட்ட கொடு" 

"ம்... இந்தாங்க எங்க அக்கா பேசணும்" என்ற தங்கையின் குரலைத் தொடர்ந்து சற்று மிரட்டலான குரல் கேட்டது 

"என்னம்மா சொல்லு" 

"ஏன் ஸார் எங்க அப்பாகிட்ட யாரைக் கேட்டு பணம் கொத்தீங்க?" 

"இது என்னம்மா வம்பாப்போச்சு? நான் வட்டிக்கு பணம் கொடுக்கிறவன்மா பணம் கேட்டால் கொடுப்பதும் அதை வசூலிப்பதும்தான் என் வேலை" 

"ஓஹோ அப்போ பணம் கொடுத்தவர்கிட்டேதானே நீங்க வசூலிக்கணும்'" 

"ஆமா" 

"பிறகு எதுக்கு ஸார் வீட்ல வந்து பிரச்சனை பண்றீங்க? எங்க அப்பா எப்போ வெளியே வருவாரோ அப்ப அவர்கிட்டயே வசூல் பண்ணிக்கங்க கிளம்புங்க" 

"இது நல்ல கதையா இருக்கே உன் அப்பா வீட்டுக்குள்ள ஒளிஞ்சுக்குவாரு அவரு எப்ப வருவாருன்னு நாங்க காத்து நிக்கணுமா? எங்களுக்கு வேற வேலை இல்ல" 

"ஹலோ இன்னும் ரெண்டு நிமிஷம் நீங்க அங்கே நின்னா நான் போலீசைக் கூப்பிடுவேன். 

"கூப்பிடும்மா இல்லேன்னா நானே கூப்பிடலாம்னு இருக்கேன்" எதிர்முனையில் நக்கலாய் பதில் வர கீதாஞ்சலி சற்று திகைத்துதான் போனாள். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223909675
மாலை சூடும் மணநாள்!

Read more from Kalaivani Chokkalingam

Related to மாலை சூடும் மணநாள்!

Related ebooks

Related categories

Reviews for மாலை சூடும் மணநாள்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாலை சூடும் மணநாள்! - Kalaivani Chokkalingam

    1

    ஞாயிற்றுக் கிழமையின் கூடுதல் உறக்கத்தைக் கலைத்த அலைபேசியை எடுக்கத் தோன்றாமல் போர்வையை நன்றாய் போர்த்திக் கொண்டு வாகாய் படுத்துக் கொண்டாள் கீதாஞ்சலி.

    முடிந்த மட்டும் கதறிவிட்டு அடங்கிய அலைபேசி சில கண இடைவெளியில் மீண்டும் கதற, அறைத்தோழி வசுமதி குரல் கொடுத்தாள்.

    கீத்து! போன் அடிக்குது பார்!

    ம்ப்ச் விடு வசு! ஸன்டே கூட நிம்மதியாய் தூங்கவிடமாட்டாங்க! சும்மா அடிக்கட்டும்!

    யாருன்னு பாரேன்... ஏதாவது அர்ஜெண்ட் காலாயிருக்கப் போகுது

    வேற யாரு? அக்காவாத்தான் இருக்கும். இன்னிக்கு லீவு தானே? வீட்டுக்கு வாயேன்! வரும்போது அப்படியே அதை வாங்கிட்டு வந்திடு... இதையும் அப்படியே வந்திடுன்னு லிஸ்டப் போடுவா! நான் இன்னிக்கு எங்கேயும் போவதாய் இல்லை - சலிப்பாய் கூறிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொள்ள மீண்டும் அலைபேசி அழைத்தது. வசுமதி போனைக் கையில் எடுத்தாள்.

    கீத்து அக்கா இல்ல அம்மா பண்றாங்க என்றதும் விருட்டென எழுந்தமர்ந்தாள்.

    ‘அம்மாவா? இவ்வளவு காலையில ஏன்?’ சட்டென போனை வாங்கி காதில் வைத்தாள்.

    அம்மா என்னம்மா இவ்வ...

    அக்கா நான் சிவ் பேசுறேன் தங்கையின் குரலில் நெற்றியைச் சுருக்கினாள் கீதாஞ்சலி.

    என்ன சிவ்? ஏன் இவ்வளவு காலையிலே போன் பண்ணியிருக்க? தம்பி நல்லாயிருக்கானில்ல?

    ம். நல்லாயிருக்கான். இந்த அப்பா தான்

    ஏன் அப்பாவுக்கு என்ன ஆச்சு. உடம்பு எதுவும் சரியில்லையா?

    இல்லக்கா இந்த அப்பா யார்கிட்டயோ கடன் வாங்கிக் குடிச்சிருக்காரு! நிறைய பணத்துக்கு

    என்ன

    ஆமா அந்த ஆளு வீட்டுக்கே வந்து கத்துறான். பணத்தைத் தர்றியா இல்ல போலீசுக்கு போகட்டுமான்னு கேட்டு சண்டை போடுறார். தெருவே நின்னு வேடிக்கை பார்க்குது சிவரஞ்சினி அழுகுரலில் சொல்ல, கீதாஞ்சலிக்கு உறக்கம் விலகி கோபம் எட்டிப்பார்த்தது.

