Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தாத்தா!
தாத்தா!
தாத்தா!
Ebook130 pages48 minutes

தாத்தா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீட்டு உறுப்பினர்கள் மொத்தமாய் கூடியிருக்க கட்டிலில் படுத்திருந்த நம்பிராஜனின் நாடித்துடிப்பை பரிசோதித்துக் கொண்டிருந்தார் மருத்துவர். அறை மொத்தமும் மௌனிக்க நம்பிராஜனின் உதடுகள் மட்டும் ஏதோ பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது. அவரருகே அமர்ந்திருந்த ஹரிகிருஷ்ணா தாத்தாவின் முகத்தருகே குனிந்தான். 

"தாத்தா தாத்தா!" 

"ப்...ப்...ப...ர..." 

"தாத்தா நான் ஹரி... கண்ணை முழிச்சு பாருங்க தாத்தா" 

"ப... ர...ப...சு..." நம்பிராஜனின் கண்கள் திறவாமல் உதடு மட்டுமே அசைய வருத்தமாய் மருத்துவரை ஏறிட்டான் ஹரிகிருஷ்ணா. 

"என்னாச்சு டாக்டர்? தாத்தா ஏன் கண்ணைத் திறக்க மாட்டேங்குறார்? ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடலாமா" 

"நோ யூஸ் மிஸ்டர் ஹரி. இது ரெண்டாவது அட்டாக். சிவியர் அட்டாக் வேற. வயசு எண்பதாகப் போகிறது. இந்த வயதில் இவரால் இந்த அளவிற்கு மீண்டு வந்ததே பெரிய விஷயம்" 

"ஆபரேசன் பண்ணினால் தாத்தாவை கியூர் பண்ணிடலாமா டாக்டர்?" 

ஆர்வமாய் கேட்ட மகனை அடக்கினாள் செல்வி. 

"அரி எதுனா யோசிச்சுத்தான் பேசுறியா? இத்தனை வயசுக்கு பிறகு எங்க அப்பாவை கூறுபோடச் சொல்றியா" 

"ம்மா..." 

"நீ எதுவும் பேசாதே. டாக்டரே நீங்க சொல்லுங்க. எங்க அப்பாரு இன்னும் எம்புட்டு நாள் தாங்குவாரு" 

"ஏம்மா நான் என்ன கடவுளா? பெரியவர் ஒண்ணும் மரணப்படுக்கையில கிடக்கலை. கடுமையான மன உளைச்சல்ல இருக்காரு. அதனாலதான் இந்த மயக்கம். மாரடைப்பு எல்லாம். முதல்ல அவரை எந்த வருத்தமும் இல்லாம சந்தோஷமா அமைதியா வெச்சுக்க பாருங்க." 

"ம்...க்கும் அமைதியாம் சந்தோஷமாம். அது எப்படி எங்க அப்பாருக்கு கிடைக்கும்? பெத்ததுல ஒன்னு பொண்டாட்டியோட முந்தானையை பிடிச்சுக்கிட்டு எப்பவோ ஊரை விட்டு ஓடிப் போயிருச்சு. இதோ நிக்குதே இதால என்னைக்குமே ஒரு பிரயோசனமும் கிடையாது." செல்வி நீட்டி முழக்க எதிரே நின்ற ரங்கராஜனின் மனைவி சீறினாள். 

"இந்தா கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க. எம்புருஷனை அது இதுன்னு சொன்னால் மருவாதி கெட்டுடும்" 

"ஏய் அவன் என் தம்பி" 

"அண்ணன், தம்பி உறவெல்லாம் அப்போ. எப்ப அவரு எனக்கு புருஷனா ஆனாரோ அப்ப இருந்தே அவரு எனக்குத்தான் சொந்தம்" 

"ஆமாண்டி உனக்குத்தான் சொந்தம். நான் என்ன பங்கா கேக்குறேன்? இம்புட்டு வக்கனையாய்ப் பேசுறியே இந்தா வதவதன்னு பெத்துப் போட்டிருக்கியே நாலு எருமைகளை! இதில் எதையாவது ஒன்னை உருப்படியாய் வளர்த்தியா? அம்புட்டும் தறுதலை" 

"ஏய் அத்தே மரியாதை! மரியாதையாய் பேசு. இல்ல அவ்வளவுதான்." ரங்கராஜனின் மூத்த மகன் முஷ்டியை மடக்க கோபமாய் எழுந்தான் ஹரிகிருஷ்ணா. 

