Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Annachima
Annachima
Annachima
Ebook206 pages1 hour

Annachima

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையில் பணக்கார குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, தனிமையில் சிலகாலம் சிக்கி, படிப்பை நிறுத்தி குழந்தையிலேயே குடும்பத்திற்காக அப்பளம் விற்று, பின் கிராமத்தில் வாக்கப்பட்டு போன ஒரு இளம்பெண், கணவனுக்கு துணையாக கடையில் நின்று வியாபாரம் செய்து, பின் சென்னைக்கு வந்து தன் நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்து ஆளாக்கி, அதன் பின் வந்த குடும்ப பொருளாதார பிரச்சனையையும் எப்படி தனியாளாக சமாளித்தாள் என்பது இதை படிக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அண்ணாச்சிமாவின் வரலாறு.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580143606795
Annachima

Related to Annachima

Related ebooks

Reviews for Annachima

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Annachima - Neasa

    https://www.pustaka.co.in

    அண்ணாச்சிமா

    Annachima

    Author:

    நேசா

    Neasa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/neasa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பிறந்த இடம்

    2. துள்ளித் திரிந்த காலம்

    3. தனிமையில் தவிப்பு

    4. வறுமையிலும் செம்மை

    5. கல்யாணம்

    6. புகுந்த இடம்

    7. அண்ணாச்சிமா

    8. சூலைமேனி

    9. கலங்கிய மனம்

    1௦. வாழ்க்கை தரம்

    11. எதிர் நீச்சல்

    12. பிள்ளைகளுக்காக

    13. வெளிநாட்டுப் பயணம்

    14. மீண்டும் அண்ணாச்சிமா

    15. அறுபதாம் கல்யாணம்..

    முன்னுரை..

    இது எனது முதல் நாவல். எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் இருந்தாலும் எழுத தயங்கிக் கொண்டே இருந்தேன். அந்த தயக்கத்தைப் போக்கி எனக்குத் தூண்டுகோலாக இருந்தது, எனது தம்பி சமுர தான்.

    என் பெற்றோர் அப்பா தெய்வத்திரு.முனியசாமி அம்மா திருமதி.அனுசுயா தேவி. எங்கள் அம்மா ஒரு புத்தகப்புழு, எந்த நேரமும் புத்தகமும் கையுமாகவே இருப்பார். அப்படிப்பட்டவருக்கு அவரது வாழ்க்கை வரலாறையே புத்தகமாகக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற தம்பியின் யோசனையில் உதித்ததே இந்த புத்தகம்.

    என்னை எழுதச் சொல்லி, என் தம்பி கேட்டதும் முதலில் தயக்கமாக இருந்தாலும் பிறகு, நமது எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்குமே என்று நானும் ஒத்துக் கொண்டேன். நிறைய கவிதைகள், சிறுகதைகள் எழுதி இருந்தாலும் நாவல் எழுதுவது புது அனுபவமாக இருந்தது. என் பெற்றோர் மளிகை கடை தான் வைத்து இருந்தார்கள். என் அப்பாவிற்கு இணையாக கடையில் அம்மாவும் வேலை செய்வார்கள்.

    நாம் ஐ.டி.யில் வேலை செய்யும் பெண்ணையோ அல்லது மிகப்பெரிய பதவியில் இருக்கும் பெண்களையோ பார்த்து வாய் பிளக்கிறோம், ஆனால், நாளெல்லாம் மளிகைக் கடையில் இருந்து வேலை செய்யும் பெண்களோ, வீட்டில் வேலை முடித்து, பிறகு கணவனுக்கு ஒத்தாசையாக கடையில் நின்று வியாபாரமும் பார்த்து, மாலை நேரத்தில் பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு, நாள் முழுவதும் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களை நாம் அதிகம் எண்ணிப் பார்ப்பது இல்லை.

