Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நான் இருந்தேன்... உன் ஞாபகமாய்...
நான் இருந்தேன்... உன் ஞாபகமாய்...
நான் இருந்தேன்... உன் ஞாபகமாய்...
Ebook165 pages1 hour

நான் இருந்தேன்... உன் ஞாபகமாய்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளமைக்கே உரிய சிரிப்பும் கலகலப்பும் அந்த காலேஜ் கேன்டினில் நிறைந்திருந்தது. 

சுசித்ரா தன் சிநேகிகளுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். "சுசி இன்னைக்கு லஞ்சுக்கு அப்புறம் ஒன் அவர்தான் காலேஜ் நடக்குமாம். அப்புறம் கிளாஸ் இல்லையாம். ஏதோ போர்ட் மீட்டிங் லெக்சர்ஸ் எல்லாம் போயிடுவாங்களாம்." கமலா சொல்ல, 

"அப்படியா... நல்ல நீயூஸாக இருக்கே. சீக்கிரமே கிளம்பிடலாம்" வித்யா சொல்ல, 

"சீக்கிரம் வீட்டுக்கு போய் என்ன பண்ண போறோம். எங்க அம்மா கமலா, நிறைய நோட்ஸ் எழுதனும்னு சொன்னியே உட்கார்ந்து எழுது. தூங்க போயிடாதேன்னு தொணதொணப்பாங்க." 

கமலா அலுப்புடன் சொல்ல, 

சுசி, அவர்களையெல்லாம் ஒருமுறை பார்த்தவள், 

"இன்னைக்கு நீங்க எல்லாரும் ஏன் என் வீட்டிற்கு வரக்கூடாது" கேட்க, 

"என்ன உன் வீட்டுக்கா... அது வீடா அது... பெரிய பங்களா... பிரம்மாண்டமான உங்க வீட்டை பார்த்தாலே... சினிமாவில் வர்ற மாதிரி இருக்கு. ஒருமுறை தீபாவளி சமயம் உங்க வீட்டிற்கு நான் வந்திருந்தேன்." புஷ்பா கண்களை அகல விரித்து சொல்கிறாள். 

"அப்படியா. நாங்க போனதே இல்லை. மனசு வந்து இன்னைக்குதான் கூப்பிடறா... வாங்க எல்லாரும் போய் அந்த மாளிகையை சுத்தி பார்ப்போம்"

கமலா உடனே சம்மதம் சொல்ல, 

எதுவுமே பேசாமல் மௌனமாக சாப்பிடும், அபியை பார்க்கிறாள் சுசி.

"அபி, நாங்க பேசறது உன் காதில் விழுதா… எல்லாரும் க்ளாஸ் முடிந்ததும் எங்க வீட்டுக்கு போறோம்" 

"இல்லை... நான் வரலை... நீங்கெல்லாம் போங்க... வீட்டுக்கு போனால் அம்மாவுக்கு உதவியாக ஏதாவது வேலை செய்யலாம்" 

"என்னடி இவ... பேர்தான் அபிதாகுஜாம்பாள்னு இருக்குன்னு பார்த்தா -இவளும் சரியான கட்டுபெட்டியா இருக்கா... சுசி எவ்வளவு ஆசையா கூப்பிடறா... கப்பல்போல அவ கார் வரும் அதில் ஏறிட்டு எல்லாரும் போகலாம். வா... அபி... நீ வந்தால்தான் நல்லாயிருக்கும்" 

வித்யா சொல்ல, 

சுசி, தலை நிமிராமல் சாப்பிடும் சிநேகிதியை பார்க்கிறாள். எந்த ஒப்பனையும் இல்லாமல், இயற்கையான அழகோடு அவர்கள் குருப்பில்  இருப்பவள் அவள் மட்டும்தான்.

பிரம்மா அவளை படைக்கும் போது எந்த குறையும் இல்லாமல், வஞ்சனை எதுவும் இல்லாமல், அழகை அள்ளி, அள்ளி கொடுத்துவிட்டான். 

