Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ..?
மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ..?
மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ..?
Ebook105 pages39 minutes

மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ..?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாக்கிங் போய் விட்டு உள்ளே வந்த ராஜரத்தினம் 'ஷூ'வை கழட்டி வராந்தாவில் வைத்தவர், தாழ் போடாமல் சாத்தியிருந்த கதவை திறக்கிறார்.
 "வந்தாச்சா.... நீங்க வர்ற நேரமாச்சுன்னுதான் பாலை அடுப்பில் வைச்சேன். இதோ அஞ்சு நிமிஷம் காபியோடு வர்றேன்"
 "ஒண்ணும் அவசரமில்லை. மெதுவாக வா சுந்தரி."
 டீபாயில் இருந்த நீயூஸ் பேப்பரை கையில் எடுக்கிறார்.
 இரண்டு புரட்டு புராட்டியவர், புதிதாக எந்த விஷயமும் இல்லை. நேத்து டி.வி. நியூஸ் சேனலில் பார்த்ததுதான்...
 மடித்து வைக்க,
 கையில் இரண்டு காபி டம்பளருடன் வருகிறாள் சுந்தரி. மனைவியை பார்த்தவர்,
 "அதுக்குள்ளே குளிச்சிட்டியா. எதுக்கு சுந்தரி இந்த பனிக்காலத்தில் காலையில் குளியல். பொழுதுக்கும் நாம் ரெண்டுபேர்தான் பொழுதை ஓட்ட போறோம். சாவகாசமாக செய்யக்கூடாதா?"
 ஈரத்தலையில் துண்டை சுற்றியிருந்தவள், காபியை டீபாயில் வைத்து, துண்டை உதறி தலையை துவட்டுகிறாள்.
 "காபியை குடிங்க. இன்னைக்கு துர்காவை போய் பார்த்துட்டு வரலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க."
 "பத்து நாளைக்கு முன்னால் வந்தவள், பேசியதை கவனிச்சியா... மாப்பிள்ளை மேல் நூறு ரிபோர்ட் சொன்னா. சரியில்லை சுந்தரி. துர்காவுக்கு எல்லாமே அவ நினைச்சது போல நடக்கணும். சின்ன சின்னவிஷயத்துக்கெல்லாம் கோபப்படறா... கல்யாணமாகி இன்னும் பொறுப்பு வரலை. முதலில் அவங்க ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும்.
 அதுக்கு கொஞ்ச நாட்கள் ஆகத்தான் செய்யும். அதுவரை பொறுமை அவசியம். இப்போதைக்கு நாம் அடிக்கடி போனா... அவ நம்பகிட்டே ஏதாவது குற்றம் குறை சொல்வா... அதை தவிர்க்கணும்னா, நாம் போகாம இருப்பதுதான் நல்லது."
 காபியை குடித்தவள்,
 "சரிங்க. ஒரு பக்கம் யோசிச்சு பார்த்தா நீங்க சொல்றது சரின்னுதான் எனக்கும் படுது. என்னம்மா மாப்பிள்ளை பார்த்தே... சரியான ஜடமாக இருக்காரு. அப்படி இப்படின்னு ரொம்பத்தான் பேசினா... எனக்கே சங்கடமாகதான் இருக்கு."
 "எல்லாம் சரியாயிடும் சுந்தரி, இதையெல்லாம் பெரிசுப்படுத்தக்கூடாது. ஒரே மகள்னு நாமும் அவ இஷ்டத்துக்கு வளைஞ்சு கொடுத்து வளர்த்துட்டோம். அதுவும் ஒரு காரணம். சரி. காலையில் என்ன டிபன்?"
 "என்ன வேணும் சொல்லுங்க. செய்து தர்றேன்."
 "வாக்கிங் போய்ட்டு வரும்போது, ரோட்டு கடையில் பூரி போட்டு அடுக்கி வச்சிருந்தான். மசாலா கிழங்கு வாசனை அப்படி இருந்துச்சு..."
 "அவ்வளவு தானே. இன்னைக்கு காலையில் நம்ப வீட்டில் பூரி கிழங்குதான் டிபன். சரிதானே."
 அன்போடு மனைவியை பார்த்தவர்,
 "அதிகம் வேண்டாம் சுந்தரி. ஆளூக்கு மூணு போடு போதும்."
 "அதை நான் பார்த்துக்கிறேன். நீங்க போய் குளிச்சிட்டு சாமி கும்பிட்டு வர்றத்துக்குள் ரெடியாயிடும்."
 சிரிப்புடன் சொன்னவள், காபி குடித்த டம்ளரை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு போகிறாள்.
 "வேதாசலம் வரச் சொன்னான் சுந்தரி. அவன் மகன் சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கான். போய் பார்த்துட்டு வரட்டுமா?"சாப்பிட்ட கையோடு கிளம்பணுமா. காலையில் பனியும் குளிரும் இருந்தாலும், பத்து மணிக்கு நல்ல வெயில் வந்துடுது. இந்த வெயிலில் எதுக்கு போறீங்க. சாயிந்தரமாக போகக்கூடாதா?"
 "இல்லம்மா. இப்ப போயிட்டு இரண்டு மணிநேரத்துக்குள் வந்துடறேன். சாயிந்திரம் இரண்டு பேரும் கோவிலுக்கு போகலாம்."
 "சரி. குடையை எடுத்துட்டு போங்க."
 காலில் செருப்பை நுழைத்தவர், வெளியேற, கதவை தாழ் போட்டு உள்ளே வருகிறாள் சுந்தரி.
 மதியம் சாப்பாட்டிற்கு கீரை கூட்டும், வத்தக்குழம்பும் செய்தால் போதும். அப்பளம் பொரித்துக் கொள்ளலாம்.
 காலையில் ஆசைப்பட்டு பூரி கிழங்கு ஒன்று அதிகமாகவே சாப்பிட்டு விட்டார். பூண்டு போட்டு குழம்பு வைக்கவேண்டும். சிறு பிள்ளை போல, எதையும் ஆசைப்பட்டு கேட்பார்.
 சோபாவில் உட்கார போனவர், 'காலிங் பெல்' சப்தம் கேட்டு, யாராக இருக்கும். அவர்தான் போகாமல் திரும்பி விட்டாரா... நினைத்தவளாய் கதவை திறக்க,
 துர்கா நிற்கிறாள்.
 "வா துர்கா... நானே இன்னைக்கு உன்னை பார்க்க வரலாம் என்று நினைச்சேன். மாப்பிள்ளை வரலையா..."
 "அட வழியை விடும்மா. ஆட்டோவில் வந்தது... வயிற்றை புரட்டுது."
 அவளை தள்ளிக்கொண்டு உள்ளே வருகிறாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223224556
மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ..?

