Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பெண்ணே, நீ வாழ்க!
பெண்ணே, நீ வாழ்க!
பெண்ணே, நீ வாழ்க!
Ebook226 pages1 hour

பெண்ணே, நீ வாழ்க!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தஞ்சாவூரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பூங்குன்றம் கிராமம்தான் அழகிரிசாமியின் பிறந்த இடம். வயல், வரப்பு என்று அந்தக் கிராமத்தில் நிலபுலன்களோடு மூதாதையர் வாழ, வழிவழியாய் வந்த விவசாயத்தை நம்பியே, அவர் வாழ்க்கையும் சென்றது.
 அந்தக் காலத்திலேயே படிக்க வேண்டுமென்று, டவுன் பள்ளிக்கூடம் சென்று, எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர். கல்யாணமே வேண்டாம் என்றிருந்தவரை, யாருமில்லாத அனாதையாக நின்ற வைதேகி கவர, மனைவியாக்கிக் கொண்டார்.
 நிம்மதியான வாழ்க்கை. மனைவி, ஒரே மகன் சிவகுரு... எனப் பயணம் தொடர, சிவகுருவைப் படிக்க வைத்து, திருமணமும் செய்து கொடுத்தார்.
 இரண்டு வயது சீதாவை அவர் பொறுப்பில் விட்டுட்டு, மகன், மருமகளை அழைத்துக் கொண்டு வைதேகி அருணாசலேஸ்வரரைத் தரிசிக்கத் திருவண்ணாமலை செல்ல, பஸ் விபத்தில் மூவரையும் ஒரு சேர இறைவன் தன்னிடத்தில் அழைத்துக் கொண்டான்.
 மனதைத் தேற்றிக் கொண்டு, தன் பேத்தி சீதாவுக்காக வாழத் தொடங்கினார் அழகிரி.
 மனம் ஆன்மிகத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. கோவில், கோவிலாகச் சென்று... அந்த இறைவனின் தரிசனத்தில் மன நிம்மதியைத் தேட ஆரம்பித்தார்.
 "ப்ளஸ் டூ முடிச்சுட்டே, மேற்கொண்டு படிக்கணும்னா தஞ்சாவூர் காலேஜில்தான் சேரணும். ஹாஸ்டலில் இருந்து படிக்கணும் என்னம்மா சொல்றே?

வேண்டாம் தாத்தா. படிச்ச வரைக்கும் போதும். உலகத்தைப் புரிஞ்சுக்கிற அளவு கல்வி ஞானம் இருக்கு. இங்கேயே தையல் கிளாஸில் சேர்ந்து, தையல் கத்துக்கிறேன். உங்களைப் பிரிஞ்சு அவ்வளவு தூரம் போய் ஹாஸ்டலில் இருக்க இஷ்டமில்லை தாத்தா."
 "என்னதான் இருந்தாலும், ஒரு நாள் இந்தத் தாத்தாவைப் பிரிஞ்சு புருஷன் வீட்டுக்குப் போக வேண்டியவள் தானேம்மா."
 "இருக்கட்டும் தாத்தா. அந்த நாள் வரும்போது பார்ப்போம்."
 புள்ளி மானாகத் துள்ளிச் செல்லும் பேத்தியைக் கண் நிறையப் பார்த்தார்.
 "தங்கச்சி, என் மகன் துபாயிலிருந்து கடிதம் போட்டிருக்கான். படிச்சுச் சொல்லு ஆத்தா."
 கோமளம் பாட்டியின் குரல் வாசலில் கேட்க,
 "என்ன பாட்டி... மகன் கடுதாசி மட்டும்தான் போட்டிருக்காரா... பணம் அனுப்பலையா?"
 "சோத்துக்கும், தண்ணிக்கும் கஷ்டப்பட்டுகிட்டு எங்கேயோ போய்க் கண்காணாம கிடக்கிறான். நாலு காசுன்னாலும் நம்ப ஊரில் சம்பாதித்து, சொந்த பந்தங்களோடு கூடி வாழ்ற சுகம் வருமா? என்ன செய்யறது. கல்யாணம் கட்டினவ எப்ப வருவான்னு ஏக்கத்தோடு காத்திருக்கா. பெத்த மனசு பிள்ளையப் பார்க்கணும்னு பரிதவிச்சு நிக்குது. என்னாத்தா பண்ணச் சொல்றே?"
 அவளருகில் வந்து அமர்ந்தவள், லெட்டரை வாங்கிப் படித்துச் சொல்கிறாள்.
 கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருக்கும் கோமளத்தைப் பார்த்தவள்,
 "வருத்தப்படாதே பாட்டி... பெத்த பிள்ளைகளை நம்ப பக்கத்திலேயே பொத்தி வச்சுக்க முடியுமா... அவங்க வாழ்க்கையைப் பார்க்க வேண்டாமா? குடும்பத்துக்காக உழைக்கத்தானே போயிருக்கார். அவர் நல்லா இருக்கணும்னு அந்தப் பெருமாளை வேண்டிக்க."
 கடைத் தெருப் பக்கம் போன அழகிரி வீட்டினுள் நுழைய,"வாங்க ஐயா. பேருக்கேற்றாற் போல அந்த சீதா தேவியே உங்க பேத்தியாக வந்து பிறந்திருக்கா. நல்ல குணமுள்ள பொண்ணு. நல்ல புருஷன் அமைஞ்சு சீரும் சிறப்புமாக இருக்கட்டும்."
 "உன் வாய் முகூர்த்தம், கூடிய சீக்கிரமே கல்யாணம் கூடி வரட்டும். அம்மா சீதா... பாட்டிக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா."
 "வேண்டாம் தாயி."
 "இருங்க பாட்டி... மணத்தக்காளிக் கீரை வதக்கி, மிளகு சீரகம் போட்டு, சூப் வச்சுருக்கேன். எடுத்துட்டு வரேன்."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223843740
பெண்ணே, நீ வாழ்க!