ஆனால் அவள் பிறந்தது ஏழை குடும்பத்தில்... அப்பா வாட்ச்மேன் வேலை பார்க்க அம்மா ஒரு தையல் கடைக்கு வேலைக்கு போகிறாள். அவர்களின் ஒரே மகள் அபி. 

அவர்கள் அளவுக்குதான் வசதி இல்லாதவள் என்ற நினைப்பே, அவளை பல சமயங்களில் ஒதுங்க வைத்தது. 

ஆனால் சுசிக்கு அவளின் எளிமையான அழகும், அமைதியான பேசும் விதமும் ரொம்பவே பிடிக்கும். 

அதனால் தான் ஒதுங்கி போனவளை தன் நட்பால், தன்னுடன் இணைய வைத்தாள். 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 28, 2023
ISBN9798223521341
நான் இருந்தேன்... உன் ஞாபகமாய்...

Read more from Parimala Rajendran

Related to நான் இருந்தேன்... உன் ஞாபகமாய்...

Related ebooks

Reviews for நான் இருந்தேன்... உன் ஞாபகமாய்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நான் இருந்தேன்... உன் ஞாபகமாய்... - Parimala Rajendran

    1

    இளமைக்கே உரிய சிரிப்பும் கலகலப்பும் அந்த காலேஜ் கேன்டினில் நிறைந்திருந்தது.

    சுசித்ரா தன் சிநேகிகளுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். சுசி இன்னைக்கு லஞ்சுக்கு அப்புறம் ஒன் அவர்தான் காலேஜ் நடக்குமாம். அப்புறம் கிளாஸ் இல்லையாம். ஏதோ போர்ட் மீட்டிங் லெக்சர்ஸ் எல்லாம் போயிடுவாங்களாம். கமலா சொல்ல,

    அப்படியா... நல்ல நீயூஸாக இருக்கே. சீக்கிரமே கிளம்பிடலாம் வித்யா சொல்ல,

    சீக்கிரம் வீட்டுக்கு போய் என்ன பண்ண போறோம். எங்க அம்மா கமலா, நிறைய நோட்ஸ் எழுதனும்னு சொன்னியே உட்கார்ந்து எழுது. தூங்க போயிடாதேன்னு தொணதொணப்பாங்க.

    கமலா அலுப்புடன் சொல்ல,

    சுசி, அவர்களையெல்லாம் ஒருமுறை பார்த்தவள்,

    இன்னைக்கு நீங்க எல்லாரும் ஏன் என் வீட்டிற்கு வரக்கூடாது கேட்க,

    என்ன உன் வீட்டுக்கா... அது வீடா அது... பெரிய பங்களா... பிரம்மாண்டமான உங்க வீட்டை பார்த்தாலே... சினிமாவில் வர்ற மாதிரி இருக்கு. ஒருமுறை தீபாவளி சமயம் உங்க வீட்டிற்கு நான் வந்திருந்தேன். புஷ்பா கண்களை அகல விரித்து சொல்கிறாள்.

    அப்படியா. நாங்க போனதே இல்லை. மனசு வந்து இன்னைக்குதான் கூப்பிடறா... வாங்க எல்லாரும் போய் அந்த மாளிகையை சுத்தி பார்ப்போம்

    கமலா உடனே சம்மதம் சொல்ல,

    எதுவுமே பேசாமல் மௌனமாக சாப்பிடும், அபியை பார்க்கிறாள் சுசி.

    அபி, நாங்க பேசறது உன் காதில் விழுதா… எல்லாரும் க்ளாஸ் முடிந்ததும் எங்க வீட்டுக்கு போறோம்

    இல்லை... நான் வரலை... நீங்கெல்லாம் போங்க... வீட்டுக்கு போனால் அம்மாவுக்கு உதவியாக ஏதாவது வேலை செய்யலாம்

    என்னடி இவ... பேர்தான் அபிதாகுஜாம்பாள்னு இருக்குன்னு பார்த்தா -இவளும் சரியான கட்டுபெட்டியா இருக்கா... சுசி எவ்வளவு ஆசையா கூப்பிடறா... கப்பல்போல அவ கார் வரும் அதில் ஏறிட்டு எல்லாரும் போகலாம். வா... அபி... நீ வந்தால்தான் நல்லாயிருக்கும்

    வித்யா சொல்ல,

    சுசி, தலை நிமிராமல் சாப்பிடும் சிநேகிதியை பார்க்கிறாள். எந்த ஒப்பனையும் இல்லாமல், இயற்கையான அழகோடு அவர்கள் குருப்பில் இருப்பவள் அவள் மட்டும்தான்.