"ஷட் அப் ஏன் இப்படி முட்டாள் மாதிரி கத்திட்டு இருக்கீங்க" 

"ஆமாம்பா. நாங்கள்லாம் முட்டாளுகதான். நீ மட்டும் தான் அறிவாளி. அதான் தாத்தா கூடவே நிழலாட்டம் இருந்துகிட்டு அவர் காசிலேயே படிச்சு வக்கீலாயிட்ட. உன் திறமை எங்களுக்கு வருமா?" 

"ராஜேஷ்... எந்த நேரத்தில் என்ன பேசுற நீ... தாத்தாவோட நிலைமைய யாராவது நினைச்சு பார்க்குறீங்களா? அவருக்கு இப்ப தேவை நிம்மதி, அமைதி." 

"ஹூம் உன் அம்மா கூட இருக்கும்போது தாத்தாவுக்கு இதெல்லாம் எப்படி கிடைக்கும்" 

"ஏலேய் முட்டாப்பய மவனே. யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்றே" செல்வி சிலிர்த்துக் கொண்டு வர நால்வரில் முரட்டுத்தனமாய் இருந்த தனா கோபமாய் அவளை நெருங்கினான். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 8, 2023
ISBN9798215355275
தாத்தா!

Read more from Kalaivani Chokkalingam

Related to தாத்தா!

Related ebooks

Related categories

Reviews for தாத்தா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தாத்தா! - Kalaivani Chokkalingam

    1

    வீட்டு உறுப்பினர்கள் மொத்தமாய் கூடியிருக்க கட்டிலில் படுத்திருந்த நம்பிராஜனின் நாடித்துடிப்பை பரிசோதித்துக் கொண்டிருந்தார் மருத்துவர். அறை மொத்தமும் மௌனிக்க நம்பிராஜனின் உதடுகள் மட்டும் ஏதோ பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது. அவரருகே அமர்ந்திருந்த ஹரிகிருஷ்ணா தாத்தாவின் முகத்தருகே குனிந்தான்.

    தாத்தா தாத்தா!

    ப்...ப்...ப...ர...

    தாத்தா நான் ஹரி... கண்ணை முழிச்சு பாருங்க தாத்தா

    ப... ர...ப...சு... நம்பிராஜனின் கண்கள் திறவாமல் உதடு மட்டுமே அசைய வருத்தமாய் மருத்துவரை ஏறிட்டான் ஹரிகிருஷ்ணா.

    என்னாச்சு டாக்டர்? தாத்தா ஏன் கண்ணைத் திறக்க மாட்டேங்குறார்? ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடலாமா

    நோ யூஸ் மிஸ்டர் ஹரி. இது ரெண்டாவது அட்டாக். சிவியர் அட்டாக் வேற. வயசு எண்பதாகப் போகிறது. இந்த வயதில் இவரால் இந்த அளவிற்கு மீண்டு வந்ததே பெரிய விஷயம்

    ஆபரேசன் பண்ணினால் தாத்தாவை கியூர் பண்ணிடலாமா டாக்டர்?

    ஆர்வமாய் கேட்ட மகனை அடக்கினாள் செல்வி.

    அரி எதுனா யோசிச்சுத்தான் பேசுறியா? இத்தனை வயசுக்கு பிறகு எங்க அப்பாவை கூறுபோடச் சொல்றியா

    ம்மா...

    நீ எதுவும் பேசாதே. டாக்டரே நீங்க சொல்லுங்க. எங்க அப்பாரு இன்னும் எம்புட்டு நாள் தாங்குவாரு

    ஏம்மா நான் என்ன கடவுளா? பெரியவர் ஒண்ணும் மரணப்படுக்கையில கிடக்கலை. கடுமையான மன உளைச்சல்ல இருக்காரு. அதனாலதான் இந்த மயக்கம். மாரடைப்பு எல்லாம். முதல்ல அவரை எந்த வருத்தமும் இல்லாம சந்தோஷமா அமைதியா வெச்சுக்க பாருங்க.

    ம்...க்கும் அமைதியாம் சந்தோஷமாம். அது எப்படி எங்க அப்பாருக்கு கிடைக்கும்? பெத்ததுல ஒன்னு பொண்டாட்டியோட முந்தானையை பிடிச்சுக்கிட்டு எப்பவோ ஊரை விட்டு ஓடிப் போயிருச்சு. இதோ நிக்குதே இதால என்னைக்குமே ஒரு பிரயோசனமும் கிடையாது. செல்வி நீட்டி முழக்க எதிரே நின்ற ரங்கராஜனின் மனைவி சீறினாள்.

