Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வீணை மீட்டும் கைகள்!
வீணை மீட்டும் கைகள்!
வீணை மீட்டும் கைகள்!
Ebook132 pages46 minutes

வீணை மீட்டும் கைகள்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"எங்க கெளசி நன்னா பாடுவா. அருமையா சமைப்பா. வெறுமனே பருப்பு மசியலும் ரசமும் வெச்சாக் கூட இலைய விட்டு எழ மனமே இருக்காது. அப்படி ஒரு ருசியும் மணமுமா வெப்பா. பத்து பேர் மொத்தமா வந்து நின்னாக் கூட சட்டுன்னு சமைச்சி விருந்து வெச்சிடுவா அம்புட்டு சுறுசுறுப்பு."

"சமையல்ல மட்டுமில்ல வீட்டை சுத்தமா வெச்சிக்கிறதுலயும் அவளை மிஞ்ச ஆளில்லை தெரியுமோ? அதிகாலை எழுந்ததும் ஸ்நானம் பண்ணாம தலைவாசல் தெளிக்கமாட்டா. சமையக்கட்டுக்குள்ளயும் நுழையமாட்டா." 

"அப்படியே அவ அம்மாவாட்டம் அவ்வளவு சுத்தம் தரையைப் பாருங்கோளேன். ஒரு தூசி துரும்பு கூட தட்டுப்படாது. இன்னைக்குன்னு இல்ல. எங்க கெளசி வீட்டையும் சரி கோவிலையும் சரி எப்பவும் பளிச்சினுதான் வெச்சிருப்பா." 

காமு பாட்டியும் கோமு மாமியும் மாறி மாறித் தன்னைப் புகழ, தரையில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் அழகுப் பதுமையாய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த கௌசல்யா சங்கோஜமாய் நெளிந்தாள். 

'என்ன இது? என்னதான் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெண்ணைப் பற்றி உயர்வாக பேசுவது என்றாலும் அதற்கு ஒரு அளவுவேண்டாமோ? இது சுய தம்பட்டம் அடிப்பது போலாகாதா? இங்கேயே வாழ்ந்து அவர்களின் கண்முன்னே பிறந்து வளர்ந்த என்னைப் பற்றி பேசுவது இவர்களுக்கு வேண்டுமானால் வெல்லமாக இருக்கலாம். ஆனால் கேட்பவர்களுக்கு சலிப்பு தட்டாதா? 

அதிலும் அந்த மாப்பிள்ளை அடிக்கடி அவஸ்தையாய் நெளிவதும் சலிப்பாய் உச்சுக்கொட்டுவதும் தரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் என்னாலேயே உணர முடிகின்றது. இந்த மாமிக்கும் பாட்டிக்கும் ஏன் புரியவில்லை.' 

"மார்கழி மாத பஜனையில் எங்க கௌசி திருப்பாவை பாடினான்னா அந்த அம்பாளே மெய்மறந்து கேட்பாள். கோவில்ல உள்ள கூட்டம் கொஞ்சம் கூட அசையாது. அப்படியே அவபாட்டுல கரைஞ்சி போயிடுவோம்." 

"ஓ! அவ்ளோ நன்னா பாடுவாளா?" மாப்பிள்ளையின் தாயார் ஆர்வமாய்க் கேட்க, இன்னும் உற்சாகமானாள் கோமதி. 

"என்ன இப்படிக் கேட்டுட்டேள்? தேன் மதுரக்குரல்னு கேள்விப்பட்டிருப்பேளே.. அது சாட்சாத் எங்க கெளசிக்குத்தான் பொருந்தும். அப்படி ஒரு குரல் அதுவும் பாவனையோடு அவ கண்மூடிப் பாடுறப்போ அந்த ஆண்டாளே நேர்ல வந்து பாடுற மாதிரி இருக்கும்." 

"ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்போ இனி எங்க வீட்டு பூஜையறையில் தினமும் கெளசியோட இசை கேட்கும்." 

மாப்பிள்ளையின் தந்தையும் தன் பங்குக்குக் கூற, அவர்களது சம்மதத்தை மறைமுகமாய் சொல்லிவிட கௌசல்யாவின் முகம் செம்பருத்திப் பூவாய் மாறியது. தலையை இன்னும் தாழ்த்திக் கொண்டாள். 

"பாட்டு மட்டுமென்ன வீணை இசையும் கேட்கும். எங்க கௌசி அருமையா வீணையும் வாசிப்பா." 

"வீணையா?" 

"ம்ம. எங்க ஊர்ப்பக்கம் அவ வீணை இசையை மிஞ்ச ஒருத்தரும் கிடையாது."

"கச்சேரி பண்ணுவாளா?" 