    அது போல் உழைத்து எங்களை ஆளாக்கிய அம்மாவின் வாழ்க்கை வரலாறு எனும் போது கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி வந்தது. அவருடன் பலமணி நேரம் உட்கார்ந்து அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளைக் குறிப்பெடுத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஆனால், அவர் சொல்வதைக் கேட்ட பின்பு அதை கதை வடிவில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நாவலாகவே கொடுத்து விட்டேன்.

    இந்தப் புத்தகத்தை எழுத தூண்டுகோலாக இருந்த என் தம்பி சமுரவிற்கும், என்னைப் பெற்று ஆளாக்கிய அம்மாவிற்கும் இந்த படைப்பைச் சமர்ப்பிக்கிறேன். மேலும் இதை எழுதும் பொழுது, என்னை பெரிதும் ஊக்குவித்த எனது கணவருக்கும், பிளளைகளுக்கும் மற்றும் நூலின் முன் அட்டை ஓவியம் வரைந்த அ.விஜய் [9551184054] மற்றும் நண்பர்கள் பதிப்பகம் மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இப்படிக்கு

    நேசா

    [சென்னை]

    11-2-2021

    1. பிறந்த இடம்

    அண்ணாச்சிமா

    குரல் கேட்டு வெளியே வந்தார் தேவி. மெலிந்த தேகத்தில் நல்ல வளர்த்தியில் இருந்த அவர், கதர் புடவைக் கட்டிக் கொண்டு இருந்தார். அதை நேர்த்தியாகக் கட்டி இருக்கும் விதத்திலும், நெற்றியில் திருநீரும், குங்குமமும் வைத்திருந்த அழகிலும் கம்பீரமாகக் காட்சி அளித்தார்.

    கையில் பூவோடு பூக்காரி நின்று கொண்டிருந்தாள்.

    இந்தா அண்ணாச்சிமா இது இன்னிக்கு தர வேண்டிய பூ. விசேஷத்துக்கு நாளைக்கு சாயங்காலம் கொண்டு வந்து தர்றேன் சொல்லி ஒரு பெரிய பூ உருண்டையைக் கையில் கொடுத்தாள்.

    வாங்கிய தேவி, சரி ருக்கு, ஆனா நாளைக்கு நேரத்தோட கொண்டு வந்திடு

    கண்டிப்பா நேரத்தோட வந்திடறேன் அண்ணாச்சிமா. சின்ன விசேஷமா என்ன? உனக்கு அறுபதாம் கல்யாணமாச்சே சீக்கிரமே கொண்டு வந்திடறேன் சொல்லி விட்டு சென்றாள்.

    தேவியின் கணவர் ராமசாமிக்கு இன்னும் இரண்டு நாளில் அறுபது வயது பூர்த்தி ஆகின்றது. ஆகவே பிள்ளைகள் அறுபதாம் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். பெற்றவர்கள் இருவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிள்ளைகள் விடுவதாக இல்லை. சிறப்பாக ஏற்பாடுகள் செய்து குடும்பத்தினருடன் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்தும் விட்டார்கள்.

    உள்ளே வந்தவர் பூவை ஃபிரிஜ்ஜில் வைத்து விட்டு கூடத்துக்கு வந்தார். ஊரில் இருந்து வந்திருந்த பேரன், பேத்திகள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கோணத்தில் படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஏனெனில் உறவுகளின் கூட்டத்து மத்தியில் இருக்க அவருக்கு எப்போதும் பிடிக்கும்.

    இவரும் அவர்களுக்கு மத்தியில் சென்று அமர்ந்தார், ஆச்சி அருகில் வந்து அமர்ந்தாள் பெரிய மகள் வயிற்றுப் பேத்தி. எங்கள் வீடுகளில் அம்மாவைப் பெற்ற அம்மாவை ஆச்சி என்று அழைப்பது வழக்கம்.