    இந்தா கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க. எம்புருஷனை அது இதுன்னு சொன்னால் மருவாதி கெட்டுடும்

    ஏய் அவன் என் தம்பி

    அண்ணன், தம்பி உறவெல்லாம் அப்போ. எப்ப அவரு எனக்கு புருஷனா ஆனாரோ அப்ப இருந்தே அவரு எனக்குத்தான் சொந்தம்

    ஆமாண்டி உனக்குத்தான் சொந்தம். நான் என்ன பங்கா கேக்குறேன்? இம்புட்டு வக்கனையாய்ப் பேசுறியே இந்தா வதவதன்னு பெத்துப் போட்டிருக்கியே நாலு எருமைகளை! இதில் எதையாவது ஒன்னை உருப்படியாய் வளர்த்தியா? அம்புட்டும் தறுதலை

    ஏய் அத்தே மரியாதை! மரியாதையாய் பேசு. இல்ல அவ்வளவுதான். ரங்கராஜனின் மூத்த மகன் முஷ்டியை மடக்க கோபமாய் எழுந்தான் ஹரிகிருஷ்ணா.

    ஷட் அப் ஏன் இப்படி முட்டாள் மாதிரி கத்திட்டு இருக்கீங்க

    ஆமாம்பா. நாங்கள்லாம் முட்டாளுகதான். நீ மட்டும் தான் அறிவாளி. அதான் தாத்தா கூடவே நிழலாட்டம் இருந்துகிட்டு அவர் காசிலேயே படிச்சு வக்கீலாயிட்ட. உன் திறமை எங்களுக்கு வருமா?

    ராஜேஷ்... எந்த நேரத்தில் என்ன பேசுற நீ... தாத்தாவோட நிலைமைய யாராவது நினைச்சு பார்க்குறீங்களா? அவருக்கு இப்ப தேவை நிம்மதி, அமைதி.

    ஹூம் உன் அம்மா கூட இருக்கும்போது தாத்தாவுக்கு இதெல்லாம் எப்படி கிடைக்கும்

    ஏலேய் முட்டாப்பய மவனே. யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்றே செல்வி சிலிர்த்துக் கொண்டு வர நால்வரில் முரட்டுத்தனமாய் இருந்த தனா கோபமாய் அவளை நெருங்கினான்.

    அத்தே வாயை அடக்கிப் பேசு. இல்ல பல்லை பேத்திடுவேன்

    தனா.

    இதோ பாரு அரி. இந்த வீட்ல உள்ள மொத்த பிரச்சனைக்கும் மூல காரணம் உன் அம்மாதான். பொட்டப் புள்ளைகளை கட்டிக் கொடுத்தால் புருஷன் வீட்டுக்குப் போகணும். உன் அம்மா உடம்பை வளைச்சு வேலை செய்ய வலிக்குதுன்னு வீட்டுலயே உட்கார்ந்து நாட்டாமை பண்ணிட்டு இருக்கு. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. இந்த வயசுல இந்த ஆட்டம் போடுதே. இளவயசுல் என்னென்ன வேலை செய்திருக்கும்? நான் நினைக்கிறேன் இதுதான் ஏதோ கலகம் பண்ணி பெரியப்பாவையும் பெரியம்மாவையும் வீட்டை விட்டு விரட்டியிருக்கும்

    அடேய் நான் ஏன்டா விரட்டணும்

    அப்பத்தானே இந்த வீட்ல அல்லி ராஜ்ஜியம் பண்ண முடியும். என் அம்மா கொஞ்சம் சாமர்த்தியசாலி. அதனாலதான் தப்பிச்சது. இல்லன்னா எல்லாரையும் விரட்டிட்டு ஒத்தையா நின்னு மொத்த சொத்தையும் அடிச்சிருக்கும் பிசாசு

    அடச்சே நிறுத்துங்கப்பா. இப்படி ஒட்டுமொத்தக் குடும்பமும் சண்டை போட்டுட்டு இருந்தால் ரெண்டே நாள்ல பெரியவர் போய் சேர்ந்திடுவார் என்ற மருத்துவரின் குரலில் ஹரி கிருஷ்ணா பதறினார்.