"அதெல்லாம் பண்ணமாட்டா. பண்டிகை காலங்களில் கோவில் உற்சவத்துல கௌசியோட வீணை இசை நடக்கும். கூடுற கூட்டம் அவ இசையைக் கேட்டு அவ்வளவு சீக்கிரம் கலையாது. சில நேரம் விடியும்வரை சலிக்காம வாசிச்சிட்டே இருப்பா." 

"இப்போ வீட்ல வீணை இருக்கா?" மாப்பிள்ளையின் சகோதரி ஆர்வமாய்க் கேட்க, காமு பாட்டி உற்சாகமாய் தலையாட்டினாள். 

"ஓ! இருக்கே! இவளுக்காகவே இவ தோப்பனார் வாங்கிக் கொடுத்திருக்கார்." 

"மன்னி! எனக்காக கொஞ்சம் வீணை வாசிக்கிறேளா?" கெஞ்சலும் கொஞ்சலுமாய் அவள் கேட்க, லேசான புன்னகையோடு தலையசைத்தாள் கௌசல்யா. 

"அம்பி! அந்த வீணையை எடுத்துண்டு வா." காமுப் பாட்டி ஆர்ப்பாட்டமாய் உத்தரவிட தூணோரமாய் கைகட்டிக் கொண்டு நின்ற ராமகிருஷ்ணன் ஓட்டமாய் வீட்டிற்குள் சென்று பூஜையறையில் இருந்த வீணையை பாதுகாப்பு பெட்டகம் போல் இருகைகளாலும் சேர்த்தணைத்துக் கொண்டு வந்து கௌசல்யாவின் முன்னே வைக்க, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் இடைமறித்தான் மாப்பிள்ளை தாமோதரன்.

 

 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 15, 2023
ISBN9798223885955
வீணை மீட்டும் கைகள்!

Read more from Kalaivani Chokkalingam

Related to வீணை மீட்டும் கைகள்!

Related ebooks

Reviews for வீணை மீட்டும் கைகள்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வீணை மீட்டும் கைகள்! - Kalaivani Chokkalingam

    1

    "எங்க கெளசி நன்னா பாடுவா. அருமையா சமைப்பா. வெறுமனே பருப்பு மசியலும் ரசமும் வெச்சாக் கூட இலைய விட்டு எழ மனமே இருக்காது. அப்படி ஒரு ருசியும் மணமுமா வெப்பா. பத்து பேர் மொத்தமா வந்து நின்னாக் கூட சட்டுன்னு சமைச்சி விருந்து வெச்சிடுவா அம்புட்டு சுறுசுறுப்பு."

    சமையல்ல மட்டுமில்ல வீட்டை சுத்தமா வெச்சிக்கிறதுலயும் அவளை மிஞ்ச ஆளில்லை தெரியுமோ? அதிகாலை எழுந்ததும் ஸ்நானம் பண்ணாம தலைவாசல் தெளிக்கமாட்டா. சமையக்கட்டுக்குள்ளயும் நுழையமாட்டா.

    அப்படியே அவ அம்மாவாட்டம் அவ்வளவு சுத்தம் தரையைப் பாருங்கோளேன். ஒரு தூசி துரும்பு கூட தட்டுப்படாது. இன்னைக்குன்னு இல்ல. எங்க கெளசி வீட்டையும் சரி கோவிலையும் சரி எப்பவும் பளிச்சினுதான் வெச்சிருப்பா.

    காமு பாட்டியும் கோமு மாமியும் மாறி மாறித் தன்னைப் புகழ, தரையில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் அழகுப் பதுமையாய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த கௌசல்யா சங்கோஜமாய் நெளிந்தாள்.

    ‘என்ன இது? என்னதான் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெண்ணைப் பற்றி உயர்வாக பேசுவது என்றாலும் அதற்கு ஒரு அளவுவேண்டாமோ? இது சுய தம்பட்டம் அடிப்பது போலாகாதா? இங்கேயே வாழ்ந்து அவர்களின் கண்முன்னே பிறந்து வளர்ந்த என்னைப் பற்றி பேசுவது இவர்களுக்கு வேண்டுமானால் வெல்லமாக இருக்கலாம். ஆனால் கேட்பவர்களுக்கு சலிப்பு தட்டாதா?

    அதிலும் அந்த மாப்பிள்ளை அடிக்கடி அவஸ்தையாய் நெளிவதும் சலிப்பாய் உச்சுக்கொட்டுவதும் தரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் என்னாலேயே உணர முடிகின்றது. இந்த மாமிக்கும் பாட்டிக்கும் ஏன் புரியவில்லை.’