    பிரம்மா அவளை படைக்கும் போது எந்த குறையும் இல்லாமல், வஞ்சனை எதுவும் இல்லாமல், அழகை அள்ளி, அள்ளி கொடுத்துவிட்டான்.

    ஆனால் அவள் பிறந்தது ஏழை குடும்பத்தில்... அப்பா வாட்ச்மேன் வேலை பார்க்க அம்மா ஒரு தையல் கடைக்கு வேலைக்கு போகிறாள். அவர்களின் ஒரே மகள் அபி.

    அவர்கள் அளவுக்குதான் வசதி இல்லாதவள் என்ற நினைப்பே, அவளை பல சமயங்களில் ஒதுங்க வைத்தது.

    ஆனால் சுசிக்கு அவளின் எளிமையான அழகும், அமைதியான பேசும் விதமும் ரொம்பவே பிடிக்கும்.

    அதனால் தான் ஒதுங்கி போனவளை தன் நட்பால், தன்னுடன் இணைய வைத்தாள்.

    இத்தனை அலங்கார சாமான்களை பயன்படுத்தியும், அவளின் வசீகரிக்கும் அழகிற்கு முன், தன் அழகு ஒருபடி குறைந்திருப்பதாகவே சுசித்ராவிற்கு தோணும்.

    இங்கே பாரு அபி நீ எந்த எக்ஸ்க்யூஸீம் சொல்லக் கூடாது. இன்னைக்கு எங்களோடு நீயும் எங்க வீட்டுக்கு வர்றே. இது உன் சிநேகிதியின் கட்டளை

    "வேண்டாம் ப்ளீஸ் சுசி...

    அதெல்லாம் முடியாது...

    ஏன்ப்பா... இப்படி பயப்படற... அவங்க வீட்டில் என்ன புலி, சிங்கமா இருக்கு. சொல்ல போனால் இந்த சமயம் அவங்க வீட்டில், சுசியோட அம்மாவும், வேலைகாரங்களும்தான் இருப்பாங்க. ஜஸ்ட் ஒன் அவர் போயிட்டு வருவோம். திரும்ப எல்லாரையும் அவளே காரில் அனுப்பி வச்சுடுவா. இல்லையா சுசி

    ஆமாம் அபி. வித்யா சொன்னது போல, எல்லாரும் ஒரு மணிநேரம் எங்க வீட்டுக்கு வந்தபிறகு நானே எல்லாரையும் காரில் வீட்டில் டிராப் பண்ண சொல்றேன்.

    சுசி சொன்னவள்,

    ஓ.கே. அபியும் நம்மோடு வர்றா... இனி அவக்கிட்டே யாரும் பர்மிஷன் கேட்கக்கூடாது.

    அதானே நாளைக்கு உனக்கு கல்யாணம் வச்சால் வரமாட்டாளா. அப்புறம் நட்போடு பழகுவதற்கு என்ன அர்த்தம் கமலா சொல்ல,

    என்ன கமலா. இப்ப என்ன கல்யாணத்தை பத்தி பேச்சு... சுசிக்கு எதுவும் பிக்ஸ் ஆகியிருக்கா...

    ஆர்வத்துடன் வித்யா கேட்க,

    அப்படியே பிக்ஸ் ஆனாலும் அதை முதலில் அவ பெஸ்ட் பிரெண்ட் அபிக்கிட்டே தான் சொல்வா...

    ஏய், என்ன பேச்சு வேற ட்ராக்கில் போகுது, என் கல்யாணம் இப்போதைக்கு இல்லை. முதலில் படிப்பு முடியனும் அப்புறம் எங்கம்மா எனக்கு சல்லடை போட்டு அலசி மாப்பிள்ளை தேடணும். எவ்வளவு விஷயம் இருக்கு.