    ஏன் ஆச்சி உங்களை அவங்க அண்ணாச்சிமானு கூப்பிடறாங்க. உங்க பேரு தேவி தான? இது உங்க நிக் நேமா ஆச்சி? சின்னதுல இருந்தே உங்கள மத்தவங்க இப்படி தான் கூப்பிடுவாங்களா?

    என் பேரு தேவி தான். அண்ணாச்சிமா அப்படீன்றது எனக்கு பாதியில கிடைச்ச பேரு. ஆனா அப்படி கூப்பிடும் போது எனக்கு கிடைக்கிற சந்தோஷம் அதிகம் குட்டிம்மா செல்லமாக அவளது கன்னத்தைத் தட்டினார்.

    ஏன்? என கேட்டாள் ஆர்வ மிகுதியால், அதெல்லாம் பெரிய கதை அவ்வளவு சீக்கிரம் சொல்லி முடிக்க முடியாதுடா செல்லம் கெஞ்சலுடன் சொன்னார்.

    உடனே ஏய், சீக்கிரம் எல்லாரும் ஓடி வாங்க ஆச்சி கதை சொல்லப் போறாங்களாம். அதுவும் அவங்க அண்ணாச்சிமா ஆன கதை இவள் கத்தவும் மொத்த பேரப் பிள்ளைகளும் ஹோ வென்று கத்தியபடி ஓடி வந்து அருகில் வட்டமிட்டு உட்கார்ந்தனர்.

    சின்னதுகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள், பெரியவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அய்யோ இன்னும் அடுப்படி வேலை பாக்கி இருக்குதுடா செல்லங்களா மறுபடியும் கெஞ்சலுடன் சொன்னார்.

    அம்மா பிள்ளைங்க எல்லா சாப்பிட்டாச்சு. இன்னும் அப்பா, தம்பிங்க தானே. அவங்க வர்றதுக்கும் இன்னும் நேரம் இருக்கு. நீங்க சொல்லுங்க, இந்த வாண்டுகளோட ஆட்டம் அப்படியாவது கொஞ்ச நேரம் நிக்கட்டும் இவ்வளவு நேரம் பிள்ளைகளுடன் மல்லுக்கட்டி அலுத்த பெரிய மகள் நிலா சிபாரிசு செய்தாள்.

    சொல்லுங்க ஆச்சி என மகள் வயிற்றுப் பிள்ளைகளும், சொல்லுங்க ஐயாம்மா என மகன் வயிற்றுப் பிள்ளைகளும் இப்போது ஆளுக்கொரு பக்கம் இழுக்க ஆரம்பித்தனர்.

    சரி என்று சொல்ல ஆரம்பித்தார். நான் கல்யாணம் முடிச்சி போனேனா ஆரம்பித்த தேவியை இடைமறித்தாள் மகன் வயிற்று பேத்தி, ஐயாம்மா முதல்ல இருந்து சொல்லுங்க

    முதல்ல இருந்துனா? புரியாமல் பார்த்தார் தேவி.

    நீங்க சின்னதா இருந்ததுல இருந்து சொல்லுங்க உடனே அத்தனை பிள்ளைகளும், ஆமா, ஆமா கத்தி ஆமோதித்தார்கள்.

    சின்னதில் இருந்தா சற்று யோசித்தவர் பிள்ளைகள் இதற்கு மேல் விடமாட்டார்கள் என்பது தெரியவும், மெல்ல தனது நினைவலைகளை பின்னோக்கி கொண்டு சென்றார்.

    தனக்கு நினைவு தெரிந்த அந்த நாள் முதற்கொண்டு நெஞ்சில் நிழலாட விட்டார். இப்போது அதனை தன் மனக்கண் முன் அப்படியே கொண்டு வந்து சொல்ல ஆரம்பித்தார் தேவி.