    அப்பா எங்கே

    நேத்து குடிச்சது இன்னும் தெளியல போலிருக்கு. எழுந்துக்கவே மாட்டேங்கிறாரு

    அம்மா

    அம்மாதான் அந்த ஆள்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்காங்க. அவர் கேட்கமாட்டேங்கிறார்

    போனை அந்த ஆள்கிட்ட கொடு

    ம்... இந்தாங்க எங்க அக்கா பேசணும் என்ற தங்கையின் குரலைத் தொடர்ந்து சற்று மிரட்டலான குரல் கேட்டது

    என்னம்மா சொல்லு

    ஏன் ஸார் எங்க அப்பாகிட்ட யாரைக் கேட்டு பணம் கொத்தீங்க?

    இது என்னம்மா வம்பாப்போச்சு? நான் வட்டிக்கு பணம் கொடுக்கிறவன்மா பணம் கேட்டால் கொடுப்பதும் அதை வசூலிப்பதும்தான் என் வேலை

    ஓஹோ அப்போ பணம் கொடுத்தவர்கிட்டேதானே நீங்க வசூலிக்கணும்’

    ஆமா

    பிறகு எதுக்கு ஸார் வீட்ல வந்து பிரச்சனை பண்றீங்க? எங்க அப்பா எப்போ வெளியே வருவாரோ அப்ப அவர்கிட்டயே வசூல் பண்ணிக்கங்க கிளம்புங்க

    இது நல்ல கதையா இருக்கே உன் அப்பா வீட்டுக்குள்ள ஒளிஞ்சுக்குவாரு அவரு எப்ப வருவாருன்னு நாங்க காத்து நிக்கணுமா? எங்களுக்கு வேற வேலை இல்ல

    "ஹலோ இன்னும் ரெண்டு நிமிஷம் நீங்க அங்கே நின்னா நான் போலீசைக் கூப்பிடுவேன்.

    கூப்பிடும்மா இல்லேன்னா நானே கூப்பிடலாம்னு இருக்கேன் எதிர்முனையில் நக்கலாய் பதில் வர கீதாஞ்சலி சற்று திகைத்துதான் போனாள். போனாள்.

    குடிப்பதற்கு என்றால் பணம் எவ்வளவு வாங்கியிருப்பார். அப்பா? சில நூறுகள் அல்லது ஆயிரம் இதற்கு எவன் போலீஸுக்குப் போவான்?

    என்னம்மா பதிலைக் காணோம்? நீ கூப்பிடுறியா இல்ல நானே கூப்பிடவா

    ஹலோ அப்பா எவ்வளவு பணம் வாங்கியிருக்காரு

    நூறு இருநூறு இல்லம்மா ஒன்றரை லட்சம். சரியாச் சொல்லணும்னா ஒரு லட்சத்து அம்பத்தி ஆறாயிரம்.

    கீதாஞ்சலியின் முகம் வெளுத்துப் போனது

    என்ன ஒன்றரை லட்சமா

    ஆமா வட்டி தனி

    ஏன் ஸார் என்ன தைரியத்தில ஸார் எங்கப்பாவை நம்பி இவ்வளவு பணம் கொடுத்தீங்க

    என்னைக் கேட்டால் எங்க முதலாளிகிட்ட உங்க அப்பா என்ன காரணம் சொன்னாரோ? கிட்டத்தட்ட நாலுமாதமாய் கொஞ்சம் கொஞ்மாய் வாங்கியிருக்கார்

    உங்க முதலாளி யார்? அவரும் உங்ககூட வந்திருக்காரா?

    அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும். அது ஏம்மா உங்களுக்கு இப்ப பணம் வருமா வராதா

    ஏன் ஸார் கேட்டதும் தூக்கிக் கொடுக்க நாங்க என்ன லட்ச லட்சமா லாக்கர்ல வெச்சி பூட்டி வெச்சிருக்கோமா முதல்ல உங்க முதலாளியோட நம்பர் கொடுங்க நான் அவர்கிட்ட பேசணும்.

    அப்படியெல்லாம் தர முடியாதும்மா

    தந்துதான் ஆகணும் இல்லேன்னா பத்து பைசா கூட வராது

    என்னம்மா இப்படிச் சொல்ற

    நான் உங்க முதலாளிகிட்ட பேசணும். கொஞ்சம் டைம் கேட்கணும். அதுக்கு முன்னால நீ எங்க வீட்டைவிட்டுக் கிளம்பணும் இல்ல கந்துவட்டிக் கொடுமைன்னு புகார் கொடுப்பேன். எங்கப்பாவுக்கு பணத்தைக் கொடுத்து குடிகாரனாக்கிட்டீங்கன்னு கேஸ் போடுவேன். வீட்ல வந்து பொம்பளைக்கிட்ட பிரச்சனை பண்றார்ன்னு உங்க மேல ஈவ்டீஸிங் கேஸ் போடுவேன்.

