Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முள்ளும் மலராகும்!
முள்ளும் மலராகும்!
முள்ளும் மலராகும்!
Ebook122 pages45 minutes

முள்ளும் மலராகும்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பச்சரிசி மாவை பக்குவமாய் கலந்து எடுத்து, வலக்கையின் ஐந்து விரல்களையும் மடித்து கையின் அடிப்பாகத்தை அந்த மாவுக்கலவையில் மூழ்க வைத்து தரையில் அழுத்தமாய் பதிய வைத்தாள் காயத்ரி. மீண்டும் விரல்களை மாவில் தோய்த்து முதலில் சற்று பெரிதாய்... அடுத்து சற்று சிறியதாய் என வரிசையாய் ஐந்து விரல்களை மாவால் வரைந்து விட்டு சற்று பின்னோக்கி நகர்ந்து தன் கைவண்ணத்தை ஆராய்ந்தாள். 

சின்னஞ்சிறு குழந்தையின் பாதம் அச்சுஅசலாய் பதிந்திருக்க திருப்தியாய் புன்னகைத்தாள். இப்போது அதே போல் இடக்கையின் விரல்களை மடித்து பாதம் பதிக்க ஒரு குழந்தையின் இருபாதங்களும் தத்ரூபமாய் வந்திருந்தது. 

"நன்றி கண்ணா!" தனக்குள் முணுமுணுத்துவிட்டு மீண்டும் அதே பாதங்களை போதிய இடைவெளிவிட்டு வெளிவாசலில் இருந்து வரைந்து கொண்டே நடுக்கூடத்தை அடைந்த போது மூத்தமகன் ரஞ்சித் எதிர் பட்டான்.

"மாம்! என்ன பண்றீங்க?" 

"இன்னிக்கு கோகுலாஷ்டமிப்பா, அதான் கண்ணனை வீட்டுக்குள்ள அழைச்சிண்டு வர்றேன்" 

"நீங்க இப்படிப் பண்ணினால் என்ன அர்த்தம்? எழுந்திருங்க மாம். டாட் வந்தால் திட்டப் போறாங்க." 

"பாதியில விடக்கூடாது ரஞ்சித். இன்னும் நாலஞ்சு அடி எடுத்து வெச்சா பூஜை ரூம் வந்திடும். நீ நகர்ந்து நில். மிதிச்சிடாதே!"- என்றவாறே தன் பணியை காயத்ரி தொடங்க. தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த இளையமகன் ரஞ்சன் அலட்சியமாய் சொன்னான். 

"அண்ணா! அம்மாவுக்கு ஜுரம், இல்ல ஹார்ட் அட்டாக் வந்தாக்கூட கண்ணன் பாதம் வரையாமல் கோலாஷ்டமி கொண்டாட மாட்டாங்க. எத்தனை வருஷமாய் பார்க்கிறோம்." 

"வாயை மூடு ரஞ்சன். அம்மா நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?" 

"பின்னே என்ன அண்ணா? டாக்டர் என்ன சொன்னார்? வைரஸ் பீவர். கண்டிப்பா பெட் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாரா இல்லையா? இங்கே பார். காலையிலயே தலைக்கு ஊத்திக்கிட்டு தெருவில இருந்தே கோலம் போட்டுட்டு வர்றாங்க. உடம்பு என்னத்துக்கு ஆகும்? நாம் சொன்னாலும் கேட்கிறதில்ல! 

கண்ட கண்ட வேலையையும் இழுத்து போட்டு செய்திட்டு அப்புறம் அப்பாகிட்ட நல்லா பாட்டு கேட்க வேண்டியது. அப்பா திட்டுறதுல எந்தத் தப்பும் கிடையாது!" என்ற இளைய மகனின் வார்த்தையை காதில் வாங்கிக் கொள்ளவில்லை அவள். 

மூத்தபிள்ளையும் கடைக்குட்டி ரக்ஷனும் அம்மா பிள்ளைகள். நடுவில் உள்ள ரஞ்சன் உருவத்திலும் குணத்திலும் தன் தந்தையை பிரதிபலிப்பவன். அதனால் கணவனிடம் மெளனம் சாதித்து தப்பித்துக் கொள்வதைப் போல் இவனிடமும் பல சந்தர்ப்பங்களில் மௌனம் சாதித்துவிடுவாள். அதோடு இன்று இவனிடம் பேசிக் கொண்டிருக்க அவளுக்கு நேரமும் இல்லை. 

