Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhithunai
Vazhithunai
Vazhithunai
Ebook183 pages1 hour

Vazhithunai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து..... தலைமுறைகளை கடந்து வாழும் உறவுகளையும்..........வழித்துணையாய் வந்தவனே வாழ்க்கைத் துணையாய் அமையும் சுவாரஸ்யம் குறையாத கதை.. வாருங்கள். இனி கதைக்குள் செல்வோமா....

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580143306774
Vazhithunai

Related to Vazhithunai

Related ebooks

Reviews for Vazhithunai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhithunai - Kamala Nagarajan

    https://www.pustaka.co.in

    வழித்துணை

    Vazhithunai

    Author:

    கமலா நாகராஜன்

    Kamala Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 1

    நன்னிலம் தாலுக்காவில் பூங்குளம்தான் அந்த ஊர். பெயருக்கேற்றாற்போல் பூக்கள் பூத்து சொரியும் தோட்டங்களும், வயல்களும் பச்சை பசேல் என்று காட்சி அளிக்கும். சிறியதும் பெரியதுமான ஓட்டு வீடுகள்.

    அவரவர்கள் வீட்டைச் சுற்றி வேலி அமைத்து காய்கறிகள், பூக்கள், துளசி போன்ற செடிகள், வில்வம், மா, பலா போன்ற மரங்களை நட்டுவித்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். கிராம மக்கள் அங்குமிங்கும் நடந்து போகும் காட்சியே அவர்கள் சுறுசுறுப்பை எடுத்துக் காட்டுகிறது.

    கிராமத்திற்கு நடுவில் ஒரு ராமர் கோயில் களைகட்டியது. ராமசந்திர மூர்த்தி, சீதாதேவி தம்பி லஷ்மணனோடு ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஓட்டு வீடுகள், சிறு சிறு மச்சு வீடுகள்.

    அந்த நாலு வீதியின் ராமர் கோவிலை ஒட்டினாற் போல் இருந்த ஒரு மச்சு வீட்டில் ஒரு பெண்மணியின் குரல் அதிகாரமாக ஒலிக்கிறது.

    அவயம். அதுதான் அந்த பெண்மணியின் பெயர். தன் மகள் பார்வதியை சத்தம் போட்டு அழைக்கிறாள். 'பாரு! பாரு!'. இன்னும் உச்சஸ்தாயியில் ஒலித்தது அவயத்தின் குரல்.

    இதோ வந்து விட்டேன் அம்மா', பாரு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தாள்.

    ‘இந்தா இந்தப் பாலை கொண்டு போய் ருக்குவிடம் கொடு.' பெரிய லோட்டாவில் சுண்ட காய்ச்சிய பசுவின் பாலை ருக்குவிற்கு கொடுத்தனுப்புகிறாள். முன் பக்கத்தில் காமிரா அறையில் படுத்துக் கொண்டிருந்த ருக்குவிடம் பாலைக் கொடுத்த பாரு, 'இந்தா அக்கா, பாலைக் குடி' என்றாள்.

    ருக்கு நிறைமாத கர்ப்பிணி. இதுதான் அவளுக்கு மாதம். எப்பொழுது வேணுமானாலும் குழந்தை பிறக்கும், என்று பிரசவம் பார்த்து பழகின அந்த கிராமத்து டாக்டர் சொல்லி விட்டாள். குழந்தைப் பேறுக்கென்றே அவர்கள் வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி வைத்திருந்தனர்.

    பாலை வாங்கிக் குடித்து லோட்டாவை பாருவிடம் கொடுத்து மெதுவாக எழுந்திருந்தாள். மாலை ஆறுமணி ஆகிவிட்டது. இருட்டுகிற நேரம். அவயம் சுவாமி விளக்கு ஏற்றி'

    விளக்கே, திருவிளக்கே,

    வேந்தன் உடன் பிறப்பே

    ஜோதி மணி விளக்கே,

    ஸ்ரீ தேவி பொன்மணியே!

    என்று ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்தாள்.

    கோட்டை மாதிரி வீடும், நிலமும் நீச்சுமா, ஆளும் அம்புமா, இருக்கிற அந்த வீட்டை நிர்வகிக்கிற சுப்பையரை கிராமத்து சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்.

    'சாயந்திரம் ஆறு மணி ஆயிடுத்தேடா... ' சத்தம் போட்டுக் கொண்டே பூஜை அறைக்குப் போய் திருநீறு இட்டு வாய் நிறைய திருவாசகத்தை சொல்லியவாறு வெளியே வந்தார்.

    'நமச்சிவாய வாழ்க,

    நாதன் தாள் வாழ்க!