Read more from Parimala Rajendran

Related to பெண்ணே, நீ வாழ்க!

Related ebooks

Reviews for பெண்ணே, நீ வாழ்க!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பெண்ணே, நீ வாழ்க! - Parimala Rajendran

    1

    புலர்ந்தும் புலராத விடியற்காலைப் பொழுது. சலசலத்து ஓடும் ஆற்றுப் படுகையில் அமைந்த கிராமம். கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் பச்சை வண்ணத்தில் மரம், செடி, கொடிகள் சூழ்ந்து... அந்தக் கிராமமே ரம்மியமாகக் காட்சியளித்தது.

    இரை தேடிச் செல்லும் பறவைகள் கூட்டம், கூட்டமாக ஆகாயத்தில் பறக்க, அந்தப் பூங்குன்றம் கிராமத்துப் பெருமாள் கோவில் கோபுரத்தில் அமர்ந்திருந்த வெண் புறாக்கள்... படபடவெனச் சிறகுகளை அடித்துக் கொள்ள,

    கோபுரத்தை நிமிர்ந்து பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார் அழகிரிசாமி.

    பெருமாளே... இந்த உலகமே உன்னால்தான் இயங்குது. இன்ப, துன்பம் எல்லாத்திலும் உன் திருவடியைத் தான் விடாமல் பற்றி வருகிறேன். இதோ வயசு எண்பதை நெருங்கப் போகுது. இன்னும் கொஞ்ச காலம். உன் பாத நிழலில் தஞ்சமடையப் போகிறேன். இன்னும் ஒரு கடமைதான் இருக்கு. அதை நிறைவேற்ற நீதான் அருள் புரியணும்.

    என்ன தாத்தா... கோவில் நடை திறக்கிறதுக்குள்ளே பெருமாளைக் கும்பிட வந்திட்டிங்க.

    துண்டை உதறித் தலையில் முண்டாசு கட்டியபடி, வேலன் கேட்க,

    வயசாயிடுச்சு. தூக்கம் வரலை. அதான் கிளம்பி வந்துட்டேன். நீ என்ன, வியாபாரத்துக்குக் கிளம்பிட்டியா?

    ஆமாம்... திருபுவனம் சந்தைக்குக் காய்கறி ஏத்தணும்.