வெளியே சென்ற கணவன் வீடு திரும்பும் முன் பூஜையை முடித்தாக வேண்டும். பூஜை புனஸ்காரங்களில் எப்போதுமே அதிக ஈடுபாடு இல்லாதவர் முகுந்தன். அதிலும் ஒரு வார காலமாய் காய்ச்சலில் கிடந்தவர் இன்று இத்தனை பலகாரங்களைச் செய்து வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து பூஜை செய்கிறாள் என்றால் அவ்வளவுதான். பிறகு இந்த வீட்டில் பூஜை நடக்காது. கணவனின் அர்ச்சனை மட்டுமே கேட்கும். 

அதனால் தன் வேலைகளை மளமளவென முடித்துவிட்டு விளக்கேற்றினாள். பலகாரங்கள், தாம்பூலம் எல்லாம் சரிபார்த்துவிட்டு மகன்களை அழைத்தாள். 

"ரஞ்சித்! ரஞ்சன்! வாங்க சாமி கும்பிடலாம்" 

"ம்மா! மேட்ச் பார்த்திட்டு இருக்கேனில்ல?" 

"உதைவாங்கப் போற! மேட்ச் முக்கியமா? கடவுள் முக்கியமா?" 

"உங்களுக்கு கடவுள். எனக்கு மேட்ச்!" 

"ரஞ்சன்! பெரிய நாத்திகன் மாதிரி பேசாதே! எழுந்திரு!"- என்றவாறே ரஞ்சித் தொலைக்காட்சியின் இயக்கத்தை நிறுத்த, சற்று எரிச்சலாய் எழுந்து பூஜையறைக்குள் நுழைந்தான். 

பூஜையறையில் மெல்லிய ஓசையோடு விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலித்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்த ரஞ்சித் தன் இளைய தம்பியைத் தேடினான். 

"ரக்ஷன் எங்கேம்மா?" 

"கிரிக்கெட் மட்டையை எடுத்துகிட்டு காலையிலேயே கிளம்பிட்டான். இனி மதிய சாப்பாட்டுக்குத்தான் வருவான்." 

"அவனை மட்டும் அனுப்புங்க. என்னை அனுப்ப மட்டும் மனசு வராது உங்களுக்கு" -ரஞ்சன் முணுமுணுத்தான். 

"ரஞ்சன்! அவன் சின்னப்பையன்" 

"பனிரெண்டாவது படிக்கிறாம்மா. அவன் சின்னப்பையனா?" 

"இதோ பாருப்பா! அவன் விளையாடப் போறான். ஆனா நீ பிரெண்டுங்க கூடச் சேர்ந்து ஊர் சுத்தணும்னு சொல்ற. உன் பிரெண்டுங்க எவனாவது ஒழுக்கமான பசங்க மாதிரி இருக்காணுங்களா? அவனுங்க கூடச் சேர்ந்து நீயும் கெட்டுப்போயிடக் கூடாதுன்னு..." 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223744320
முள்ளும் மலராகும்!

Read more from Kalaivani Chokkalingam

Related to முள்ளும் மலராகும்!

Related ebooks

Related categories

Reviews for முள்ளும் மலராகும்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முள்ளும் மலராகும்! - Kalaivani Chokkalingam

    1

    பச்சரிசி மாவை பக்குவமாய் கலந்து எடுத்து, வலக்கையின் ஐந்து விரல்களையும் மடித்து கையின் அடிப்பாகத்தை அந்த மாவுக்கலவையில் மூழ்க வைத்து தரையில் அழுத்தமாய் பதிய வைத்தாள் காயத்ரி. மீண்டும் விரல்களை மாவில் தோய்த்து முதலில் சற்று பெரிதாய்... அடுத்து சற்று சிறியதாய் என வரிசையாய் ஐந்து விரல்களை மாவால் வரைந்து விட்டு சற்று பின்னோக்கி நகர்ந்து தன் கைவண்ணத்தை ஆராய்ந்தாள்.

    சின்னஞ்சிறு குழந்தையின் பாதம் அச்சுஅசலாய் பதிந்திருக்க திருப்தியாய் புன்னகைத்தாள். இப்போது அதே போல் இடக்கையின் விரல்களை மடித்து பாதம் பதிக்க ஒரு குழந்தையின் இருபாதங்களும் தத்ரூபமாய் வந்திருந்தது.

    நன்றி கண்ணா! தனக்குள் முணுமுணுத்துவிட்டு மீண்டும் அதே பாதங்களை போதிய இடைவெளிவிட்டு வெளிவாசலில் இருந்து வரைந்து கொண்டே நடுக்கூடத்தை அடைந்த போது மூத்தமகன் ரஞ்சித் எதிர் பட்டான்.

    மாம்! என்ன பண்றீங்க?