    ஏய் இரும்மா... இரும்மா என்ன நீ பாட்டுக்கு அடுக்கிக்கிட்டே போற இது என் வேலைம்மா

    எங்களை கேட்டா பணம் கொடுத்தீங்க? முதல்ல உங்க முதலாளியோட நம்பரைக் கொடுங்க

    எழுதிக்கம்மா என்றவன் சொன்ன எண்களைக் குறித்துக் கொண்டு மீண்டும் குரல் கொடுத்தாள்.

    சரி நான் பேசிக்கிறேன் போனை என் தங்கச்சிகிட்ட கொடுத்திட்டு நீங்க கிளம்புங்க

    ம்...ம்...

    சொல்லுக்கா

    நீங்கள்லாம் வீட்டுக்குள்ள போங்க. அப்பாவை எக்காரணம் கொண்டும் வெளியே விடாதீங்க. ரூம்ல போட்டு பூட்டி வைங்க. நான் பணம் கொடுத்தவன்கிட்ட பேசுறேன்.

    சரிக்கா

    ம் போனை வெச்சிடு சிவ். இரு அந்த ஆளு போயிட்டாரா இருக்காரா

    வண்டியை ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு

    அவர்கிட் அவரோட முதலாளி பேர் என்னன்னு கேளு

    ம். அண்ணா உங்க முதலாளியோட பேர் என்ன

    எதுக்கு

    அக்கா கேட்கிறா

    கனகசபாபதி

    அக்கா கனக சபாபதியாம்

    சரி நான் அவர்கிட்ட பேசுறேன். நீ போனை வை

    ஏய் பேனைக் கொடு. கீதா போனை வெச்சுடாதே அன்னையின் குரல் கேட்டதும் மீண்டும் போனை காதில் வைத்தாள்.

    சொல்லுங்கம்மா

    கீதா சம்பளம் வாங்கிட்டியா

    ம்ம்

    அப்ப இன்னிக்கு வீட்டுக்கு வந்திருக்கலாமில்ல வள்ளி ஆர்வமாய்க் கேட்க கீதாஞ்சலியின் முகம் கடுத்தது.

    இல்ல இங்கே கொஞ்சம் வேலையிருக்கு

    "லீவு அன்னிக்கு என்ன வேலை? வீட்டுக்கு வந்தால் வாய்க்கு ருசியாய் சமைத்துப் போடுவேனே பாவம் தினமும் ஹாஸ்டல் சாப்பாட்டைச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருக்குமே’

    பரவாயில்லம்மா வாய்க்கு ருசியாய் சாப்பிட ஆசைப்பட்டால் கடனை எப்படி அடைப்பது? இருக்கிற கடனை அடைக்கவே எனக்கு மூச்சு முட்டுகிறது. இதுல உஞ்க புருஷன் மேலும் மேலும் என்னை கடனாளியாக்குகிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த சந்தோஷத்தைக் கொண்டாட விருந்து சாப்பாடு சாப்பிட வேண்டியது தான் கசப்பும் சலிப்புமாய் சொன்னவளிடம் பதிலின்றி வள்ளி மவுனிக்க கீதாஞ்சலி சற்றே மனம் இறங்கினாள்.

    சரி சரி தம்பிக்கு மாத்திரை மருந்தெல்லாம் இருக்கில்ல

    இன்னும் ரெண்டு நாளைக்குத்தான் வரும்

    கையில் இருக்கிற பணத்தை வெச்சி இந்த வாரத்துக்கு வாங்கிடுங்க. நான் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வர்றேன்

    "ம்

    அம்மா உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறேன். தயவு செய்து அப்பாவை வெளியே அனுப்பாதீங்க. இன்னும் எங்கெல்லாம் கடன் வாங்கியிருக்காரோ.

    நானா அனுப்புறேன் ஏதாவது பார்த்திட்டு வேலை கிடைக்குதான்னு வர்றேன்னு போறாரு நடு சாமத்தில முழு போதையிலதான் வர்றாரு எங்கே போறாரோ இவரை நம்பி எவன் பணம் கொடுக்கிறானோ

    பார்த்தும்மா ஏற்கனவே கடையை எழுதிக் கொடுத்த மாதிரி குடியிருக்கிற ஒத்தை வீட்டையும் எவன்கிட்டயாவது எழுதிக் கொடுத்திடப் போறாரு

    சேச்சே அப்படியெல்லாம் பண்ணமாட்டாரு

    சொல்ல முடியாதும்மா எவனாவது குடிக்க பணம் தந்தாப் போதும் எதில வேணா கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருவாரு கடையைக் கொடுக்கல

    "அது தம்பியோட ஆபரேஷன் செலவுக்காக அடமானம் வெச்சது மேல

    Enjoying the preview?
    Page 1 of 1