    மார்கழி மாத பஜனையில் எங்க கௌசி திருப்பாவை பாடினான்னா அந்த அம்பாளே மெய்மறந்து கேட்பாள். கோவில்ல உள்ள கூட்டம் கொஞ்சம் கூட அசையாது. அப்படியே அவபாட்டுல கரைஞ்சி போயிடுவோம்.

    ஓ! அவ்ளோ நன்னா பாடுவாளா? மாப்பிள்ளையின் தாயார் ஆர்வமாய்க் கேட்க, இன்னும் உற்சாகமானாள் கோமதி.

    என்ன இப்படிக் கேட்டுட்டேள்? தேன் மதுரக்குரல்னு கேள்விப்பட்டிருப்பேளே.. அது சாட்சாத் எங்க கெளசிக்குத்தான் பொருந்தும். அப்படி ஒரு குரல் அதுவும் பாவனையோடு அவ கண்மூடிப் பாடுறப்போ அந்த ஆண்டாளே நேர்ல வந்து பாடுற மாதிரி இருக்கும்.

    ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்போ இனி எங்க வீட்டு பூஜையறையில் தினமும் கெளசியோட இசை கேட்கும்.

    மாப்பிள்ளையின் தந்தையும் தன் பங்குக்குக் கூற, அவர்களது சம்மதத்தை மறைமுகமாய் சொல்லிவிட கௌசல்யாவின் முகம் செம்பருத்திப் பூவாய் மாறியது. தலையை இன்னும் தாழ்த்திக் கொண்டாள்.

    பாட்டு மட்டுமென்ன வீணை இசையும் கேட்கும். எங்க கௌசி அருமையா வீணையும் வாசிப்பா.

    வீணையா?

    ம்ம. எங்க ஊர்ப்பக்கம் அவ வீணை இசையை மிஞ்ச ஒருத்தரும் கிடையாது.

    கச்சேரி பண்ணுவாளா?

    அதெல்லாம் பண்ணமாட்டா. பண்டிகை காலங்களில் கோவில் உற்சவத்துல கௌசியோட வீணை இசை நடக்கும். கூடுற கூட்டம் அவ இசையைக் கேட்டு அவ்வளவு சீக்கிரம் கலையாது. சில நேரம் விடியும்வரை சலிக்காம வாசிச்சிட்டே இருப்பா.

    இப்போ வீட்ல வீணை இருக்கா? மாப்பிள்ளையின் சகோதரி ஆர்வமாய்க் கேட்க, காமு பாட்டி உற்சாகமாய் தலையாட்டினாள்.

    ஓ! இருக்கே! இவளுக்காகவே இவ தோப்பனார் வாங்கிக் கொடுத்திருக்கார்.

    மன்னி! எனக்காக கொஞ்சம் வீணை வாசிக்கிறேளா? கெஞ்சலும் கொஞ்சலுமாய் அவள் கேட்க, லேசான புன்னகையோடு தலையசைத்தாள் கௌசல்யா.

    அம்பி! அந்த வீணையை எடுத்துண்டு வா. காமுப் பாட்டி ஆர்ப்பாட்டமாய் உத்தரவிட தூணோரமாய் கைகட்டிக் கொண்டு நின்ற ராமகிருஷ்ணன் ஓட்டமாய் வீட்டிற்குள் சென்று பூஜையறையில் இருந்த வீணையை பாதுகாப்பு பெட்டகம் போல் இருகைகளாலும் சேர்த்தணைத்துக் கொண்டு வந்து கௌசல்யாவின் முன்னே வைக்க, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் இடைமறித்தான் மாப்பிள்ளை தாமோதரன்.

    வாட் ஈஸ் திஸ்! என்ன கச்சேரி பண்ணப்போறீங்களா?

    சும்மா சம்பிரதாயத்துக்கு கொஞ்சம் வாசிக்கட்டும் மாப்பிள்ளை.

    நோ நோ! இந்த மாதிரி பாட்டு பாடு, டான்ஸ் ஆடுன்னு சொல்றதெல்லாம் தப்பு. இத்தனை கூட்டத்துல அந்தப் பொண்ணுக்கு பாடுறதுக்கு கூச்சமா இராதா? இதெல்லாம் வேண்டாம்.

    அண்ணா! அவங்கதான் கோவில்லயே பாடுவாங்களாமே! நம்ம முன்னாடி வாசிக்க சங்கோஜப்படமாட்டாங்க கொஞ்ச நேரம் வாசிக்கட்டுமே.

    உமா! நான் வீட்ல இருந்து புறப்படும்போதே என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன். பொண்ணுகிட்ட அநாவசியமாய் எதுவும் கேட்கக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?