    இன்னிக்கு கோகுலாஷ்டமிப்பா, அதான் கண்ணனை வீட்டுக்குள்ள அழைச்சிண்டு வர்றேன்

    நீங்க இப்படிப் பண்ணினால் என்ன அர்த்தம்? எழுந்திருங்க மாம். டாட் வந்தால் திட்டப் போறாங்க.

    பாதியில விடக்கூடாது ரஞ்சித். இன்னும் நாலஞ்சு அடி எடுத்து வெச்சா பூஜை ரூம் வந்திடும். நீ நகர்ந்து நில். மிதிச்சிடாதே!- என்றவாறே தன் பணியை காயத்ரி தொடங்க. தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த இளையமகன் ரஞ்சன் அலட்சியமாய் சொன்னான்.

    அண்ணா! அம்மாவுக்கு ஜுரம், இல்ல ஹார்ட் அட்டாக் வந்தாக்கூட கண்ணன் பாதம் வரையாமல் கோலாஷ்டமி கொண்டாட மாட்டாங்க. எத்தனை வருஷமாய் பார்க்கிறோம்.

    வாயை மூடு ரஞ்சன். அம்மா நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?

    "பின்னே என்ன அண்ணா? டாக்டர் என்ன சொன்னார்? வைரஸ் பீவர். கண்டிப்பா பெட் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாரா இல்லையா? இங்கே பார். காலையிலயே தலைக்கு ஊத்திக்கிட்டு தெருவில இருந்தே கோலம் போட்டுட்டு வர்றாங்க. உடம்பு என்னத்துக்கு ஆகும்? நாம் சொன்னாலும் கேட்கிறதில்ல!

    கண்ட கண்ட வேலையையும் இழுத்து போட்டு செய்திட்டு அப்புறம் அப்பாகிட்ட நல்லா பாட்டு கேட்க வேண்டியது. அப்பா திட்டுறதுல எந்தத் தப்பும் கிடையாது!" என்ற இளைய மகனின் வார்த்தையை காதில் வாங்கிக் கொள்ளவில்லை அவள்.

    மூத்தபிள்ளையும் கடைக்குட்டி ரக்ஷனும் அம்மா பிள்ளைகள். நடுவில் உள்ள ரஞ்சன் உருவத்திலும் குணத்திலும் தன் தந்தையை பிரதிபலிப்பவன். அதனால் கணவனிடம் மெளனம் சாதித்து தப்பித்துக் கொள்வதைப் போல் இவனிடமும் பல சந்தர்ப்பங்களில் மௌனம் சாதித்துவிடுவாள். அதோடு இன்று இவனிடம் பேசிக் கொண்டிருக்க அவளுக்கு நேரமும் இல்லை.

    வெளியே சென்ற கணவன் வீடு திரும்பும் முன் பூஜையை முடித்தாக வேண்டும். பூஜை புனஸ்காரங்களில் எப்போதுமே அதிக ஈடுபாடு இல்லாதவர் முகுந்தன். அதிலும் ஒரு வார காலமாய் காய்ச்சலில் கிடந்தவர் இன்று இத்தனை பலகாரங்களைச் செய்து வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து பூஜை செய்கிறாள் என்றால் அவ்வளவுதான். பிறகு இந்த வீட்டில் பூஜை நடக்காது. கணவனின் அர்ச்சனை மட்டுமே கேட்கும்.

    அதனால் தன் வேலைகளை மளமளவென முடித்துவிட்டு விளக்கேற்றினாள். பலகாரங்கள், தாம்பூலம் எல்லாம் சரிபார்த்துவிட்டு மகன்களை அழைத்தாள்.

    ரஞ்சித்! ரஞ்சன்! வாங்க சாமி கும்பிடலாம்

    ம்மா! மேட்ச் பார்த்திட்டு இருக்கேனில்ல?

    உதைவாங்கப் போற! மேட்ச் முக்கியமா? கடவுள் முக்கியமா?

    உங்களுக்கு கடவுள். எனக்கு மேட்ச்!

    ரஞ்சன்! பெரிய நாத்திகன் மாதிரி பேசாதே! எழுந்திரு!- என்றவாறே ரஞ்சித் தொலைக்காட்சியின் இயக்கத்தை நிறுத்த, சற்று எரிச்சலாய் எழுந்து பூஜையறைக்குள் நுழைந்தான்.

    பூஜையறையில் மெல்லிய ஓசையோடு விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலித்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்த ரஞ்சித் தன் இளைய தம்பியைத் தேடினான்.

    ரக்ஷன் எங்கேம்மா?

    கிரிக்கெட் மட்டையை எடுத்துகிட்டு காலையிலேயே கிளம்பிட்டான். இனி மதிய சாப்பாட்டுக்குத்தான் வருவான்.