Read more from Parimala Rajendran

Related to மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ..?

Related ebooks

Related categories

Reviews for மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ..?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ..? - Parimala Rajendran

    1

    மார்கழி மாத குளிர் காற்று ஜில்லென்று வீச, பனி விலகாத அந்த காலை பொழுது ரம்மியமாக காட்சி தர, ‘ஸ்கீரினை’ விலக்கி பார்த்த துர்கா அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. கழுத்தில் தொங்கும் மாங்கல்யமே உறுத்தலாக தோன்றியது.

    போர்வையை தலைவரை இழுத்து மூடி தூங்கும் கார்த்தியை பார்த்தாள். அப்பாவின் பேச்சை கேட்டு கல்யாணத்துக்கு தலை அசைத்தது எவ்வளவு தவறு. கல்யாணம் நிச்சயம் ஆகி அந்த நான்கு மாதம் அவனுடன் பழகினேனே அப்பொதெல்லாம் இவன் பேச்சு, சிரிப்பு எல்லாமே ரசிக்கும்படியாக, என்னை உள்ளன்போடு விரும்புபவனாகவே தானே தெரிந்தான்.

    ஆனால் தாலிகட்டிய இந்த ஆறு மாதத்தில் இவனுடன் இருக்கும் நேரங்கள், எனக்கு ஏன் சோர்வையும், எரிச்சலையும் தருகிறது.