    "கரும்முரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி

    யுத்தரியத் தொடித்தோள் போற்றி

    கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்

    குப்பால் சுரந்த கலசம் போற்றி

    அரும்புமனங் கழைத் தென்னை யெடுத்தாண்ட

    அங்கயற்க ணெம் பிராட்டி

    அரும்புமிள நகை போற்றி யாரண

    நூபுரஞ்சி லம்படிகள் போற்றி!"

    மதுரை மீனாட்சி அம்மனை நெஞ்சம் கசிந்துருகப் பாடியபடி, பூஜை அறையில் இருக்கும் சீதாவின் அருகில் வருகிறார் அழகிரி.

    மனதை வருடும் உன் இனிய குரலில், நீ சக்தியை நினைச்சு உருகிப் பாடற பாட்டு, என் இதய நாளங்களில் எல்லாம் ஊடுருவி மெய்சிலிர்க்க வைக்குதும்மா.

    எல்லாம் நீங்க சொல்லித் தந்ததுதானே தாத்தா. படியளக்கிற சக்தியின் பாதம் பணிஞ்சாதான் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு... எனக்குச் சொன்னது நீங்கதானே.

    "உண்மைதான் சீதா. அன்னை சிவசக்தி எங்கும் நிறைஞ்சிருக்கா. அதனாலதான் அவளைப் பூரணி, ராஜேஸ்வரின்னு அழைக்கிறோம். முத்தொழில் புரிகிறபோது வைஷ்ணவியாகவும், ஈஸ்வரனுக்கு ஒப்பாகும்போது துர்க்கையாகவும், கல்விக்கு அரசியாக ஞானத்தை வழங்கும்போது கலைமகளாகவும், பொன்னையும் பொருளை யும் வாரி வழங்கும்போது இலட்சுமியாகவும், கால சொரூபிணியாகக் கருதும்போது காளியாகவும் திருக்காட்சி கொடுப்பவள் சக்தி தேவி.

    அதேபோலப் பெண்ணும் அந்த சக்தி தேவியின் மறு வடிவம்தான். தாயாக, மகளாக, அத்தை, சித்தி, பாட்டி எனப் பல்வேறு பரிணாமங்கள் எடுத்துப் பொறுமையோடு குடும்பத்தை நல்லாட்சி செய்பவள்.

    தாய், தந்தையில்லாத என் பேத்தியான நீ... அந்த சக்தியின் வடிவமாக, நல்ல வாழ்க்கை கிடைச்சு... உன் குடும்பத்தில் நிறைவோடு வாழணும்ங்கிறதுதான், இந்தத் தாத்தாவோட வேண்டுதல்.

    உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திட்டா போதும். நிம்மதியாகப் போய்ச் சேருவேன்."

    அன்பு கனியப் பார்க்கிறாள் சீதா.

    "தாத்தா... நல்ல எண்ணங்கள் மட்டுமே மனசில் இருக்கும் உங்க வேண்டுதலை அந்தக் கடவுள் நிச்சயம் நிறைவேத்துவாரு.

    உங்க பேத்தியை மாலையிட்டு அழைச்சுட்டுப் போக ஒரு ராஜகுமாரன் ஒரு நாள் நிச்சயம் வருவான்.

    இப்ப வாங்க, நாம ரெண்டு பேரும் போய்ச் சாப்பிடுவோம். இட்லியும், தக்காளி சட்னியும் நமக்காகக் காத்திட்டிருக்கு."

    பூவாக மலர்ந்து சிரிக்கிறாள் சீதா.

    2

    தஞ்சாவூரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பூங்குன்றம் கிராமம்தான் அழகிரிசாமியின் பிறந்த இடம். வயல், வரப்பு என்று அந்தக் கிராமத்தில் நிலபுலன்களோடு மூதாதையர் வாழ, வழிவழியாய் வந்த விவசாயத்தை நம்பியே, அவர் வாழ்க்கையும் சென்றது.

    அந்தக் காலத்திலேயே படிக்க வேண்டுமென்று, டவுன் பள்ளிக்கூடம் சென்று, எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர். கல்யாணமே வேண்டாம் என்றிருந்தவரை, யாருமில்லாத அனாதையாக நின்ற வைதேகி கவர, மனைவியாக்கிக் கொண்டார்.