    அவனை மட்டும் அனுப்புங்க. என்னை அனுப்ப மட்டும் மனசு வராது உங்களுக்கு -ரஞ்சன் முணுமுணுத்தான்.

    ரஞ்சன்! அவன் சின்னப்பையன்

    பனிரெண்டாவது படிக்கிறாம்மா. அவன் சின்னப்பையனா?

    இதோ பாருப்பா! அவன் விளையாடப் போறான். ஆனா நீ பிரெண்டுங்க கூடச் சேர்ந்து ஊர் சுத்தணும்னு சொல்ற. உன் பிரெண்டுங்க எவனாவது ஒழுக்கமான பசங்க மாதிரி இருக்காணுங்களா? அவனுங்க கூடச் சேர்ந்து நீயும் கெட்டுப்போயிடக் கூடாதுன்னு...

    ம்மா! என் பிரெண்ட்ஸ பத்தி தப்பா பேசாதீங்க. சொல்லிட்டேன்

    ஏன்டா எப்பப் பார்த்தாலும் அம்மாகிட்ட சிடுசிடுன்னு பேசுறே? பொறுமையாய் பேசேன் - என்ற தமையனை முறைத்தான்.

    அம்மா! பெரிய்ய அம்மா. இந்த அம்மாவுக்கு என்ன தெரியும்? கிணத்துத் தவளை. இந்த வீட்டை விட்டு என்னிக்காவது வெளியே வந்திருக்காங்களா? வீடு, சமையல், பூஜை இதைத்தவிர என்ன தெரியும்? வெளியே வந்து நாலு பேர் கிட்ட பழகினால்தானே நல்லது கெட்டது தெரியும்? வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகிட்டு என் பிரெண்ட்ஸ குறை சொல்லலாமா? அவனுங்களைப் பத்தி என்ன தெரியும்.

    மகன் பேசிக் கொண்டே போக காயத்ரியின் முகம் இறுகியது.

    பூஜையைத் துவங்கினாள்.

    ஹரே ராமா ஹரே நந்தா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே... ஹரே கிருஷ்னா ஹரே பாலகிருஷ்ண ஹரே ஹரே... அவளது உச்சரிப்பில் இருவரும் கண்களை மூடிய நேரம் வெளியே கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. கணவர் வந்துவிட்டார் என்பதை அந்த ஓசை அறிவிக்க, பூஜையை நிறுத்தவில்லை காயத்ரி.

    காரை விட்டு இறங்கிய முகுந்தன் வாசலில் வரையப்பட்டிருந்த கண்ணன் பாதங்களையும் வீட்டிற்குள் ஒலித்த மந்திர உச்சாடணையையும் கேட்டுவிட்டு சற்று கோபமாய் உள்ளே நுழைந்தார்.

    எத்தனை வாட்டி சொன்னாலும் இவ திருந்த மாட்டா. நேற்று வரைக்கும் ஹாஸ்பிட்டலுக்கு பதினைந்தாயிரம் அழுதிருக்கேன். இன்னிக்கு இவ வேலையை ஆரம்பிச்சிட்டா... கணவனின் குரல் பூஜையறையை நெருங்க, கற்பூர ஜோதியை கண்ணனின் திருஉருவச்சிலைக்குக் காட்டிக் கொண்டிருந்த காயத்ரியின் இதயம் தடதடத்தது.

    கண்ணா! இன்று நீ அவதரித்த தினம். இன்று முழுவதும் உன் நாமத்தை மட்டுமே நான் உச்சரித்துக் கொண்டிருப்பேன். இன்று மட்டும் இந்த வீட்டில் எந்த சச்சரவும் நேராமல் பார்த்துக் கொள்ளப்பா. குறிப்பாய் இந்த பூஜை முடியும் வரை அவர் என்னிடம் ஒரு வார்த்தை பேசக்கூடாது. கண்ணா! கண்ணா!

    காயத்ரியின் வேண்டுதலுக்கு கைமேல் பலன்கிடைத்தது. பூஜையறைக்குள் நுழைய முயன்ற முகுந்தனின் கையிலிருந்த அலைபேசி வீறிட, திட்டுவதை நிறுத்திவிட்டு போனை எடுத்தவர் உடனே பவ்யமானார்.

    ஜி... உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணினேன். நீங்க வரவில்லைன்னதும் இதோ... இப்பத்தான் புறப்பட்டேன். ஐந்தே நிமிடத்தில் அங்கே இருப்பேன். வந்துட்டேன்... வந்துட்டே இருக்கேன் - என அவரது குரல் வாசலை நோக்கி தேய்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1