    இமைப் பொழுதும் என் நெஞ்சில்

    நீங்காதான் தாள் வாழ்க!

    தாத்தாவின் குரல் வெங்கலக் குரலாய் ஒலித்தது. வாசல் திண்ணையில் சிவப்பழமாக உட்கார்ந்து பேரப் பிள்ளைகளை அழைத்தார் சுப்பையர். நாணா, சுந்து, சுப்புணி, காமு எல்லோரையும் எங்கே என்று தேடினார். பெரிய பேரன்

    நாணாவை அழைத்து, 'என்ன பண்றே நீ? நேரமாயிடுத்து. இந்த சுந்துதான் எப்பவும் லேட்டா வருவான். விளையாடி முடிச்சானா இல்லையா?'

    சுப்புணி, காமு, மீனா எல்லோரும் வந்தாச்சு. சாயந்திரமானா கை கால் அலம்பி நெற்றிக்கு இட்டுண்டு வரிசையாக திண்ணையில் உட்கார்ந்து ஸ்லோகம் சொல்ல வேண்டும் தாத்தாவிற்கு. இல்லையானால் சாப்பாடு கிடையாது என்று சொல்லி விடுவார்.

    இப்படியாக சாப்பாட்டிலும் நடவடிக்கையிலும் மற்ற எல்லா விதத்திலும் ஒழுங்கு முறையை கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

    சுந்துவிற்கு ஸ்லோகம் சொல்வதென்றால் கட்டோடு பிடிக்காது. அதனால் விளையாடி விட்டு லேட்டாகவே வருவான். அன்று மணி ஏழாகியும் சுந்துவை காணவில்லை. எல்லா இடங்களிலும் தேடியாகி விட்டது. எல்லோரும் உட்கார்ந்தால்தான் தாத்தா ஸ்லோகத்தை ஆரம்பிப்பார்.

    மச்சுக்கு மேல் இருந்த மாடி, முன்கட்டு, பின்கட்டு, புழக்கடை எல்லா இடத்திலும் பார்த்தாகி விட்டது.

    அவயம் கையில் சிம்னி விளக்கை எடுத்துக் கொண்டு நெல் வைக்கும் பத்தாயத்தின் உள்ளே போய் பார்த்தாள். அங்கே படுத்துக் கொண்டு தூங்கி விட்டிருந்தான்.

    சுந்து! சுந்து! எழுந்திருடா. இங்கே ஏண்டா படுத்திண்டிருக்கே! தாத்தா கூப்பிடறார் பாரு!

    போ, பாட்டி, நான் ஸ்லோகமெல்லாம் சொல்ல மாட்டேன். எனக்குப் பசிக்கிறது. சாதம் போடு.

    'சீக்கிரமா சொல்லிட்டு வந்துடுடா. தாத்தா திட்டுவார்'

    சத்தம் கேட்டு எல்லோரும் அங்கே வந்து விட்டனர். தாத்தா சுந்துவைக் கூப்பிட்டு 'பசிச்சா சாப்பிடு போ! இன்னிக்கு மட்டும் தான்.'

    ‘ஹையா, தாத்தா நல்ல தாத்தா தாத்தாவின் மீசையை ஒரு முறுக்கு முறுக்கி விட்டு ஓடி விட்டான் சுந்து.’ எல்லோரும் கொல்லென்று சிரிக்க வீடே களைகட்டியது.

    இப்படியாக தாத்தா எல்லா வேலைகளிலும் ஒழுங்கு முறையை கடை பிடித்தாலும் சமயத்திற்கு விட்டுக் கொடுத்து விடுவார். அதனால் தாத்தா மீது எல்லாருக்கும் அன்பு கலந்த பயம் உண்டு.

    அத்தைப் பாட்டி இரண்டு கச்சட்டிகளில் மணம் கமழும் ரசம் சாதத்தையும், தயிர் சாதத்தையும் வைத்துக் கொண்டு வாசல் வராண்டாவில் உட்கார்ந்திருந்தாள். நாணா, சுந்து. சுப்புணி, காமு, மீனா எல்லோரையும் வட்டமாக உட்கார வைத்து மணக்கும் ரசம் சாதத்தை ஒழுகாமல் இருக்க அடியில் ஒரு தட்டு வைத்துக் கொள்ளச் சொல்லி உருட்டி உருட்டி கையில் போட்டாள். குழந்தைகள் உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டனர்.

    அடுத்தது தயிர் சாதம், பச்சை மிளகாய், பெருங்காயம், இஞ்சி, கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டி சாதம் போட்டுக்கொண்டே பழைய இராமயணக் கதைகளைச் சொல்லியவாறே கைகளில் வரிசையாக போட்டுக்கொண்டு வந்தாள்.