    நிம்மதியான வாழ்க்கை. மனைவி, ஒரே மகன் சிவகுரு... எனப் பயணம் தொடர, சிவகுருவைப் படிக்க வைத்து, திருமணமும் செய்து கொடுத்தார்.

    இரண்டு வயது சீதாவை அவர் பொறுப்பில் விட்டுட்டு, மகன், மருமகளை அழைத்துக் கொண்டு வைதேகி அருணாசலேஸ்வரரைத் தரிசிக்கத் திருவண்ணாமலை செல்ல, பஸ் விபத்தில் மூவரையும் ஒரு சேர இறைவன் தன்னிடத்தில் அழைத்துக் கொண்டான்.

    மனதைத் தேற்றிக் கொண்டு, தன் பேத்தி சீதாவுக்காக வாழத் தொடங்கினார் அழகிரி.

    மனம் ஆன்மிகத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. கோவில், கோவிலாகச் சென்று... அந்த இறைவனின் தரிசனத்தில் மன நிம்மதியைத் தேட ஆரம்பித்தார்.

    ப்ளஸ் டூ முடிச்சுட்டே, மேற்கொண்டு படிக்கணும்னா தஞ்சாவூர் காலேஜில்தான் சேரணும். ஹாஸ்டலில் இருந்து படிக்கணும் என்னம்மா சொல்றே?

    வேண்டாம் தாத்தா. படிச்ச வரைக்கும் போதும். உலகத்தைப் புரிஞ்சுக்கிற அளவு கல்வி ஞானம் இருக்கு. இங்கேயே தையல் கிளாஸில் சேர்ந்து, தையல் கத்துக்கிறேன். உங்களைப் பிரிஞ்சு அவ்வளவு தூரம் போய் ஹாஸ்டலில் இருக்க இஷ்டமில்லை தாத்தா.

    என்னதான் இருந்தாலும், ஒரு நாள் இந்தத் தாத்தாவைப் பிரிஞ்சு புருஷன் வீட்டுக்குப் போக வேண்டியவள் தானேம்மா.

    இருக்கட்டும் தாத்தா. அந்த நாள் வரும்போது பார்ப்போம்.

    புள்ளி மானாகத் துள்ளிச் செல்லும் பேத்தியைக் கண் நிறையப் பார்த்தார்.

    "தங்கச்சி, என் மகன் துபாயிலிருந்து கடிதம் போட்டிருக்கான். படிச்சுச் சொல்லு ஆத்தா."

    கோமளம் பாட்டியின் குரல் வாசலில் கேட்க,

    என்ன பாட்டி... மகன் கடுதாசி மட்டும்தான் போட்டிருக்காரா... பணம் அனுப்பலையா?

    சோத்துக்கும், தண்ணிக்கும் கஷ்டப்பட்டுகிட்டு எங்கேயோ போய்க் கண்காணாம கிடக்கிறான். நாலு காசுன்னாலும் நம்ப ஊரில் சம்பாதித்து, சொந்த பந்தங்களோடு கூடி வாழ்ற சுகம் வருமா? என்ன செய்யறது. கல்யாணம் கட்டினவ எப்ப வருவான்னு ஏக்கத்தோடு காத்திருக்கா. பெத்த மனசு பிள்ளையப் பார்க்கணும்னு பரிதவிச்சு நிக்குது. என்னாத்தா பண்ணச் சொல்றே?

    அவளருகில் வந்து அமர்ந்தவள், லெட்டரை வாங்கிப் படித்துச் சொல்கிறாள்.

    கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருக்கும் கோமளத்தைப் பார்த்தவள்,

    வருத்தப்படாதே பாட்டி... பெத்த பிள்ளைகளை நம்ப பக்கத்திலேயே பொத்தி வச்சுக்க முடியுமா... அவங்க வாழ்க்கையைப் பார்க்க வேண்டாமா? குடும்பத்துக்காக உழைக்கத்தானே போயிருக்கார். அவர் நல்லா இருக்கணும்னு அந்தப் பெருமாளை வேண்டிக்க.

    கடைத் தெருப் பக்கம் போன அழகிரி வீட்டினுள் நுழைய,

    வாங்க ஐயா. பேருக்கேற்றாற் போல அந்த சீதா தேவியே உங்க பேத்தியாக வந்து பிறந்திருக்கா. நல்ல குணமுள்ள பொண்ணு. நல்ல புருஷன் அமைஞ்சு சீரும் சிறப்புமாக இருக்கட்டும்.