    அதானே... மகாராணிக்கு ஏற்ற மகாராஜா கிடைப்பது அவ்வளவு சுலபமா என்ன...

    கேலியுடன் சிரித்தபடி கமலா சொல்ல,

    சரி, கிளம்பலாமா... க்ளாஸுக்கு போகலாம். சுசி வழக்கம் போல காலேஜ் விடற டைம். நான் வீட்டில் இருக்கணும்.

    அப்பாடி... உன் இனிய சிநேகிதி... தன் காலடியை உன் வீட்டில் வைக்க சம்மதிச்சுட்டா... ஆரத்தி எடுத்து வரவேற்க... உன் வீட்டில் ஏற்பாடு செய்ய சொல்லு சுசி.

    வித்யா சொல்ல,

    போதும், அரட்டையடித்தது. வாங்க போகலாம் வாஷ்பேசன் நோக்கி போகிறாள் அபி.

    புஷ்பா, கமலா, வித்யாவுடன் அபியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறாள் சுசித்ரா...

    வாட்ச்மேன் ஓடிவந்து கேட்டை திறக்க, முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பூச்செடிகளுக்கு நடுவே போடப்பட்ட பாதையில் கார் சென்று போர்டிகோவில் நிற்கிறது.

    புஷ்பா சொன்னது உண்மைதான்... எவ்வளவு பெரிய வீடு அரண்மனை போல பிரம்மாண்டமாக இருக்கிறது. கண்கள் அகல கமலாவும், வித்யாவும் பார்க்க,

    ஏய் அபி... பார்த்தியா... நம்ப சுசி வீடு. வெளியே இருந்து பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு. கொடுத்து வைத்தவள்

    பெருமூச்சு விடுகிறாள் கமலா.

    வாழ்க்கைங்கிறது... கடவுள் அமைச்சு கொடுத்தது. நமக்கு கிடைத்ததிலும் திருப்திபடனும் கமலா. ஓட்டுவீடாக இருந்தாலும், நாங்க குடியிருக்கும் வாடகை வீடு எனக்கு மாளிகையாகதான் தெரியும் ஏன் தெரியுமா, அங்கே என் மேல் பாசத்தை பொழியும், என் அன்பான அம்மாவும், அப்பாவும் இருக்காங்க. அவங்களோட நான் வாழற இடம் சொர்க்கம் தானே

    அபி, வாயை திறந்து பேசமாட்டா... அப்படி பேசினால் அவளை யாரும் ஜெயிக்க முடியாது.

    சரி எல்லாரும் உள்ளே வாங்க.

    முன்புறம் இருந்த பெரிய சிட்-அவுட்டை கடந்து உள்ளே போகிறார்கள். விஸ்தாரமான அந்த பெரிய ஹால், கலை நயத்துடன் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

    சுவற்றில் விலை உயர்ந்த பெயின்டிங் ஓவியங்கள், மெத்தென்னு உடம்பையே உள்வாங்கி கொள்ளும் சோபா...

    அங்கங்கே வைக்கப்பட்டிருந்த கலை சிற்பங்கள்...

    சுசி, உண்மையிலேயே உங்க வீடு ரொம்ப அழகு. கமலா சொல்ல,

    பக்கத்தில் இருந்த ரூமின் ஸ்கீரினை விலக்கி வெளியே வருகிறாள் தேவகி. சுசித்ராவின் அம்மா.

    கழுத்தில் கொள்ளாமல் நகைகள், கைகள் இரண்டிலும் வளைகாப்பிற்கு வளையல் போட்டது போல, அடுக்கடுக்காய் தங்கவளையல், காதில் போட்டிருந்த வைர தோடு ஜொலிக்கிறது.

    வித்யா. இவங்கதான் சுசியின் அம்மா போலிருக்கு. சினிமாவில் வர்ற பணக்காரமிடுக்கான அம்மா போல எவ்வளவு கம்பீரமான தோற்றம்

    வித்யாவின் காதில் கமலா கிசுகிசுக்கிறாள்.