    'ஆ!' வாயைப் பிடித்துக் கொண்டு அலறினான் சுந்து.

    'என்னடா பச்சமிளகாயைக் கடிச்சிட்டியா?’

    'ஏண்டீ சீதா, குழந்தைகளுக்கு எதுக்கு பச்சமிளகாய் போடறே?'

    'பார்த்து சாப்பிடறதுதானே. உள்ளோர்ந்து சீதா குரல் கொடுத்தாள்.

    அத்தியாயம் 2

    அந்த வீட்டில் அம்பாகுட்டி என்கிற அத்தைப் பாட்டிக்கு எல்லோர் மீதும் பிரியம் அதிகம். அவயத்தின் நாத்தனார். கப்பையரின் தமக்கை. சிறு வயதில் கல்யாணம் செய்து கொடுத்து கல்யாணம் ஆகி பத்து வருடம் கழிந்தும் குழந்தை பிறக்காததால் அவள் புருஷன் விஸ்வம் ‘வேறு சொந்தத்தில் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நீ உன் பிறந்த வீட்டுக்கே போய் விடு' என்று கல் நெஞ்சனாகச் சொல்லிவிட்டான்.

    அம்பாகுட்டி அத்தைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. விஸ்வத்தின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள். திரும்ப பிறந்த வீட்டிற்கு வந்தால் கிராமத்தில் உள்ளவர்கள் ஏசுவார்கள், சுற்றம், உறவு எல்லோரும் வருத்தப் படுவார்கள் என்றெண்ணி ஒரு நாள் விடியும் முன்பே வீட்டை விட்டு கிளம்பிப் போய் விட்டாள். கையில் தான் சேர்த்து வைத்திருந்த சொற்ப காசு, கழுத்தில் கட்டியிருந்த விஸ்வம் கட்டிய மாங்கல்யம், இவற்றையே துணையாகக் கொண்டு ரயில் நிலையத்திற்கு வந்து சிதம்பரம் என்று பெயர் போட்டிருந்த ரயிலில் டிக்கட்டை வாங்கிக் கொண்டு சிதம்பரத்தில் கால் வைத்தாள்.

    நேராக நடராஜர் கோயிலுக்குப் போய் கோயில் பாத்ரூமில் போய் குளித்து மாற்றுப் புடவை கட்டிக் கொண்டு ஒரு காப்பியை வாங்கிக் குடித்தவள், நடராஜரைக் கண்டு தரிசித்தாள். பின்னர் சிவகாம சுந்தரி சன்னிதியில், ‘அம்மா, நீ தான் ஒரு வழி சொல்லணும். யாருமே இல்லாத அனாதையாயிட்டேன்.' என்று மனமுருகி வேண்டிக் கொண்டு அங்கேயே படுத்து விட்டாள். மயக்க நிலையில் இருந்த அவளை யாரோ ஒரு பெரியவர், வாஞ்சையோடு, 'எழுந்திரம்மா, எத்தனை நேரமாக படுத்திருக்கிறாய்.' என்று எழுப்பினார்.

    யாரோ தன்னிடம் பேசுகிறார்கள் என்பதை உணர்ந்த அம்பாகுட்டி, வெட்கத்தோடு எழுந்து நின்றாள். 'மாமா, எனக்கு யாருமில்லை. இங்கே யார் வீட்டிலாவது வேலை செய்கிறேன். தங்க இடமும், இரண்டு வேளை சாதமும் போட்டால் போதும். மானத்தோடு வாழணும்.'

    'வாம்மா, எங்காத்திலே நானும் மாமியும் தான். வயசாயிடுத்து. நீ துணையா வந்தா ராஜாத்தியா வைச்சுப்பேன். வா, போகலாம், பக்கத்துலேதான் வீடு இருக்கு.'

    அம்பாக்குட்டிக்கு வயத்திலே பாலை வார்த்தது போல் இருந்தது அவரது வார்த்தைகள். அந்தப் பெரியவர் பேசிக் கொண்டே உடன் வந்தார். ‘மாமி பேரு 'புவனா' என்கிற புவனேஷ்வரி, என் பெயர் வேதாரண்யன், வேதா என்று கூப்பிடுவார்கள்.'

    'வாம்மா, வீடு வந்து விட்டது.' மூங்கில் கதவு. உள்ளே சென்றால் பழைய காலத்து மச்சு வீடு. இருட்டான சமையல் அறை. பின்கட்டில் கிணறு. முருங்கை

    Enjoying the preview?
    Page 1 of 1