    உன் வாய் முகூர்த்தம், கூடிய சீக்கிரமே கல்யாணம் கூடி வரட்டும். அம்மா சீதா... பாட்டிக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா.

    வேண்டாம் தாயி.

    இருங்க பாட்டி... மணத்தக்காளிக் கீரை வதக்கி, மிளகு சீரகம் போட்டு, சூப் வச்சுருக்கேன். எடுத்துட்டு வரேன்.

    3

    உள்ளே விசாலம் வைக்கும் பருப்பு உருண்டைக் குழம்பின் மணம் வாசல்வரை வருகிறது.

    விசாலத்தின் கைப்பக்குவமே தனி. ஒரு தக்காளி வெட்டிப் போட்டு ரசம் வைத்தாலும், சுடு சாதத்தில் போட்டுச் சாப்பிட அமிர்தமாக இருக்கும். வாசலில் நின்றிருந்த வேதாசலம் உள்ளே வருகிறார்.

    என்ன விசாலம், சமையல் முடிஞ்சுடுச்சா?

    ஆமாங்க. இன்னும் முட்டைக்கோஸ் பொடிமாஸ் செய்யணும். உங்க சின்ன மகன் இன்னைக்கு ஊரிலிருந்து வர்றான். சனிக்கிழமை விரத நாளாகப் போச்சு. மெஸ்ஸில் சாப்பிடறவன்... அதான் அவனுக்குப் பிடிச்ச சமையல் செய்துட்டிருக்கேன்.

    பரசுராம் எங்கே போயிருக்கான்? இன்னைக்கு ஆபீஸ் லீவுன்னு தானே சொன்னான். காலையிலிருந்து ஆளைக் காணலை.

    பரசுராம் தாலுகா ஆபீஸில் க்ளார்க்காக வேலை பார்க்க, சின்ன மகன் ஜெயராம். மதுரையில் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்தான்.

    வேதாசலமும் தமிழ் வாத்தியாராக இருந்து ரிடையராகி இருந்தார்.

    பரசுராமைத் தானே கேட்கறீங்க. அவன் சிநேகிதன் மோகனகுமாருக்கு உடம்பு சரியில்லையாம். பார்த்துட்டு வரேன்னு போயிருக்கான்.

    ஏன், நேத்துக்கூட கீழவாசலில் பார்த்தேனே. அப்பா, நல்லாயிருக்கீங்களான்னு விசாரிச்சானே.

    எனக்கென்ன தெரியும். போன் வந்தது. புறப்பட்டுப் போனான். மோகனுக்கு ஒண்ணுன்னா. இவன்தான் உசுரை விட்டுடுவானே. சின்ன வயசிலேயே இணை பிரியாம இருக்காங்க. அதுக்குத் தகுந்தாற்போல ஒரே இடத்தில் வேலையும் கிடைச்சிருக்கு. கடைசி வரை இந்த ஒத்துமையோடு இருக்கட்டும். உங்களுக்கு ஒரு டம்ளர் காபி கலந்து தரட்டுமா?

    உன் கையால கொடுப்பதை வேணாம்னு சொல்வேனா? கொடு விசாலம்... பிள்ளைங்க வரட்டும். அப்புறம் சாப்பிடலாம்.

    விசாலம் கையில் கொடுத்த காபி டம்ளருடன் தோட்டத்துப் பக்கம் செல்ல, அவரைப் பின் தொடர்ந்தாள்.

    நீங்க ரிடையர் ஆகி ஆறு மாசமாச்சு. வந்த பிராவிடெண்ட் பணத்தில் யாகப்பா நகரில் இடம் வாங்கிப் போட்டாச்சு. நம்ப பிள்ளைங்கதான் லோன் வாங்கிக் கட்டணும். பரசுராம் என்ன சொல்றான்?

    "பாங்க்கில் சொல்லியிருக்கான். லோன் ஆறு மாசத்தில் சாங்ஷன் ஆகும். கட்டலாம்பா. ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்றான். இருந்தாலும் இப்ப வீடு கட்டறதை விட, அவனுக்குக் கல்யாணம் பண்ணணும் விசாலம். நம்ப சிவகுரு... பூங்குன்றம் கிராமத்தில் அவர் நண்பரோட பேத்தி கல்யாணத்துக்கு இருக்கிறதாகச் சொன்னாரு.