    ஒரு ஆடி மாதம் இரவு ஒன்பது மணி. பழைய வண்ணாரப் பேட்டையில் எங்கள் வீட்டின் அருகில் இருந்த டீக்கடை வாசல். அங்கே நானும், ஐயாவும் நின்று கொண்டு இருந்தோம். எனக்கு அப்போது ஐந்து வயது. என்னை அங்கிருந்த பெஞ்சில் அமர வைக்கச் சென்றார், அப்போது பெஞ்சில் அமர்ந்திருந்த இருவர் எழுந்து வழிவிட்டனர். ஐயா என்னை அமர வைத்து விட்டு டீ சொல்வதற்குச் சென்றார்.

    இவரைக் கண்டவுடன் டீக்கடைக்காரர் எழுந்து பவ்யமாக, என்னங்கய்யா? தலையில் கட்டியிருந்த தலைப்பாகையைக் கழட்டியபடி, வாயில் இருந்த பீடியையும் கீழே போட்டு அனைத்தான்.

    ஏம்ப்பா இரண்டு டீ போடு அவரது குரலில் கம்பீரம் தொனித்தது.

    சரிங்கய்யா டீ டம்ளரை ஒருமுறை நன்றாகக் கழுவி விட்டு டீ போட ஆரம்பித்தான்.

    ஐயாவிற்கு ஊரில் தனி மரியாதை உண்டு. ஐயா என்பது எங்களைப் பெற்றெடுத்த அப்பாவைத் தான் நாங்கள் ஐயா என்று அழைத்தோம்.

    ஆனாலும் அவருக்கு மரியாதைக் கொடுக்கும் விதமாக மற்றவர்களும்

    அவரை ஐயா என்றே அழைத்தனர். அவரது இயற்பெயரான ஆறுமுகச்சாமி என்பது திருமணப் பத்திரிக்கைகளில் போடுவதற்கும் மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு மட்டுமே பயன்பட்டது.

    அனைவரும் ஐயாவிற்கு கொடுக்கும் மரியாதை, மதிப்பைக் கண்டு எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். அதே பிரம்மிப்பு இப்போதும் உண்டானது. ஆறடிக்கு மேலே நல்ல உயரம், மாநிறம் தான் என்றாலும் களையான முகம், தோற்றத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரு மிடுக்கு,. உடுத்தும் உடையில் ஒரு கம்பீரம் என எல்லோரும் மதிக்கும் வகையில் இருந்தார்.

    டீயை எடுத்து வந்து கொடுத்த டீக்கடைக்காரரின் முதுகு மரியாதை நிமித்தமாக வில்லாக வளைந்து இருந்தது. டீ வரவும் முதலில் எனக்கு ஆற்றிக் கொடுத்த ஐயா, பின்னர் அவரது டீயை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்.

    அவருக்கு எப்போதும் என் மேல் ஒரு தனி கரிசனம் உண்டு, ஏன் என்று தெரியாது. குடித்து முடித்தவர் நான் அவரையேப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கவனித்து என்ன என்று சைகையில் கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்று தலையாட்டச் சிரித்துக் கொண்டார்.

    வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த தூக்குச் சட்டியில் மற்ற பிள்ளைகளுக்கு டீயும், பிஸ்கட்டும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

    பெரிய வீட்டின் முற்றத்தில் அக்கா சாரதாவும், அண்ணன் சேகரும் உட்கார்ந்து இருந்தனர். தம்பி சந்திரன் தூங்கிக் கொண்டு இருந்தான்.

    இந்தம்மா சாரதா இந்த டீயை நீயும் தம்பியும் குடிச்சிட்டு பிஸ்கட் சாப்பிடுங்க, சின்ன தம்பி எழுந்து அழுதான்னா அப்ப அவனுக்கு இந்த டீயைக் குடு என் கையில் இருந்த டீயையும், பிஸ்கட்டையும் வாங்கி அக்காவின் கையில் கொடுத்தார்.