    வீணைதானே அண்ணா, என்னைத்தான் கத்துக்க விடல. அவங்க வாசிக்கிறதையாவது கேட்கிறேனே! ப்ளீஸ் அண்ணா.

    நோ! உனக்கு ஆசையாய் இருந்தால் அத்திம்பேர்கிட்ட சொல்லி கத்துக்க அவாளை ஏன் டிஸ்சர்ப் பண்ற? தாமோதரன் இயல்பாகச் சொல்வது போல் சற்று அழுத்தமாகவே சொல்ல, கௌசல்யா பார்வையை மட்டும் லேசாய் உயர்த்தினாள்.

    வாட்டசாட்டமாய் மெத்தப்படித்த களையோடு ஜம்மென்று அமர்ந்திருந்த மாப்பிள்ளையை விட அவனருகே சற்று வாடிய முகத்தோடு அமர்ந்திருந்த உமாவின் முகம்தான் அவளை கவர்ந்தது.

    ‘இந்தப் பெண்ணிற்கு வீணை மீது அதிக ஆவல் போலும். தன் இசையைக் கேட்க ஒருவர் இத்தனை ஆவலாய் இருக்கும்போது வாசிப்பதில் ஒன்றும் தவறில்லையே. இந்த மாப்பிள்ளை ஏன் தடுக்க வேண்டும்.’

    அவளது மன ஓட்டத்தை புரிந்தாற்போல் அதுவரை மற்றவர்களின் சம்பாஷனையில் குறுக்கிடாமல் முகம் முழுக்க பூரிப்போடு நின்ற அருணாச்சலம் குரல் கொடுத்தார்.

    குழந்தை ஆசைப்படுறதுல தப்பில்லயே. அம்மா! கௌசல்யா கொஞ்சம் வாசியேன்.

    சரிப்பா.

    இல்ல இருக்கட்டும். சிரமப்பட வேண்டாம்.

    இதுல என்னப்பா சிரமம்? வழக்கமா பெண் பார்க்க வர்றவாளுக்கு பாடிக்காட்டுறது சம்பிரதாயம் தானே?

    அந்த பழைய பழக்கத்தைத்தான் மாத்தணும் பாட்டிம்மா இப்படிக் கும்பலைக் கூட்டிட்டு வந்துட்டு இவங்க முன்னாடி ஆடத்தெரியுமா? பாடத்தெரியுமான்னு கேட்டால் அந்தப் பெண்ணு என்ன பண்ணும் பாவம்? இதிலெல்லாம் எனக்கு எப்பவுமே உடன்பாடு கிடையாது. பொண்ணுங்க ஒண்ணும் பொம்மைங்க கிடையாது. அவங்களோட உணர்வுகளையும் நாம புரிஞ்சுக்கணும்.

    காலம் எவ்வளவோ முன்னேறிட்டு இருக்குது. இப்பல்லாம் கல்யாணத்துக்குக் கூட இவ்வளவு கூட்டம் கூடுறதில்ல. இங்கே பாருங்க. சும்மா பெண் பார்த்து வெற்றிலை பாக்கு மாத்திக்க நூறு பேருக்கு மேலே கூடியிருக்கோம். இவ்வளவு பேருக்கும் காபி டிபன், தாம்பூலம்னு பொண்ணு வீட்டுக்கு எவ்வளவு செலவாகும்.

    இதுவே பேசாம ஏதாவது ஒரு ரெஸ்டாரண்ட்லயோ கோவில்லயோ வெச்சுப் பார்த்திருந்தால் சிம்பிளா முடிஞ்சிருக்குமே! பொண்ணும் இப்படி மணிக்கணக்காய் தரையைப் பார்த்துட்டே உட்கார்ந்திருக்க வேண்டாம். இப்பப் பாருங்க. எனக்கு பொண்ணோட வகிடும், தலைநிறைய சூடியிருக்கிற மல்லிகையும்தான் தெரியுதே தவிர பொண்ணோட முகம் தெரியவே இல்ல. சாதாரணமாய்த் தொடங்கிய தாமோதரன் விளையாட்டாய் முடிக்க, கூடியிருந்த பெண்கள் கமுக்கமாய் சிரித்தார்கள்.

    ஏய்! மாப்பிள்ளைக்கு உன் முகத்தைக் காட்டுடி என்றவாறே சுந்தரி கௌசல்யாவின் முகத்தை நிமிர்த்த இன்னும் அதிகமாய் வெட்கினாள். தலை தானாய் கவிழ்ந்து கொள்ள சற்று, சலிப்போடு எழுந்து கொண்டான் தாமோதரன்.

    "ஓ.கே. நாங்க கிளம்புறோம். இதுக்கு மேலேயும் நாங்க இங்கே

    Enjoying the preview?
    Page 1 of 1