    சுசி... இவங்கெல்லாம்தான் உன் ப்ரெண்ட்ஸா... வாங்க, எல்லாரும் உட்காருங்க... லட்சுமிகிட்டே சொல்லிட்டேன். டிபன் ரெடி பண்ணிட்டா... எல்லாரும் சாப்பிட்டுதான் போகணும்.

    சொன்னவள் அங்கிருக்கும் சோபாவில் உட்கார,

    அங்கே இருப்பதை சங்கடமாக உணர்ந்தவளாய் அபி, சோபாவின் ஓரத்தில் உட்கார்ந்தாள்.

    அம்மா, இவ வித்யா, இது கமலா, புஷ்பா. இதோ இவ தான் என் பெஸ்ட் பிரெண்ட் அபி... வீட்டுக்கு கூப்பிட்டதுக்கு வரவே மாட்டேன்னு சொன்னா... நான்தான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தேன்

    சுசி சொல்ல,

    வர இஷ்டமில்லாதவளை, ஏன் கட்டாயப்படுத்தனும் சுசி... அவளை நேருக்கு நேர் பார்க்கிறாள் தேவகி.

    ‘கடைந்தெடுத்த சிற்பம் போல, இவ்வளவு அழகா இருக்காளே, எளிமையான காட்டன் சுடிதாரிலேயே தேவதை மாதிரி இருக்கிறாள்... இன்னும் இவளை அலங்காரபடுத்தி பார்த்தால்...’ கற்பனையை நிறுத்தியவள்,

    ஏன்ம்மா... ஏன் வரமாட்டேன்னு சொன்னே.

    அது... அது அப்படியில்லை ஆண்ட்டி வீட்டுக்கு போனால் அம்மாவுக்கு உதவி செய்யலாம்னு...

    ஏன் வீட்டில் உதவிக்கு வேலைக்காரி இல்லையா...

    அபியோட குடும்பம் ரொம்ப சாதாரணமானது அவங்கப்பா வாட்ச்மேனாக இருக்காரு. அதுவுமில்லாம கொஞ்சம் கூச்ச சுபாவம், அதிகமாக யாரோடும் பழகமாட்டா... அதனால்தான் வரலைன்னு மறுத்திருக்கா

    தேவையில்லாமல் புஷ்பா அந்த இடத்தில் அபியின் ஏழ்மை நிலையை சுட்டி காட்டுவதை போல் பேச, சுசிக்கு கோபம் வருகிறது.

    போதும் புஷ்பா... இப்ப என்ன அவ குடும்பத்தை பத்தி யாரும் கேட்டாங்களா... அம்மா இவங்கெல்லாம் என் ப்ரெண்ட்ஸ். நீயும் தேவையில்லாமல் கேள்வி கேட்காதே... எல்லாம் எழுந்து வாங்க... உள்ளே சாப்பிட போகலாம்.

    சுசி சற்று கோபமாக சொன்னதும், தேவகிக்கும் கோபம் வந்தது. ‘என்ன இது ப்ரெண்ட்ஸ் முன்னிலையில் என்னை அதட்டி பேசுகிறாள். எல்லாம் அதோ உட்கார்ந்துருக்கிறாளே அழகுதாரகை அபியால் வந்தது. இவள் வீடு தேடி வரவில்லை என்று யார் அழுதார்கள். சரியான தரித்திரம் பிடித்தவள். தராதரம் தெரியாமல் சுசி எல்லாரிடமும் பழகுகிறாள். இவர்கள் போனபிறகு சுசியை கண்டிக்க வேண்டும்’ மனதில் நினைத்தவள், வேகமாக எழுந்து தன் ரூமிற்கு போய் கதவை படாரென்று சாத்துகிறாள்.

    சுசி, உங்கம்மா கோபமாக போயிட்டாங்க போலிருக்கு

    "ஆமாம். எங்கம்மா எப்போதும் இப்படிதான் அடிக்கடி மூட் அவுட் ஆவாங்க. அப்புறம்

    Enjoying the preview?
    Page 1 of 1