    என் எதிர்பார்ப்புக்கு ஏற்றவனாக இல்லை. இவனிடம் இன்னொரு கார்த்தி இருக்கிறான். பெண்களை அடிமையாக நினைப்பவன். கல்யாணம் என்ற பந்தத்தில் பெண்ணை சிறை பிடித்த இறுமாப்பில்... அப்பப்பா... மூச்சு முட்டுகிறது.

    அறை கதவை திறந்து பால்கனிக்கு வருகிறாள். கொஞ்ச நேரம் இந்த இயற்கை காற்றை சுவாசிப்போம்.

    அங்கிருந்த பாலிமர் சேரில் உட்கார்ந்தவள், கீழ் வீட்டு வசந்தி வாசல் தெளித்து அழகாக கலர் கோலம் போடுவதை பார்க்கிறாள்.

    பனிவிழுது பாரு. தலையில் மப்ளர் போடாமல்... என்ன வசந்தி... இது... இந்தா இதை முதலில் மாட்டு, அக்கறையுடன்... கொண்டு வந்து தரும் அவள் கணவன் சங்கர்.

    துர்கா மாடிக்கு புதுக்குடித்தனம் வந்து ஆறு மாதங்கள் ஆகிறது. வசந்தி இரண்டு வருடமாக இருக்கிறாள். கல்யாணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. புது வரவுக்கு காத்திருக்கும் மனமொத்த தம்பதிகள்.

    சங்கர் காலேஜில் ப்ரொபசர். வசந்தியும் கிண்டர் கார்டன் ஸ்கூலில் வேலை பார்க்கிறாள்.

    இவர்கள் இருவரையும் பார்த்தால்தான் - புதிதாக மணமானவர்கள் மாதிரி தெரிகிறது. அவ்வளவு அன்னியோன்யம்.

    கார்த்தியிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஒளியில்லாத பார்வை. சிரிப்பதற்கே யோசிக்கும் உதடுகள். கல்யாணமாவதற்கு முன் அழகாய் தெரிந்ததெல்லாம் கற்பனையோ என்றுகூட துர்காவுக்கு சில சமயம் தோணும்.

    துர்கா பொழுது விடிவதற்கு முன்னால எழுந்து என்ன செய்யறே. குளிர் காற்று அடிக்குது பாரு. கதவை மூடிட்டு வந்து படு.

    கார்த்தியின் தூக்க கலக்க குரல்.

    அழகை ஆராதிக்க தெரியாதவன். காலை நேர விடியல் பொழுதின் அழகை ரசிக்க ஆர்வமில்லாதவன்...

    கோலம் போட்டு எழுந்தவள் முன் காப்பியுடன் வந்து நிற்கிறான் சங்கர்.

    என்னங்க இது, வாசலுக்கே வந்துட்டிங்க. நான் உள்ளே வரமாட்டேனா.

    இருக்கட்டும், குடி வசந்தி. பனிகாற்று உடம்புக்கு ஆகாது. சொன்னால் கேட்காமல் தினமும் எழுந்து கலர் கோலம் போடற:

    கரிசனத்துடன் சொல்கிறான் சங்கர்.

    காபியை வாங்கி ரசித்து குடித்தவள்,

    "உங்க கையில காபி குடிக்க கொடுத்து வச்சிருக்கணும் சங்கர். டிகாஷன் தூக்கலாக, சீனி குறைவாக, நுரை பொங்கிய பால் ஊத்தி... சூப்பர்.

    சரி, என் கோலம் எப்படி சொல்லுங்க?"

    சேவலும் கோழியும் நிற்க அருகில் இரண்டு கோழிகுஞ்சுகள்... தத்ரூபமாக இருக்கிறது.

    ரொம்பவும் அழகா இருக்கு வசந்தி. உன் கை விரலின் நளினம் கோலத்தில் தெரிகிறது.

    இந்த வருஷமாவது அந்த கடவுள் நம் கோழிகுஞ்சை நம்பகிட்டே அனுப்பி வைப்பாரா...?