    டாக்டர்

    பின்ன என்ன ஹரி. பெரியவருக்கு நோய் உடம்புல மட்டும் இல்ல. மனசில இருக்கு. நீங்க ஒற்றுமையாய் இருந்து அன்பாய் கவனித்துக் கொண்டால் எழுந்து நடமாட வாய்ப்பு இருக்கிறது. இல்ல இதே மாதிரி சண்டை போட்டுக் கொண்டிருந்தால்.. ம்ப்ச் ஸாரி ஹரி என்றவாறே அவர் புறப்பட ஆயத்தமாக, சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்தவாறே அவரைப் பின் தொடர்ந்தான் ஹரிகிருஷ்ணா.

    காரை நெருங்கிய மருத்துவர் தனக்கான தொகையைப் பெற்றுக் கொண்டு ஹரிகிருஷ்ணாவை ஏறிட்டார்.

    மிஸ்டர் ஹரி உங்க குடும்ப சூழ்நிலை சரியில்லாமல் இருக்குன்னு நினைக்குறேன்

    யெஸ் டாக்டர். தனாவோட ரௌடித்தனம் ராஜேஸோட திருட்டுக் கல்யாணம்னு தாத்தாவுக்கு அடுத்தடுத்து அடி விழுது. கௌரவம் மரியாதை பகட்டுன்னு வாழ்ந்த தாத்தாவால் இதையெல்லாம் சகிச்சுக்க முடியலை

    இதுமட்டும் இல்ல ஹரி. அவர் மனசை வேற எதுவோ பலமாய் தாக்கியிருக்கு. தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன்னு திரும்ப திரும்ப சொல்றாரு. அது என்னன்னு கேட்டு அதை சரி பண்ணப் பாருங்க

    டாக்டர்

    நான் வெளியாள். என்கிட்ட அவர் சொல்ல விரும்பல. நீங்க அவரோட பேரன். அவருக்கு பிரியமான பேரன். ஸோ நீங்க கேட்டு பாருங்களேன்

    பேசுறேன் டாக்டர்

    குட் கூடுமானவரை அவரைக் கொஞ்சம் அமைதியாய் வெச்சுக்க பாருங்க. நான் வரட்டுமா

    ஓ.கே. டாக்டர். தேங்க்யூ டாக்டர்

    என்றவன் அவரது கார் புறப்படும் வரை நின்று விட்டு குழப்பமாய் வீட்டுக்குள் நுழைந்தான். ‘தாத்தா தப்பு பண்ணினாரா? அவர் என்ன தப்பு செய்தார்? ஒருவேளை சினிமாக்களில் வருவது போல் பாட்டிக்கு தெரியாமல் வேறு ஏதேனும் குடும்பத்தை வைத்திருக்கிறாரா? தனக்கு விபரம் தெரிந்த நாள் முதலாய் பட்டு வேஷ்டி பட்டு அங்கவஸ்திரம் ஜிப்பா, எட்டு விரல்களில் மோதிரம் என கம்பீர நடையோடு ஒரு ராஜாங்கமே நடத்தி வந்தார் என்பது உண்மை.

    அந்த அதிகார தோரணயில் ஏதேனும் குடும்பத்தை இம்சித்திருப்பாரா? இல்லை வயல்வெளியில் பணிபுரிந்த பெண்களில் யாரையேனும்... ச்சே.. என் புத்தி ஏன் இத்தனை மட்டமாய் சிந்திக்கிறது? பேசாமல் தாத்தாவிடமே கேட்டு விடலாம்’ அறையை அடைந்தபோது அங்கே சண்டை முற்றியிருந்தது.

    சீமைராஜா மாதிரி நடந்திட்டு இருந்த மனுஷனை இப்படிப் பட்ட மரமா சாய்ச்சுட்டீங்களேடா. ரோட்ல போற எவளையோ இழுத்திட்டு வந்து என் அப்பனை கொன்னுட்டியேடா பாவி என்ற தாயிடம் வெடித்தான்.

    அம்மா வாயை மூடுங்க. ஏன் இப்படி விரோதி மாதிரி அடிச்சுக்கிறீங்க? அசிங்கமா இல்ல?

    இல்ல அரி... இந்தப் பயதான்

    போதும் எல்லாரும் வெளியே போங்க. நான் தாத்தாகிட்ட பேசணும்

    "எங்களை வெளியே அனுப்பிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1