    ரொம்ப நல்ல குணம்னு சொன்னாரு. எனக்கென்னவோ அந்தப் பெண்ணை நம்ப பரசுராமுக்குப் பார்க்கலாம்னு தோணுது."

    ப்ராப்தம் இருந்தா நடக்கட்டும். மருமகள் வர்ற நேரம், சொந்த வீட்டில் வாழற நேரம் வரட்டும்.

    நிச்சயம் வரும் விசாலம். ஜெயராமும், லோன் வாங்கறேன். வீடு கட்டலாம்னுதான் சொல்றான். அவன் கல்யாணத்துக்கு அவசரமில்லை. இன்னும் நாலு வருஷம் தள்ளிப் போடலாம். உன் மனசு போல எல்லாம் நல்லவிதமாக அமையும்.

    நடுத்தர வர்க்கத்தில் பிறந்து வளர்ந்த விசாலத்திற்கு, சொந்த வீட்டில் வாழ வேண்டுமென்ற கனவு இருந்தது. கணவனின் சம்பாத்தியத்தில், சிக்கனமாகக் குடும்பம் நடத்தி, பிள்ளைகள் படிப்பு எனச் செலவுகளைச் சமாளித்து வாழவே... பொருளாதாரம் சரியாக இருந்தது.

    வேதாசலம் ரிடையர் ஆன பிறகுதான் இடம் வாங்கவே முடிந்தது.

    இனி அவள் கனவைப் பிள்ளைகள்தான் நிறைவேற்ற வேண்டும்.

    என்ன யோசனை விசாலம்?

    சிவகுரு அண்ணன்கிட்டே சொல்லி, வரன் விஷயமாகப் பேசச் சொல்லுங்க. பொண்ணு மனசுக்குப் பிடிச்சிருந்தா, வர்ற தையிலே கல்யாணத்தை முடிச்சுடுவோம்.

    வாசலில் ஆட்டோ வந்து நிற்க,

    ஜெயராம் வந்துட்டான் போலிருக்கு.

    மகனைப் பார்க்கும் ஆவலில் வாசல் நோக்கி விரைகிறாள் விசாலம்.

    4

    வீடு சிறியதாக இருந்தாலும் இரண்டு அறைகள், ஹால், அடுப்படியென்று கச்சிதமாக இருந்தது. மோகனின் பூர்வீகச் சொத்து என்று மிச்சமிருந்தது அந்த வீடு மட்டும் தான்.

    மோகன் குமாரின் தாய், தந்தை சிறுவயதிலேயே தவறிவிட, அவன் மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தவன். மாமா பையன்கள் இருவரும் சென்னையில் செட்டிலாகி விட, மாமா குடும்பமும் சென்னைக்குச் செல்ல, மோகன், தன் நளபாகத்தில் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு தனியாக இருந்தான்.

    தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த நண்பனைப் பார்த்தான்.

    இப்ப என்னாச்சு மோகன், ஏன் இப்படி வருத்தப்படறே?

    மனசு சரியில்லை பரசு. சாரதா இப்படி பேசுவாள்னு எதிர்பார்க்கலை.

    அவ தனக்கு இப்படி ஒரு வியாதி வந்திருக்கேங்கிற விரக்தியில் பேசியிருக்கா. இதெல்லாம் சரி பண்ணக் கூடியதுதான். அதுக்காகப் படிக்கிற காலத்திலிருந்தே தொடர்ந்த காதலை விட்டுட முடியுமா? அவதான் நீ இல்லாமல் வாழ்ந்துடுவாளா?

    "அது எங்க ரெண்டு பேர் மனசுக்கும் தெரியுது. என் வாழ்க்கை அவளைக் கட்டிக்கிட்டா... வீணாகப் போயிடும்னு பயப்படறா... இனியும் என் கல்யாணத்தைத் தள்ளிப் போடக் கூடாது பரசு. எனக்குன்னு யார்

    Enjoying the preview?
    Page 1 of 1