    வசந்தியை பார்த்து கண்ணடித்து சிரிக்க,

    நீங்கதானே இரண்டு வருஷம் தள்ளி போடுவோம்னு சொன்னீங்க. இப்ப எக்ஸ்ட்ரா ஒரு வருஷம் ஓடியாச்சு. கட்டாயம் அடுத்த வருஷம் குட்டி கண்ணன் வந்துடுவான் உதட்டை சுழித்து சிரிக்கிறாள்.

    சரி, உள்ளே வா வசந்தி. காய் என்ன வெட்டி தரணும்னு சொல்லு. நான் ரெடி பண்றேன். நீ குளிச்சுட்டு வா

    இருவரும் உள்ளே போகிறார்கள்.

    துர்காவிடம் பெருமூச்சு வெளிப்படுகிறது.

    பார்ப்பதற்கே பொறாமையாகதான் இருக்கிறது. ஒரு நாளாவது கார்த்தி இதை போல எனக்கு காபி கலந்து தந்திருப்பாரா...

    கிச்சன் வேலையெல்லாம் எனக்கு அலர்ஜி துர்கா. அதனால தயவு செய்து என்கிட்டே எந்த உதவியும் எதிர்பார்க்காதே. சரியா?

    கல்யாணமான புதிதில் தனியாக் கிச்சனில் வேலை பார்த்தவளிடம் சொன்னான் கார்த்தி.

    அன்றிலிருந்து இன்று வரை கிச்சன் பக்கமே வந்தவன் இல்லை. சாப்பிட்ட தட்டைகூட எடுக்கமாட்டான்.

    உன்னால முடியலைன்னா ‘சர்வண்ட் மெயிட்’ வச்சுக்க துர்கா. எதுக்கு முகத்தை சுளிச்சுக்கிட்டு வேலை பார்க்கிறே.

    பரவாயில்லை நானே சமாளிச்சுக்குவேன்.

    சரி, ரெண்டு பேர் தானே. அப்படியென்ன பெரிய வேலை இருக்கு. அதுவுமில்லாமல் பொழுதுக்கும் வீட்டில்தானே இருக்கே.

    எனக்கு வேலைக்கு போறதில் இஷ்டமில்லை.

    நானும் போகச் சொல்லலையே... வாட்டர் ப்ளாண்ட் போட்டிருக்கேன்... அதுவுமில்லாமல் ஹோல் - சேல் பிஸனஸ் பண்றேன். நல்லா போய்ட்டிருக்கு. நீ ஏன் வேலை பார்க்கணும் அவசியமில்லை.

    வேலை போறதும் போகாததும் என் இஷ்டம். உங்களுக்கு நல்ல ‘இன்கம்’ இருக்குங்கிறதுக்காக நான் வீட்டில் இருக்கணும்னு அவசியமில்லை.

    நான் மட்டும் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன். போ... போய் ஏதாவது வேலை இருந்தா பாரு. இப்படி தொட்டதுக்கெல்லாம் எதிர்வாதம் பண்ணினா பிரச்சனை வரும் துர்கா.

    முட்டாள்தனமாக முடிவு பண்ணிவிட்டேன். நான் வேலைக்கு போகாதது தப்போ என தோணுகிறது.

    அவனை நம்பி நான் இருக்கிறேன் என்று நினைத்துதான் எதையும் அதிகாரமாக சொல்கிறான்.

    நினைவுகள் கோபத்தை தூண்ட, கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தவள், திரும்பவும் படுக்கையில் படுத்து, தலை முதல் கால் வரை போர்த்திக் கொள்கிறாள்.

    குளித்துவிட்டு தலையை டவலால் துடைத்தபடி வருகிறான் கார்த்தி.

    என்ன டிபன் துர்கா?

    இட்லி ஒற்றை வரியில் பதில்.

    உனக்கு இதை தவிர எதுவுமே தெரியாது. ஓ.கே. நான் கம்பெனியில் சாப்பிட்டுக்கிறேன்.

    காலையில் எழுந்து செய்து தருவதே பெரிசு. இதில் என்னால் விதம் விதமாக செய்ய முடியாது.

    Enjoying the preview?
    Page 1 of 1