    பிறகு வீட்டின் வெளி வாசலில் சென்று உட்கார்ந்தார். எனக்கு வீட்டிற்கு உள்ளே இருந்து வந்த அம்மாவின் பிரசவலி முனகலைக் கேட்டு

    ஏதோ ஒரு பயம் என்னுள் உண்டானது. சட்டென்று வெளியில் வந்து ஐயாவின் அருகில் அமர்ந்து கொண்டேன்.

    என்னம்மா என்றார் பாசமொழுக.

    என்ன ஆச்சு அம்மாவுக்கு, அக்கா உள்ளே விடமாட்டேன்னு சொல்றா விவரமறியாமல் கேட்டேன்.

    என் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டே, அம்மாவுக்குப் பாப்பாப் பிறக்கப் போகுது இல்லையா அதான்

    அப்படீனா அம்மா மட்டும் தனியா இருக்க பயப்பட மாட்டாங்களா ஐயா? அம்மாவைப் பற்றியக் கவலையில் கேட்டேன்.

    என் பயத்தைப் போக்கும் விதமாக லேசாகப் புன்னகைத்தவாறே, உள்ள மருத்துவச்சி இருக்காங்க அவங்க அம்மாவைப் பார்த்துப்பாங்க

    சிறிது நேரம் மௌனமாக இருந்த நான் சட்டென்று நினைவு வந்தவளாய், அப்ப நான் எப்படி பொறந்தேன்? ஒரு ஆர்வத்தோடு கேட்டேன்.

    நீயும் இது மாதிரி வீட்டுல தான் பிறந்த, என்னால அந்த நாளை மறக்கவே முடியாது அவர் கண்கள் மின்னியது.

    அப்ப எனக்கும் அதை சொல்லுங்க கெஞ்சலாக கேட்டேன், என்னைப் பார்த்து மெல்ல சிரித்தவர் நான் ஆர்வத்தோடு இருப்பதைக் காணவும் சொல்ல ஆரம்பித்தார்.

    "1947ல் மார்கழி மாசம் அன்றைக்கும் இதே மருத்துவச்சி மூக்காயி தான் உள்ள இருந்தா. நான் வெளிய பதட்டமாக இருந்தேன். உனக்கு முன்ன பிறந்த ரெண்டு பேரும் ஊர்ல பிறந்தாங்க.

    அப்ப நான் பக்கத்துல இல்லை. அதனால எனக்கு அதப்பத்தி தெரியலை. மொத தடவை நீ பிறக்கும் போது தான் நான் பக்கத்துல இருந்தேன்".

    கொஞ்ச நேரம் கழிச்சி சன்னலைத் திறந்த மருத்துவச்சி உங்களுக்குப் பொம்பளப் பிள்ளை பிறந்து இருக்குனு சொன்னா, அப்ப தான் எனக்கு உயிரே வந்தது சொன்னவர் என்னை தன் மடியில் தூக்கி உட்காரவைத்துக் கொண்டார்.

    பின் மீண்டும் தொடர்ந்தார், அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி மருத்துவச்சி துணியால சுத்துன சின்ன பொட்டலத்தைக் கொண்டு வந்தா, பாத்தா அதுல குட்டிப் பாப்பாவாக நீ இருந்த அப்போது கொடுத்ததைப் போலவே இப்போதும் என் நெற்றியில் முத்தம் பதித்தார்.

    "அந்த நேரம் என்கிட்ட வேலை பாத்த பரமசிவம் வந்தான். ஐயா குழந்தை பிறந்த நேரம் செல்வத்தையும் கொண்டு வந்து இருக்குன்னான். என்னடான்னேன் நமக்கு கணேசன் ஐயாகிட்ட இருந்து ஆர்டர் வந்திருக்குனான். அவரு யாரு தெரியுமா இந்த ஊருலயே பெரிய அளவுல மொத்த வியாபாரம் செய்யறவரு. நம்மகிட்ட பருப்புகளை வாங்கிக்கறேன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1